ஒன்னு என்கூட படு, இல்ல வேலையவிட்டு போ... சீனியர் மேனேஜரின் அதட்டல் - My Story #150

Posted By:
Subscribe to Boldsky

படித்த முடித்தவுடனே வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன். ஒருபுறம் இது எனது விருப்பம் என்றாலும், கொஞ்ச நாட்கள் வாழ்கையை என்ஜாய் செய்து வாழலாம் என்ற ஆசைக்கு எல்லாம் வழியில்லாத பொருளாதார நிர்பந்தம் கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்தவள் என்பதால்... மறுபுறம் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல் வேண்டியது எனக்கு கட்டாயமாகவும் இருந்தது.

நான் ஹார்ட் வர்க்கர். எத்தகைய டெட்லைனில் வேலையை கொடுத்தாலும், நேரம் பாராமல் வேலையை முடித்துவிடும் எனது குணம் எனது நண்பர்கள் உட்பட எனது பாஸ் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால், எனது சீனியர் மேனேஜருக்கு மட்டும் என் வேலையை விட, என் உடலை அதிகம் பிடித்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய பிராஜக்ட்!

புதிய பிராஜக்ட்!

நான் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து எனது பாஸ் என்னை புதிய பிராஜக்ட்டில் பணியமர்த்தினார். அந்த வேலை கொஞ்சம் கடினம் என்று கூறியே அனுப்பினார். ஆனால், அந்த மேனேஜர் கடினமாக இருப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவரை நான் பணிசெய்து வந்த தளத்தில் இருந்து வேறு தளத்திற்கு நான் மாற்றப்பட்டேன்.

ஆகையால் முன்பு போல நான் எனது பழைய நண்பர்களை காண்பதும் கொஞ்சம் கடினம். ஏனெனில், நான் வேலை செய்து வந்த முந்தைய தளம், வேறு கட்டிடம், நான் மாற்றப்பட்டு சென்ற தளம் வேறு கட்டிடம்.

இரட்டிப்பு மடங்கு அதிகம்...

இரட்டிப்பு மடங்கு அதிகம்...

நான் புதியதாக ஜாயின் செய்த டீம் லீடரான அந்த சீனியார் மேனேஜருக்கு என்னைவிட இரண்டு மடங்கு வயது அதிகம்.

முதல் முறையாக நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து எங்கள் பிராஜக்ட் பற்றி கலந்தாலோசிக்க வேண்டிய தருணம் வந்தது. நான் எனது ஐடியாக்களை கூறிக் கொண்டிருந்த போது, அவரது பார்வை வேறுவிதமாக மாறியது. என்னால் அவர் அருகில் அமர முடியவில்லை. எனவே, சற்றே தள்ளி உட்கார ஆரம்பித்தேன். ஆனால், அவரோ... நான் கூறுவதில் சந்தேகங்கள் இருப்பது போலவே என்னை நெருங்கி வந்துக் கொண்டே இருந்தார்.

சில நாட்கள்!

சில நாட்கள்!

இப்படியான ஒரு சூழல் தொடர்ந்து சில நாட்கள் நடந்துக் கொண்டே இருந்தது. எனவே, அதற்கு பிறகு எந்தவொரு விஷயமாக இருந்தாலும் கால் செய்தோ, மின்னஞ்சல் மூலமாகவோ நான் அவரை தொடர்புக் கொள்ள முயற்சித்தேன்.

அவர் தனது கேபினுக்கு அழைத்தாலும் செல்ல மறுத்தேன்.

ஒருநாள் அவர் என்னை தனது கேபினுக்கு அழைப்பதாக வேறு ஒரு நபர் வந்து கூறி சென்றார். என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளே நுழைந்தேன்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

நான் உள்ளே நுழைந்ததும்....

"சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை... எனக்கு நீ வேணும்... என்கூட படுக்கிறியா... ஒருவாட்டியா இருந்தாலும் சரி... இல்ல இந்த ரிலேஷன்ஷிப் தொடர்ந்து வெச்சுக்கிடாலும் சரி..." என கேட்டார்.

எனக்கு அவரது இந்த வார்த்தைகள் பேரதிர்ச்சியை அளித்தது. உடனே அந்த கேபினில் இருந்து வெளியே ஓடிவந்தேன். நேராக வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

ஆனால், மீண்டும் என பாஸிடம் இருந்து ஒரு கால். ஏதோ வேலை இருக்கிறது உடனே ஆபீஸ் செல்ல வேண்டும் என்று கூறினார். வேறு வழியில்லாமல் மீண்டும் ஆபீஸுக்கு சென்றேன்.

வேறொரு நாள்...

வேறொரு நாள்...

எனது வீடு அலுவலகத்திற்கு மிக அருகாமையிலேயே இருந்தது. நேரதாமதம் ஆனாலும், சீக்கிரம் வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று அப்படியாக தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால், இதுவும் எனது சீனியர் மேனேஜருக்கு சாதகமானதாக அமைந்தது.

ஒரு நாள் வீட்டுக்கு திரும்பு செல்லும் போது அவரிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.

"நான் இன்னிக்கி உன் வீட்டுக்கு வரேன்... ரெடியா இரு"

இந்த செய்தியை படித்த இடத்தில் இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. என் கால்கள் உறைந்து போயின.

ஒருசில நிமிடங்களுக்கு பிறகு, விரைந்து வீட்டுக்கு சென்று, வீட்டை பூட்டி, கதவின் உட்புறமாக ஒரு டேபிளை இழுத்து வைத்துவிட்டு உள்ளறையின் ஒரு மூலையில் முடங்கி அமர்ந்துக் கொண்டேன்.

ஏமாற்றம்!

ஏமாற்றம்!

நள்ளிரவு வேளையில் எனது வீட்டுக்கு வந்து மெல்லிய குரலில் என்னை அழைத்து கதவை தட்டினார். தொடர்ந்து கதவை தட்டிக் கொண்டே இருந்தார். நான் வராததை அறிந்து, எனக்கு கால் செய்தார். நான் அவரது அழைப்பை ஏற்கவில்லை.

அரைமணிநேரம் நின்று பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிவிட்டார்.

மறுநாள்...

மறுநாள்...

மறுநாள் வேலைக்கு சென்றதும், தன்னை வந்து காணும்படி ஒருவரிடம் கூறி அனுப்பினார். நான் செல்லவில்லை. அவர் தனது கேபினில் இருந்து வெளிவருவதை அறிந்தாலே, ரெஸ்ட்ரூம் உள்ளே சென்று கதவை சாத்திக் கொள்வேன்.

ஆனால், மாலை நிச்சயம் அவரை சென்று காண வேண்டும் என்ற நிர்பந்தம். என்னால் தவிர்க்க முடியவில்லை. அவரது கேபினுக்கு சென்றேன்.

இங்கயே....

இங்கயே....

சற்றும் வெட்கமே இல்லாமல்... இங்கயே வெச்சுக்குவோம். பெட் எல்லாம் அவசியம் இல்ல. ஒரு தடவை தானேன்னு... கெஞ்சினார். நான் அவருக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.

உடனே... எனக்கூட படுக்க முடியும்னா இந்த ஆபீஸ்ல இரு... இல்ல போயிட்டே இரு என்று கூறினார்.

வேறு என்ன செய்ய. எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன்.

ஆனால், எனது பான்ட் படி இரண்டு மாதங்கள் அங்கே வேலை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம். ஆகையால் ராஜினாமா செய்தும் கூட உடனே அங்கிருந்து என்னால் வெளிவர இயலவில்லை.

ஒவ்வொரு நாளும்...

ஒவ்வொரு நாளும்...

அந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு நாளும் என்னை அப்படியாவது அனுபவித்துவிட வேண்டும் என திட்டமிட்டுக் கொண்டே இருந்தார் எனது சீனியர் மேனேஜர்.

எப்படியோ இரண்டு மாதங்களை கடத்தினேன். பிறகு வேறு வேலை, வேறு இடம், வேறு மாநிலத்திற்கு மாறினேன். ஆனாலும், எனது மொபைல் எண்ணுக்கு கால் செய்துக் கொண்டே இருந்தார் அவர். எத்தனையோ முறை எனது எண்ணை மாற்றியும் அவர் அழைப்பது மட்டும் நிற்கவே இல்லை. எனது பழைய தோழர்கள் மூலம் எனது எண்ணை கண்டுபிடித்து அழைத்துக் கொண்டே இருந்தார்.

பிறகு எனது பழைய அலுவலக நண்பர்களின் தொடர்பையும் துண்டித்துக் கொண்டேன்.

பத்து வருடங்கள்!

பத்து வருடங்கள்!

இந்த சம்பவம் நடந்து பத்து வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்றும் இது பற்றி நினைத்தால் என் கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும்.

இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு திறமை இருந்தாலும் கூட அவளது உடலை தான் காணிக்கை கேட்கிறார்கள். என்னைப் போல ஒவ்வொரு அலுவலகத்திலும் இத்தகைய இடைஞ்சல்களுக்கு ஆளாகும் பெண்கள் யாரேனும் ஒருவராவது இருப்பார்கள்.

என்றைக்கு ஒரு பெண் நிம்மதியாக நள்ளிரவு வெளியே செல்கிறாளோ என்று தான் உண்மையான சுதந்திரம் என கூறியிருக்கிறார்கள் சான்றோர்கள். ஆனால், ஒரு பெண்ணை குறைந்தபட்சம் நிம்மதியாக வேலையையாவது செய்ய விடுங்கள். அதையே நாங்கள் சுதந்திரமாக கருதிக் கொள்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

I was Given the Option to Accept his Proposal and Be Happy in the Job or Leave it - My Story!

I was Given the Option to Accept his Proposal and Be Happy in the Job or Leave it - My Story!
Story first published: Saturday, January 20, 2018, 16:18 [IST]
Subscribe Newsletter