நிமிர்ந்த நன்னடை ’பாடல் எழுதும் போது பாரதியார் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவம்!

Posted By:
Subscribe to Boldsky

பாரதி உண்மையிலேயே ஒரு அபூர்வமான மனிதன். மனித சமுதாயத்தைப் பாதிக்கும் சகல விடயங்களைப் பற்றியும் அவன் தன் கவனத்தைத் திருப்பியிருக்கின்றான். இயற்கை, சமுதாயம், அரசியல், தத்துவம், பெண்விடுதலை, வறுமை, மக்கள் விடுதலையென்று அவன் பாடாத துறையென்று எதுவுமேயில்லை.

இன்றைக்கு பாரதிக்கு கொடுக்கப்படும் மதிப்பும் மரியாதையும் அன்று கொடுத்திருந்தால் இன்னும் பல மடங்கு உழைத்திருப்பான். மகாகவி பாரதி என்று எல்லாராலும் போற்றப்படுகின்ற பாரதியாரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரதியும் செல்லம்மாவும் :

பாரதியும் செல்லம்மாவும் :

பாரதி, 1917-ல் புதுவையில் வசித்தபோது அவரோடு நெருங்கிப் பழகிய விஜயராகவாச்சாரியார் பாரதியார் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொண்டார். இந்தப் படம் எடுக்கப்பட்ட அதே நேரத்தில் எடுக்கப்பட்ட இன்னொரு படம்தான் புகழ்பெற்ற பாரதியும் செல்லம்மாவும் தம்பதியராகக் காட்சி தரும் படம்.

Image Courtesy

பத்திரிகையாளன் :

பத்திரிகையாளன் :

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றினார். தன் இறுதி மூச்சு இருந்த வரை எழுதுவதை விடவில்லை பாரதி.

 பத்திரிகையில் புதுமை :

பத்திரிகையில் புதுமை :

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப்புக்களில் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே.

Image Courtesy

பாரதியின் படைப்புகள் :

பாரதியின் படைப்புகள் :

‘தனிமையிரக்கம்' என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும். `பாரத சமுதாயம் வாழ்கவே' என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா' என்ற பாட்டை எழுதினார் பாரதி

செல்லம்மா! செல்லம்மா!! :

செல்லம்மா! செல்லம்மா!! :

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். ஊரார் கிண்டலடிக்க, செல்லம்மா இவரின் கைகளை விலக்கிவிடுவாராம். அப்போது பாரதி பாடிய பாடல் தான் `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை' பாட்டு!

Image Courtesy

ஆனந்த கூத்து :

ஆனந்த கூத்து :

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார்.இதனால் பல சங்கடங்களை சந்தித்தாலும் தன் முடிவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை.

`என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்' என்று சொன்னவர் பாரதி!

மரணிக்கப்போகும் நேரத்திலும் எழுத்து! :

மரணிக்கப்போகும் நேரத்திலும் எழுத்து! :

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது.

அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்ற கட்டுரையைக் கொடுத்தார்! 'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்' என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

இன்று பாரதியாரின் நினைவு தினம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown facts of Bharathiyar

Unknown facts of Bharathiyar
Story first published: Monday, September 11, 2017, 10:30 [IST]
Subscribe Newsletter