Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
உப்புமா.... சித்தராமையா குறித்து பலரும் அறியாத 5 கேலியான உண்மைகள்!
உப்புமா.... சித்தராமையா குறித்து பலரும் அறியாத 5 கேலியான உண்மைகள்!
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா. இவர் தனது சொந்த வாழ்க்கை குறித்து பெரிதாக எந்த ஒரு பொதுவெளி நிகழ்சிகளிலும் பேசியது இல்லை. வீக்கென்ட் வித் ரமேஷ் என்ற கன்னட மொழி டிவி நிகழ்ச்சி மூலமாக தான் ஒருமுறை தனது பாலிய வயது வாழ்க்கை மற்றும் சுவாரஸ்யங்கள் குறித்து பகிர்ந்துக் கொண்டார் சித்தராமையா.
தனது மனைவியுடன் கூட சித்தராமையா அதிகம் பொதுவெளிகளில் தலை காட்டியது இல்லை. இவரது மகன் ராகேஷின் திடீர் மரணம் தான் இவரது ஆழ்மன உணர்சிகளின் வெளிபாட்டை முதன் முறையாக வெளிகாட்டியது. இவரது மகன் ராகேஷ் 2016 ஆண்டு பெல்ஜியம் சென்றிருந்த போது பல உடல் உறுப்புகள் செயலிழந்து திடீரென மரணம் அடைந்தார்.
சித்தராமையாவின் மற்றொரு மகனான யதிந்திரா மருத்துவராக இருந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யதிந்திரா வெற்றியும் பெற்றுள்ளார். இது தான் இவர் எதிர்கொண்ட முதல் தேர்தல் களம் என்பது குறிப்பிடத்தக்கது.

உப்புமா பிரியர்!
ஒரு தனியார் வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு பிடித்தமான உணவுகள் குறித்த இரகசியங்கள் பகிர்ந்துக் கொண்டார் சித்தராமையா. பொதுவாகவே உப்புமா என்றால் யாருக்கும் பிடிக்காது. தமிழ் சினிமாவில் தரமற்று எடுத்து வெளியிடும் படங்களை உப்புமா படம் என்று அழைக்கும் வழக்கமும் இருக்கிறது.
ஆனால், கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு உப்புமா என்றால் மிகவும் பிரியம். உப்புமாவை தனக்கு ருசிக்கவும் தெரியும், ருசியாக சமைக்கவும் தெரியும் என்று அந்த வானொலி பண்பலையில் மனம் மகிழ்ந்து கூறியுள்ளார் சித்தராமையா.

எஸ். 3
எஸ் 3 என்றதும் சூர்யாவின் சிங்கம் 3 படம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். சித்தராமையாவின் செல்லப்பெயர் தான் எஸ் த்ரீ. அதாவது, இவரது கணக்கு ஆசிரியர் சித்தராமையாவை எஸ் கியூப் என்று தான் அழைப்பாராம்.
இப்படி அழிப்பதற்கான காரணம் என்ன என்பது தெளிவாக அறியப்படவில்லை. ஆனால், இதற்கு பின்னணியில் ஏதோ கேலியான காரணம் இருப்பது மட்டும் உறுதி என்று தெரிகிறது. ஒருவேளை சூப்பர் ஸ்டார் சித்தராமையா என்று இருக்குமோ (ஹிஹிஹி)

டாக்டர்?
சித்தராமையா அரசியலில் நுழைவதற்கு முன்னர் சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் ஆவார். ஆனால், சித்தராமையாவின் தந்தையோ இவரை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டுள்ளார். கணக்கு மற்றும் அறிவியல் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த சித்தராமையா சட்டம் படிக்கவே விரும்பியிருக்கிறார்.

அலாரம்!
சித்தராமையாவிற்கு அலாரமே தேவையில்லையாம். எந்த விதமான காலமாக இருந்தாலும், சூரியன் சுட்டெரித்தாலும், குளிர் நடுங்க வைத்தாலும் சித்தராமையா கண்டுக் கொள்வதே இல்லை. தனது அலாரம் தனது மனைவி தான். தனது மனைவி எழுப்பிவிடும் போது எழுந்திருக்கும் வழக்கம் கொண்டிருக்கிறார் கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா.

அனைவருக்கும் உணவு!
உப்புமா மீது அதீத பிரியம் கொண்டிருக்கும் சித்தராமையாவிற்கு பசி இல்லாத கர்நாடகாத்தை உருவாக்க வேண்டும் என்பதே வாழ்நாள் கனவாம். தனது வாழ்நாள் இலட்சியம் என்னவென்று கேட்டால் இதை தான் கூறுவேன் என்று பண்பலை பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார் சித்தராமையா.



Click it and Unblock the Notifications
