அம்மா - மகளை ஒன்றாக திருமணம் செய்யும் விசித்திர வழக்கம்!

Posted By:
Subscribe to Boldsky

இன்னும் எண்ணற்ற பழங்குடி மக்கள் நம் நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு டெக்னாலாஜி தெரியாது., நம் நாட்டில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவை எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாது. இன்னும் சில பழங்குடி மக்களுக்கு இப்போது யார் ஆட்சி செய்கிறார்கள், அவர்கள் கொண்டு வரும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து கூட தெரியாது.

இந்த பழங்குடி மக்கள் இயற்கைக்கு எந்த பாதகமும் செய்வதில்லை. ஆனால், இவர்கள் பின்பற்றி வரும் சில வாழ்வியல் முறைகள் தான் கொஞ்சம் பாதகமாக இருக்கிறது. ஏற்கனவே ஒரே பெண் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைத்து அண்ணன் - தம்பிகளை திருமணம் செய்துக் கொள்ளும் வினோத வழக்கம் கொண்ட பழங்குடியினர் பற்றி நாம் படித்துள்ளோம்.

ஆனால், அதைவிட கொடுமையான சடங்காக இருக்கிறது. ஆம்! அம்மா - மகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்துக் கொள்ளும் பழக்கம் ஒன்று வங்காள தேச பழங்குடி மக்களிடம் இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வங்காள தேசம்!

வங்காள தேசம்!

வங்காள தேசத்தில் தான் அம்மாவையும், மகளையும் ஒன்றாக திருமணம் செய்யும் இந்த விசித்திர வழக்கம் புழக்கத்தில் இருக்கிறது. இந்த பழங்குடியின் வழக்கத்தின் படி, விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகள்களையும் ஒரே ஆண் திருமணம் செய்துக் கொள்வதை பரம்பரை, பரம்பரையாக பின்பற்றி வருகிறார்கள்.

மகள்!

மகள்!

இந்த விசித்திர வழக்கத்தை குறித்து டால்போட் எனும் முப்பது வயது பெண்மணி தனது பாதிப்பு குறித்து கூறியுள்ளார்.

நானும் என் தாய் மிட்டமோனியும் மற்றும் அவரது இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான நோட்டன் என்பவருடன் ஒன்றாக சிறு வயது முதலே வசித்து வருகிறேன். என் தந்தை மிகவும் சுந்தரமானவர். அவரது சிரிப்பு மிகவும் அழகானது. என் தாய்க்கு இப்படி ஒரு கணவர் கிடைத்ததை எண்ணி அவர் அதிர்ஷ்டம் செய்தவர் என நான் கருதுவேன்.

Image Credit

மாப்பிள்ளை!

மாப்பிள்ளை!

எனக்கு வரப்போகும் மாப்பிளையும் எனது வளர்ப்பு தந்தையை போலவே இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால், எனது கனவில் இடி வந்து விழுந்தது. அப்போது தான நான் அந்த செய்துக் குறித்துக் கேள்விப்பட்டேன். நான் அப்போது எனது பருவ வயதில் இருந்தேன்.

ஏற்கனவே திருமணமாகிவிட்டது...

ஏற்கனவே திருமணமாகிவிட்டது...

எனக்கும் எனது வளர்ப்பு தந்தைக்கும், எனக்கு மூன்று வயது இருக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது என்று கூறினார்கள். இது குறித்து எனது தாயிடம் கேட்டேன், அவரும் இதே செய்தியை தான் கூறினார். இது என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஓடிவிடலாமா?

ஓடிவிடலாமா?

என் வளர்ப்பு தந்தையை போல கணவன் வேண்டும் என கருதிய எனக்கு, என் தந்தை தான் எனது கணவர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதனால் வீட்டை விட்டு ஓடிவிடலாமா என்றும் எண்ணினேன். ஆனால், அதன் பிறகு என் தாயின் கதி? மேலும், என் தாயும் என்னை விடுவதாய் இல்லை.

பாரம்பரியம்!

பாரம்பரியம்!

டால்போட்டின் தாய், மிட்டோமோனி இதுகுறித்து கூறியதாவது..., இது எங்கள் இனத்தின் பாரம்பரியம். திருமணமான பெண் விதவை ஆகிவிட்டார். அவர் கண்டிப்பாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். அப்படியாக இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளும் பெண்ணுக்கு மகள் இருந்தால், அந்த மகளையும் அந்த ஆண் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

Image Credit

மூன்று வயது!

மூன்று வயது!

டால்போட் எனும் இந்த பெண்ணுக்கு திருமணமான போது வயது மூன்று. அப்போது கணவனாக கருத முடியாது என்ற போதிலும், பருவமெய்திய பிறகு என் இரண்டாம் கணவரான நோட்டனை டால்போட் கணவனாக தான் இனிமேல் கருத வேண்டும். இது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய முறை என மிட்டோமோனி கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weird Ritual: Marrying Mother and Daughter Together!

Weird Ritual: Marrying Mother and Daughter Together!