For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் இந்த தொழில் செய்கிறேன் என்று என் குழந்தைகளிடம் எப்படிச் சொல்வது?

தான் என்ன வேலை செய்கிறோம் என்பது குறித்து குழந்தைகளிடம் சொல்லத் தயங்கும் தாய் உட்பட தாயைப் பற்றிய சில எமோஷனல் தருணங்கள்.

|

இந்தியாவில் இன்றைக்கு அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மாக்களைப் பற்றி எத்தனை கட்டுரைகளை எழுதினாலும் அவர்களின் தியாகத்தையும்,அர்பணிப்பையும் முழுதாக நம்மால் சொல்லிட முடியாது.

பல கஷ்டங்களை அனுபவித்தாலும் குடும்பத்திற்காக, கணவனுக்காக, குழந்தைகளுக்காக என்று சொல்லி ஒவ்வொரு நாளும் தங்களையே அர்பணித்துக் கொண்டிருப்பார்கள். ஓர் தாய் சந்திக்கும், குறிப்பாக வெளியில் சொல்ல மறுக்கும் சில உண்மை சம்பவங்களின் தொகுப்பாய் இந்த கட்டுரை வந்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நான் தாய் :

நான் தாய் :

நேபாளத்தைச் சேர்ந்த தனா குருங் என்பவர் சித்வான் அருகிலிருக்கும் முக்லிங் என்ற பகுதியைச் சேர்ந்த பெண்மணி. நான் கணவனால் கைவிடப்பட்ட பெண். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

தனியொருத்தியாக வருமானத்தையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் கவனிப்பது அதுவும் இரண்டு சிறிய குழந்தைகளை பராமரிப்பது என்பது மிகவும் சவாலான வேலை.

ஒவ்வொரு நாளும் எனக்கு மிகப்பெரிய சவால் நிறைந்ததாகவே இருக்கும். என் மனதில் அப்போது ஓடியதெல்லாம் ஒரேயொரு விஷயம் தான். என் குழந்தைகளின் வாழ்க்கை, என்னை காரணம் காட்டி என் குழந்தைகளுக்கான வாய்ப்பினை தட்டி பறித்துவிடக்கூடாது.

நமக்கு சாப்பாட்டிற்கே வழியில்லை இந்த நேரத்தில் ஏன் படிக்க வேண்டும் என்று நாம் ஒரு போதும் நினைத்து விடக்கூடாது என்று மட்டுமே நினைத்தேன்.

அவர்களுக்கான வாழ்க்கையில் அவர்கள் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். எங்கள் குடும்பத்தில் பெண் பிள்ளை என்று சொன்னாலே பள்ளிக்கூடம் பக்கமெல்லாம் அனுப்பவே மாட்டார்கள். வயதிற்கு வந்தவுடன் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.

அவர்களின் எதிர்காலம் குறித்து கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவே மாட்டார்கள். என் மகளுக்கும் அப்படியொரு சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

என்னுடைய மகள் நர்சிங் படிக்க வேண்டும் என்று விரும்புகிறாள். நிச்சயம் படிப்பாள், படிக்க வைப்பேன். அடிக்கடி அவளிடம் நான் சொல்லும் வார்த்தைகள் இவை, ‘உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய், எப்போதும் உனக்குத் துணையாய் நானிருப்பேன்'.

Image Courtesy

தாலியை விற்றேன் :

தாலியை விற்றேன் :

குழந்தைகள் பள்ளிப்படிப்பினை படித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது யாருமே எதிர்பாராதவிதமாக என் கணவர் திடீரென்று இறந்துவிட்டார் என்று ஆரம்பிக்கிறார் வாழ்வின் அதிர்ச்சியான சம்பவத்திலிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் மீட்டெடுத்திருக்கும் சினேகல்.

கணவர் அரசு வேலை தான் பார்த்தார் என்றாலும், அவருடைய மரணத்திற்கு பிறகு கிடைக்க வேண்டிய பென்ஷன் பணம், வாரிசு அடிப்படையில் வேலை என எதுவும் உடனடியாக எங்களுக்கு கிடைக்கவில்லை நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தது. அதை காரணம் காட்டி என் குழந்தைகளின் எதிர்காலத்தினை நான் தள்ளிப்போட முடியுமா?

அதுவரை வீட்டிலேயே இருந்த நான் குழந்தைகளுக்காக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். சமூகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசினார்கள்.

ஒரு கட்டத்தில் என் தாலியையே விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. வெளியிலிருந்து ஆயிரம் பேசலாம், ஆனால் ஒரு தாயாக என் குழந்தைகளின் பசியை நான் தானே அறிவேன்... இதோ என் குழந்தைகள் இன்று வளர்ந்துவிட்டார்கள். வறுமையை வென்றெடுத்துவிட்டார்கள்

Image Courtesy

வீட்டிற்குள்ளேயே.... :

வீட்டிற்குள்ளேயே.... :

எனக்கு சில மாதங்களாக அதிகமாக முடி உதிர்வு ஏற்பட்டது. வழக்கமாக இருப்பது தானே என்று சொல்லி நான் அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நாளடைவில் முடியுதிர்வு அதிகமாகிக் கொண்டே போனது. யதார்த்தமாக கண்ணாடியில் பார்க்க, தலையில் சொட்டை விழுந்திருந்தது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றோம்.

பல்வேறு பரிசோதனைகளை செய்துவிட்டு எனக்கு அலோபிசியா என்ற நோய் பாதிப்பு இருப்பதாக சொன்னார். அதாவது இந்த நோய் பாதிப்பு இருந்தால் தலையில் இருக்கிற முடியில்லாம் கொட்டிடும் மீண்டும் முடி முளைக்கவே முளைக்காது. இதை அறிந்து கொண்ட ஒன்றரை மாதத்தில் என் தலைமுடி மொத்தமும் இழந்து விட்டேன்.

அவ்வளவு தான் என் வாழ்க்கையே முடிந்துவிட்டது. இப்படி இந்த தலையோடு நான் யார் முகத்தைப் பார்ப்பது, எல்லாரும் என்னை கேலி பேசுவார்கள் நான் வீட்டை விட்டு வெளி வரவே மாட்டேன் என்று சொல்லி வீட்டிற்குள்ளேயே மூன்று ஆண்டுகள் முடங்கிக் கிடந்தேன்.

Image Courtesy

மகளே தாய் :

மகளே தாய் :

நாள் பூராவும் உட்கார்ந்து அழுவது, நான் என்ன பாவம் செய்தேன், எனக்கு ஏன் இந்த நிலைமை என்று புலம்புவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அதோடு பல்வேறு ஆயின்மெண்ட்கள், எண்ணெய்,க்ரீம், மாவு என என்னென்னவோ வாங்கி தலையில் பூசி முடி வளர்கிறதா என்று பார்த்தேன். ம்ம்ஹூம்..... முடி வளரவேயில்லை.

கொஞ்சம் விட்டால் இப்படியே பைத்தியமாகிவிடுவேன் என்று நினைத்தாலோ என்னவோ ஒரு நாள் என் மகள் என்னருகில் வந்து உட்கார்ந்தாள், ‘உன்னுடைய வாழ்க்கை உனக்காக காத்துட்டு இருக்கு, அத வாழமா ஏன் இப்டி வீணடிக்கிற, மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நினச்சு கவலப்படுறத முதல்ல நிப்பாட்டு. அதுல இருந்து வெளிய வா, உலகம் எவ்ளோ பெருசு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லன்னு தெரியும். இது தான் உனக்கு அழகு. தனித்தன்மையா இருக்குறதா நினச்சு சந்தோஷப்படு அது தான் என்னோட பாசிட்டிவ்னு நினச்சுக்கோ' என்றாள்.

என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த வார்த்தைகள் அவை. பெற்றெடுத்த மகளின் மூலமாக வந்தது. வீட்டை விட்டு வெளியேறினேன். புற்றுநோய் வந்துவிட்டிருக்கிறது,கீமோதெரபியால் தான் இப்படியா என்று கேட்டார்கள், திருப்பதிக்கு மொட்டையா என்று சிரித்தார்கள்.... யாரையும் நான் கண்டுகொள்ளவேயில்லை. தலையில் டேட்டூ குத்திக் கொண்டேன். கேட்பவர்களிடத்தில் கடவுள் எனக்கு இவ்வளவு அழகான கேன்வாஸ் கொடுத்திருக்கிறார் அதை ஏன் நான் வீணடிக்க வேண்டும் என்று கேட்பேன்...

இன்று என் உலகம், நான் அப்படியே மாறிவிட்டது. என்னுடைய மகளால் என் வாழ்க்கை திரும்ப கிடைத்திருக்கிறது என்று பெருமைப்படுகிறார் கெட்கி ஜேனி.

Image Courtesy

என் வாழ்க்கை :

என் வாழ்க்கை :

என் திருமணத்தின் போது எனக்கு 20 வயது. திருமணம் முடிந்த நான்கே ஆண்டுகளில் திடீரென்று ஒரு நாள் என் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளை வீட்டிற்கு அழைத்துவந்தார்.

நானும் மூன்று வயதே நிரம்பிய என் குழந்தையும் நிர்கதியாய் நின்றோம்.

இப்போது நான் அறுபது வயதைக் கடந்த மூதாட்டி ஆகிவிட்டேன். அந்தக் காலத்தில் ஏன் இப்போதும் கூட ஒரு பெண் தன் கணவரை விட்டு பிரிந்து விட்டால் என்றால் இந்த சமூகத்தினர் மிகவும் கேவலமாக பேசுவார்கள்.

இப்போதே இந்த நிலைமை என்றால் என் காலத்தில் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நான் எதைப் பற்றியும் நினைத்து பயம் கொள்ளாமல் கணவரை விட்டுப் பிரிந்தேன்.

ஒவ்வொரு நாளும் மிகவும் சவால் நிறைந்த வாழ்க்கை என் முன்னே கிடந்தது. அப்போது தான் மிகப்பெரிய உண்மை புரிந்தது. இந்த உலகத்தில் நானும் என் குழந்தையும் மட்டுமல்ல என்னைப் போன்றே ஏராளமான பெண்களும், குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

எனக்காக மட்டுமல்லாது அவர்களுக்காகவும் என் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நினைத்து என் வாழ்க்கைப் பாதையை கைவிடப்பட்டவர்களுக்காகவே அர்பணித்துக் கொண்டேன்.

Image Courtesy

கிராமம் :

கிராமம் :

நான் கட்ச் பகுதியை சேர்ந்தவள். அங்கேயே பிறந்து, அங்கேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு குடும்பம் நடத்தி வந்தேன். கணவர் வயலில் வேலை செய்வார், ஆடு மாடுகளை மேய்ப்பார். நான் வீட்டை பராமரித்து வந்தேன். பொழுது போக்காக சின்ன சின்ன தையல் வேலைகள், எம்ப்ராய்டரி ஆகியவற்றை வீட்டில் செய்வேன். நிறைவான வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் தலைகீழாக புரட்டிப்போட்டது ஒரு சம்பவம்.

2001 ஆம் ஆண்டு எங்கள் பகுதியில் நிலநடுக்கம். கிட்டத்தட்ட எங்கள் கிராமமே பெரிதும் பாதிக்கப்பட்டது. எங்கள் வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்தது. மறுபடியும் முதலிலிருந்து எங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதாய் போயிற்று.

இப்போது பேரிடியாய் என் கணவனால் எழுந்து பழையபடி வேலை பார்க்க முடியவில்லை என் குடும்பத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு இப்போது என் தலை மீது விழுந்தது.

எங்கள் கிராமம் ஆணாதிக்கம் நிறைந்தது, பெண் வீட்டை விட்டு வெளியில் வருவதையே அனுமதிக்கமாட்டார்கள். இந்நிலையில் எங்கள் வீட்டின் நிலைமையோ இப்படி.... என்ன செய்ய என் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் வீட்டை விட்டு வெளியில் வந்தேன்.

ஓர் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து எம்ராய்டரி கற்றுக் கொண்டேன். அங்கிருந்து மும்பைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அதுவரையில் எங்கள் ஊரைவிட்டே வெளியில் செல்லாத நான் அன்று முதன் முறையாக எங்கள் கிராமத்தை விட்டு வெளியில் சென்றேன். என்னுடைய ஐம்பதாவது வயதில் என் வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருக்கிறது.

புதிய பொறுப்புகளும், சவால்களும் என்னை மலைக்கச் செய்தாலும் போட்டியிட்டு ஜெயிக்க தயாராகவே இருக்கிறேன்.

Image Courtesy

சொந்தக்காலில் நில்லு :

சொந்தக்காலில் நில்லு :

எங்களுக்கு நான்கு குழந்தைகள். டில்லியின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிற ஒர் சேரியில் வசிக்கிறோம். எங்கும் குப்பையும் சாக்கடையுமாய் இருக்கும். திடிரென்று ஒரு நாள் என் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

நான்கு குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு என் தலையில் விடிந்தது. இதைவிட இன்னொரு கொடுமையான விஷயம். என் கடைசிக் குழந்தை ஃபைசன் நான்கு வயதாகியும் பேச்சு வராமல் நடக்க முடியாமல் இருந்தான்.

அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தொடர்ந்து சிகிச்சையளித்தேன். இறுதியில் குழந்தைக்கு தினமும் தெரபி கொடுக்க வேண்டும் என்றார்கள்.

மற்ற மூன்று குழந்தைகளின் கல்விக்கும் பசிக்கும் சென்று சம்பாதிக்கவா அல்லது இந்த குழந்தையின் ஆரோக்கியதிற்கு தெரபி மருத்துவமனை என்று அலையவா?

இவனுக்கு தெரபி கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு தனியாக செலவாகும். அதற்கும் சேர்த்து சம்பாதிக்க வேண்டும். என் குழந்தைகளுக்காக எத்தகைய கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி தினமும் ஓவர் டைம் பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படியிருந்தும் அவனுக்கு தினமும் என்னால் தெரபி கொடுக்க அலைத்துச் செல்ல முடியவில்லை. வாரத்தில் இரண்டு நாட்கள் கூட்டிச் செல்வேன். என் நிலைமையை புரிந்து கொண்ட மருத்துவர்.

வீட்டிலிருந்த படியே கொடுக்க முடிந்த பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார்கள். அதை ஒரு நாள் கூட தவறாமல் அவனுக்கு பயிற்சி கொடுப்பேன். இதோ இன்று என் மகன் தன் சொந்தக் காலில் நிற்கிறான், நடக்கிறான், ஓடுகிறான்.

மெல்ல பேசுகிறான்.... இதைவிட எனக்கு வேறு மகிழ்ச்சி என்ன இருந்துவிடப்போகிறது.

Image Courtesy

இரண்டு முறை உயிர்ப்பித்தார் :

இரண்டு முறை உயிர்ப்பித்தார் :

உங்கள் குழந்தைக்கு காது கேட்காது,நடக்க முடியாது,அதோடு மூளையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. உயிர்பிழைப்பதே கடினம், மிஞ்சிப்போனால் இன்னும் மூன்று ஆண்டுகள் வாழலாம் என்று சொன்ன போது என் அம்மா என்ன நினைத்தாரென்று தெரியவில்லை. ஒன்பது வயது வரை தாக்குப் பிடித்தேன். பள்ளியில் சேர்த்திருந்தார்கள். கல்வி சுத்தமாக ஏறவில்லை. தினமும் ஒரே விஷயத்தை பல முறை படித்து படித்து மனதில் ஏற்றிக் கொண்டேன்.

என்னை நடக்க வைக்க, ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கினார். கொஞ்சம் கூட அம்மா சோர்வுறவேயில்லை. பள்ளியில் மாணவர்கள் பலரும் என்னை கேலி, கிண்டல் செய்வார்கள்.

எல்லாரையும் போல இன்ஜினியரிங் சேர்த்துவிட்டார்கள். எனக்கு அதில் துளியும் விருப்பமேயில்லை. அம்மாவிடம் சொன்னேன், விருப்பமில்லை என்றால் செய்யாதே என்று சொல்லிவிட்டார் ஒரே வார்த்தையில்.

உனக்கு என்ன விருப்பம் என்று கேட்டார்.... நடிப்பு, எழுத்து மற்றும் பயணம் என்றேன்.அந்த துறையில் உன்னை ஈடுப்படுத்திக் கொள்ள முழு சுதந்திரம் அளித்தார்.

பதினான்கு மாநிலங்களில் இதுவரை 681 நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறேன். போபாலில் இருந்து ஜம்மு வரை சுமார் 2700 கிமீ வரையிலும் நடந்தே பயணம் செய்திருக்கிறேன். இவை எல்லாம் அம்மா என்ற மந்திரம் செய்த மாயம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

Image Courtesy

குடும்பம் :

குடும்பம் :

சாதரண மிடில் கிளாஸ் குடும்பம் என்னுடையது. ஏழாம் வகுப்போடு நீ படித்தது போதும் என்று சொல்லி நிறுத்தினார்கள். பணம் சம்பாதிக்க அப்பா எவ்வளவு சிரமப்படுகிறார் என்று தெரியும் என்பதால் படிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கவில்லை.

பதினான்கு வயதில் எனக்கு திருமணம் நடந்தது. அப்போது என் கணவருக்கு பதினாறு வயது. அடுத்தடுத்து எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள்.

இதோ என் கணவரின் அண்ணன் ட்ரைன் விபத்தில் இறந்துவிட அவரின் மனைவி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் வந்தது.

கட்டாயம் எதாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற அவசர நிலைமை. வேறு வழி தெரியவில்லை அப்போது ஒவ்வொரு கடையாக போய் குப்பை இருக்கிறதா என்று கேட்பேன்.

போய் குப்பையை பொறுக்கி வந்து சுத்தம் செய்வேன். சிலர் தங்கள் வீடுகளுக்கு வந்து வீட்டு வேலை செய் என்று கேட்டார்கள் என்ன செய்ய என் குழந்தைகளுக்கு உணவளிக்க வேண்டுமே.... போனேன்.

குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பித்தார்கள். நிறைய செலவானது. என் கைகளிலிருந்து குப்பை மற்றும் சாக்கடை நாற்றத்தை குழந்தைகள் உணர ஆரம்பித்தார்கள்.

உங்கள் அம்மா இப்படித்தான் பணத்தை சம்பாதித்து வருகிறாள் அதில் தான் நீங்கள் படிக்கிறீர்கள், சாப்பிடுகிறீர்கள் என்ற உணமையை அவர்களிடம் எப்படிச் சொல்வது.... என்று தயங்கி நின்றேன். ஆனால் என் குழந்தைகள் என்னை புரிந்து கொண்டார்கள். ஏற்றுக் கொண்டார்கள்.

என் மகன் படிக்கும் பள்ளியில் தன் அம்மாவைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்லியிருக்கிறார்கள். அதில் கலந்து கொண்ட என் இளைய மகன். என் அம்மா இந்தியாவை சுத்தம் செய்கிறார் என்று எழுதியிருந்தான்.

அதன் முழுமையான அர்த்தம் எனக்குத் தெரியவில்லை ஆனால் என் மகன் என்னைப் பற்றி எழுதியிருக்கிறான் என்று நினைப்பதில் எனக்கு பெருமையாய் இருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync life
English summary

Emotional story of a Mother who hesitate to tell her Odd job

Emotional story of a Mother who hesitate to tell her Odd job
Desktop Bottom Promotion