For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாணவர்களுக்காக துப்பாக்கி, தோட்டாக்களை விட்டு, சாக்பீஸை கையில் எடுத்த CRPF ஜவான்கள்!

மாணவர்களுக்காக துப்பாக்கி, தோட்டாக்களை விட்டு, சாக்பீஸை கையில் எடுத்த CRPF ஜவான்கள்!

|

ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்து PTA (Para teachers Association) போராட்டம் நடத்தி வருவதால், செண்ட்ரல் ரிசர்வ் போலிஸ் ஃபோர்ஸ் என்று அழைக்கப்படும் CRPF (Central Reserve Police Force) படையினர், பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தங்கள் துப்பாக்கி, தோட்டாக்களை கீழே போட்டுவிட்டு, சாக்பீஸ், புத்தகத்தை கையில் எடுத்து பாடம் புகட்ட முன்வந்தது மக்களிடையே நல்ல வரவேற்பு மற்றும் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

CRPF Jawans Teaching School Students in Jharkhand!

Image Source and Courtesy: Amarujala

ஜார்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் PTA தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏறத்தாழ ஜார்கண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளில் போதிய அளவி ஆசிரியர்கள் பாடம் எடுக்க இல்லாததால், மாணவர்களின் பள்ளி ஆண்டு கவலையளிக்கும் நிலைக்கு போனது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆசான்!

ஆசான்!

இந்த தருணத்தில், நாடு முழுவதும் ஒரு முன்மாதிரியான நிகழ்வை உருவாக்கிற, CRPF படை ஜவான்கள் தங்கள் கையில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கீழேப் போட்டுவிட்டு, கையில் சாக்பீஸ் மற்றும் புத்தகத்தை எடுத்தனர். இவர்கள் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்கள்.

சமூக கடமை!

சமூக கடமை!

நாட்டில் கலவரம், வெள்ளம், இயற்கை பேரிடர் நடந்தால் மட்டுமல்ல, மாணவர்களுக்கு ஏதேனும் தேவை, அவசர உதவி என்றாலும் நாங்கள் முன்னே வந்து நிற்போம் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காண்பித்துள்ளனர் CRPF ஜவான்கள்.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

PTA போராட்டத்தால் பல பள்ளி மாணவர்களின் படிப்பில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. அதை சீராக்க, உடனடியாக CRPF ஜவான்கள் இப்படி முடிவில் இறங்கியது நாட்டு மக்களிடம் பெரும் ஈர்ப்பை பெற்றிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

சாக்பீஸ், புத்தகம்!

சாக்பீஸ், புத்தகம்!

இப்படி ஒரு குழப்பமான நிலையில், CRPF ஜவான்கள், தலையிட்டு முக்கியமான முடிவை, அதிலும் நல்லவிதமாக சிறப்பாக எடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. துப்பாக்கியும், தோட்டாக்களும் தான் வாழ்க்கையே என்று இருந்த CRPF ஜவான்கள், இப்போது சாக்பீஸ் மற்றும் புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர்.

கல்வி பாதிப்பு!

கல்வி பாதிப்பு!

PTAவின் கடும் போராட்டத்தால், ராம்கர் நகரில் பள்ளிகளில் முறையான வகுப்புகள் எடுக்க முடியாமல் திணற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது தான், CRPF ஜவான்களுக்கு தகவல் அனுப்பட்டு 26 பட்டாலியன் வீரர்களை வரவழைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜவான்களும் முறையாக, முழுவீச்சில் மாணவர்களுக்கு வகுப்பெடுக்க ஆரம்பித்தனர்.

ஆர்வம்!

ஆர்வம்!

ஆரம்பத்தில் இராணுவ உடை அணிந்த CRPF வீரர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தாலும். நட்பான அவர்களுடைய அணுகுமுறை காரணத்தால் மாணவர்கள் இப்போது வகுப்பில் முழு கவனம் செலுத்துகிறார்கள். ஆர்வமாக பாடத்தை படிக்க துவங்கி இருக்கிறார்கள் என்று ராம்கர் மாவட்ட கல்வி துறை அதிகாரியும், CRPF துணை கமாண்டன்ட் அதிகாரியும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்..

இதற்கு முன்..

இப்படியான நிகழ்வு இதுவே முதல் முறை என்று நினைத்துவிடாதீர்கள், இதே ஆண்டு ஆரம்பத்தில் சத்தீஸ்கரில் நக்ஸல் ஊடுருவல் அதிகமாக இருந்த பகுதிகளில் வசித்து வந்த சிறுவர்களுக்கு பள்ளி செல்வது பாடம் கற்பது என்பது பெரும் கவலையாகவும், முடியாத காரியமாக இருந்தது. சில வேளைகளில் பள்ளி செல்லும் மாணவர்கள் படிப்பு, விளையாட்டு என்று மட்டுமின்றி, நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்திடும் நிலையும் அமைந்திருந்தது.

அபாய சூழல்!

அபாய சூழல்!

சிறுவர்களை இப்படியான அபாய சூழலில் இருந்து காப்பதற்கு அப்போதும் CRPF உதவி தான் நாடப்பட்டது. அவர்கள் இலவசமாக மாணவர்களுக்கு கல்வி சொல்லித்தர முன்வந்தனர். சேர்பல் (Cherpal) எனும் கிராமத்தில் CRPF உடை அணிந்து ஜவான்கள் சிறுவர்களுக்கு பாடம் எடுத்தனர்.

மரத்தடியில்...

மரத்தடியில்...

திறந்த வெளியில், சிறுவர்களுக்கு பாடம் எடுக்க துவங்கினர் ஜவான்கள். உட்கார இருக்கை இல்லை என்றாலும், மரத்தடியில் பாடங்கள் நடத்தப்பட்டன. பெரிய கரும்பலகை கொண்டுவரப்பட்டு, ஜவான்கள் மாணவர்களை கூட்டாக அமர வைத்து பாடம் நடத்தி தங்கள் சேவையை செய்தனர். இது எங்கள் சமூதாய கடமையாக கருதுகிறோம் என்று துணை கமாண்டன்ட்அவினாஷ் ANI செய்திகளில் கூறி இருந்தார்.

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்!

எந்த ஒரு பிரச்சனைக்கும் துப்பாக்கியும் தோட்டாவும் தீர்வளிக்காது. கூர்வாளினை விட சக்தி வாய்ந்தது பேனா முனை என்று பழமொழிகள் படித்திருப்போம். அது இப்போது நிஜ வாழ்வில் காணும் போது, பெருமையாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது. இந்த நேரத்தில் சமூகத்திற்காகவும், தாய்நாட்டுக்காகவும் மட்டுமே அயராது பணியாற்றி வரும் CRPF ஜவான்களுக்கு நமது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வோமாக.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

CRPF Jawans Teaching School Students in Jharkhand!

CRPF Jawans Takes Chalks and Pens, Instead of Guns and Bullets. Yes, Here in Jharkand Jawans Teaching School children's and Makes their life brighter by educating them.
Story first published: Wednesday, November 28, 2018, 13:01 [IST]
Desktop Bottom Promotion