என்னால குழந்தப்பெத்துக் கொடுக்க முடியாது. ஆனாலும், அவர் என்ன ஏத்துக்கிட்டார் - My Story #136

Posted By:
Subscribe to Boldsky

ஒரு பொண்ணு முழுமை அடையிறது தாய்மைலன்னு சொல்வாங்க. அந்த கொடுப்பினை எனக்கு இல்லாம போச்சு. ஆனால், எனக்கு கிடைச்ச மாதிரி ஒரு வாழ்க்கை துணை இந்த உலகத்துல எத்தனை பேருக்கு அமையும்ங்கிறது பெரிய கேள்விக்குறி தான். இதுக்கும் எங்களோடது லவ் மேரேஜ் கூட இல்ல. புயூர் அரேஞ்சுடு மேரேஜ்.

அதென்ன பியூர்ன்னு கேட்கிறீங்களா... இப்போ எல்லாம் நிச்சயம் பண்ண பிறகு, கல்யாண நாளுக்கு நடுவே இருக்க காலக்கட்டத்துல லவ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. ஆனா, எங்களுக்கு அப்படி கூட ஒரு வாய்ப்பு அமையல. நான் அப்போ தான் அமெரிக்காவுல இருந்து இந்தியா வந்தேன். அதனால, பெருசா அவரு கூட பேச முடியல. கல்யாணம் பண்ணப் பிறகு தான் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி, யாருக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டோம்.

ஒருவேளை, எனக்கு முன்னவே இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சிருந்தா... இந்த கல்யாணத்துக்கே ஓகே சொல்லியிருக்க மாட்டேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படிப்பு!

படிப்பு!

சின்ன வயசுல குழந்தைங்க கிட்ட, உனக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்டா... சாக்லேட், ஸ்வீட்ஸ், பொம்மை, சினிமான்னு ஏதாவது சொல்வாங்க. ஆனா, நான் படிக்க பிடிக்கும்ன்னு சொல்லிட்டு இருந்தேன். லோ-மிடில்-கிளாஸ் ஃபேமிலி. ஆசைப்பட்டது கிடைக்காதுன்னு எங்க சூழ்நிலை பார்த்தே தெரிஞ்சுக்கலாம்.

அதுக்காக நான் ஆசையவிட்டுடல. என்னோட ஆசைய நிறைவேத்திக்க என்ன பண்ணனும்ன்னு யோசிச்சப்ப..., "எதுவுமே இல்லன்னு வருந்திறதவிட, நம்மக்கிட்ட என்ன இருக்கு., அதவெச்சு எப்படி நாம ஆசைப்பட்டத அடையலாம்ன்னு யோசிக்கணும்ன்னு என் அப்பா சொன்னாரு!

கஷ்டம்!

கஷ்டம்!

என் அப்பா என்ன கஷ்டப்பட்டு தான் படிக்க வெச்சாரு. ரொம்ப ஏழ்மை எல்லாம் இல்லானாலும், அப்பாவுக்கு முடியாம, ஒருவாரம் லீவ் போட்டு, மாத சம்பளம் கம்மி ஆயிடுச்சுன்னா... கொஞ்சம் கஷ்டம் தான். அப்பாவோட சம்பாத்தியம் மாசாம், மாசம் குடும்ப செலவுக்கு கரக்டா இருக்கும். அதனால, பிக்னிக், வெளியூர் கோவில், திருவிழா, சினிமான்னு எதுவும் பெருசா போனதும் இல்ல, போகணும்ன்னு ஆசைப்பட்டதும் இல்ல.

ஸ்கூல் ஃபர்ஸ்ட்?

ஸ்கூல் ஃபர்ஸ்ட்?

உடனே, நான் படிச்சு, படிச்சு ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன்னும் சொல்லிட முடியாது. ஆனா, எபோவ் ஏவறேஜ் ஸ்டூடன்ட் நான். பத்தாவது ரேங்க்குள்ள எப்படியாவாது முந்தியடிச்சு வந்திருவேன். ஸ்காலர்ஷிப் கிடைச்சது, நல்ல காலேஜ்.

எல்லா செமஸ்டர்லயும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணேன். என்னோட பிராஜக்ட் வர்க் கொஞ்சம் வித்தியாசமா இருந்தனால. எனக்கும், என் ஃபிரெண்ட்க்கும் ஒரு நல்ல ஐ.டி கம்பெனியில வேலையும் கிடைச்சது.

நிலைமை உயர்ந்துச்சு...

நிலைமை உயர்ந்துச்சு...

நான் வேலைக்கு போனதும் அப்பாவ வேலையவிட்டு நிக்க சொன்னேன். ஆனா, ஓடுன காலும், ஆடுன காலும் ஒரு இடத்துல நிக்காதுன்னு சொல்வாங்களே... அப்படி தான் அவரால வேலைய விட முடியல. எப்படியோ பேசி, நான் வேலைக்கு போன ஒரு வருஷத்துல அவர வீட்டுல்ல நிம்மதியா உட்கார வெச்சுட்டேன். ரெண்டு வருஷத்துல லோன் போட்டு வீடு வாங்குனோம். என் வாழ்க்கையிலேயே முதல் முறையா வாடகை வீட்டுல இருந்து சொந்த வீட்டுக்கு வந்திருக்கேன்ம்மா ன்னு அப்பா கண்கலங்கி சொன்னாரு.

என்ன சொல்றதுன்னு தெரியல... லோன் அடைக்கிற வரைக்கும் இது கிட்டத்தட்ட வாடகை வீடுதான்ப்பான்னு சொல்லி கிண்டலடிச்சு அவர சிரிக்க வெச்சேன்.

அமெரிக்கா!

அமெரிக்கா!

எனக்கு அமெரிக்கா போகணும், ஆஸ்திரேலியா போகணும்ன்னு எந்தவொரு கனவும் இல்ல. ஆனா, வாய்ப்பு அதுவா வந்துச்சு. என்னோட பிராஜக்ட்ல இருந்து என்ன ஆன்சைட்க்கு அனுப்பினாங்க. இங்க வாங்குற சம்பளம் கொஞ்சம் அதிகமாவே வந்துச்சு. நிறைய சேமிக்க முடிஞ்சுது. இருபது வருஷம் எதுக்கு கடன கட்டிட்டு. பேசமா, இங்கயே நாலைஞ்சு வருஷம் வேலை பார்த்து கடன மொத்தமா அடைச்சிடலாம்ன்னு யோசிச்சேன்.

வேற வேலை!

வேற வேலை!

அமெரிக்காவுல இருந்தே, வேற கம்பெனியில வேலை தேடுனேன். கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா, என்னோட பிராஜக்ட் டைமிங் முடியிறதுக்குள்ள எனக்கு வேலை கிடைச்சிடுச்சு. நான் சின்ன வயசுலப்பட்ட கஷ்டத்துக்கு நிறையவே பலன் கிடைச்சிடுச்சுன்னு நெனச்சுக்கிட்டேன்.

ஆனா, ஒரு வருஷம் அமெரிக்கான்னு சொன்னதுக்கே பயந்த அப்பா, அம்மா... இன்னும் ஒரு மூணு வருஷம் இங்க தான் இருக்க போறேன்னு சொன்னதும் பதறி போயிட்டாங்க. முதல்ல, அம்மா விடவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இப்போ சம்பாதிக்கிறதே போதும், எங்க கூடவே இருன்னு சொன்னாங்க.

அப்பா!

அப்பா!

அப்பவும், திரும்பி அப்பா தான் எனக்கு ஒகே சொன்னாரு.அம்மாவ சமாதானப்படுத்தி ஓகே சொல்ல வெச்சாரு. வாழ்க்கையில ஆண்டவன் எல்லாருக்கும் எல்லாமே கொடுத்திர மாட்டான்னு சொல்லுவாங்களே. அது உண்மைன்னு என் வாழ்க்கைய உதாரணமா வெச்சே நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

காலேஜ் முடிச்சு, வேலை ஜாயின் பண்ணதுல இருந்து நான் தோல்வியோ, துன்பமோன்னு எதுவுமே பார்த்தது இல்ல. நான் எடுத்து வெக்கிற அடி எல்லாவும், நான் முயற்சி பண்ற விஷயம் எல்லாமும் சக்சஸ்! சக்சஸ் தவிர வேற எதுவுமே இல்ல.... அப்படி தான் கடந்த 7 வருஷமா இருந்துச்சு!

கல்யாணம்!

கல்யாணம்!

அமெரிக்காவுல, நான் எதிர்பார்த்த காலத்தவிட அதிகமாவே இருந்துட்டேன். இடையில ரெண்டே தடவ தான் அப்பா, அம்மாவ பார்க்க இந்தியா வந்துட்டு போனேன். 25 வயசு ஆயிட்டாலே கல்யாணம் பண்ணாட்டி பொண்ணுக்கு ஏதாவது குறையான்னு சொல்லுவாங்க. எனக்கு அப்போ 27 வயசு.

அப்பா, அம்மா ரெண்டு பெரும்... 24 நெருங்குனதுல இருந்தே கல்யாண பேச்சு எடுத்துட்டு தான இருந்தாங்க. நான் தான் பிடிக்கொடுக்காம இருந்தேன்.

2015ல எல்லா கடனும் முடிஞ்சுது. நிறையவே சேமிச்சாச்சுன்னு தோணுச்சு. போதும்ன்னு மனசு சொல்லுச்சு. இந்தியாவுக்கு முழுமையா திரும்ப நேரம் இதுதான்னு தோணுச்சு. உடனே பேப்பர் போட்டுட்டு கிளம்பிட்டேன்.

தடபுடலாக ஏற்பாடு!

தடபுடலாக ஏற்பாடு!

அப்பாவுக்கு திடீர்ன்னு ஒரு நாள் கால் பண்ணி, அப்பா நான் இந்தியாவுக்கு திரும்பி வரேன்... இனிமேல் அமெரிக்கா, அங்க, இங்கன்னு எங்கயும் போகமாட்டேன். கல்யாண வேலை பாக்குறத்துன்னா பாருங்கன்னு சொன்னேன். ரெண்டு பேருக்குமே ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. நிறைய வரன் பார்த்தாங்க. நான் இந்தியா வரதுக்குள்ள, வீட்டுல நாலஞ்சு ஜாதகம் ரெடி... உனக்கு பிடிச்ச நபர தேர்வு செய்ன்னு அப்பா சொன்னாரு.

அப்பா - அம்மாவுக்கு பிடிச்ச பையனாவே இருக்கட்டும்ன்னு ஜாதக பொருத்தம் பார்த்து ஓகே ஆன வரன்க்கு ஒகே சொல்லிட்டேன்.

ஃபிரெண்ட்ஸ்!

ஃபிரெண்ட்ஸ்!

அஞ்சாறு வருஷமா பார்க்காத ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் போய் பார்த்தேன். நிறைய சொந்த காரங்க வீட்டுக்கு விசிட் போனோம். கல்யாண வேலை ஒரு பக்கம், ஃபிரெண்ட்ஸ் மீட்டிங் ஒருபக்கம்ன்னு பறந்துட்டே இருந்தேன்.

கல்யாணம் முடிச்சு திரும்ப வேலைக்கு ஜாயின் பண்ணலாம்ன்னு பிளான் பண்ணியிருந்தேன். நாலு மாசம் எப்படி போச்சுன்னே தெரியல... திருமண நாள் நெருங்கிடுச்சு.

சிறுசுங்க!

சிறுசுங்க!

சொந்த, பந்தத்துல இருந்த தங்கச்சிங்களுக்கு கூட கல்யாணம் ஆகி, குழந்தை இருந்துச்சு. அவங்க எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணாங்க, ஒரு பக்கம் வெட்கம், இன்னொரு பக்கம்... நாம நிஜமாவே சீக்கிரம் பணம் சம்பாதிக்கனும்னு சில விஷயத்த இழந்துட்டோமோன்னு தோணுச்சு.

இட்ஸ் ஓகே! இழப்பு இல்லாமா எந்த ஒரு விஷயத்தையும் நாம அடைய முடியாதுங்கிறது தானே இயற்கையின் நியதி!

மூணு மாசம்!

மூணு மாசம்!

கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு... எல்லாரும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. முக்கியமா அம்மா... ரெண்டு தடவ பீரியட் வந்ததும்... ஏண்டி... இன்னுமா ஆகலன்னு நோண்டி, நோண்டி கேள்விக் கேட்க ஆரம்பிச்சாங்க. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. என் ஹஸ்பன்ட் தான் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாரு. அவரு ஃபிரெண்ட்ஸ் யாராவது கேட்டா... நாங்க பிளான் தள்ளி வெச்சிருக்கோம்ன்னு சொல்லிடுவார்.

ஆனா, அப்படி எந்த பிளானும் இல்ல. மூணே மாசத்துல ஏன் அவசரப்படுறாங்கன்னு கோபமாவும் வந்துச்சு.

ஒரு வருஷம்!

ஒரு வருஷம்!

ஆனா, ஒரு வருஷம் ஆகியும் எந்த பலனும் இல்ல. எனக்கு அப்பப்போ அழுகை வரும். முதல்ல விசேஷமான்னு கேட்க ஆரம்பச்சவங்க... இன்னுமா ஆகலன்னு... கேட்க ஆரம்பிச்சாங்க. இந்த பேச்செல்லாம் கேட்க கூடாதுன்னு... ஆபீஸுக்கு மார்னிங் சீக்கிரமா கிளம்பிடுவேன். ஈவினிங் லேட்டா தான் வருவேன். நான் ஏன் இப்படி பண்றேன்னு என் ஹஸ்பன்ட்க்கு மட்டும் தான் தெரியும். லவ் பண்ணியிருந்தா கூட இந்த அளவு ஒருத்தர் சப்போர்ட் பண்ணுவாரான்னு எனக்கு தெரியல.

மெடிக்கல் செக்கப்!

மெடிக்கல் செக்கப்!

ஒரு தடவ ஆபீஸ்ல இருந்து மெடிக்கல் செக்கப் ஆஃபர் கொடுத்திருந்தாங்க. என் வாழ்க்கையில சளி, காய்ச்சல் தவிர நான் எந்த ஒரு டெஸ்ட்டும் எடுத்ததே இல்லை. இரத்த தானம் கூட பண்ணதில்ல. இந்த மாதிரி மெடிக்கல் செக்கப் ஆஃபர் பண்ணியிருக்கன்னு ஹஸ்பன்ட் கிட்ட சொன்னேன். அப்பதான, இதுநாள் வரைக்கும் நான் மெடிக்கல் செக்கப் பண்ணதே இல்லனும் சொன்னேன்.

ஒரு பேச்சுக்காவது நம்ம உடம்பு எப்படி இருக்குன்னு நாம தெரிஞ்சுக்கணும். முதல்ல போய் பண்ணுன்னு சொன்னாரு.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

அப்போ தான் அங்க பார்த்த டாக்டர் கிட்ட, இந்த மாதிரி கன்சீவ் ஆகமுடியாத விஷயத்தை பத்தி சொன்னேன். நோ பிராப்ளம், டெஸ்ட் பண்ணி பார்த்தா என்னன்னு தெரிஞ்சுக்கலாம். இப்போ எல்லாம் மெடிசன் மூலமா எல்லாத்தையும் குணப்படுத்திடலாம்... டோன்ட் வரின்னு ஆறுதல் சொன்னாங்க.

ஆனால், டெஸ்ட் ரிசல்ட் என்ன வாழ்க்கையையே புரட்டிப் போட்டுச்சு. என்னோட கர்ப்பப்பைல ஏதோ பிராப்ளம் இருக்கும். குழந்தை ஆரோக்கியமா வளர முடியாது. தாங்காதுன்னு சொன்னாங்க. அதுமட்டுமில்ல, இதனால உங்க ஹெல்த்துக்கு பிராப்ளம் வர வாய்ப்பு இருக்கு. சோ, கர்ப்பப்பை நீக்கனும்ன்னு சொன்னாங்க.

என்ன பண்ண?

என்ன பண்ண?

ரெண்டு நாளா அவர்க்கிட்ட இதப்பத்தி எப்படி சொல்றதுன்னு தெரியல. நான் ரொம்ப டல்லா இருந்தேன். ஆபீஸ்க்கு கூட போகல. அவராவே கேட்டுட்டே இருந்தாரு. ஒரு சமயத்துல அழுகைய அடக்க முடியாம... அவர் மடியிலப் படுத்து எழுதுட்டேன்.

இன்னமும் கூட அவர பத்தி நெனச்சா எனக்கு அவ்வளோ பெருமையா இருக்கு. அவர் எப்படி இந்த விஷயத்த அவ்வளவு கூலா எடுத்துக்கிட்டாருன்னு தெரியல.

உன் ஹெல்த் தான் முக்கியம். குழந்தை தத்தெடுத்துக் கூட வளர்த்துக்கலாம். மேற்கொண்டு என்ன பண்ணனும்ன்னு டாக்டர்கிட்ட பேசலாம் வான்னு கூப்பிட்டார்.

சண்டை!

சண்டை!

ஆனா, மாமனார், மாமியார் இதுக்கு ஒத்துக்கல. வாரிசு இல்லாம எப்படின்னு சண்டைப் போட்டாங்க. அவங்களையும் சமாதானப் படுத்தினது அவரு தான். எனக்கு கர்பப்பை நீக்கி ஒரு வருஷம் ஆயிடுச்சு. போன தீபாவளியில இருந்து தான் மாமனார், மாமியார் என் கூட திரும்பி பேச ஆரம்பிச்சாங்க.

இப்பவரைக்கும்.... என் ஹஸ்பன்ட்க்கு நான் என்ன பண்ண போறேன்னு தெரியல. நன்றி கடனா என்னால ஒன்னும் பண்ண முடியாது.

ஹேப்பி!

ஹேப்பி!

கண்டிப்பா எல்லாருக்கும் தனக்குன்னு ஒரு குழந்தை வேணும்கிற ஆசை இருக்கும். அவருக்கும் அது இருந்திருக்கும். ஆனா, நான் அப்படி என்ன அவர காதலிச்சுட்டேன்னு எனக்கே தெரியல... அரேஞ்சுடு மேரேஜ்ல ஒருத்தர் இவ்வளவு விட்டுக் கொடுத்து போவார்ங்கிறது எனக்கு ரொம்பவும் ஆச்சரியமா இருக்கு.

எனக்கு இப்படி ஒரு ஹஸ்பன்ட் கிடைச்சிருக்கார்ன்னு நினைக்கும் போது, ரொம்ப சந்தோசமாவும் இருக்கு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I Could Not Conceive Baby, But He Said Ok Wholeheartedly - My Story!

I Could Not Conceive Baby, But He Said Ok Wholeheartedly - My Story!