ஸ்ரீதேவியின் மரண செய்தியை கேலி கூத்தாக்கிய தேசிய ஊடகங்கள் - புகைப்படத் தொகுப்பு!

Subscribe to Boldsky

ஊடக தர்மம் என்றொன்று இருக்கிறது. அதை யாவரும் மறந்துவிட்டு டி.ஆர்.பியில் யார் முதல் இடம் பிடிக்கிறோம் என்ற பந்தையத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஊடக தர்மத்தை அன்று முதல் இன்று வரை கடைப்பிடிக்கும் ஒரே ஊடகம் தூர்தர்ஷன் தான். காரணம் அது அரசு ஊடகம், அதற்கு டிஆர்பி பந்தயத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. மேலும், செய்தியில் தங்கள் கற்பனைகளை புகுத்தாமல், செய்தியாக மட்டுமே அளித்து வருகிறது தூர்தர்ஷன். ஆகையால் தான் நமக்கு அது போரடிக்கும் சேனலாக இருக்கிறது.

நமது இந்திய ஊடகங்கள் சிலவன ஊடக தர்மம் என்பதை தாண்டி, சில சமயம் மனிதத்தையும் மறந்து செயலப்பட்டுள்ளன. சில சமயம் கேலி கூத்துகளிலும் ஈடுப்பட்டுள்ளன. கிரியேட்டிவாக செயற்படுகிறோம் என்ற பெயரில் சில ஊடகனால் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் போது எல்லை மீறிய செயல்களில் ஈடுப்பட்டன.

அவை பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கும், கோப குரலுக்கும் ஆளாகின. முக்கியமாக சமூக தளங்களில் பரவலாக எதிர்மறை விமர்சனங்களுடன் வைரலாக பரப்பட்டன.

அவற்றில் சில கேலி கூத்துகளை தான் நாம் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எ.பி.பி (ABP)

எ.பி.பி (ABP)

இந்தி செய்தி சேனலான எ.பி.பி தங்களது ப்ரைம் டைம் செய்தியில் ஸ்ரிதேவயின் கடைசி 15 நிமிடங்கள் என்ற தலைப்பில் செய்தி ஒளிப்பரப்பியது. இதில், செய்தி தொகுப்பாளினியாக வந்த பெண், குளியல் அறையில் நின்றபடி செய்தி வாசிப்பதாகவும், அருகே குளியல் அறையில் ஸ்ரீதேவியின் புகைப்படம் மாட்டி வைக்கப்பட்டிருப்பது போலவும் காட்சிகள் வி.எப்.எக்ஸ் மூலம் டிவியில் ஒளிப்பரப்பானது.

இதே தீவிபத்தில் ஒரு பிரபலம் மரணம் அடைந்திருந்தால்... தீயில் எரிந்துக் கொண்டிருப்பது போன்ற வி.எப்.எக்ஸ் காட்சிகளுடன் ஒளிப்பரப்புவார்கள் போல.

ஆஜ் தக் (Aaj Tak)

ஆஜ் தக் (Aaj Tak)

எ.பி.பி இந்தி செய்தி சேனல் போலவே, ஆஜ் தக் எனும் இந்தி செய்தி சேனலும், ஒரு பாத் டப் அருகே நின்று ஸ்ரீதேவியின் மரண செய்தியை வாசிப்பது போலவும், குளியலறை சுவற்றில் நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படம் மாட்டப்பட்டிருப்பது போலவும் வி.எப்.எக்ஸ் செய்திருந்தனர்.

டிவி 9!

டிவி 9!

தெலுங்கு செய்தி சேனலான டிவி 9 கொஞ்சம் எல்லை மீறியே நடந்துக் கொண்டது என்று கூறலாம். இவர்கள் பாத் டப் உள்ளே ஸ்ரீதேவி படுதிருபப்து போல மார்ஃபிங் செய்தும், அதன் அருகே போனி கபூர் அவரை பார்த்துக் கொண்டே நடந்து செல்வது போலவும் வி.எப்.எக்ஸ் செய்து, அதன் அருகே செய்து தொகுப்பாளர் நின்றுக் கொண்டு மரண செய்தியை வாசிப்பது போல ஒளிப்பரப்பினர்.

டைம்ஸ் நவ்!

டைம்ஸ் நவ்!

ஆங்கில செய்திகளும் இதற்கு விதிவிலக்காக இல்லை. டைம்ஸ் நவ் ஆங்கில செய்தியானது இதற்கு எல்லாம் ஒரு படி மேலே போய், ஸ்ரீதேவியின் மரணத்திற்கு ஒரு தியரி வகுத்தனர்.

அவரது உயரம் என்ன, பாத் டப் உயரம், நீளம் மற்றும் ஆழம் என்ன? நீர் நிரம்பியிருந்தால் அதில் மூழ்கி மரணிக்க வாய்ப்புகள் இருக்கிறதா என்று, ஸ்ரீதேவி நின்றுக் கொண்டிருப்பது போல ஒரு படத்தையும், பாத் டப் படத்தையும் வைத்து ஆராய்ந்தனர்.

சி.என்.என். நியூஸ் 18!

சி.என்.என். நியூஸ் 18!

சி.என்.என். நியூஸ் 18ம் ஏறத்தாழ டிவி 9 தெலுங்கு செய்தி சேனல் போலவே தான் மட்டமாக நடந்துக் கொண்டது. ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் படுத்திருப்பது போல மார்ஃபிங் செய்து, அதன் பின்னணியில் செய்தி வாசித்தனர். குறிப்பாக அவர் எந்த நேரத்தில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்தார் என்பதை எல்லாம் கூறி ஒளிப்பரப்பு செய்திருந்தனர்.

ரிபப்ளிக் டிவி!

ரிபப்ளிக் டிவி!

ரிபப்ளிக் டிவி செய்தி சேனலில் விருந்தினர்கள் சிலர் நடிகரி ஸ்ரீதேவியின் மரணத்தை மறைந்த சுனந்தா புஷ்கர் மரணத்துடன் ஒப்பிட்டு சூடுபறக்க விவாதம் செய்து வந்தனர்.

இவர்களுக்கு ஒரு பிரபலத்தின் மரணத்தின் செய்தியானது டிஆர்பி அதிகரித்துக் கொள்ள சரியாக பயன்படுத்திக் கொள்ள கிடைத்த ஒரு சலுகையாக மட்டுமே இருந்தது.

மகா டிவி!

மகா டிவி!

இருப்பதிலேயே மிகவும் மோசமாக நடந்துக் கொண்டது தெலுங்கு சேனலான மகா டிவி தான். இப்படி ஒரு சேனல் இருக்கிறது என்பதே இப்படியான மட்டமான செய்தி வாசிப்புக்கு பின்பு தான் பலருக்கு தெரிய வந்தது.

இதில் செய்தி தொகுத்து வழங்கிய செய்தியாளர், பிங்க் நிற குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி எப்படி படுத்திருந்தார், எப்படி நீரில் மூழ்கி இருக்கலாம் என்று லைவில் மைக் பிடித்து பேசிக் கொண்டே செய்துக் காண்பித்தார். சமூக தளத்தில் அதிகமாக வசை சொற்களுக்கு ஆளானதும் இந்த செய்தி சேனல் தான்.

ஊடக தர்மமா அப்படினா?

ஊடக தர்மமா அப்படினா?

நாம் ஆரம்பத்தில் கூறிய ஊடக தர்மம் என்பது, முறையற்ற பேச்சு, முறையற்ற பாவனை செய்கையில், பேசவோ, செய்தி ஒளிப்பரப்பு / ஒலிப்பரப்பு செய்யவோ கூடாது. சமூகத்தில் பிரசனை, கலவரம், பீதியை உண்டாகும் எனில், உண்மையை கூட குறைத்து கூறலாம். முக்கியமாக எந்த ஒரு குழு, இனம், தனி மனிதரின் மனம் நோகும்படியாக செய்தி வெளியிடக் கூடாது என பல கருத்துக்கள் இருக்கின்றன.

ஆனால், இன்றைய ஊடகங்களுக்கு அது எல்லாம் தேவையே இல்லை. அந்த நேரத்தில் தங்கள் சேனலை மக்கள் திட்டிக் கொண்டே பார்த்தாலும் கூட போதும் என்ற நோக்கில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன்? இதற்கு முன் சென்னை வெள்ளத்தின் செய்தியை தேசிய ஊடகங்கள் சிலவன, இதே போல வெள்ளத்தில் நின்றுக் கொண்டு செய்து வாசிப்பது போல மட்டமாக வி.எப்.எக்ஸ் செய்து ஒளிப்பரப்பு செய்ததை நாம் மறந்துவிட்டோமா என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Indian Media and Its Circus Show on Actress Sridevi's Bath Dub Death!

    Indian Media and Its Circus Show on Actress Sridevi's Bath Dub Death!
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more