For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'ப்ரோக்கர் என் மகளை அழைத்து செல்லும் போதெல்லாம்... இரத்தம் கசிகிறது' - # Her Story

|

முடி நரைத்த பின்னும் மருந்துண்டு விறைப்பு வேண்டி வருவோர் இருக்கும் வரை, எங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவையாக இருக்கிறது. நான் எனக்கே தெரியாமல் ஹியூமன் ட்ராபிக் எனப்படும் வகையால் பாலியல் தொழிலுக்காகவே கடத்திவரப்பட்டவள். நான் கடத்திவரப்பட்ட போது என் வயது பதின் வயதுகளில் ஏதோ ஒன்று என்ற நினைவு மட்டுமே எனக்கு இருக்கிறது.

ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும், சேதம் என்னவோ சேலைக்கு தான் என்பது போல, முரண்டு பிடித்தாலும், அடங்கி சென்றாலும் சேதம் எனக்கு தான். நானாக ஏன் எனக்கான வலியை தானாக கேட்டு அதிகம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று பழகிக் கொண்டேன்.

I was not able to Stop My Child, Who Follows the Footsteps of Prostitute

மாதத்தில் அந்த மூன்று நாட்கள் மட்டும் தான் விடுப்பு. அதை தான் எனக்கு கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறேன். அந்த நாட்களிலும் அவ்விடத்தில் வலி கூடுதலாக தான் இருக்கும். ஆனால், பிற தொல்லைகள் இல்லாமல் அவ்வலியை பொறுத்துக்கொள்ள இயலும்.

என் பெற்றோர் முகத்தை மறக்கும் அளவிற்கு நான் இந்த கூண்டுக்குள் சிறைப்பட்டுவிட்டேன். இந்நிலைமை என் மகளுக்கும் வரக் கூடாது என்பதே என் நீண்ட கால பிரார்த்தனையாக இருந்தது. நான் வேண்டாமல் செய்ததை, என் மகள் வேண்டி செய்யும் நிலை வந்தது. அதை தடுக்கு முடியாத கையறு நிலையில் வயது முதிர்ந்த கிழவியாக நான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டார்கெட்!

டார்கெட்!

ஒரு நாளுக்கு இத்தனை கஸ்டமர்கள் என எங்களுக்கும் டார்கெட் இருந்தது. சில நேரங்களில் மணி நேர டியூட்டி பிரிக்கப்படும். என்னைப் பிடித்துப் போன சிலர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் அல்லது வீட்டுக்கு அழைத்து செல்வதும் உண்டு.

காதல்?!

காதல்?!

விரும்பி அழைத்து செல்பவர்கள் பெரும்பாலும் பெரிதளவில் வலியை கொடுத்ததில்லை. அதில் சிலரை நான் நேசித்ததும் உண்டு. யாராவது என்னையும் ஓர் மனுஷியாக மதித்து, உடலை மட்டும் விரும்பாமல், மனதையும் விரும்பி நேசித்து அவர்களுடனே அழைத்து சென்றுவிட மாட்டார்களா என்று நான் நிறைய ஏங்கியதுண்டு.

ஆனால், அப்படியொரு தருணம் என் வாழ்வில் கடைசி வரை நடக்கவே இல்லை. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் எனக்கு கொஞ்சம் ஆங்கில புலமை கற்பித்தார்.

தப்பியோட்டம்!

தப்பியோட்டம்!

சிலர் என்னை, இங்கு எவ்வளவு கிடைக்கிறது இங்கே, என்னுடன் வா உனக்கு இதைவிட அதிகம் சம்பாதிக்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறி அழைத்திருக்கின்றனர். அப்படியாக தான் என்ன விரும்பி அழைத்து சென்றவனிடம் இருந்து தப்பித்து செல்லவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

ஆனால், அதுவும் நிலைக்காமல் போனது. திரும்பி நான் இதே தொழிலுக்கு வர வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

போலீஸ் காரர்!

போலீஸ் காரர்!

என்னை விரும்பி அழைத்து சென்றவனிடம் இருந்து தப்பித்து சென்று, வேறு வேலை செய்ய முனைந்தேன். வேலையும் கிடைத்தது. ஆனால், அந்த ஊரில் சிலபல பேருக்கு நான் பரிச்சயமாக இருந்தேன். முக்கியமாக போலீஸ் காரர்களுக்கு. அவர்கள் மாமூல் வாங்க வந்த இடத்தில், நான் முன் செய்த தொழில் குறித்த விபரங்கள் அறியவே வேலை இடத்தில் இருந்து அடித்து விரட்டப்பட்டேன். அந்த அடி, நான் செய்த வேலைக்கு கூலி கேட்டதற்காக விழுந்தது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சித்திரவதை!

சித்திரவதை!

வேறு எங்காவது வேலை தேடி மறைமுகமாக வாழ்ந்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுப்பதற்குள், என் எஜமானனுக்கு தூது சென்று, நான் இருந்த இடத்தை காண்பித்து மீண்டும் கூண்டுக்குள் அடைப்பட பெருமுதவி செய்தார் அந்த கடமை தவறாத போலீஸ் அதிகாரி.

ஓரிரு வாரங்கள் சித்திரவதைக்கு பிறகு மீண்டும் தொழிலுக்கு திரும்பினேன். இதில், வேடிக்கை என்ன வென்றால், என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தான் சித்திரவதை செய்தனர். இதற்கு அவர்கள் என்னை நேரடியாக தொழிலுக்கு அனுப்பி இருக்கலாம். இரண்டும் ஒன்று தான்.

கருவுற்றேன்!

கருவுற்றேன்!

வந்தவன் தவறா? அல்லது நான் எடுத்துக் கொண்டு மருந்து வேலை செய்யவில்லையா? என்று தெரியவில்லை. கருவுற்றேன். நாட்களை எண்ணிப் பிழைப்பை நடத்தும் அளவிற்கு நானில்லை என்பதால், நாட்கள் கடந்ததையும் மறந்தேன். நான் விடுப்பு எடுக்காமல் இருப்பதை உடனிருந்த தோழி அறிந்தாள். அவள் மூலமாக தான் இதை நான் அறிந்துக் கொள்ள முடிந்தது.

கருக்கலைப்பு!

கருக்கலைப்பு!

கலைத்துவிடலாம் என்று நினைத்தேன். வேண்டாம். விட்டுவிடு, கவனிக்கவில்லை என்று கூறிவிடு. உனக்கு வாழ்வில் ஒரு பிடிமானம் கிடைக்கும். இந்த நரகத்தில் இருந்து ஐந்தாறு மாதங்கள் ஓய்வும் கிடைக்கும் என்றால் என் தோழி.

இதுவும் சரியான யோசனையாக தான் பட்டது. அவளது யோசனையின் படி கருவுற்றதை எஜமானனிடம் இருந்து மறைத்தேன்.

வரம்!

வரம்!

ஒரு கட்டத்தில் அவர் அறிந்துக் கொள்ளவே, எப்போதும் எங்களை பரிசோதனை செய்ய வரும் மருத்துவர் கருவினை கலைக்க ஓடோடி வந்தார். ஆனால், கரு வளர்ந்துவிட்டது, உயிருக்கு ஆபத்து என்பதால், ஏதோ மனிதாபிமான அடிப்படையில் என் கருவை சுமக்க எனக்கு உத்தரவுக் கிடைத்தது.

பிறந்தாள் தேவதை!

பிறந்தாள் தேவதை!

பொதுவாகவே பெண்களுக்கு ஆண் குழந்தைகள் மீது கொள்ளை பிரியம் இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் நம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்துவரும் ஒடுக்குமுறை தான். என்னை போன்ற ஒரு விலை மாதுவுக்கு ஆண் பிள்ளை மீது பிரியம் இருக்க ஒரே ஒரு காரணம் தான். நான் பெறும் இந்த சித்திரவதையை எனக்கு மகளாக பிறந்து அவளும் பெற்றுவிட கூடாது என்பது மட்டுமே.

ஆனால், என்ன செய்ய, எங்களுக்கு மகன் பிறக்கும் வரம் எல்லாம் மிக அரிதாக தான் கிடைக்கிறது. எனக்கென பிறந்தாள் ஒரு தேவதை.

நரக நிழல்!

நரக நிழல்!

என்னால் முடிந்த வரை அவள் மீது இந்த நரக நிழல் பட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். சிறுவயதில் தன் தாய் என்ன செய்கிறாள் என்று அறியாமல் போனாலும். ஒரு கட்டத்தில் நான் செய்யும் தொழிலும், எதனால் அவள் வளர்ந்து வருகிறாள் என்பதை அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

அன்றையில் இருந்து அவளுக்கு சில சமயம் கூடுதல் அன்பும், சில சமயம் மிகப்பெரும் வெறுப்பும் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

விடியல்!

விடியல்!

விடியல் ஒன்று பிறக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் என் எஜமானன் வழக்கொன்றில் சிறை செல்ல எங்களுக்கு விமோசனம் கிடைத்தது. பெண்கள் பாதுகாப்பு அமைப்பு சில எங்களை அழைத்து சென்று அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உதவிகளை செய்து, எங்களுக்கு ஒரு நல்வழி காட்டியது.

கும்பிட்ட சாமி கைவிடவில்லை. எப்படியோ விடியல் பிறந்துவிட்டது என்று நினைத்திருந்த நேரத்தில் தான், இடி ஒன்று என் தலையில் விழுந்தது.

நோய்!

நோய்!

இந்நோய் தொற்று எங்களுக்கு வருவது சகஜம் தான். ஆனால், பாதுகாப்பு மிகுதியாக பின்பற்றியும் எதிர்பாராமல் அந்நோய் தொற்றுக்கு ஆளானேன். முதலில் என் மகளுக்கு இந்த தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்தேன்.

இல்லை, அவளுக்கு எதுவும் இல்லை. எனக்கு மட்டும் தான். அவள் பிறந்த பிறகு தான் இந்த தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார் மருத்துவர். பிழைப்பு நடத்தவே போதுமான பணம் இல்லாத போது, இதற்கான மருத்துவத்திற்கு எங்கே செல்வது?

மகள்!

மகள்!

என் மீது கோபம் இருந்தாலும், என் இரத்தத்திற்கு என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம். நிறைய வேலைக்கு சென்றாள். இரவு, பகல் பாராமல் உழைத்தாள். பதின் வயதில் அனைவரும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்த போது, இவள் மட்டும் வேலைக்காக ஓடிக் கொண்டிருந்தாள்.

கழுத்தை நெரித்தது...

கழுத்தை நெரித்தது...

கடந்த ஓராண்டு காலமாக என் உடல் வலிமை மிகவும் மோசமானது. மருத்துவ செலவு, வீட்டு செலவு, சில கடன்கள் என பணத்தேவை எங்கள் கழுத்தை நெருக்கியது. எக்காரணம் கொண்டும் அந்த தொழிலுக்கு மீண்டும் சென்று விடக் கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தவள் என் மகள். வேற வழியின்றி என்னைக் காப்பாற்ற, கடனை அடைக்க ஒரே ஒருமுறை சென்று வருகிறேன் என்றாள்.

இரத்தம் கசிகிறது...

இரத்தம் கசிகிறது...

அந்த ஒரே ஒரு முறை என்பது, கால்களை இறுக்கும் சங்கிலி, அதிலிருந்து வெளிப்படுவது கடினம் என்பதை நான் அறிவேன். இன்னும் சில ஆண்டுகளில் மரணத்திற்கு இரையாகவிருக்கும் எனக்காக உன்னை அழித்துக் கொள்ளாதே என்று கெஞ்சியும் அவள் கேட்கவில்லை.

போதா குறைக்கு போதைக்கும் அடிமையானாள். தினமும், என் கண் முன்னே ப்ரோக்கர் உடன் அவள் வீட்டில் இருந்து வெளியே காலடி எடுத்து வைக்கும் போதெல்லாம் இதயத்தில் இரத்தம் கசிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I was not able to Stop My Child, Who Follows the Footsteps of Prostitute

Her Story: I was not able to stop my child, who follows the footsteps of prostitute (me), Sadly says a former prostitute.
Story first published: Tuesday, November 13, 2018, 13:54 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more