இரண்டு, மூன்று முறைக்கும் மேல் திருமணம் செய்த அரசியல்வாதிகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

கருணாநிதி முதல் சசிகலா புஷ்பா வரை பல இந்திய அரசியல்வாதிகள் இரண்டு, மூன்று முறை திருமணம் செய்துள்ளனர். சிலர் அரசியலுக்கு வந்த பிறகும், சிலர் அரசியலுக்கு முன்னர் அவர்கள் வேறு துறையில் இருக்கும் பொழுதே இரண்டு, மூன்று திருமணம் செய்துள்ளனர்.

சிலர் முதல் மனைவி இறந்த பிறகு, இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்தவர்கள். சிலர் முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு இரண்டாம் திருமணம் செய்தவர்கள். சிலர் முதல், மனைவி உயிருடன் இருக்கும் போதே, விவாகரத்துக் கூட செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்தவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர்!

முதல் மனைவி - தங்கமணி (1942. இறப்பு)

இரண்டாம் மனைவி - சந்தானதேவி (1962. இறப்பு)

மூன்றாம் மனைவி - வி.என். ஜானகி (1996. இறப்பு)

இலங்கையில் பிறந்து பாலக்காட்டில் வளர்ந்த எம்ஜிஆர் நடிப்பில் வளர்ந்து, தமிழகத்தை பத்து வருடங்கள் முதல் அமைச்சராக ஆட்சி செய்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்தவர்.

கருணாநிதி!

கருணாநிதி!

முதல் மனைவி - பத்மாவதி அம்மாள்

இரண்டாம் மனைவி - தயாளு அம்மாள்

மூன்றாம் மனைவி - ராஜாத்தி அம்மாள்

தமிழகத்தின் மூன்றாவது முதல் அமைச்சர் என்ற பெருமை மிக்க இவர். ஐந்து முறை தமிழக முதல்வராக தேர்வாகி மொத்தம் 19 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அரசியல் மட்டுமின்றி இவர் எழுத்திலும் பெரும் ஆர்வம் கொண்டுள்ளவர் பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

சசிகலா புஷ்பா!

சசிகலா புஷ்பா!

முதல் கணவர் - லிங்கேஸ்வரா திலகன் (2018. விவாகரத்து)

இரண்டாம் கணவர் - ராமசாமி

இவர் ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். 2011 - 2014 வரை தூத்துக்குடி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் மேயராக பதவி வகித்து வந்தார்.

திமுக உறுப்பினர் திருச்சி சிவாவுடன் இருந்த தொடர்பால் அதிமுகவில் இருந்து கடந்த 2016ல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 ஷஷி தரூர்!

ஷஷி தரூர்!

முதல் மனைவி - திலோத்தமா முகர்ஜி (விவாகரத்து)

இரண்டாம் மனைவி - கிறிஸ்டா கில்ஸ் (விவாகரத்து)

மூன்றாம் மனைவி - சுனந்தா புஷ்கர் (2010ல் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர். 2014ல் சுனந்தா மரணம் அடைந்தார். இவரது மரணம் இன்றளவும் மர்மமான மர்மமாக திகழ்கிறது)

ஷஷி தரூர் இந்தியாவின் முன்னாள் தூதரக அதிகாரி மற்றும் நடப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்திய தேசிய காங்கரஸ் கட்சியை சேர்ந்த இவர் பல பொறுப்புகளில் பதவிவகித்துள்ளார். அரசியல் மட்டுமின்றி இவர் சிறந்த எழுத்தாளரும் கூட, தி நியூயார்க் டைம்ஸ், டைம், தி வாஷிங்டன் போன்ற பல சர்வதேச நாளேடுகளில் இவரது கட்டுரைகள் பிரசுரம் ஆகியுள்ளன.

ராம் ஜெத்மலானி!

ராம் ஜெத்மலானி!

முதல் மனைவி - துர்கா ஜெத்மலானி

இரண்டாம் மனைவி - ரத்னா ஜெத்மலானி

இவர் ஒரு இந்திய மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் மத்திய சட்ட அமைச்சராகவும் பணியில் இருந்துள்ளார். இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கிய வழக்கறிஞர் என்ற பெருமை ராம் ஜெத்மலானிக்கு இருக்கிறது. இவர் தனது எல்.எல்.பி டிகிரியை 17வயது வயதிலேயே பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கபில் சிபல்!

கபில் சிபல்!

முதல் மனைவி - நினா சிபில்

இரண்டாம் மனைவி - ப்ரோமிலா சிபில்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் கபில் சிபில். இவர் ஒரு வழக்கறிஞரும் கூட. காங்கிரஸ் ஆட்சியின் போது இவர் பல துறைகளின் அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் முதன் முறையாக 1998ல் பீகார் மாநிலத்தின் சார்பாக ராஜ்ய சபா உறுப்பினராக தேர்வானார்.

சரத் குமார்!

சரத் குமார்!

முதல் மனைவி - சாயா (2000. விவாகரத்து)

இரண்டாம் மனைவி - ராதிகா

பாடி பில்டர், நடிகர், மாடல், ஊடகவியலாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட சரத்குமார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இவர் அனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். காமராஜர் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறி கட்சி துவங்கியவர் இவர். இவர் ஒருமுறை ராஜ்ய சபா உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

ராதிகா!

ராதிகா!

முதல் கணவர் - பிரதாப் போத்தன்

இரண்டாம் கணவர் - ராடான்

மூன்றாம் கணவர் - சரத்குமார்

இவர் சட்டமன்றம், ராஜ்ய சபாவில் எந்த பதிவி வகிக்காவிட்டாலும், முன்னர் திமுக உறுப்பினராக இருந்து, தேர்தல் களத்தின் போது திமுகவிற்காக பேச்சாளாராகவும், வாக்கு சேகரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வான்!

ராம் விலாஸ் பாஸ்வான்!

முதல் மனைவி - ராஜகுமாரி தேவி

இரண்டாம் மனைவி - ரீனா பஸ்வான்

ராம் விலாஸ் தற்போது நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சராக பதவி வகித்துவருகிறார். இவர் லோக் ஜனசக்தி கட்சியினை சேர்ந்தவர். இவர் சம்யுக்தா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் முன்னர் ராஜ்யா சபா உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.டி. ராமாராவ்!

என்.டி. ராமாராவ்!

முதல் மனைவி - பசவதரகம் நந்தமுரி

இரண்டாம் மனைவி - லக்ஷ்மி பார்வதி

என்.டி.ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இவர் இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எடிட்டார் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் ஆந்திர மாநிலத்தை முதலமைச்சராக மூன்று முறையில் மொத்தம் ஏழு வருடங்கள் ஆட்சி செய்துள்ளார்.

கிர்ரன் கெர்!

கிர்ரன் கெர்!

முதல் கணவர் - கௌதம் பெர்ரி

இரண்டாம் கணவர் - அனுபம் கெர்

கிர்ரன் கெர் இந்தி சினிமா நடிகையும், சின்னத்திரை நடிகையும் ஆவார். இவர் டிவி நிகழ்சிகளிலும் தோன்றி வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலம் லோக் சபா உறுப்பினராக தேர்வானவர்.

ராஜ் பாபர்!

ராஜ் பாபர்!

முதல் மனைவி - நதிரா ஜாகிர்

இரண்டாம் மனைவி ஸ்மிதா பாட்டில்

ராஜ் பாபர் இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். மூன்று முறை இவர் லோக் சபா உறுப்பினராகவும், இரண்டு முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் தேர்வாகி உள்ளார். இவர் உத்திரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி கமிட்டியின் பிரசிடென்டாக இருந்து வந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Indian Politicians Who Married Twice or Thrice!

From Karunanithi to Sasikala Pushpa, Here is a List of Indian Politicians Who Married Twice or Thrice