For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிர்வாணமாக இருப்பது போல மார்ஃபிங் செய்து என் படத்தைப் பகிர்ந்தான்... - My Story #125

ஃபேஸ்புக் பிரஃபைல் படத்தை மார்ஃப் செய்து விளையாடிய அந்நியன் - My Story #125

|

என் பெயர் சக்தி. பெயரிலாவது இருக்கட்டுமே என என் தந்தை இப்படி ஒரு பெயரை வைத்தாரோ என்னவோ. ஆண்களுக்கான சுதந்திரம் என இதுவரை நான் ஒருமுறையாவது யோசித்திருப்போமா? விவாதம் செய்திருப்போமா? குறைந்தபட்சம் டீக்கடை பெஞ்சில் அமர்ந்தாவது பேசியிருப்போமா? இல்லவே இல்லை. அதற்கு காரணம், அவர்கள் தங்கள் சுதந்திரத்தை யாரிடம் இருந்து பெறவும் இல்லை, அதை யாரும் பறிக்க விடவும் இல்லை என்கிறீர்களா?

இல்லை! ஆண்களின் சுதந்திரத்தில் ஒருபோதும் பெண்கள் தலையிட்டதே இல்லை என்பது தான் உண்மையான காரணம். மனைவியாக, அம்மாவாக, சகோதரியாக ஆண்கள் மீது இதுநாள் வரை அக்கறை மட்டுமே செலுத்தியிருக்கிறோம். தவிர, ஒருபோதும், இவ்வளவு தான் உனக்கான சுதந்திரம், நீ இதை தான் செய்ய வேண்டும் என தடைகள் விதித்ததில்லை.

என்றாவது பெண்கள் ஆண்களின் படங்களை திருட்டுத் தனமாக பதிவிறக்கம் செய்து அதை மார்ஃபிங் செய்து நிர்வாண உடல்களுடன் அதைப் பொருத்தி சமூக தளங்களிலோ, தோழிகளுக்கோ பகிர்ந்தனர் என நீங்கள் (ஆண்கள்) நிஜத்திலோ, செய்தியிலோ படித்தோ, கண்டதோ உண்டா?

பிறகு ஏன்? பெண்களுக்கு மட்டும் இந்த தொல்லைகளை கொடுத்து வாழ்க்கையை சீரழிக்கிறீர்கள்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களுள் ஒருத்தி...

உங்களுள் ஒருத்தி...

உங்கள் வீட்டில் துறுதுறுவென சுத்திக் கொண்டு, அண்ணன், தம்பிகளை வம்பிழுத்துக் கொண்டு அக்காவோ, தங்கையோ இருக்கிறார்களா? குறைந்தபட்சம் அக்கம்பக்கத்து வீட்டில் அல்லது உறவினர் வீடுகளில்... அப்படி இருந்தால், அது நானாக தான் இருக்கும். ஆண்களை போலவே பெண்களுக்கும் செல்ஃபீ எடுப்பது பிடிக்கும். அதில் பல ஃபில்டர்கள் போட்டு எடிட் எல்லாம் செய்து எங்களை அழகுப்படுத்திக் கொள்வோம். இது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பங்கு.

யாருக்கு?

யாருக்கு?

இது ஆண்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் எதாவது இருக்கிறதா? அல்லது யாரேனும் பெண்கள் இந்த நுட்பத்தை பெண்கள் பயன்படுத்தக் கூடாது என விரும்புகிறீர்களா? ஆண்கள் செல்ஃபீ எடுத்தால் கேசுவல். பெண்கள் எடுத்தால்... இவளுகளுக்கு இதே பொழப்ப போச்சு... எப்பப் பார்த்தாலும் செல்ஃபீ எடுத்துக்கிட்டு, வாயா இழுச்சுக்கிட்டு.. என கேலி, கிண்டல் செய்வது. இது உடன் பிறந்த அண்ணனில் இருந்து, நண்பர்கள், காதலன், கணவன் என எல்லோரும் கூறுவதாகும்.

ஸ்மார்ட் போன்!

ஸ்மார்ட் போன்!

நான் ஒரு அப்பர்-மிடில்-கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள். பள்ளி கடைநிலை படித்திக் கொண்டிருந்த போதே என் கைகளுக்கு ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. மேலே கூறியபடியே பெண்கள் செல்ஃபீ எடுப்பது தவறு என்பதை அறியாமல், நிறைய செல்ஃபிக்கள் எடுத்து இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் பகிர்ந்து வந்தேன்.

சாட்டிங்!

சாட்டிங்!

சொல்லவே வேண்டாம், ஒரு பெண் பெயரில் ஃபேக் ஐ.டி ஆர்மபித்தாலே அதற்கு பல லைக்குகள் போட்டு, கமெண்ட்களில் கியூட், சூப்பர், லவ்லி என ஜொள்ளுவிட துவங்கிவிடும் ஒரு கூட்டம். மேலும், மெசேஜ் பாக்ஸில் வந்து ஹாய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ரிப்ளை செய்யவில்லை என்றால், உடனே, அந்த பெண் ஆணவம் கொண்டவள், திமிர் பிடித்தவள் என கூறி அசிங்கமாக திட்டவும் செய்வார்கள்.

பிளாக்!

பிளாக்!

இது போன்ற இடைஞ்சல்களில் இருந்து தப்பிக்க மார்க் எங்களுக்கு கொடுத்த ஒரே வரம், பிளாக் ஆப்ஷன் தான். இது அனைத்து சமூக தளங்களிலும் இருக்கிறது. அப்படி தான் அவனையும் நான் பிளாக் செய்தேன். அவன் பெயர் கூட எனக்கு தெரியாது. ஏனெனில், நான் பிளாக் செய்தவரின் எண்ணிக்கை நூற்றை கடந்திருக்கும்.

பதட்டம்!

பதட்டம்!

பொதுவாக கல்லூரிக்குள் சென்றவுடன் மொபைலை ஆப் செய்து வைத்துவிடுவேன். லஞ்ச் பிரேக் மற்றும் மாலை கல்லூரி முடிந்த பிறகே, மீண்டும் மொபைலை ஆன் செய்வது எனது வழக்கம். ஒரு நாள் மாலை அப்படி மொபைலை ஆன் செய்த போது, என் நண்பன் ஒருவனிடம் இருந்து எண்ணற்ற மிஸ்டு கால்கள் வந்த நோட்டிஃபிகேஷன் செய்திகளும், வாட்ஸ் மெசேஜ்களுக்கும் வந்திருந்தன.

நான் வாட்ஸ்-அப் ஓபன் செய்வதற்குள் அவனிடம் இருந்து மீண்டும் கால் வந்தது...

மார்ஃபிங்!

மார்ஃபிங்!

அழைப்பை எடுத்தவுடன் மிகவும் பதட்டமாக பேச ஆரம்பித்தான்...

நண்பன்: ஃபேஸ்புக் பார்த்தியா?

நான்: இல்ல, ஏன்..?

நண்பன்: உன் ஃபேஸ்புக் வால்'ல என்ன போஸ்ட் ஆகியிருக்கு பாரு?

நான்: ஏன்டா? ஏதாவது பிரச்சனையா?

நண்பன்: டேக் (Tag) பண்ற ஆப்ஷன் எல்லாம் என்ன பண்ணி வெச்சிருக்க? (கோபமாக)

நான்: டேய்! எனக்கு ஒன்னும் புரியல... தெளிவா சொல்லு...

நண்பன்: உன் வாட்ஸ் அப்-க்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பிச்சிருக்கேன். அதுக்கு முன்ன, ஃபேஸ்புக் போய், அந்த போஸ்ட் டெலீட் பண்ணு.. இல்ல ரிபோர்ட் பண்ணு...

என்ன அது?

என்ன அது?

என் நண்பன் அனுப்பிய செய்தியில், என் முகத்தை மற்றொரு நிர்வாண பெண்ணின் உடலுடன் மார்ஃப் செய்யப்பட்ட ஸ்க்ரீன் ஷாட் இருந்தது. எனக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே, நான் என் காதலனுக்கு கால் செய்து, இதை குறித்து கூறினேன். பிறகு, அவனுக்கு தெரிந்த சைபர் க்ரைம் அதிகாரியிடம் பேசி, பெரிதாக யாருக்கும் தெரியாமல் அதை பிளாக் செய்தோம். ஆனால், அந்த நபர் யாரென கண்டுப்பிடிக்க முடியவில்லை.

டெலீட்!

டெலீட்!

இந்த சம்பவம் நடந்த பிறகு, எனக்கு தெரியாத ஃபேஸ்புக் நண்பர்கள் பலரை அன்-பிரெண்ட் செய்தேன். சந்தேகப்படும்படியாக இருந்த பலரை பிளாக் செய்தேன். அதன் பிறகு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற எந்த சமூக தளத்திலும் எனது படங்களை பதிவு செய்வதே இல்லை. வாட்ஸ்அப்பில் கூட முகப்புப் படத்தை சேமிக்கும் வழி இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்து படத்தை சேமித்துக் கொள்கிறார்கள்.

குறுஞ்செய்தி...

குறுஞ்செய்தி...

ஒரு சில மாதங்கள் கழித்து நான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தேன். அப்போது ஃபேஸ்புக் யூசர் என்ற அக்காவுண்டில் இருந்து எனது மெசேஞ்சருக்கு ஒரு செய்தி வந்திருந்தது. அதில், என்ன நீ பிளாக் பண்ணல்ல... அதுக்கு தாண்டி... உன் போட்டோவ மார்ஃப் பண்ணிப் போஸ்ட் பண்ணேன். நீ எத்தன அக்கவுண்ட வேணாலும் பிளாக் பண்ணலாம். உன்னால என்ன ஒன்னும் பண்ண முடியாது. இந்த ஐ,டி கூட நீ படிக்கும் போது டி-அக்டிவேட் ஆயிருக்கும். என திமிருடன் செய்தி அனுப்பியிருந்தான்.

திருட்டுப் பயலுகள்!

திருட்டுப் பயலுகள்!

திருட்டு என்பது இப்போது இன்டர்நெட்டில் தான் அதிகம் நடக்கிறது. ஒருவரின் படைப்பில் இருந்து, கலை, புகைப்படங்கள், கட்டுரைகள் என பலவற்றை திருடுகிறார்கள். இதை தடுக்க எந்த வழியும் இல்லை. மேலும், நாமும் கூட திருட்டை ஆதரித்து தானே வருகிறோம். சினிமாக் காரர்களின் படங்களை திருடி தமிழ் ராக்கர்ஸ் போன்ற ஒருவன் பதிவு செய்தால், அவனை புகழந்து பேசுவோம். அதுவே, நமது சொந்த உருவாக்கத்தை, கலையை, படைப்பை யாரேனும் திருடினால் குறைகூறுவோம்.

முற்றுப்புள்ளி!

முற்றுப்புள்ளி!

பெரும்பாலான, இந்த ஆன்லைன் திருட்டுகளில் திரைப் படங்களுக்கு அப்பால், அதிகம் பலிகடா ஆவது பெண்களும், அவர்களின் படங்களும் தான். இதற்கு ஒரு கடுமையான சட்டம் அல்லது தொழில்நுட்ப வழிமுறைகளை கொண்டுவர வேண்டும்.

அதுவரை, என்போன்ற பெண் சக்திகள் கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்புக்குள்ளாகிக் கொண்டே தான் இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How My Facebook Profile Picture Has Been Misused - My Story!

Even We Girls Does Not Have Freedom To Post Our Own Images in Social Media? My Story!
Story first published: Tuesday, January 2, 2018, 13:46 [IST]
Desktop Bottom Promotion