For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பாலியல் பலாத்காரம் - ரேப் ரெண்டுக்கும் என்ன வித்தியாம்... பொண்ணு பக்கத்துல போறதுக்கு முன்னாடி படிங்க

  |

  பாலியல் பலாத்காரம். பாலியல் வன்புணர்வு இந்த இரண்டைப் பற்றியுமே நாம் பேசாத நாட்கள் இருக்காது. செய்தித்தாள்களில் படிக்காத நாளே இருக்காது. ஆனால் அதை எளிதாகக் கடந்துவிட்டு போகிறோம். முதலில் பாலியல் பலாத்காரம் என்பதற்கும் பாலியல் வன்கொடுமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை புரிந்து படித்தாலே போதும்.

  Sexual Abuse

  பாலியல் பலாத்காரம். பாலியல் வன்புணர்வு. இரண்டு வார்த்தைகளும் ஓரே செயலை குறிப்பிடா விட்டாலும், இரண்டிலுமே பாதிக்கப்படுகிறவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பாலியல் செயல்களுக்கு பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.. பொதுவாக இந்த இரு வார்த்தைகளும் ஒரே மாதிரி புரிந்துக்கொள்ளப்படுகிறது. இந்த இரண்டையும் சரியாக தெரிந்து கொள்வதன் மூலம், சமூகத்தில் இன்றளவில் நிலவும் அவலங்களை பற்றிய ஒரு சரியான கண்ணோட்டம் கிடைக்கும். அதன் பின்னராவது சமுதாயத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்கள் மீதான புரிதலும் விழிப்புணர்வும் நமக்கு வரும். நம்முடைய வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் நம்மால் இதுபோன்ற விஷயங்களை பற்றி சொல்லிக் கொடுக்க முடியும். நல்ல தொடுதல், கெட்ட தொடுதலை புரிய வைக்க முடியும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பாலியல் வன்கொடுமை

  பாலியல் வன்கொடுமை

  பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் சம்பவத்திற்கு பின் வாழ்க்கை முழுவதுமே, ஆழ்ந்த மன அழுத்ததில் மனவேதனையும், சுயகெளரவம் குன்றி போயும், சக்தியிழந்துமே காணப்படுவார்கள்.

  இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்க்கப்போனால், பாலியல் வன்புணர்ச்சி என்பது அவர்கள் விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்முறையில் தூண்டப்பட்டு உடலுறவுக்கு, வாய் மூலமாக அல்லது பிறப்புறுப்பு மூலமாக அல்லது பின் பக்கமாகவே மலதுவாரம் மூலமாகவோ பலாத்காரப்படுத்தப் படுகிறார்கள். ஆணுறுப்பை, பெண் உறுப்பில் நுழைப்பது மட்டுமின்றி, வேறு பொருட்களாலும், விரல்களாலும், உடலின் வேறு பாகங்களை கொண்டும் பாலியல் வன்புணர்ச்சி நடக்கலாம்.

  ஆனால் இதில் உண்மை என்னவென்றால், பாதிக்கப்படுபவரின் சம்மதமின்றி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுவர்கள் வெறும் உடலுறவுக்கு மட்டும் ஆசைபடுவதில்லை. சமயத்தில் தன்னிடம் சிக்கி கொண்டவரிடம், தனது ஆளுமையை காண்பிப்பதில் விருப்பம் கொண்டிருப்பார்கள். மாட்டிக் கொண்டவரிடம் அவர்களுது விருப்பத்திற்கு மாறாக அவர்களை செயல்பட வைத்து, தனது இச்சைக்குட்பட வைப்பதில் தனது ஆதிக்கத்தை காண்பிப்பார்கள்.

  இதில் பாலியல் வன்புணர்ச்சி என்பதை ஒரு கருவியாக பயன்படுத்தி, மற்றவரை தன் வழிக்கு கொண்டுவரவும், தனது அதிகாரத்தை காட்டி அடிமைப்படுத்தவும், உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.

  பாலியல் பலாத்காரம்

  பாலியல் பலாத்காரம்

  நெருங்கிய உறவு முறைகளில் நடக்கும் பாலியல் பலாத்காரங்கள். இது சற்று அதிர்ச்சியானதாக இருந்தாலும், பாலியல் பலாத்காரங்கள் சமயத்தில் உறவுகளை வளர்த்து கொள்ளவும் உதவுகிறது. சில சமயத்தில், பலாத்காரமின்றி, சூட்சுமமாக, நாசுக்காக மற்றவரை கவிழ்க்க முயற்சிப்பார்கள். இந்த வகையில் பாதிக்கப்படுபவர்களை, தன் விருப்பத்திற்கு இணங்க வைத்துவிடுவார்கள். உதாரணமாக, செல்போன் மூலம் பலான படங்களை அனுப்புதல். சில சமயம், அந்தரங்கமாக தொட்டுவதன் மூலமும், பயமுறுத்தியும் தன் வழிக்கு கொண்டுவர முயற்சிப்பார்கள். எது எப்படியோ இதுவும் பாலியல் பலாத்காரம் தான்.

  நெருங்கிய உறவுமுறைக்கும் பாலியல் பலாத்காரத்திற்கும் என்ன சம்பந்தம்? உதாரணமாக, ஒருவர் அவருடைய விருப்பத்திற்கேற்ப பாலியல் உறவு கொள்ள, அவருடன் செக்ஸ் கொள்பவரை, அவர் விரும்பாத போதும் நிர்பந்திப்பது.

  ஸ்டேல்திங் என்ற பழக்கமும் உள்ளது. அதாவது ரகசியமான நடவடிக்கை. அதாவது உடலுறவின் போது ஆணுறையை அணிந்து கொண்டு, உச்சக்கட்டத்தில் செக்ஸ் கொள்பவருக்கு தெரியாமல், ஆணுறையை எடுத்து விடுவது. இதுவும் பாலியல் பலாத்காரம் தான்.

  செக்ஸ் விளையாட்டு

  செக்ஸ் விளையாட்டு

  பாலியல் பலாத்காரம், பாலியல் வன்புணர்வு இவை இரண்டும் பராபீலிய அல்ல. பராபீலிய என்பது செக்ஸ் செய்வதற்கு உடல் உறுப்புகளுக்கு பதில் உயிரற்ற பொம்மைகள் அல்லது செக்ஸ் விளையாடு பொருட்களை பயன்படுத்துவது. இது இன்னும் மோசாமானது என்று தான் சொல்லவேண்டும்.

  சிறுவயதில் ஏற்படும் பாலியல் பலாத்கார அனுபவம் மிகவும் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தி அவர்களை இரக்கமற்றவர்களாக ஆகிவிடும்.

  எப்படியோ அவர்கள் பிரச்சினையை வெளியே தெரிந்துவிடும். ஆனால் அவர்களுக்கு அதை முறையாக சரி செய்து கொள்ள, அதாவது தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை எடுத்து கொள்வது போன்றவை தெரியது. அவர்களை சமூதாயம் ஒதுக்கிவிடுவதால், மனதில் ஒரு எதிர்மறையான வலிகள் நிறைந்த சிந்தனையை வளர்த்து கொண்டு விடுவார்கள். அவர்கள் எந்த அளவுக்கு அந்த அசம்பாவிதத்தை மறக்க நினைத்தாலும் அது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும்.

  சட்டமும் தண்டனையும்

  சட்டமும் தண்டனையும்

  தற்போதுள்ள சட்டத்தின்படி பாலியல் வன்புணர்வு குற்றவாளிக்கு 6 முதல் 12 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும். பாலியல் பலாத்கார குற்றத்திற்கு, அவர்கள் குற்றத்திற்கு தகுந்தற்போல் 4 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.

  ஏது எப்படியோ பாதிக்கப்படுபவர்கள் படும் துன்பம் சொல்லி முடியாதது. மனதளவில் அவர்கள் பட்ட அல்லது படும் துன்பம் அவர்கள் மற்றவர்களை பார்க்கும் கண்ணோட்டத்தையே மாற்றிவிடும்.ஒரு சிலர் முறையான மனோதத்துவ ரீதியான மருத்துவத்தை எடுத்து கொண்டு இயல்பு நிலைக்கு சில ஆண்டுகளில் திரும்பி விடுவர். ஆனால் சிலர் வாழ் நாள் முழுவதும் அந்த துயரத்திலிருந்து மீள முடியாமல் தத்தளித்து கொண்டே இருப்பார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Differences between Sexual Abuse and Rape

  Sexual assault is an umbrella of unwanted sexual contact, under which rape falls. Rape is forced penetration.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more