For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இறந்த பிறகும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் 7 அசத்தல் பிரபலங்கள்!

  |

  பிரபலங்கள் என்ற பட்டியல் எடுத்தல் ஒவ்வொரு துறையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு துறையிலும் நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக இருப்பவர்கள் வெகு சிலரே. பாக்ஸ் ஆபீஸ் சாதனையை கட்டிலும், ரசிகர்களின் இதயங்களை எவ்வளவு வென்றிருக்கிறார்கள் என்பதை பொருத்து தான் இந்த இடத்தை பிடிக்க முடியும்.

  Dead Celebrities Who are Still Communicating With Their Fans Throw Social Media!

  அந்த வகையில், மர்லின் மன்றோ, மைக்கல் ஜாக்சன், முகமது அலி என்று பல்வேறு துறையில் பலரை நாம் குறிப்பிடலாம். இவர்கள் இன்று நம்முடன் இல்லை என்றாலும் விண்ணுலகில் சொர்க்கத்தில் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது. ஆனால், இவர்களில் சிலர் இன்றும் தங்கள் ரசிகர்களுடன் சமூக ஊடகம் வாயுலாக பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா...?

  பேய், பிசாசு.. பூதமா... என்று திடுக்கிட வேண்டாம்... வாங்க.. யார், யார் என்னென்ன விஷயங்களை தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்கள் என்று காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  மர்லின் மன்றோ!

  உலகின் முதல் கவர்ச்சி கன்னி என்றும் இவரை கூறலாம். தனது அழகால் பெண்களையே பொறாமைப்பட வைத்த பேரழகி. உலகெங்கிலும் தன் அழகுக்கு ரசிகர் பட்டாளம் உருவாக்கிய ஹாலிவுட் நடிகை. 19 நூற்றாண்டில் தன் அழகின் மூலம் ஒரு பெரும் மார்கெட்டை பிடித்த பெண் மர்லின் மன்றோ.

  அளவுக்கு அதிகமான புகழும், வளர்ச்சியும் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும். அதற்கு மர்லின் மன்றோவும் விதிவிலக்கல்ல. மன அழுத்தம், தவறான பாதை என்று கடைசியில் மர்மமான முறையில் இறந்து போனார் மர்லின் மன்றோ.

  மர்லின் மன்றோ எப்போது நம்மைவிட்டு பிரிந்தார் என்பது முக்கியம்மல்ல. நிச்சயம் அவர் இப்போது தேவதைகளுடன் தேவதையாக ஆகாயத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவார் என்று மட்டும் நம்பிக்கை கொள்ளலாம். அத்துடன், மர்லின் மன்றோ ட்விட்டரில் பதிவிடுவதையும் நீங்கள் காண இயலும்.

  முகமது அலி!

  முகமது அலி ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரர். அதே போல ஒரு நல்ல மனிதரும் கூட. வியாட்நாம் போரின் போது இவர் எடுத்த முடிவானது இவர் எத்தனை பெரிய மனிதநேய உள்ளம் கொண்டிருந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டு. பார்கின்சன் நோயுடன் இடைவிடாது போராடி வந்தார். கடைசியில் சுவாசமண்டல பிரச்சனையும் அதிகரிக்க இவர் மரணிக்க நேரிட்டது.

  இப்போது முகமது அலி நம்முடன் இல்ல என்றாலும், அவர் தனது நண்பர் எல்விஸ் ப்ரெஸ்லேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பதிவிடுவதை நிறுத்தவில்லை. இவர்கள் இருவருமே சொர்க்கத்தில் கொண்டாடி மகிழ்ந்துக் கொண்டிருப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்த ட்வீட் மூலம் இந்த இரு லெஜண்டுகளையும் ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை நினைவுகூர்ந்து கொள்ள உதவியது.

  மைக்கல் ஜாக்சன்!

  பாப் இசை உலகின் முடிசூடா மன்னன். உலகின் பெருவாரியான இசை ரசிகர்களை நீண்ட காலம் குதுகலிக்க செய்த இசை கலைஞன். நடனம், பாடுதல் என்று இரண்டிலும் கவனம் செலுத்தி ஒரு புது யுக்தியை அறிமுகப்படுத்தியவர் மைக்கல் ஜாக்சன். நல்ல மனிதன் என்ற போதிலும், இவர் சுற்றியும் பல சர்ச்சைகளும் எழுந்தன.எதிர்பாராத கார்டியாக் அரஸ்ட் காரணமாக இவர் இறந்தார் என்று மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மண்ணை விட்டு போனாலும், இவரது பாடல்கள் என்றேண்டும் நம்மோடு இருக்கும். உடன் இவரது ட்விட்டர் பதிவுகளும் கூட.

  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

  இயற்பியலாளர்கள் என்ற பட்டியலை எடுக்கும் போது, ஐன்ஸ்டீன் பெயரே முதல் இடத்தில் இருக்கும். பல தியரிகளை உலகிற்கு பரிசளித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். பிஸிக்ஸ் விரும்பும் அனைவருக்கும் ஐன்ஸ்டீன் மீது ஒரு அலாதி பிரியமும், காதலும் நிச்சயம் இருக்கும்.

  இவர் இறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும் கடைசியாக, ஐன்ஸ்டீனின் தீவிர ரசிகையான பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு அவர் சார்பாக பிறந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

  எலிசபெத் டைலர்!

  தான் வாழ்ந்த காலத்தில் அழகிற்கு மகுடமாக வாழ்ந்த நடிகை எலிசபெத் டைலர். கிளியோபாட்ரா கதாப்பாத்திரத்தில் அனைவரின் இதயங்களையும் வென்றவர். அந்த காலக்கட்டத்தில் கிளியோபாட்ரா மிக பெரும் செலவில் உருவாக்கப்பட்ட படமாக திகழ்ந்தது.

  தனது 79வயதில் எலிசபெத் டைலர் இருதய செயலிழப்பு காரணத்தால் இறந்துவிட்டார். நம்முடன் இப்போது இவர் இல்லை என்றாலும், இப்போதும் தனது ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்.

  ஜீசஸ் கிறிஸ்ட்!

  ஜீசஸ் கிறிஸ்ட் மக்கள் அனைவரையும் சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார். அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கும் அவர் இங்கிலாந்து அரசு குடும்பத்தின் திருமணத்தை மட்டும் பாராமல் இருப்பாரா என்ன. அரசு குடும்ப திருமணத்தை காண பேரார்வத்துடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  கர்ட் கோபேன்!

  நிர்வாணா இசைக்குழுவின் ஒரு ஹேண்ட்சம் பாடகர். தனது குரலால் பல ரசிகர்களை ஈர்த்தவர். எதிர்பாராத விதமாக இவர் தற்கொலை செய்துக் கொண்டார். சொர்கத்திலும் அனைவரையும் தனது இசையால் மகிழ செய்துக் கொண்டிருப்பார் என்றாலும், அதே சமயத்தில் இவர் காதலர் தினத்தையும் கொண்டாட மறக்கவில்லை. வேலண்டைன் தினத்தன்று ஹார்ட் ஷேப் பாக்ஸ் பாடலை கேட்டு மகிழுங்கள் என்று ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.

  குறிப்பு: இது உலகில் பல துறைகளில் ஜாம்பவான்களாக வாழ்ந்தவர்களை நினைவு கூறும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை மட்டுமே. இது யாருடைய உணர்ச்சியையும் புண்படுத்தும் ரீதியில் எழுதப்பட்டது அல்ல. இந்த ட்வீட்கள் எல்லாம் பிரபலங்களின் மேனேஜர்கள் மற்றும் கடவுள் பின்தொடர்பாளர்களால் கையாளப்படுவது ஆகும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Dead Celebrities Who are Still Communicating With Their Fans Throw Social Media!

  How creepy it would be, to one day get up and see Michael Jackson using his Twitter account and tweeting about how he is feeling and how happy he is? Very creepy right?
  Story first published: Thursday, July 5, 2018, 12:58 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more