'பாத்ரூம்' மீடியாவை கழுவி ஊற்றிய நடிகை அமலா அக்கினேனி!

Posted By:
Subscribe to Boldsky
மீடியாவை சரமாரியாக கேள்வி கேட்ட அமலா அக்கினேனி- வீடியோ

கடந்த சில நாட்களாக இந்திய தொலைக்காட்சி ஊடங்கங்கள் சில மிகவும் கேவலமாக நடந்துக் கொண்டன. நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை பாத்ரூம் போன்ற வி.எப்.எக்ஸ் பின்னணி கொண்டும், சிலர் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி படுத்திருப்பது போல மார்ஃபிங் செய்தும் மிகவும் கீழ்த்தரமாக நடந்துக் கொண்டனர்.

உள்ளூர், மாநில தொலைக்காட்சிகளில் இருந்து தேசிய செய்தி தொலைக் காட்சிகள் வரை பல செய்தி சேனல்கள் இப்படியாக செய்தியினை ஒளிப்பரப்பி சமூகத்தில் பலத்தரப்பட்ட மக்களின் எதிர்மறை விமர்சனத்திற்கு ஆளாகினார்கள்.

இப்போது, அந்த பாத்ரூம் மீடியாக்களை வசைமாரியாக பல கேள்விகள் கேட்டு தூள் கிளப்பியிருக்கிறார் நடிகையும், நடிகர் நாகார்ஜுனாவின் மனைவியுமான அமலா அக்கினேனி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் விருப்படி விடுவீர்களா?

என் விருப்படி விடுவீர்களா?

தனது முகநூல் பதிவொன்றில், என்னை என் விருப்பபடி வயதாக விடுவீர்களா? என்று குறிப்பிட்டு கேட்டிருந்தார் அமலா அக்கினேனி. இதில், அவர் வயதாவது அவரவர் முகத்திலும், உடலிலும் தென்படும் விஷயம் தான். நான் எப்படி இருக்கிறேன், நான் சோர்ந்து இருக்கிறனா? உடல் எடை கூடிவிட்டேனா என்றெல்லாம் யோசிக்க செய்யாமல். என்னை நிம்மதியாக, என் மனதார வயதாக விடுங்கள் என்று கூறியிருந்தார்.

இதை செய்திகளில் பெரிதாக்கி பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற தொனியில் கேட்டிருந்தார்.

சுருக்கங்கள்!

சுருக்கங்கள்!

என் கண்களுக்கு கீழே இருக்கும் கருமை, ரீடிங் கண்ணாடி போடுவது, முகத்தில் தோன்றும் சுருக்கம் போன்றவை வயதாக, வயதாக... நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

அதே போல, நான் எனது சுய மரியாதை சீர் குலையாமல் உடை உடுத்த அனுமதிக்க வேண்டும். எல்லா நேரத்திலும் சைஸ் ஜீரோவில் யாராலும் இருக்க முடியாது. அந்தந்த வயதில், அந்தந்த உடல்நலம், உடல் உருவத்திற்கு ஏற்ப தான் ஒருவர் உடை உடுத்த முடியும்.

நரை!

நரை!

நீங்கள் என்னை ஹேர்கலர் செய்யாதிருக்க விடுவீர்களா? என் கூந்தலின் நீளம், முடி நரைத்துவிட்டதா? ஹேர்டை செய்கிறாரா? என்ற ஆராய்ச்சி வேண்டாம்.

நீங்கள் நான் தூங்கி எழுந்த நேரத்தில் முடி களைந்த தோற்றத்தில் இருப்பதை தான் பெரிதுப்படுத்த நினைக்கிறீர்கள். என் மனதின் ஆழம், எனது புத்திக் கூர்மையை பெரிதுப்படுத்த நினைப்பது இல்லை. உங்கள் கேமராக்களின் ஆழம் என்றும் நடிகைகளுக்கு வேறு விதமான ஆழத்தை தான் காண்பிக்கின்றன.

விவாதம்!

விவாதம்!

எந்த தொந்தரவும் இன்றி என்னை நல்ல பொருளடங்கிய விஷயங்களை விவாதிக்க விடுவீர்களா? குறுக்கே இடையூர் செய்யாமல், தலையிடாமல், கேள்வி கேட்காமல்...

நான் என்ன சமைக்கிறேன், என்னை பற்றிய கிசுகிசு எழுதுவது தான் உங்களது அதிகபட்ச டிமாண்ட்.

என் மனதுக்குள் என்னவிருக்கிறது அதனுள் வளரும் எண்ணங்கள், மாறுபட்ட கருத்துக்கள், வித்தியாசம் போன்றவை உங்கள் கண்களுக்கு தெரியாது. எல்லாம் என் உடல் சார்ந்ததுமாகவும், அதன் சார்ந்த மாற்றங்கள் குறித்த பார்வையுமே உங்கள் குறியாக இருக்கிறது.

சுதந்திரமாக...

சுதந்திரமாக...

பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட், டிஆர்பி போட்டி, மூன்றாம் பக்கத்தில் வரும் நடுப்பக்க செய்தி, உங்கள் முகநூல் பக்கத்தில் லைக்ஸ் வாங்க என்னை பயன்படுத்திக் கொள்வது இதெல்லாம் எதற்கு? என் பின்னே கேமரா தூக்கி கொண்டு வருவதை முதலில் நிறுத்துங்கள்.

தனிமை வேண்டும்!

தனிமை வேண்டும்!

உங்களது ப்ரைம் டைம், முதல் பக்க செய்து, அட்டைப்படம் அனைத்தையும் தாண்டி எனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது, எனக்கென்று ஒரு மனம் இருக்கிறது, எனக்கென ஒரு மனிதன், என் உலகம், என் உறவுகள், என் உண்மைகள், என் வாழ்க்கை என்று பலவன இருக்கின்றன. அதற்கு எல்லாம் கொஞ்சம் மதிப்புக் கொடுங்கள். அதை கெடுத்துவிடாதீர்கள் என்று அமலா தனது பதிவில் கூறியிருந்தார்.

ஸ்ரீதேவி?

ஸ்ரீதேவி?

அமலா அக்கினேனி திடீரென பிப். 28ம் நாள் இப்படி ஒரு பதிவிட என்ன அவசியம்?

அமலா அவரது முகநூல் பதிவில் கூறி இருக்கும் பல விஷயங்கள் மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் ஒத்துப் போகிறது.அவர் நடிகையாக இருந்ததில் இருந்து, தாரமாகி, தாயாகி, அவரது மகள் திரைக்கு வரும் வரையில் மீடியாக்கள் அவரை ஈ போல மொய்த்தன. ஏன் அவரது இறப்பிலும் கூட மதிப்போ, மரியாதையோ தராமல், அவரது படத்தை குளியல் தொட்டியில் இருப்பது போல மார்ஃபிங் செய்து டிஆர்பி தேடி பைத்தியமாக ஓடின சில தேசிய ஊடகங்கள்.

அழகு!

அழகு!

ஸ்ரீதேவி என்றால் அழகு, அழகு என்றால் ஸ்ரீதேவி என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு அழகாக இருந்தவர் ஸ்ரீதேவி. எனக்கு ஸ்ரீதேவி மாதிரி ஒரு மனைவி வேண்டும், மருமகள் வேண்டும் என்று கேட்காத ஆட்களே இல்லை எனும் அளவிற்கு அழகாக இருந்தார்.

ஆனால், ஆரம்பத்தில் அவருக்கு புகழை தேடி தந்த அதே அழகு பின்னாட்களில் பழிவாங்க துவங்கியது மீடியாக்களின் உருவத்தில்.

அட, இப்படி ஆயிட்டாரே...

அட, இப்படி ஆயிட்டாரே...

ஸ்ரீதேவி கொஞ்சம் எடை கூடினாலும் செய்தியாகிவிடும், அவர் முகம் கொஞ்சம் தளர்ந்து சோர்வாக காணப்பட்டாலும் தலைப்பு செய்தியாகிவிடும். இதற்காகவே அவர் மெனக்கெட்டு தன் அழகை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாரா என்பது ஸ்ரீதேவிக்கு மட்டுமே வெளிச்சம்.

நடிகைகள் கவனத்திற்கு!

நடிகைகள் கவனத்திற்கு!

பல ஊடகங்கள் உங்களை படங்களை வைத்து டிஆர்பி காண்கின்றன. மீடியாக்கள் ஒளிபரப்பும் செய்திகளுக்கு பயந்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பெண்களை போல தான் நீங்களும். பிள்ளைப்பெற்றால் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். நாற்பதுகளை தாண்டினால் சில மாற்றங்கள் ஏற்படும். நாற்பதுகளின் இறுதிகளில் இயற்கையாகவே சில மாற்றங்கள் உண்டாகும்.

உயர்த்துங்கள்...

உயர்த்துங்கள்...

இதெல்லாம் தெரிந்தாலும் கூட உங்களை எப்போதுமே சிக்கென்று அழகாக தான் பார்க்க வேண்டும், நீங்கள் அப்படி இருக்க வேண்டும் என்று மீடியாக்களோ, கேமராக்களோ எதிர்பார்த்தால். உங்கள் புருவதையோ, விரலையோ உயர்த்தி காட்டிவிட்டு நகருங்கள். உங்கள் வாழ்க்கையை நீங்களே வருத்திக் கொள்ளாதீர்கள்.

மீடியாக்களும் தங்களிடம் கேமாரவும், பேனாவும் இருக்கிறது என கண்டதை க்ளிக் செய்து, கண்டதை எழுதி இனிமேலும் நடிகைகளின் வாழ்க்கை மற்றும் தனிமனித சுதந்திரத்தில் தலையிடாமல் அவர்களை நிம்மதியாக மூச்சுவிட செய்தால்... மிக்க மகிழ்ச்சி!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amala Akkineni Slaps Media For Bathroom Journalism and Its Way of Coverage on Actress Look!

Amala Akkineni Slaps Media For Bathroom Journalism and Its Way of Coverage on Actress Look!
Story first published: Saturday, March 3, 2018, 17:20 [IST]