என்ன மேடம் பாஸ் மேலயே கம்ப்ளைண்ட்டா! My Story #196

Posted By:
Subscribe to Boldsky

நான் சொல்லப்போகும் பிரச்சனை உங்களுக்கு வித்யாசமாக தெரியலாம், பிரச்சனை வித்யாசமாக இருக்கிறதா அல்லது என்னுடைய பார்வை வித்யாசமாக இருக்கிறதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்ற முன் அபிப்ராயத்துடன் ஓர் மெயில்.... துவங்கியதிலிருந்து முடியும் வரையிலும் வாசிப்பவருக்கு பரபரப்பு துரத்தியது.

மகளிர் தினத்தன்றாவது இதைச் சொல்லிட வேண்டுமென்று பேரார்வத்தில் எழுதி அனுப்புகிறேன் என்று கொடுத்திருந்த அறிமுகத்தை விட அவர் தொடர்ந்து விவரித்த விதமும் வாழ்க்கை குறித்தான புரிதலும் பெண்கள் பற்றிய வித்தியாசமான கோணமும் நாம் எல்லாரும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்.

How Will Take Criticism against you

சென்னையில் இருக்கிற மிகப்பெரிய மென் பொருள் நிறுவனத்தில் கேம்பஸில் செலக்ட் ஆகி இரண்டு வருட வேலை பின்னர், அதை விட பெரிய நிறுவனத்திற்கு வேலையை மாற்றிக் கொண்டு மாதம் அறுபத்தைந்தாயிரம் சம்பளம் வாங்கும் பெண் தனக்கு இப்படியெல்லாம் சிக்கல்கள் இருக்கிறது என்பதை இதுவரை கேட்டிருக்க மாட்டோம்.... ஏன் யோசித்துகூட இருக்க மாட்டோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 #1

#1

சோஃபா மேல கால வைக்காதன்னு எத்தன வாட்டி சொல்றது, அம்மாவிடம் திட்டு வாங்க வேண்டும் என்றல்ல.... கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பஸ்ஸில் பயணித்து ஏழு மணி நேரத்திற்கும் அதிகமாக காலை தொங்கப்போட்டு உட்கார்ந்து,வீடு திரும்பும் எனக்கு சிறிது நேரம் காலை மடக்கி உட்கார வேண்டும் என்று நினைப்பதில்,அப்படி உட்காருவதில் தவறேதும் இல்லையே....

#2

#2

காலை மடக்கி சோபாவில் வைத்தது தான் தாமதம்.... அம்மாவின் குரல் கேட்க ஆரம்பித்துவிட்டிருந்தது சம்பாதிக்கிற திமிறு.... போற வீட்ல இப்டித் தான் உக்காருவியா... பொம்பளப்பிள்ள கொஞ்சம் அடக்கமா வேணாமா... ஏன் தலையில வச்சிட்டு உக்காரேன்.

பயணக் களைப்பில், எரிச்சலாய் இருந்த எனக்கு அம்மாவின் வார்த்தைகள் மேலும் சோர்வூட்டியது, கடுப்புடன் எழுந்து அறைக்குள் சென்று அடைந்து கொண்டேன்.

#3

#3

நீண்ட நாட்கள் கழித்து கல்லூரி நண்பன் அழைத்திருந்தான், தான் பணியாற்றிக் கொண்டிருக்கும் நிறுவனத்தில் பேப்பர் போட்டுவிட்டேன் என்றும், உங்கள் நிறுவனத்தில் ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்க... ஹெச் ஆர் மெயில் ஐடியை கொடுத்து ரெஸ்யூம் அனுப்பச் சொல்லியிருந்தேன்.

அவனும் அனுப்பினான். நேர்காணலுக்கு வந்தவனை தேர்ந்தெடுத்தது எங்கள் நிறுவனம், இடையில் புகுந்து எந்த சதி வேலையையோ அல்லது லஞ்சமோ நான் கொடுத்திருக்கவில்லை.

#4

#4

நான் எவ்ளோ நாளா கேக்குறேன்... எனக்கு ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணுச்சா? அவன் கேட்டதும் உடனே வேல வாங்கித் தர முடியுதா... அதான் நாங்க எல்லாம் உன் கண்ணுக்கு தெரிய மாட்டோம். எனக்கு காலேஜ் படிக்கும் போதே தெரியும், அவன் மேல உனக்கு ஒரு க்ரஷ் இருக்கு தானா

நீ சொல்லலன்னா எங்களுக்கு தெரியாதா.... நீயும் வேல வாங்கித் தருவேன்னு இவ்ளோ நாள் வெயிட் பண்ணேன் பாரு என்னைய சொல்லணும்

#5

#5

என் தயவில் வேலை கிடைத்துவிட்டது என்று நண்பன் முகநூலில் பதிவிட்ட இரண்டாவது நிமிடத்தில் கல்லூரித் தோழி வாட்சப்பில் அனுப்பியிருந்த மெசேஜ் தான் மேலே நீங்கள் படித்தது.

இதில் என்னுடைய வேலை எதுவுமில்லை, ஹெச் ஆர் மெயில் ஐடி கொடுத்ததுடன் என் பணி முடிந்ததுவிட்டது, அவன் நேர்காணலுக்கு வந்தது கூட எனக்கு தெரியாது, கடைசியாக பெர்சனல் இண்டர்வியூவின் போது இந்த ரவுண்ட் செலக்ட் ஆனா ஜாயிண்ட் பண்ணிடலாம்னு சொன்னாங்க அப்டின்னு மெசேஜ் பண்ணியிருந்தான். நானும் ஆல் த பெஸ்ட் சொன்னேன் அவ்ளோ தான்.

 #6

#6

நடந்ததை ஒன்று விடாமல் டைப் செய்து அனுப்பினேன்..... சும்மா பொய் சொல்லாத என்று டைப் செய்து ஆங்கிரி ஸ்மைலி ஒன்றினை அனுப்பியிருந்தாள். மேற்கொண்டு நம்ம என்ன செய்ய சிசிடிவி விடியோவையா காட்ட முடியும்.

இவற்றை விட இன்னொரு கொடுமை இருக்கிறதே....

#7

#7

என்ன கேரக்டர்னு ஜட்ஜ் பண்ண முடியல.... பயங்கர ஹெட் வெயிட்டா இருக்கும் போல, ஆமா... அன்னக்கி பார்கிங்ல பாக்குறேன் பாக்காத மாதிரி அப்டியே திரும்பிட்டு போய்டுச்சு. இவ்ளோ திமிறு ஆகாதுப்பா, மெசேக் பண்ணா கூட ரிப்ளை பண்ணாது அகங்காரம் புடிச்சது போல

என்னைப் பற்றி என் பின்னால் பேசப்படும் வசனங்கள் இவை, ஒவ்வொன்றையும் விளக்கி அப்போதைய என் மனநிலை, நானிருந்த சூழலை விளக்கி பக்கம் பக்கமாக விளக்கக்கடிதம் கொடுத்தாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

#8

#8

ப்ரசண்டேசன் கொடுக்கணும்... நீ கொஞ்சம் ரெடி பண்ணிடறியா?

நானா... சார் டிஎல் தான எப்பவும் கொடுப்பாங்க.... டி எல் தான் கொடுக்கணும்னு யார் சொன்னது? டீம் ல ஒருத்தர் கொடுத்தா போதும்.... இப்போயிருந்தே கொடுத்து பழகினா தான நெக்ஸ்ட் பெரிய ப்ராஜெக்ட் பண்றப்போ யூஸ்ஃபுல்லா இருக்கும்.

எம் டி அறையை விட்டு வெளியே வரும் போதே இன்னக்கி என்னென்ன டயலாக் எல்லாம் கேட்க வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டேன்.

#9

#9

நினைத்தது போலவே அதுவரையில் என்னுடன் நட்புடன் பழகிய டிஎல் முகம் காட்ட ஆரம்பித்தார், பிற நண்பர்களும் விலக ஆரம்பித்தார்கள்.

ரூமுக்குள்ள போனாலே எதாவது மயக்கிட்டு வந்திடறா... அவளும் அவ மூஞ்சியும், டேட்டிங் ஒகே சொல்லிருப்பா...ம்ம்ம், ஆமா அன்னக்கி எத்தனிக் டே அப்போ ரெண்டு பேரும் செல்ஃபி எடுத்துக்கிட்டாங்களே அப்பவே இவங்க வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சது. அவ லீவ் கேட்டா மட்டும் பல்ல இளிச்சிட்டு லீவ் கொடுப்பான்

 #10

#10

செல்ஃபி எடுப்பதற்கும், ப்ரசண்டேசன் சப்மிட் செய்வதற்கும் என்ன சம்மந்தம் என்று தான் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறேன்.

இருப்பதிலேயே மிகப்பெரிய டார்ச்சர் இது தான், பலருக்கும் இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்று தான் தெரியாமல் பிரச்சனையை மேலும் மேலும் தீவிரமாக்கிக் கொண்டிருக்கிறோம், இதை மறைத்தாலும் பிரச்சனை வெளியில் சொன்னாலும் பிரச்சனை

#11

#11

சார்... தயவு செஞ்சு என்னைய அப்டி கூப்டாதீங்க...

ஏன் நீ என் டார்லிங் தான.. நான் கூப்டாமா என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கட் செய்தேன். தொடர்ந்து கால் செய்ய எல்லாவற்றையும் கட் செய்து கொண்டேயிருந்தேன்,

வாட்சப்பிற்கு வந்துவிட்டார். ஏன் என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய், உன் மேல் எனக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது தெரியுமா? என் அன்பை உதாசீனம் செய்யாதே பின்னர் வருத்தப்படுவாய், உனக்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன். என்னை நம்பு.

 #12

#12

அன்புக்கு நன்றி என்று பதிலனுப்பினேன், செல்லம்மா லவ் யூ என்று ரிப்ளை வந்தது, எரிச்சலாய் இருந்தது, சார்... இப்டி மிஸ் பிஹேவ் பண்ணா ஆபிஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியதா இருக்கும்.

நீ யார் கிட்ட சொன்னாலும் சரி, எனக்கு நீ வேணும் உன் மேல அவ்ளோ அன்பு வச்சிருக்கேன், உனக்கு அப்பறம் தான் எனக்கு ஃபேமிலியே

#13

#13

அந்த அலுவலகத்திற்கு வந்த சேர்ந்த ஒரு வாரத்திலிருந்து இந்த டார்ச்சர் தொடங்கிவிட்டது, உயரதிகாரியாக வேறு இருப்பதால் ஒரு அளவுக்கு மேலே கட் செய்யவும் முடியவில்லை, அவரின் எண்ணை ப்ளாக் செய்யவும் முடியவில்லை.

அன்றைக்கு தொல்லை தாங்காமல் ஹெச்.ஆருக்கு மெயில் அனுப்பிவிட்டேன், பதறியடித்துக் கொண்டு போன் செய்தார் ஹெச் ஆர்.

 #14

#14

என்ன மேடம் பாஸ் மேலயே கம்ப்ளைண்ட் பண்ணியிருக்கீங்க, விஷயம் வெளிய தெரிஞ்சா அவருக்கு எந்த பிரச்சனையும் இல்ல, மொத்தல்ல உங்கள தான் வேலைய விட்டு தூக்குவாங்க, அவர எல்லாம் பகச்சுக்காதீங்க.

என்னைய ஏன் தூக்கப்போறாங்க? அப்போ எங்க கம்ப்ளைண்ட் பண்றது, சும்மா இதுக்கெல்லாம் டென்ஷனாகிட்டு ஏதோ குடிச்சிட்டு தெரியாம பேசிருப்பாரு அதுக்கெல்லாம் கம்ப்ளைண்ட் பண்ணா எப்டி மேடம்...

எக்ஸ்க்யூஸ்மி என் மெயில் ஃபுல்லா படிச்சீங்களா இல்லையா? லாஸ்ட் ஒன் இயரா டார்ச்சர் பண்ணிட்டு இருக்காரு. ஒவ்வொரு அலுவலகத்திலும் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 பெரும்பாலும் இப்படித்தான் செயல்படுகிறது.

#15

#15

ஒரு பெண்ணின் வெளித்தோற்றத்தை வைத்து, அவள் எப்படிப்பட்டவள் என்பதை இந்த சமூகம் கண்டு, திரைக்கதையை எழுதி படத்தை நூறு நாளைக்கு என்ன வாழ்க்கை முழுவதுமே ஓட்டி விடுகிறார்கள்.

சிரித்து பேசினாலோ, தொடர்ந்து உழைத்து போராடி தனக்கான அங்கீகாரத்தை பெற்றாலோ யாருமே அந்த உழைப்பையும், அர்பணிப்பையும் பார்ப்பதில்லை மாறாக சிரிச்சு மயக்கியிருப்பா, டேட்டிங் போயிருப்பா என ஒரு நொடியில் கேரக்டர் மீது தான் கை வைப்பார்கள். இப்படிச் சொல்வது ஆண்கள் மட்டுமல்ல பெண்களையும் சேர்த்தே தான் சொல்கிறேன்.

#16

#16

நான் எதுவுமே செய்யலயே.... ஒரு பகடைக்காயாக என்னை பயன்படுத்திக் கொள்கிறார்களே, பிம்பத்தை பார்த்து உண்மையை கணிக்கிறார்களே என்று நாள்தோறும் அழுது புலம்பிக் கொண்டிருந்தால் ஒரு பிடியைக் கூட நகர்த்த முடியாது. இதனை சமாளிக்க, இதுவரையில் நான் பயன்படுத்திய ஒரு சூட்சமத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் இந்த மகளிர் தினத்தில்...

உங்களை நீங்கள் நம்புங்கள், உண்மை தெரியாமல் புலம்பலாகவும், பொறாமையாகவும் வெளிப்படுகிற விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டும், அதனை நமக்கானதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இங்கே இல்லை. தெருவில் நாய் குலைத்துக் கொண்டிருந்தால் நமக்கென்ன கவலை?

மகளிர் தின வாழ்த்துக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync life my story
English summary

How Will Take Criticism against you

How Will Take Criticism against you