கங்கனா செயின் ஸ்மோக்கராமே... அவங்க மட்டுமா?... இதோ இவங்க எல்லாரும் தான்...

Subscribe to Boldsky

பாலிவுட் பிரபலங்களின் இருப்பிடம் எனலாம். தங்கள் திரையுலக கனவுகள் ஆசைகள், திறமைகள் எல்லாவற்றையும் வெளிக்கொணரும் ஒரு திரையுலகம். இந்த பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் தங்களின் நடிப்பின் மூலம் பிரபலமாக இருந்து வந்தாலும் கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகித் தான் இருக்கிறார்கள். ஒரு படம் நடித்து பிரபலமானாலே ஏராளமான பணமும் மரியாதையையும் அவர்களுக்கு கிடைக்கத் தான் செய்கிறது. தினமும் மதுப்பழக்கம், புகைப்பழக்கம், ஆட்டம் பாட்டம் போன்றவைகளும் நம் பாலிவுட் கலாச்சாரத்தில் இருந்து தான் வருகிறது.

படத்தில் பார்க்கும் ஒரு நடிகரின் கதாபாத்திரமும் நிஜத்தில் அவரது குணநலன்களும் மாறித் தான் போகிறது. ஏராளமான ரசிகர்கள் அவர்களை தங்கள் ரோல் மாடலாக பின்பற்றியும் வருகிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால் நிஜத்தில் அவர்கள் உண்மையான ஹூரோக்களா? உங்கள் கனவு கதாநாயகர்கள் நிஜமாகவே நல்ல பழக்கம் உடையவர்களா? நிறைய பாலிவுட் நடிகர்கள் செயின் ஸ்மோக்கர் பட்டியலிலும் இருக்கிறார்கள். வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கான் என்றால் பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். பாலிவுட்டின் கிங் என்றால் அது இவர் தான். தன்னுடைய நடிப்பு திறமையாலும், காதல் மனசாலும் நிறைய ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். பழக எளிமையான நேர்மையான மனிதரான இவர் சொன்னால் நம்ப மாட்டீங்க. இவர் ஒரு செயின் ஸ்மோக்கரும் கூட. நிறைய பொது இடங்களில் இவர் புகைப் பிடித்ததற்காக இவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. புற்று நோய் அபாயம் வராமல் இருக்க தன்னுடைய அதிகப்படியான புகைப்பழக்கத்தை தற்போது குறைத்து ஒரு நாளைக்கு 4 பாக்கெட் என புகைபிடித்து வருகிறார். ஆனால் இயற்கையாகவே இவர் ஒரு நல்ல மனிதர் என்பதால் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடிப்பதை இவர் விடவில்லை.

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

பாலிவுட்டில் அடுத்த பிரபல நடிகர் இவர் தான். உண்மையில் இவர் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இரண்டையும் கொண்ட ஒரு நபரும் கூட. ரஜினீட்டி பட பிடிப்பின் போது கூட இவர் சிகரெட்டும் கையுமாத்தான் இருந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற நடிகராக ஜொலித்தாலும் இவரின் செயின் ஸ்மோக்கர் பழக்கம் பார்வையாளர்களிடம் எதிர்ப்புகளையும் வாங்குகிறது.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

அடுத்ததாக நாம பார்க்க போறது ரித்திக் ரோஷன். தன்னுடைய நடன திறமையாலும் கண்ணழகாலும் பாலிவுட்டை தன் வசம் வச்சிருப்பவர் இவர். என்ன தான் பெரிய நடன கலைஞராக இருந்தாலும் இவரும் புகைப்பதை விடுபவர் அல்ல. தன்னுடைய குஸாரிஷ் படத் தொகுப்பில் கூட சிகரெட்டும் கையுமாத்தான் இருந்தார். ஆனால் அவர் இன்றும் தன் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல மனிதராகவே இருந்து வருகிறார்.

சைஃப் அலி கான்

சைஃப் அலி கான்

பாலிவுட் துறையில் மிகப்பெரிய பணக்காரரும் திறமையானவராக ஜொலிப்பவர் இவர். உண்மையா சொல்லப் போனால் இவரும் ஒரு செயின் ஸ்மோக்கர். ஷர்மிளா தாகூர் ஒரு பத்திரிகை மூலம் இவரை நேர்காணல் செய்த போது சைஃப் பலமுறை புகைப் பழக்கத்தில் ஈடுபட்டு உள்ளார். இந்த கடுமையான புகைப் பழக்கத்தால் 2007 ஆம் ஆண்டில் மருத்துவ மனையில் உடல் நலக் குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்புக்கு பிறகு தன்னுடைய புகைப் பழக்கத்தை குறைத்து வந்துள்ளார். மனிதன் கட்டுப்பாடற்ற பழக்க வழக்கத்துடன் வாழ்ந்தால் கடவுள் அழிவை பரிசளிப்பார் என்பது இவரிடமிருந்து நன்றாகவே தெரிகிறது.

பர்தீன் கான்

பர்தீன் கான்

புகழ்பெற்ற நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஃபிரோஸ் கான் அவரின் மகன் தான் பர்தீன் கான். இவரும் தொடர்ச்சியாக புகைப்பழக்கம் உடையவர். பர்தீன் ஒரு நாளைக்கு 30 சிகரெட் வரை புகைப்பாராம். ஆனால் இவர் தந்தை இறந்த பிறகு புகைப் பழக்கத்தை கைவிட்டு விட்டார். அவருடைய தந்தையும் புகைப் பழக்கத்தால் புற்றுநோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறுதியில் இறந்து விட்டார். எனவே இதைப் பார்த்த இவர் தன்னுடைய புகைப் பழக்கத்தையும் நிறுத்தி விட்டார். இப்பொழுது இவர் எந்த கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாமல் தன்னுடைய நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதில் ஆட்சி புரிகிறார்.

அர்ஜூன் ராம்பால்

அர்ஜூன் ராம்பால்

இவர் பாலிவுட்டில் உள்ள மற்றொரு அழகான நடிகர். தன்னுடைய கச்சிதமான உடம்பு வாகு, ஸ்டைல் இவற்றை கொண்டு ரசிகர்களை தன் வசம் இழுத்தவர். இவர் ஸ்டைலுக்காக புகைப்பவரும் கூட. தன்னுடைய லிமிட் தெரிந்து இந்த புகைப் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறார்.

சஞ்சய் தத்

சஞ்சய் தத்

சஞ்சய் தத் தன்னுடைய புகைப் பழக்கத்தால் அடிக்கடி சர்ச்சையில் மாட்டக் கூடிய நபர். இவர் இளம் வயதில் போதை மருந்துக்கு அடிமையாக இருந்தார். போதை பழக்கத்தை விட்ட இவருக்கு புகைப் பழக்கத்தை விட முடியாமல் தோல்வி அடைந்து வருகிறார். இவரும் லிமிட்டோடு புகைப்பவர். இந்த பழக்கமும் இவர்கிட்ட இல்லாவிட்டால் இவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

சிங்கம் ரிட்டனஸ்ல சும்மா கம்பீரமான போலிஸா வருவார் இவர். உண்மையில் இவரும் ஒரு செயின் ஸ்மோக்கர் தான். இவரும் பொது இடங்களில் புகை பிடித்ததற்காக அபாரம் விதிக்கப்பட்டுள்ளார். இதை நிறுத்த அவர் மகள் உறுதுணையாக இருந்தும் இவரால் புகைப்பழக்கத்தை விட முடியவில்லை.

சல்மான் கான்

சல்மான் கான்

பாலிவுட் வட்டாரத்திலே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர் தா். தன்னுடைய நடிப்பு திறமையால் இன்னும் பாலிவுட்டில் டாப் ஸ்டார் ஆக இருந்து வருபவர். தனியாக நேரம் கிடைக்கும் போது, பொது இடங்களில் புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவர் இவர். இதனால் இவர் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் சிகரெட்டின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சல்மான் கானுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இர்பான் கான்

இர்பான் கான்

இர்பான் கான் பாலிவுட்டில் மட்டுமல்ல தனது பங்கை ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். அமேஸிங் ஸ்பைடர் போன்ற படங்களில் நடித்து தன் புகழை ஹாலிவுட் வரை பரப்பியுள்ளவர் இவர். பெருமைக்குரிய விஷயம் என்றாலும் இவரும் ஒரு செயின் ஸ்மோக்கர் பட்டியலில் இருப்பவர் என்பது வருத்தத்திற்குரியது. அவரும் தன்னை கடுமையான புகைப் பழக்கம் உடையவர் என்பதை ஒப்புக் கொண்டு உள்ளார்.

சுஸ்மிதா சென்

சுஸ்மிதா சென்

உலக அழகி என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது இவர் தான். தன் அழகில் மட்டுமல்ல தனது நடிப்பு திறமையிலும் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியவர். இவரும் புகைப் பழக்கத்தில் அதிகமாக ஈடுபடுபவர். சமூகத்தில் தைரியமாக செயல்படும் நபரும் கூட. இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவருடைய புகைப் பழக்கத்தை மட்டும் விட்டு விட்டதால் நிறைய பேருக்கு ரோல் மாடலாக இருப்பார் என்பது இவருடைய ரசிகர்களின் கருத்து.

Image Source

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

ரசிகர்களின் ராணி மற்றும் பாலிவுட்டின் ராணி என்று அழைக்கப்படும் இவர் மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் உடையவர். ஷூட்டிங்கின் போது இவருடைய இந்த பழக்கத்தை பற்றி நிறைய தயாரிப்பாளர்கள் புகார் செய்தும் உள்ளனர். இங்கே புகைப்பிடிக்காதீர்கள் என்று இருக்கும் பொது இடங்களிலும் புகைக்கும் முதல் நபர் இவராகத்தான் இருப்பார். மற்றவர்கள் பாதிக்கப்படுவதை நினைத்து இவர் கவலைப்படுவதில்லை. இதை அவர் தன்னுடைய தனிப்பட்ட விருப்பமாக கருதினாலும் இந்த மாதிரியான செயல்களை தவிர்ப்பது நல்லது என்பது அவர் ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.

ராணி முகர்ஜி

ராணி முகர்ஜி

புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரின் மருமகள் தான் இவர். புகைப்பழக்க சர்ச்சையில் ஈடுபடாமல் இவரும் இருக்க மாட்டார். தன்னுடைய நாளை புகைப் பிடித்தலோடு தான் தொடங்குவார் போன்ற இவரை பற்றிய வதந்திகளும் பரவி வருகிறது. இவர் நிறைய தடவை முயற்சி செய்தும் புகைப்பதை தவிர்க்க முடியாமல் தோல்வியை தழுவி உள்ளார். இவரின் இந்த பழக்கம் இவர் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

கொங்கண சென் செர்மா

கொங்கண சென் செர்மா

இவர் ஒரு உண்மையான பெங்காலி நடிகை ஆவார். பலவிதமான கதாபாத்திரத்தில் நடிப்பதில் வல்லமை படைத்தவர். கர்ப்ப காலத்தில் கூட புகைப்பதை தற்காலிகமாக விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டு உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இப்பொழுதும் தன் மனநிலைமைக்கு ஏற்ப இந்த பழக்கத்தை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source

ரசிகர்கள்

ரசிகர்கள்

இந்த மாதிரியான செலிபிரிட்டி நடிகர் மற்றும் நடிகைகள் ஏராளமான மக்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார்கள். சினிமாவும் ஒரு தொழில் என்பதை தாண்டி அதன் கருத்துக்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் மறக்க முடியாது. அதே மாதிரி தான் சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கங்களும் தன்னுடைய ரசிகர்களுக்கிடேயை தாக்கத்தை ஏற்படுத்தும். முன் உதாரணமாக திகழ வேண்டிய இவர்களே இந்த மாதிரியான கெட்ட பழக்க வழக்கங்களை மேற்கொள்வது என்பது நல்லது அல்ல. குறிப்பாக பொது இடங்களில் இது போன்ற நடவடிக்கைகளை அறவே தவிர்ப்பது நல்ல சமுதாயத்திற்கான வழிகாட்டியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. புகைப் பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, உயிரைக் குடிக்கும் போன்ற விளம்பரங்கள் படத்தில் காண்பிக்கப்படுவது பிரபலங்களின் பழக்க வழக்கங்களில் உரைக்காமல் போய் விடுகிறது என்பதை பிரபலங்களும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே உங்கள் பிரபலங்களின் நல்ல பழக்க வழக்கங்களை மட்டுமே எடுத்து செயல்படுங்கள். ஸ்டைலுக்காக புகைப்பதை தவிருங்கள். அப்போ தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    List Of Chain Smokers In Bollywood

    Smoking and drinking is customary in a place like Bollywood. Not just male actors are serious chain smokers but the female actors are incessantly smoking and drinking.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more