For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஸ்லம்டாக் மில்லியனரில் நடித்த இந்த சிறுமி எப்படி மாறி இருக்கார் பாருங்களேன்!

  By Staff
  |

  ஸ்லம்டாக் மில்லியனர், யாரால் மறக்க முடியும் இந்த திரைப்படத்தை. முதல் முறையாக இரண்டு ஆஸ்கர் விருது வென்று ஏ.ஆர் ரகுமான் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த படமல்லவா. ஆனால், இந்த படத்தில் இந்தியாவில் இருந்து மற்றுமொருவரும் உலக ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

  லத்திகா என்ற கதாபாத்திரத்தின் சிறு வயது தோற்றத்தில் நடித்த சிறுமி தான் அவர். அவரது தோற்றம், ரியாக்ஷன், எக்ஸ்பிரஷன், பர்ஃபார்மான்ஸ் என அனைத்தும் அழகாக இருந்தது. அந்த சிறு வயதில் அப்படி நடிப்பில் அப்படி ஒரு முதிர்ச்சியா என்று பலரும் வியந்தனர். அந்த குட்டி பெண்ணின் பெயர் ரூபினா அலி.

  இவர் இப்போது வளர்ந்துவிட்டார். வாழ்க்கையில் பல கடின சூழலலை கடந்து இன்று ஆளே வேறு மாதிரி உருமாறி நிற்கிறார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  தெரியுமா?

  தெரியுமா?

  ஸ்லம்டாக் மில்லியனர் படம் வெளியான போதிருந்தே ரூபினா அலியை எனக்கு தெரியும், அவரது நடிப்பை கண்டு வியந்தேன் என்று கூறும் நபருக்கு.. இன்று இப்போது இவரை கண்டால் மகிழ்ச்சி பெருகும்.

  அப்போது ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக மும்பையில் ஒரு சேரியில் நடித்துக் கொண்டிருந்த போது ரூபினா அலிக்கு வயது 9 தான். அவளது கண்களே மொத்த நடிப்பையும் வெளிப்படுத்திவிடும்.

  அன்று நீங்கள் பார்த்த அழகான குழந்தை, இன்று அழகான இளம்பெண்ணாக வளர்ந்து நிற்கிறாள்.

  கடந்து வந்திருக்கிறாள்...

  கடந்து வந்திருக்கிறாள்...

  நாம் எதை எல்லாம் கடினமானது என்று ஒரு பட்டியலிடுவோமோ அதை எல்லாம் தனது வாழ்க்கையில் கடந்து வந்திருக்கிறாள் ரூபினா அலி. கடுமையான சூழல், விமர்சனம், தடைகள் என பலவற்றை கடந்து இப்போது, இன்று வளர்ந்து நிற்கிறாள் ரூபினா அலி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை ரூபினாவின் கடுமையான மற்றதை தான் நாம் இங்கே காணவிருகிறோம்.

  ஆடம்பரமா?

  ஆடம்பரமா?

  தனது உண்மையான வாழ்வில் ஆடம்பரத்தின் எந்தவொரு அங்கத்தையும் துளியளவும் கண்டதில்லை. மும்பையின் சேரிகளில் ஒரு பகுதியில் பிறந்து, வளர்ந்தவள் தான் ரூபினா அலி. தனது படத்திலும் அதே இடத்தில் இருந்து நடித்து பிரபலம் அடைந்தார் ரூபினா. மற்றும் பலருக்கு முன்னுதாரணமாக, ஊக்கமளிக்கும் நபராகவும் திகழ்கிறாள் ரூபினா.

  தனது நடிப்பின் மூலம் அங்கீகாரம் பெற்ற ரூபினா பல விருதுகள் வென்றாள்.

  பாந்த்ரா

  பாந்த்ரா

  மும்பையில் பாந்த்ரா ஸ்டேஷன் அருகே அமைந்திருக்கும் கரிப் நகர் சேரியில் தான் ரூபினா பிறந்த, வளர்ந்து வசித்து வருகிறார். இவர் தனது தந்தை ரபிக் , சகோதரி சானா , சகோதரன் அப்பாஸ் மற்றும் வளர்ப்பு தாய் முன்னி உடன் வசித்து வருகிறார். பதின் வயதில் பல கடும் சோதனைகளை கடந்து வந்தவர் ரூபினா அலி.

  பல கஷ்டங்களை எதிர்கொண்ட ரூபினா ஒருபோதும் அதனால் துவண்டு போனதில்லை.

  நேசம்!

  நேசம்!

  ரூபினா அலியின் தைரியம் மற்றும் உறுதிப்பாடு போன்றவற்றை கண்டாலே அவர் மீது தனி அபிப்பிராயமும், நேசமும் பிறந்து விடும். தனது அற்புதமான நடிப்பு மூலமாக ரூபினா அலி தனது வாழ்வில் ஒரு மாற்றம் கண்டார். மகாராஸ்டிரா வீட்டு மேலாண்மை வாரியம் இவருக்கு ஒரு வீடு அளித்து பெருமை படுத்தியது.

  சர்ச்சை!

  சர்ச்சை!

  ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த உண்மையான சேரி வாசிகளே சர்ச்சைகள் உருவாக்கியதாக கூறப்படுகிறது.

  ரூபினா யாரும் செய்திடாத விஷயத்தை தனது குழந்தை பருவத்திலேயே செய்தார். 2009ல் தனது 9வது வயதில் ரூபினா ஒரு புத்தகம் எழுதினாள். அதில் தனது முதல் படத்தின் மூலம் கிடைத்த அனுபவம் மற்றும் அந்த முழு பயணம் குறித்து கூறி இருந்தார்.

  தேவதை!

  தேவதை!

  கடந்த பத்து வருடங்களில் ரூபினாவின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2011ல் இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தின் காரணாமாக தனது உடமைகள் பலவனவற்றை ரூபினா இழந்தார் என்று அறியப்படுகிறது.

  இப்போது ரூபினா கல்லூரி பயின்று வருகிறார். இவர் பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் டிகிரி பயின்று வருவதாக அறியப்படுகிறது. இன்று எந்தவொரு பாலிவுட் நடிகைக்கும் சற்றும் சளைத்தவர் இல்லை என்பது போன்ற தோற்றத்தில் அசத்தலாக காட்சியளிக்கிறார் ரூபினா. நிச்சயம் இவர் இந்திய சினிமாவில் ஒரு பெரும் இடத்தை பிடிப்பார் என்று நம்பப்படுகிறது.

  All Image Source:allindiaroundup

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Do You Remember This Little Girl From Slumdog Millionaire, Look at Her Amazing Transformation!

  Remember Little Latika From Slumdog Millionaire? Her Grown-Up Avatar Will Take You By Surprise! Check Out Her Stunning Transformation
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more