தங்கள் 'முதல் அனுபவத்தை' பற்றி 20 பிரபல நடிகர், நடிகைகள் கூறிய பகீர் உண்மைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

நம் ஊர் பிரபலங்கள் தங்கள் முதல் காதல் அனுபவத்தையே யாருக்கும் தெரியாமல் பொத்தி, பொத்தி பாதுகாப்பார்கள். ஆனால், ஹாலிவுட் மற்றும் அமெரிக்க நடிகர் நடிகைகள் திறந்த மனதுடன் தங்கள் 'அந்த' முதல் அனுபவத்தை கூட கூச்சப்படாமல் பல நாளேடுகளின் பேட்டிகளில், தங்கள் சுயசரிதையில் எள்ளளவும் தயக்கம் இன்றி பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர்.

Celebrities on Losing Their Virginity!

நாம் அறிந்த மேகன் ஃபாக்ஸ், டேனியல் ராட்க்ளிஃப், ஏஞ்சலினா ஜோலி, கிம் கர்தாஷியன், ஜெசிகா ஆல்பா, கிறிஸ் எவன்ஸ், டுவைன் 'தி ராக்' ஜான்சன் மற்றும் பல ஆங்கில பிரபலங்கள் தங்கள் முதல் அனுபவத்தை பற்றிய பகீர் உண்மைகள் பகிர்ந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்லோவே கர்தாஷியன்!

க்லோவே கர்தாஷியன்!

"என் சூழல் சரியானதாக இருக்கவில்லை. அப்போது எனக்கு 14 வயது, நான் 18 வயதுமிக்க ஆணுடன் டேட்டிங் செய்து வந்தேன். இப்போது அதைப்பற்றி நினைத்துப் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. ஆனால், அந்த தருணத்தில் அது எனக்கு மிக சாதாரணமாக இருந்தது. நான் தயாராக இல்லை என்ற போதிலும் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டி அழுத்தம் உண்டானது.

என் உடல் பற்றி எனக்கே தெரியாத காலம் அது.

ஒருவேளை நான் அதற்கு இணங்கவில்லை என்றால், நான் மற்ற பெண்கள் போலில்லாதவளாக கருதப்படுவேனோ என்ற எண்ணம் என்னுள். பிறகு, அந்த சூழலில் இருந்து நான் வெளிவந்த போது தான், நான் செய்தது தவறு என்று தோன்றியது. அது கட்டாயத்தின் பேரில் எங்களுக்குள் நடந்த உறவு."

- அமெரிக்க டிவி பிரபலம், மாடல் அழகி, தொழிலதிபர்.

டேனியல் ராட்க்ளிஃப்!

டேனியல் ராட்க்ளிஃப்!

மிக சிலருக்கு மட்டுமே முதல் அனுபவம் சிறந்ததாக அமையும். அவர்களில் நானும் ஒருவன். எனக்கு மிகவும் பரிச்சயமான நபருடன் தான் அது நடந்தது. அதன் பிறகு நான் நிறையவே சிறந்த உறவுகளில் ஈடுபட்டிருக்கிறேன். சிலருக்கு அவர்களது முதல் அனுபவம் மிகவும் கொடூரமானதாக அமையும். உதாரணமாக என் நண்பன் ஒருவன் குடி போதையில், யாரோ தெரியாத நபருடன் பாலத்தின் கீழ் உறவுக் கொண்டான். அதுதான் அவனது முதல் அனுபவம்.

- ஹாரி பாட்டர் ஹீரோ.

லீனா டன்ஹாம்!

லீனா டன்ஹாம்!

"ஆட்ரி (என் சிறந்த தோழி) என் அறைக்கு உறங்குவதற்காக தான் வந்தாள். மிகவும் அழகானவள் அன்று சோகத்தில் அழுதுக் கொண்டு நிலைதவறி இருந்தாள். கதவை தட்டாமல் அப்படியே என் அறைக்குள் நுழைந்துவிட்டாள். அப்போது தான் நான் ஜோனா எனும் நண்பனுடன் உறவில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தேன். அது தான் எனது முதல் அனுபவம். தோழி கத்தியபடி சென்றுவிட்டாள். அன்று ஜோனாவுக்கு நான் விர்ஜின் என்பது தெரியாது. அதன் பிறகு நான் இணையவே இல்லை."

- கேர்ள்ஸ், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோர் போன்ற படங்களில் நடித்த நடிகை

அன்ஸெல் எல்கோர்ட்!

அன்ஸெல் எல்கோர்ட்!

"அப்போது எனக்கு 14 வயது. நான் அப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கும் தெரியாது. அவளுக்கும் தெரியாது. நாங்கள் சரியாக தான் உறவில் ஈடுபட்டோமோ என்பது குறித்தும் எங்களுக்கு தெளிவு இல்லை."

- பேபி டிரைவர், தி ஃபாலட் இன் அவர் ஸ்டார்ஸ், நவம்பர் கிரிமினல்ஸ் போன்ற படங்களில் நடித்த அமெரிக்க நடிகர்.

ஏஞ்சலினா ஜோலி!

ஏஞ்சலினா ஜோலி!

"நான் எனது ஆண் தோழனுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் இருந்த அந்த உணர்வுகளும், செக்ஸும் எங்களுக்கு போதுமானதாக இல்லை. அப்போது இனியும் நான் ஒரு சிறுமி அல்ல என்பதை நான் உணர துவங்கினேன். ஒரு தருணத்தில் நாங்கள் இருவரும் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கமாக எண்ணினோம். நான் ஒரு கத்தி எடுத்து அவனை கீறினேன். அவன் என்னை மீண்டும் கீறினான். நாங்கள் இருவரும் உறவை பரிமாறிக் கொண்டோம், எங்களை சுற்றிலும் இரத்தம். என் இதயம் வேகமாக துடித்துக் கொண்டிருந்தது."

- பிரபல ஹாலிவுட் நடிகை.

கிம் கர்தாஷியன்!

கிம் கர்தாஷியன்!

"நான் முதல் முறை செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய போது, எனக்கு 15வயது... என்னுள் நாம் என்ன செய்ய போகிறோம், என்ன நடக்கவிருக்கிறது என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டே இருண்டஹ்து. கடைசியில்... சரி இதுதான் நடக்கப் போகிறது என்ற முடிவுக்கு வந்தோம். நான் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு உறவில் ஈடுபட்டேன்."

- அமெரிக்க டிவி பிரபலம், மாடல் அழகி மற்றும் தொழிலதிபர்.

 மெக்காலி கல்குன்!!

மெக்காலி கல்குன்!!

"எனக்கு அப்போது 15 வயது. அது மோசமாகவோ, விசித்திரமாகவோ எல்லாம் அமையவில்லை. நாங்கள் திட்டமிட்டிருந்தோம். நான் சரியாக தான் ஈடுபடுகிறேனா என்ற சந்தேகம் இருந்தது. தி ஒயிட் எனும் ஆல்பம் கேட்டுக் கொண்டிருந்தோம். சரியாக இருந்தது பாடல் முடிவதற்கும், நாங்கள் முதல் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டதற்கும்."

- ஹோம் அலோன் என்ற படத்தின் மூலம் உலகளவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்ற நடிகர்.

ஸ்நூகி!

ஸ்நூகி!

எனக்கு அப்போது 14வயது. நியூயார்க்கின் வடக்கு பகுதியில் இப்படியான முயற்சிகள் சாதாரணமாக இருந்தன. அவன் எனது சீனியர். அவன் என்னை விரும்புகிறான் என்று கருதினேன். அதனால் தான் நாங்கள் இணைந்தோம். ஆனால், அவன் ஒரு ஜர்க். அவன் அதன் பிறகு என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அது மிகவும் பயங்கரமான அனுபவம்.

- அமெரிக்க டிவி பிரபலம்.

Image Source: wikipedia

ஷியா லாபியூஃப்!

ஷியா லாபியூஃப்!

"சில காரணங்களால் நான் என்னை ஒரு ஆண்மகனாக காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டானது. அதற்கு நான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் உண்டானது. நான் எந்த பெண்ணிடமும் நான் ஒரு விர்ஜின் என்று கூறியது இல்லை. என் முதல் அனுபவம் சரியாக அமையவில்லை."

- டிரான்ஸ்பாமர் படங்களில் நடித்த அமெரிக்க நடிகர்.

மேகன் ஃபாக்ஸ்!

மேகன் ஃபாக்ஸ்!

"பல முறை விகாரமான முறையில் நான் செக்ஸில் ஈடுபட்டது உண்டு. ஆனால், எனது முதல் அனுபவம் அப்படியானதாக இல்லை. நான் காதலித்து வந்த நபருடன் தான் முதல் முறை இணைந்தேன். அவன் மிகவும் இனிமையானவன்."

- டிரான்ஸ்பாமர் படங்களில் நடித்த பிரபல ஆங்கில நடிகை.

ஆஷ்டன் கச்சர்!

ஆஷ்டன் கச்சர்!

எனக்கு அப்போது 15வயது இருக்கும். என் நண்பன் தான் எல்லா ஏற்பாடுகளும் செய்தான். கொஞ்சம் மோசமானதாக தான் என் முதல் அனுபவம் இருந்தது. என் திறமையை காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே இரண்டு ஆண்டுகள் கழித்து அதே பெண்ணுடன் மீண்டும் உறவுக் கொண்டேன்.

- ஜாப்ஸ் (ஸ்டீவ் ஜாப்ஸ் திரைப்படம்), டூ அன்ட் ஹாப் மேன், தி 70s ஷோ போன்ற படங்களில் நடித்துள்ள பிரபல அமெரிக்க நடிகர்.

ஜோ ஜோனஸ்!

ஜோ ஜோனஸ்!

முதல் அனுபவத்தின் போது என் வயது 20. நான் எனக்கான சரியான நபருக்காக காத்திருந்தேன் என்பதை பெருமையாக கருதுகிறேன். ஏனெனில், சில காலம் கழிந்து, என் அனுபவத்தை பற்றி பேசும் போது அவள் மோசமானவள் என்று கூற எனக்கு விருப்பமில்லை. அதற்காகவே காத்திருந்தேன்.

- அமெரிக்க பாடகர்.

கிறிஸ்டன் ரிட்டர்!

கிறிஸ்டன் ரிட்டர்!

"அவன் மிகவும் மோசமானவன். அவன் அந்தாண்டு பள்ளியின் போது கிறிஸ்டன் ஐ லவ் யூ என்று ஒரு புகைப்படத்தில் எழுதி அனுப்பினான். அதன் பிறகே நாங்கள் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். அவன் பெயர் டேமியன். என் பெற்றோர் அவனை டிமோன் (Demon) என்று அழைப்பார்கள். எங்கள் முதல் அனுபவம் அவன் பெற்றோரின் வேனில் நடந்தது. அவன் பாஸ்கெட்பால் விளையாடி முடித்து வந்திருந்தான். அது நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு இனிமையான நிகழ்வல்ல."

- ஜெஸிகா ஜோன்ஸ், பிரேக்கிங் பேட் போன்ற படங்களில் நடித்த பிரபல அமெரிக்க நடிகை.

ராபின் திக்!

ராபின் திக்!

ஒருமுறை நிருபர் ஒரு ராபின் திக் 13 வயதில் கண்ட முதல் அனுபவத்தை பற்றி கேள்வி எழுப்பிய போது, "30 நொடிகளாவது நீடித்திருக்கலாம்..." என்று பதில் கூறி சென்றுவிட்டார்.

- அமெரிக்காவை சேர்ந்த பாடலாசிரியர், பாடகர்.

கிறிஸ் எவன்ஸ்!

கிறிஸ் எவன்ஸ்!

"நான் முதல் முறை உறவுக் கொண்ட பிறகு, வீட்டுக்கு அவசர அவசரமாக ஓடினேன். வீட்டுக்கு சென்றவுடன் 'அம்மா, நான் செக்ஸ் கொண்டேன், கிளிடோரிஸ் எங்கே இருக்கிறது?' என்று கேள்வி எழுப்பினேன்" என்று நகைத்து பகிர்ந்திருக்கிறார்.

- கேப்டன் அமெரிக்கன் சூப்பர் ஹீரோ நடிகர்.

செலின் டியான்!

செலின் டியான்!

அது டப்ளினில் (ரிபப்ளிக் அயர்லாந்தின் தலைநகரம்) நடந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள் ஏப்ரல் 30,1988. அன்று மாலை நேரம். நான் காதலித்து வந்த நபருடன் என் அறையில் சிறிது நேரம் செலவழிப்பதை நான் மிகவும் விரும்பினேன். ஒரு தருணத்தில் ஏன் முயற்சித்து பார்க்க கூடாது என்று கருதினோம். அது தான் எங்கள் முதல் அனுபவம்.

- கனடாவை சேர்ந்த பிரபல பாடகி

லில் வெய்ன்!

லில் வெய்ன்!

"எனக்கு அப்போது 11 வயது, அந்த பெண்ணுக்கு 13 வயது. நான் போர்டு கேம்ஸ் ஒன்றாக விளையாடுவது வழக்கம். வெற்றி, தோல்வி டிரா ஆகும் போது அவள் போர்டு கேமின் மீது ஃபக் மீ என்று எழுதுவாள். அப்போது உடலுறவு குறித்து நான் எதுவும் அறிந்தது இல்லை. அது ஏதோ திட்டும் வார்த்தை என்றே அறிந்து வந்தேன். அவள் மூலமாக தான் முதல் முறை உடலுறவு குறித்து அறிந்தேன்"

- ரேப்(Rap) பாடகர்.

சாரா சில்வர்மேன்!

சாரா சில்வர்மேன்!

பாஸ்டன் பல்கலைகழகத்தில் எனது சீனியருடன் ஏற்பட்டது என் முதல் அனுபவம். அவன் மிகவும் அழகானவன். எங்கள் பள்ளியில் இருந்த அனைத்து பெண்களும் அவனை தான் ஹாட் அன்ட் ஹேண்ட்சம் என்று கூறுவார்கள். நீண்ட கூந்தல், தாடியுடன் உயரமாக இருப்பான். சிலர் அவனை இந்த தோற்றத்திற்காகவே செக்ஸி ஜீசஸ் என்றும் கூறி கேலி செய்வார்கள்.

ஒரு நாள் நாங்கள் எய்ட்ஸ் குறித்து பேசிக் கொண்டிருதோம். அதன் பிறகே, எங்கள் முதல் அனுபவம் அரங்கேறியது.

- ஸ்டேன்ட்- அப் காமெடியன்

ஜெசிகா ஆல்பா!

ஜெசிகா ஆல்பா!

நான் எனது 18 வயது வரை எங்கேயும் ஆண்களுடன் வெளியே போனதில்லை. நான் விர்ஜினாக இருந்தேன். என் முதல் அனுபவம் எனது எக்ஸ் ஃபியான்ஸியுடன் நடந்தது. அப்போது நான் இளம்பெண். மைக்கேல் (எக்ஸ்-ஃபியான்ஸி) உடன் டேட்டிங் செய்து வந்தேன். நான் காதலிக்கும் நபருடன் தான் முதல் அனுபவம் பெற வேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதுமே இருந்தது. பலரும் அவர்களது முதல் அனுபவம் மிக மோசமானதாக இருந்தது என்றே கூறுவார்கள். அதனால், எனக்கு அப்படியான அனுபவம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் அவனை விட்டு செல்ல மாட்டான் என்று நம்பினேன். அதனால் முதல் முறை உறவுக் கொண்டேன்.

- அமெரிக்க நடிகை மற்றும் தொழிலதிபர்

டுவைன் 'தி ராக்' ஜான்சன்!

டுவைன் 'தி ராக்' ஜான்சன்!

எங்கள் முதல் அனுபவத்தில் போது நாங்கள் பார்க்கில் இருந்திருக்க கூடாது. அது திடீரென நடந்தது. அப்போது எங்கள் காருக்குள் யார் டார்ச் அடித்தனர், பெரிய வெளிச்சம்... அவர்கள் போலீசார்.

நான் உறவுக் கொண்டிருந்த பெண்ணிடம், மேடம், நீங்கள் சரியாக உள்ளீர்களா? உங்களை யாராவது கடத்திவிட்டார்களா? என்று கேள்விக் கேட்டனர். அதற்கு அவள், அவன் (நான்) எனது காதலன் தான் என்று கூறினாள்.

சில தருணங்கள் கெட்ட கனவாக இருந்திருக்கலாம் என்று தோன்றும். அந்த நிகழவும் அப்படியானதாக இருந்திருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். சிலருக்கு அவர்களது முதல் அனுபவம் அழகானதாக அமையும். ஆனால், எனக்கு அப்படியாக இல்லை

- WWE சண்டை வீரர் மற்றும் முன்னணி ஹாலிவூட் நடிகர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities on Losing Their Virginity!

This is What Your Favorite Hollywood Celebs Confessed on Losing Their Virginity!