For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலும் கடைசியுமாக டெல்லியை ஆட்சி செய்த இஸ்லாமிய பெண்! WonderWomen #007

டெல்லியை ஆட்சி செய்த சுல்தான்களில் முதலும் கடைசியுமாகா ஆட்சி செய்த பெண்ணைப் பற்றிய தகவல்கள்

|

இஸ்லாமிய மதத்தில் மிக உயரிய பொறுப்பான இமாம் என்ற பொறுப்பினை இதுவரை ஆண்களே நியமிக்கப்பட்டு வந்தார்கள். சமீபத்தில் அந்த பொறுப்புக்கு கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஜமீதா என்பவர் நியமிக்கப்பட்டார்.இமாமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் தொழுகையை வழிநடத்த வேண்டும். இதற்கு இதுவரை ஆண்களே நியமிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு பெண்ணை நியமித்திருப்பது பெரும் விமர்சனங்களை உண்டாக்கியது. ஜமீதாவிற்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.

இந்நிலையில் வரலாற்றிலேயே முதன் முறையாக இஸ்லாமிய பெண்ணொருவர் அரசராக நாட்டை ஆண்டிருக்கிறார், அவரைப் பற்றித் தெரியுமா?இதுவரை வரலாற்றில் எந்த பெண்ணாவது அரசராக ஆட்சி செய்திருப்பதை படித்திருக்கிறோமா.... ஒன்று இரண்டு என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் அந்த பெயர்கள் இருக்கின்றன.

சுல்தான்கள் ஆட்சியில் முதலும் கடைசியுமாக ஆட்சி செய்த ஒரே ஒரு இஸ்லாமிய பெண் ரஸியா சுல்தான் பற்றிய சில தகவல்களை தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்.இவர் 1236 முதல் 1240 வரை டில்லியை ஆட்சி செய்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நவம்பர் 10,1236 அதிகாரப்பூர்வமாக ஜலாலுதீன் ரஸியா அரசியாக பதவியேற்றார் இஸ்லாமியப் பெண்களின் பாரம்பரியமான உடை என்று சொல்லப்படக்கூடிய குறிப்பாக பெண்கள் அணியும் புர்காவைத் தவிர்த்தார்.

பாலின பேதத்தை உடைத்தெரியும் விதமாகவும் ஆண் பெண் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் தன் உடையை அமைத்துக் கொண்டார்.

Image Courtesy

#2

#2

பெண்ணென்ற காரணத்தால் தன்னை ‘சுல்தானா' என்று அழைப்பதை ரஸியா விரும்பவில்லை. அதற்கு காரணமாக அவர் சொன்னது, சுல்தானா என்பது சுல்தானின் மனைவியைக் குறிக்கும். அதாவது அரசரின் மனைவி என்று பொருள்.

இங்கே நான் தான் அரசர் அப்படியிருக்கும் போது எப்படி சுல்தானா என்று அழைப்பீர்கள் என்று கேள்வியெழுப்பினார். அதோடு தன்னையும் சுல்தான் என்றே அழைக்கவேண்டும் என்று கட்டளையிட்டார்.

#3

#3

இவரது ஆட்சிக்காலத்தில் வெளியான நாணயங்களில் எல்லாம் பெண்மையை போற்றும் வாசகங்கள் இடம்பெற்றன. சுல்தான் ரஸியாவின் தந்தை சம்சுதீன் இலட்டுமிஷ் தாய் குதப் பேகம் . இவரது மூதாதையர்கள் துருக்கியைச் சேர்ந்த செல்ஜக் என்ற அடிமைகளின் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள்.

Image Courtesy

 #4

#4

ரஸியாவின் தந்தையும், முன்னால் அரசருமான இலட்டுமிஷ் டில்லிக்கு ஒரு அடிமையாகத்தான் வந்திருக்கிறார் அப்போது டில்லியை ஆட்சி செய்தவர் குதப் அல் தின் ஐபக். அடிமை வம்சத்தினை இவர் தான் முதன் முதலில் ஆரம்பித்திருக்கிறார்.

Image Courtesy

#5

#5

குதப் ஐபக்கின் அரசவையில் பணியாற்றத்துவங்கினார் இலட்டுமிஷ் வெகு விரைவிலேயே அரசரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். அரசரின் அதீத மதிப்பையும் நம்பிக்கையை பெற்றதால் கவர்னராக பதவி உயர்வு பெற்றார். அதோடு, தனத மகளான குதப் பேகத்தை இலட்டுமிஷுக்கு திருமணம் செய்து வைத்தார் குதப் ஐபக்.

Image Courtesy

#6

#6

1210 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒரு விளையாட்டில் எதிர்பாராத விதமாக சுல்தான் குதப் ஐபக் உயிரிழக்கிறார். அவரது இடத்திற்கு ஐபக்கின் வாரிசு அரம் பக்‌ஷ் அடுத்த அரசராக பதவியேற்றார்.

Image Courtesy

#7

#7

அரம் ஆட்சியை எதிர்த்தவர்கள் அவருக்கு போட்டியாக, இலட்டுமிஷை களமிறக்கினர். டெல்லிக்கு அருகில் இருக்கும் பாக் ஐ ஜுட் என்னும் இடத்தில் இருவருக்கும் போர் நடந்தது அதில் இலட்டுமிஷ் வென்றார் 1211 ஆம் ஆண்டு டெல்லியின் சுல்தானாக இலட்டுமிஷ் பதவியேற்றார்.

Image Courtesy

 #8

#8

25 வருடங்கள் ஆட்சிசெய்த பிறகு 1236 ஆம் ஆண்டு உயிரிந்தார் இலட்டுமிஷ். இவரின் இந்த மரணம், டெல்லி அரசாட்சியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மூத்த மகனான நஷீர் உத் தீன் முகமத் 1229 ஆம் ஆண்டே இறந்து விட்டார்.

மற்ற மகன்களுக்கோ அரசாள தகுதியில்லை என்று நினைத்த சுல்தான் இலட்டுமிஷ் தன்னுடைய மரணப்படுக்கையில் தன் மகள் ரஸியா தான் அடுத்த சுல்தான் என்று எழுதிவிட்டு உயிரைத் துறக்கிறார்.

Image Courtesy

#9

#9

என்னதான் சுல்தான் இட்ட கட்டளை என்றாலும் அதனை அரசவையில் இருந்தோர் ஏற்றுக் கொள்ளவில்லை ஒரு பெண் நம்மை ஆட்சி செய்வதா என்று சொல்லி அவர்கள் ரஸியா சுல்தானாக பதவியேற்பதை எதிர்த்தனர்.

அதோடு இலட்டுமிஷின் மகனும், ரஸியாவின் மூத்த சகோதரருமான ருகுன் வுட் தின் ஃபிருஸ் அரசாக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Image Courtesy

#10

#10

ஃபிருஸ் அரசராக பதவியேற்கிறார். ஆனால் இவர் ஆட்சியை கவனிக்காமல் சிற்றின்பத்தில் திளைத்து பெரும் தொல்லையாக மாறிடுகிறார். இதனால் பலரது கோபத்திற்கு ஆளாகிறார். ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் ஃபிருஸும் அவருடைய தாயும் படுகொலை செய்யப்பட டெல்லியின் சுல்தானாக ரஸியா பதவியேற்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life wonder women
English summary

First and Last Female Ruler in delhi

First and Last Female Ruler in delhi
Story first published: Thursday, February 1, 2018, 11:42 [IST]
Desktop Bottom Promotion