For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  வாஜ்பாய் இந்தியாவிற்காக செய்தது என்ன? தெரிஞ்சா வாயடைச்சு போயிடுவீங்க!

  |

  விவாத மேடைகள் வைத்து கலந்தாலோசித்தாலுமே கூட இந்தியாவின் பெரிதும் கொண்டாப்பட்ட பிரதமர் என்று வாஜ்பாய் என்ற கருத்தே வரும். 1996ல் இழந்த வாய்ப்பை, 1998ல் பல தடைகளை கடந்து சாத்தித்தார் வாஜ்பாய். காங்கிரஸ் அல்லாது முழு ஆட்சியை நிறைவு செய்த இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமைக்கு சொந்தக் காரர் வாஜ்பாய்.

  Facts, Biography and Achievements of Atal Bihari Vajpayee

  Image Source: chandrajeetcha4 / Twitter

  1924 டிசம்பர் மாதம் பிறந்தவர் வாஜ்பாய். விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின் என்ற இந்தியாவின் இரண்டு முகத்தையும், பெரும் மாற்றத்தை கண்ட தலைவர்களுள் ஒருவர் வாஜ்பாய். 94 வயதான வாஜ்பாய் சமீபத்தில் உடல்நல குறைப்பாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் இவரை பற்றிய பேச்சுக்களே இல்லாமல் இருந்தது.

  ஆனால், இந்தியாவின் வெற்றியில், முன்னேற்றத்தில் பிரதமர்களின் செயற்பாட்டில் வாய்பாயின் பங்கு பெரியது. ஆகையால் தான் கட்சி வேறுபாடு இல்லாது வாஜ்பாயை மக்கள் இந்தியாவின் பெரிதும் கொண்டாடப்பட்ட பிரதமராக காண்கிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அணு ஆயுதம்!

  அணு ஆயுதம்!

  இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. நம்மிடம் பெரிய குண்டுகள் வைத்திக் கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்று கூறியவர் வாஜ்பாய்.

  மேற்கத்திய நாடுகள் வாஜ்பாய்க்கு கண்டனங்கள் தெரிவித்தனர். ஆனால், நம் நாடு வாஜ்பாய் அவர்களை ஒரு நாயகனாக கண்டது. வெற்றிகரமாக இந்தியாவை 1999ல் அணு ஆயுதங்கள் கொண்ட நாடக உருவாக்கியவர் வாஜ்பாய்.

  தொலை தொடர்பு வளர்ச்சி!

  தொலை தொடர்பு வளர்ச்சி!

  ராஜீவ் காந்தி இறந்த பிறகு இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியானது 0.6%ல் இருந்து 2.8%த்திற்கு உயர்ந்தது. இதற்கு பத்தாண்டுகள் எடுத்துக் கொண்டது இந்தியா. ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை (NTP - New Telecom Policy) இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3%ல் (1999) இருந்து 70%த்திற்கு (2012) உயர்த்தியது.

  அனைவருக்கும் கல்வி!

  அனைவருக்கும் கல்வி!

  வாஜ்பாய் அவர்கள் ரைட் டூ எட்சுகேஷன் இன் இந்தியா என்ற திட்டத்தை சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் கொண்டு வந்தார். இது அனைவருக்கும் கல்வி என்ற பெயரில் இந்தியா முழுக்க மிகவும் பிரபலமானது. இதனால் பலர் கல்வி வாய்ப்பு பெற்றனர்.

  ஜி.டி.பி

  ஜி.டி.பி

  வாஜ்பாய் ஆட்சியின் கீழ் தான் கார்கில் போர் மோதலை எதிர்கொண்டது இந்தியா. அதே போல 1999, 2000ம் ஆண்டுகளில் இரண்டு பெரும் சூறாவளி காற்று தாக்குதல், 2001ல் பெரும் பூகம்பம்... 2002-03ல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ப் போர் என பல தாக்கங்கள்.. ஆனால், ஒருபோதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஜி.டி.பி'யில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய்.

  அமெரிக்காவுடனான உறவு...

  அமெரிக்காவுடனான உறவு...

  1) 2000ம் ஆண்டு பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். ஜிம்மி கார்டர்க்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தந்த முதல் அமெரிக்க அதிபர் கிளிண்டன். இந்த சந்திப்பின் போது இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவு வலுவடைந்தது.

  2) டெல்லி - லாகூர் இடையே முதல் மக்கள் போக்குவரத்து துவக்கி முதல் ஆளாக பயணித்தார் வாஜ்பாய்.

  3) பிராந்திய மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து சீனாவுடன் வணிக கூட்டு அமைத்தார்.

  4) டெல்லியில் மெட்ரோ ரயில் பிராஜக்டுக்கு முதலில் ஒப்புதல் வழங்கியவர் வாஜ்பாய் என்பது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயம்.

  நிலா!

  நிலா!

  56 வது இந்திய சுதந்திர நாள் விழாவின் போது (2003ல்), இந்தியா அறிவியலில் உயர பறக்க ஆயுத்தமாகி வருகிறது. நிலாவுக்கு 2008ல் இந்தியா விண்கலம் அனுப்பவிருக்கிறது என்று பெருமையுடன் கூறியவர் வாஜ்பாய்.

  1998ல் இந்தியாவில் நேஷனல் ஹைவே டெவலப்மென்ட் பிராஜக்ட் என்ற பெயரில் உலகத்தரமான தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியவர் வாஜ்பாய். இந்த திட்டத்தின் கீழ் 49,260 கிலோமீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டன.

  திறமை!

  திறமை!

  பார்க்க மிகவும் அமைதியானவராக இருப்பார். வயது காரணமாக மெதுவாக தான் நடப்பார். ஆனால் வாஜ்பாய் ஒரு சிறந்த கவிஞர். அதைவிட கடுமையாக பேச கூடிய திறன் கொண்ட பேச்சாளர். இவர் பேசிய சிறந்த பாராளுமன்ற உரைகள் மற்றும் மேடை பேச்சுக்கள் இணையங்களில் தேடினால் எளிதாக கிடைக்கும்.

  புதுமை!

  புதுமை!

  பழங்குடி, சமூக நலன், சமூக நீதி போன்றவைக்கு அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பகுதிக்கு தனி துறை என்று பல புதிய விஷயங்களை புகுத்தியவர் வாஜ்பாய் அவர்கள்.

  டிசம்பர் 25, 2014ல் வாஜ்பாய் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டது. இவரது பிறந்தநாளான டிசம்பர் 25 நல்ல ஆட்சிக்கான நாளாக கொண்டாடப்படுகிறது.

  ஹீரோ!

  ஹீரோ!

  90களில் பிறந்து வளர்ந்த அனைவராலும் வாஜ்பாய் என்ற பெரும் அரசியல்வாதியை மறக்கவே முடியாது. நாம் வளர்ந்துவிட்டோம், ஆனால் வாஜ்பாய் பற்றி மறந்துவிட கூடாது. இந்தியா கண்டெடுத்த சில முத்தான அரசியல் தலைவர்களுள் வாஜ்பாய் அவர்களும் அடங்குவார். மக்களின் மனதில் எந்நாளும் நற்பதிப்பு கொண்டவர் வாஜ்பாய்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Facts, Biography and Achievements of Atal Bihari Vajpayee

  Facts, Biography and Achievements of Atal Bihari Vajpayee, India's Most Celebrated Prime Minister
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more