மூன்றில் இரண்டு பங்கு பிறப்புறுப்பை காணவில்லை! பெண்ணின் அதிர்ச்சிக் கதை!

Posted By: Staff
Subscribe to Boldsky

மிகவும் அரியவகையிலான புதிய புதிய நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதற்கு சான்றாக இதோ இந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கனடாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கு புறப்புறுப்பின் மூன்றில் இரண்டு சதவீதம் வளரவேயில்லை.

ஒரு பெண்ணுக்கு அன்றாடம் அன்றாடம் நிகழக்கூடிய மாதவிடாயிலிருந்து குழந்தை பேரு வரையில் எல்லாவற்றிலும் பெரும் போராட்டஙக்ளை சந்தித்திருக்கிறார். இது மிகவும் அரிய வகையான நோய் என்று சொல்லப்படுகிறது. இவர் பாலியல் உறவு வைத்துக் கொள்வதும் மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ப்ரைனா ஃப்ளட்சர் என்ற பெண் கனடாவுப் நோவா ஸ்கோடியா என்னும் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பிறக்கும் போது MRKH குறைபாடு இருந்திருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் வளர்ச்சி இருக்காது.

Image Courtesy

#2

#2

இது குறித்து ப்ரைனா என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம், நான் முதலில் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், அவனுக்கு என்னுடைய குறைபாடு குறித்து சொன்ன போது.... முழு மனதுடன் ஏற்றுக் கொண்டான் அதன் பிறகு அதனையே எனக்கு எதிராக திருப்பினான், என் உணர்வுகளை சிதைத்தான். உடலில் குறைபாடு இருக்கிறது என்பதற்காக எங்களிடம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமா என்ன?

Image Courtesy

#3

#3

நீ பெண் கிடையாது தானே என்றே அடிக்கடி என்னிடம் சொல்வான். இது எனக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கும்.ஆனால் எனக்கு தெரியும், நான் யாரென்று மாதவிடாய் வருகிறதோ இல்லையோ என்னால் ஒருவனை திருப்திபடுத்த முடிகிறதோ இல்லையோ என்னை நான் ஒரு பெண்ணாகத் தான் உணர்கிறேன் அதற்காக அவனின் பேச்சுக்களை எல்லாம் நான் அலட்டிக் கொள்ளவில்லை.

#4

#4

Mayer-Rokitansky-Küster-Hauser என்ற இந்த குறைபாடு 5000 பெண்களில் ஒருவருக்கு ஏற்படக்கூடும். இதனை நாம் முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை எல்லாம் பெற முடியாது ஏனென்றால் எந்த அறிகுறிகளும் தெரியாது. இந்த குறைபாடு எனக்கு பிறக்கும் போதிருந்தே இருந்தாலும், எந்த வேறுபாடுகளோ அல்லது அறிகுறிகளோ எனக்கு தெரிந்திருக்கவில்லை.

பருவ வயதை அடைந்த பின்பும் இன்னும் பருவமடையவில்லை என்று மருத்துவமனைக்குச் சென்று தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது தான் இந்த குறைபாடு எனக்கிருக்கிறது என்பதே தெரிந்தது.

Image Courtesy

#5

#5

ஆரம்பத்தில் நான் மிகவும் எடை குறைவாக இருந்தேன், சத்து குறைபாடு காரணமாகவே மாதவிடாய் வந்திருக்காது என்று நினைத்தோம். மாதவிடாய் எனக்கு உரிய வயதில் வரவில்லை என்பதால் நான் எந்த வருத்தமும் கொள்ளவில்லை. ஆனால் வகுப்பறையில் உட்கார்ந்திருக்கும் போது தோழிகள் பேட் இருக்கிறதா? டேம்பூன் இருக்கிறதா என்று கேட்பார்கள், தொடர்ந்து இல்லையேன்றே சொல்வேன்.

#6

#6

வயது ஏறிக்கொண்டே போனது கிட்டதட்ட பதினாறு வயதான போது இது குறித்து சற்று தீவிரம் காட்டினோம். மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட், எம் ஆர் ஐ எல்லாம் எடுத்துப் பார்த்தாரக்ள். அப்போது தான் எனக்கு கர்பப்பை இல்லை என்பதையே மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். இதுவரையில் இப்படி ஒரு குறைபாடு குறித்து நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை என்று சொன்னார் மருத்துவர்.

 #7

#7

அதன் பிறகு நானே இணையத்தில் நிறைய தேட ஆரம்பித்தேன். எனக்கு என்ன குறைபாடு இருக்கிறது, அதன் தாக்கம் என்ன, சரி செய்ய வழியிருக்கிறதா என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆசைபட்டேன் ஆனால் ஒன்றும் எனக்கு கிடைக்கவில்லை. இந்த குறைபாடு குறித்த விரிவான தகவல்களே இல்லை.

இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு கிட்னியின் செயல்பாடுகள் மற்றும் எலும்பு வளர்ச்சியிலும் மாறுதல்கள் ஏற்படும்.

#8

#8

அதை விட பிறப்புறுப்பின் வளர்ச்சியே இரண்டு சதவீதம் வரை இல்லை என்பதால் உறவு கொள்ளும் போதும் சிக்கல்கள் எழுந்தது. ஆனால் அதை சமாளிக்க நான் லியூப் பயன்படுத்தினேன். நீங்கள் உச்சத்தில் இருக்கும் போது சாதரண பெண்களுக்கு உறுப்பு விரிந்து கொடுக்கும்.

#9

#9

எனக்கு மாதவிடாயே வராது என்று சொல்லும் போது பெண்கள் பலரும் ஆச்சரியப்படுவாரக்ள், அதோடு... பராவாயில்லையே நீ அதிர்ஷ்டக்காரி என்பார்கள். முதலில் எனக்கு கோபமாய் வரும், என்னை ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்று நினைப்பேன் அதன் பிறகு தான் மாதவிடாயினால் பெண்கள் எவ்வளவு சிரமங்களை சந்திக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட போது அவர்கள் சொன்னதன் அர்தத்தை உணர்ந்து கொண்டேன்.

 #10

#10

இந்த குறைபாடு இருப்பவர்கள் தாய்மையடைய முடியாது. சமூகத்தில் ஒரு பெண் தாயானாள் தான் அவள் முழு பெண்மையை அடைகிறாள் என்ற கற்பிதங்களை உருவாக்கி வைத்து விட்டார்களே இது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. எனக்கு மருத்துவர்கள் சில வழிகளை பரிந்துரைத்தார்கள் குழந்தையை தத்தெடுத்து கொள்ளலாம் அல்லது கர்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றார்கள்.

வேறு ஒருவர், அதாவது தனது கர்பப்பையை தானமாக கொடுக்க முன்வருபவர்களிடமிருந்து பெற்று எனக்கு கர்பப்பை பொருத்த அதில் செயற்கை கருவூட்டல் மூலமாக குழந்தையை சுமக்கலாம் என்றார்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Girl's Half Of The Vagina Is Missing

Girl's Half Of The Vagina Is Missing
Story first published: Wednesday, March 21, 2018, 16:28 [IST]