மாடலிங்கில் இப்படியும் சித்திரவதைக்கு ஆளாகும் அழகிகள்... டிஜிட்டல் துன்புறுத்தல்!

Subscribe to Boldsky

நம்ம ஊர் லோக்கல் இதழ்களாக இருக்கட்டும் அல்லது ஜி.கியூ., வோக், வெநிட்டி ஃபேர் என சர்வதேச இதழ்களாக இருக்கட்டும்... இவற்றின் அட்டைப்படத்தை பார்க்கும் போது வாசகர்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகும். இது தானாக உருவாகும் ஈர்ப்பு கிடையாது... வலுக்கட்டாயமாக உருவாக்கப்படும் ஈர்ப்பு.

புரியும் படி கூற வேண்டும் என்றால்... ஒரு சின்ன உதாரணம்...

நீங்களே ஒரு செல்ஃபீ எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்... அதை அப்படியே சமூக தளங்களில் பதிவிடுவீர்களா? அல்லது அதை எடிட் செய்து, ஃபில்டர்கள் சேர்த்து அழகை மெருகேற்றி பதிவு செய்வீர்களா? நிச்சயம் பல எடிட்டிங் வேலைபாடுகள் முடிந்து தான் பலரது புகைப்படங்கள் சமூக தளங்களில் பதிவேற்றம் ஆகிறது.

Confessions of a retoucher: how the modelling industry is harming women

Cover Image Source: smh.com

இதற்கான பின்னணி காரணம் என்ன? அனைவரும் நம்மை ரசிக்க வேண்டும்... அதிகப்படியான லைக்ஸ், ஹார்ட்ஸ் கிடைக்க வேண்டும் என்பது தானே... இதே வேலை தான் ஃபேஷன் உலகிலும் நடக்கிறது. ஆனால், இது ஒருவகையில் பெண்களுக்கு எதிரான தீங்கு அல்லது உடல் சார்ந்த துன்புறுத்தல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பளபளப்பாக இருக்க வேண்டும்...

பளபளப்பாக இருக்க வேண்டும்...

நீங்களே கூறுங்கள்... நீங்கள் வாங்கும் ஏதாவது ஒரு பொருள் பளபளப்பாக அல்லது ஈர்ப்பாக இல்லை என்றால் அதை நீங்கள் வாங்குவீர்களா? உங்கள் கண்முன் இரண்டு பொருகள் உள்ளன... அதில் எதை தேர்வு செய்வீர்கள்... உதாரணத்திற்கு ஆப்பிள் என்றே வைத்துக் கொள்வோம்.. ஒன்று சுமாராக இருக்கிறது. இன்னொன்று கழுவி, மெழுகு சேர்க்கப்பட்டு.. பார்க்கவே பளபளப்பாக இருக்கிறது. இது மெழுகு சேர்க்கப்பட்டிருப்பதை நாம் கவனிப்பது இல்லை... ஈர்ப்பாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறோம். அதனால் தான்... சூப்பர் மார்கெட் சென்றால்.. எதை பற்றியும் கவலைப்படாமல் பல நாட்கள் கெடாமல் இருக்க பதப்படுத்தி விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிளை விரும்பு வாங்குகிறோம்.

நமக்கு தேவை பளபளப்பாக இருக்க வேண்டும்.

போட்டோஷாப், ரீட்டச்!

போட்டோஷாப், ரீட்டச்!

இப்படியான வேலைகள் தான் ஃபேஷன் உலகிலும் நடக்கின்றன. பாலியல் ரீதியான துன்புறுத்தல், பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் என்பது உடல் ரீதியானவை மட்டுமல்ல. மன ரீதியான கொடுமைகளும் பலவன நடக்கின்றன. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

நாம் வாங்கி படிக்கும் அல்லது சாதாரணமாக வேடிக்கை பார்க்கும் அனைத்து இதழ்களின் அட்டைப்படத்தில் இடம்பெறும் நடிகைகள் மற்றும் மாடல்களின் படங்கள் போட்டோஷாப் மற்றும் ரீட்டச் வேலைகள் முடிந்து தான் வெளியாகிறது. ரீட்டச் என்றால் என்ன முகத்தை அழகாக காட்டுகிறார்கள்... அதிலென்ன இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள். அதிலும் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

பிரான்ஸ் சட்டம்!

பிரான்ஸ் சட்டம்!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியில் பிரான்ஸ் நாட்டில் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது டிஜிட்டலாக அல்லது கமர்ஷியல் சார்ந்து எடிட் செய்து வெளியாகும் எல்லா புகைப்படங்களுக்கும் உடன் "retouched photograph" என்ற வாசகத்தை சேர்க்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள்.

இதே போல கெட்டி இமேஜஸ் (Getty Images) எனும் உலகின் முன்னணி ஸ்டாக் புகைப்படங்கள் விற்கும் இணையமானது ரீட்டச் செய்யப்பட்ட படங்களுக்கு தடை விதித்ததாக தகவல் கிடைக்கப்பெற்றன.

இப்போது சமூக தளங்களில் தங்களை அழகாக காண்பித்துக் கொள்ள, பருக்களை போக்க, சரும நிறத்தை மெருகூட்ட, ஒல்லியான உடல்வாகு ஏற்படுத்தி கொள்ள, சிரிப்பு, முகத்தின் வடிவம் மாற்ற என அனைத்திற்கும் எளிய செயலிகள் வந்துவிட்டன. இதன் மூலம் எடிட் செய்து படங்களை அனைவரும் மிக அழகாக பதிவு செய்து வருகிறார்கள்.

டவ் நிறுவனம்!

டவ் நிறுவனம்!

2016ம் ஆண்டு டவ் (Dove) நிறுவனம் பெரியளவில் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 13 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அதில் பாதிக்கும் மேற்பட்ட இளம் பெண்கள்.. மீடியாக்களில் வெளியாகும் பெண்களின் அழகை கண்டு.. தாங்கள் அப்படி இல்லையே என்று மனவருத்தம் அடைவதாக தகவல்கள் கிடைத்தன.

அதிலும் அட்டைப்படங்கள் மற்றும் ஃபேஷன் படங்களை காணும் போது, அவர்களின் முக அழகு, உடல் அழகு போன்று தங்களுக்கு இல்லையே என்று தன்னம்பிக்கை இழக்கிறார்கள் என தரவுகள் கிடைத்தன.

போலி!

போலி!

இந்த பாடி இமேஜ் சார்ந்து பெண்கள் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். இவர்கள் இழப்பது உண்மையான தன்னம்பிக்கையை... ஆனால், ஒரு போலியை கண்டு. முக அழகில் இருந்து உடல் அழகு வரை எடிட் செய்யப்பட்ட ஒரு போலியான அழகை கண்டு.. இவர்கள் தங்களுக்குள் இருக்கும் உண்மையான வலிமையை இழக்கிறார்கள்.

இதுக்குறித்து கடந்த ஏழு ஆண்டுகளாக ஃபேஷன் இதழ்களின் அட்டைப்படங்கள் மற்றும் விளம்பர படங்களை எடிட் மற்றும் ரீட்டச் செய்து வரும் ஜேம்ஸ் என்பவர் சில கருத்துக்கள் தெரிவித்திருக்கிறார்.

வேலை!

வேலை!

ஜேம்ஸின் வேலை என்னவென்றால்... கண்களுக்கு கீழே தோன்றும் தொங்கிய சருமம், கன்னத்தை போதிய அளவு சரி செய்வது, புருவம், கண்ணிமை, தோள்பட்டை, கைகள், தொடை பகுதியில் இருக்கும் மிகுதியான உடலை சலீம் செய்வது, பற்களை வெள்ளை ஆக்குவது, நகங்களை பளிச்சிட வைப்பது போன்றவை ஆகும்.

ஆகவே, மாடல்களும் நேரில் பார்த்தால் நம்மில் ஒருவர் போல தான் இருப்பார். இத்தனை பட்டி டிங்கரிங் வேலை செய்வதால் தான் அவர்கள் அவ்வளவு அழகாக தெரிகிறார்கள்.

என்ன செய்வேன்?

என்ன செய்வேன்?

ஜேம்ஸின் வேலையானது அந்தந்த மாடலை பொருத்து குறைவாகவும், மிகுதியாகவும் இருக்கும். இயற்கையாகவே அழகாக இருக்கும் மாடல்களின் படங்களில் உடலில் சிறிதளவு எடிட்டிங் செய்தால் போதும். ஆனால், முகம் மட்டும் அழகாவும், உடலளவில் கொஞ்சம் மோசமாக இருந்தால்.. அவர்களது உடலின் பல பாகங்களில் வேலைபாடுகள் செய்ய வேண்டும்.

சில இடங்களில் எலும்புகள் தெரிய வேண்டும், சில இடங்களில் சதை மிகுதியாக தெரிய வேண்டும் என்பது நிறுவனங்களிடம் இருந்து கட்டளையாக வரும். அதை எல்லாம் தட்டாமல் செய்ய வேண்டியது தான் ஜேம்ஸின் வேலை.

டெக்னாலஜி!

டெக்னாலஜி!

ஃபேஷன் உலகில் ஈர்க்கும் பலருக்கே... உண்மையான புகைப்படம் எது, எடிட் செய்த புகைப்படம் எது என்று தெரியாது. எனவே, புத்தகங்கள் மற்றும் விளம்பரங்களில் பார்க்கும் வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இதுக்குறித்து அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

அவர்களுக்கு இதழ்கள் விற்க வேண்டும், பொருட்கள் வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும் அவ்வளவு தான். மற்றப்படி இந்த தொழில்நுட்பம் சார்ந்த சித்துவேலைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஷாம்பூ முதல் சோப்பு வரை!

ஷாம்பூ முதல் சோப்பு வரை!

நீங்கள் விளம்பரங்களில் காணும் சிக்கு இல்லாத, அடர்த்தியான, ஷைனிங் முடியில் இருந்து, சுருக்கம், கரும்புள்ளி, கண்ணை சுற்றி இருக்கும் டார்க் சர்கிள் இல்லாத பளபளப்பான சருமம் வரை எல்லாமே இப்படியான் எடிட்டிங் வேலை பாடுகள் நிறைந்தவை தான். வாடிக்கையாளர்கள் தாங்களும் அந்த பொருள் வாங்கினால் அப்படி ஆகிவிடலாம் என்று கருதி ஏமாற்றப்படுகிறார்கள்.

நீங்கள் எத்தனை லிட்டர் ஷாம்பூ போட்டு குளித்தலும், எத்தனை கிலோ சோப்பு பயன்படுத்தி குளித்தாலும் அப்படியான ரிசல்டு கிடைக்கவே கிடைக்காது. அதற்கு எல்லாம் மேக்கப் தான் செய்ய வேண்டும். இல்லையேல் இயற்கையாகவே அப்படியான தன்மை பெற்றிருக்க வேண்டும்.

இதில் மாடல்களுக்கு என்ன?

இதில் மாடல்களுக்கு என்ன?

சரி! இதில் வாடிக்கையாளர்கள் தானே ஏமாற்றப்படுகிறார்கள் மாடல்களுக்கு என்ன என்று நீங்கள் கேட்கலாம். கொஞ்சம் யோசித்து பாருங்கள்... நம் புகைப்படம் அல்லது நம் வீட்டு பெண் யாருடைய புகைப்படத்தையாவது அணுவணுவாக, உடலின் அங்கங்கள் அனைத்திலும் மவுஸ் கர்சர் வைத்து ஒருவர் எடிட், ரீட்டச் செய்தால்... நாம் அதை எப்படி எடுத்துக் கொள்வோம். அழகு என்று கூறி ரசிப்போமா.. அல்லது அருவருப்பாக காண்போமா...?

ஆரம்பத்தில் இது குறித்து மாடல்களே வாய் திறக்காமல் தான் இருந்தார்கள். ஆனால், சமீப காலமாக தங்கள் படங்களை எடிட் மற்றும் ரீட்டச் செய்வதை மாடல்களே எதிர்த்து வருகிறார்கள். சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் கூட, இப்படியான சர்ச்சையில் சிக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Confessions of a retoucher: how the modelling industry is harming women

    Consumers often flip through glossy magazines and admire models for their flawless skin and perfectly proportioned bodies. Models in photographs may appear effortlessly perfect, but behind every image lies a lengthy, painstaking process which has removed the reality, and created what is akin to a fictional character.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more