கணவனை கலாய்த்து ஒரே ட்வீட் - வேர்ல்டு ஃபேமஸ் ஆன இந்திய மனைவி!

Posted By:
Subscribe to Boldsky

எரா லோதி என்ற பெண் ஓரிரு நாட்களுக்கு முன்னர் ட்வீட் செய்திருந்த படங்கள் ஆயிரக்கணக்கில் ரீ-ட்வீட் செய்யப்பட்டது. இதுல என்னப்பா இருக்கு என்கிறீர்களா. அவர் ட்வீட் செய்த படங்களில் பல வருடங்களாக திருமணமான பெண்கள், ஆண்களால் அனுதினம் எதிர்கொண்டு வந்த கொடூரமான நிகழ்வுக்கு தீர்வு இருந்தது.

ஆண்களுக்கு ஜில் பீரை பார்த்து, பார்த்து வாங்கும் அளவிற்கு, காய்கறியை எப்படி ஆராய்ந்து வாங்க வேண்டும் என்பது தெரியாது. முத்தின கத்திரிக்காய், வதங்கிய வாழைக்காய் என வாங்கி வந்து சமைக்க தருவார்கள்.

எத்தனை நாட்கள் எரா லோதியின் கணவரான கவுரவ் இப்படி காய்கறி வாங்கிவந்தார் என தெரியவில்லை. இதற்கு அடியோடு முடிவுக்கட்ட ஒரு சிறப்பு கடிதம் எழுதி அதை ட்வீட் செய்திருந்தார் எரா லோதி. இதை நாங்களும் பின்பற்ற போகிறோம் என பல இல்லத்தரசிகள் அறைகூவலிட்டு வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்வீட் ஜோடி!

ஸ்வீட் ஜோடி!

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று வந்தாலும். பல வீடுகளில் வீட்டு வேலைகளை மனைவி மட்டுமே செய்து வரும் அவலம் நான் கண்கூட பார்க்கலாம். ஆனால், எரா லோதி மற்றும் கவுரவ் தங்கள் வீட்டு வேலைகளை சரி பாதியாக பிரித்துக் கொள்கிறார்கள். அதில் ஒன்று தான் மளிகை பொருள் வாங்கி வருவது.

Image Credit:Era Gowalkar

50 - 50!

50 - 50!

எரா லோதி மற்றும் கவுரவ் இருவருக்கும் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் இருவரும் பிரதி வாரம் ஒருவரை ஒருவர் மாற்றி மளிகை, காய்கறி வாங்கும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் காய்கறிகளை தவறாக அல்லது சரியான தரத்தில் இல்லாத காய்கறியே வாங்கி வந்திருப்பார் போல கவுரவ்.

பொறுமையின் உச்சத்திற்கு சென்ற எரா லோதி. ஒரு சிறப்பு கடிதத்தை எழுதி ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Image Credit:Era Gowalkar

ட்வீட்!

எந்தெந்த காய்கறி எப்படி வாங்க வேண்டும். அதன் அளவு, வடிவம், தரம் எப்படி இருக்க வேண்டும் என அவர் தெள்ளத்தெளிவாக எழுதி, வரைப்படம் வரைந்து இது தவறு, இது சரி என அந்த மளிகை சாமான் பட்டியல் உருவாக்கியுள்ளார்.

வைரல்!

வைரல்!

எரா லோதி கவுரவிற்கு கூறியதாக ட்வீட் செய்த படங்கள் இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என அனைத்து சமூக தளத்திலும் டிரென்ட் ஆகிவருகிறது.

முத்து ரஜினி பாஷையில் கூற வேண்டும் என்றால் வரவர ஆன்லைனில் எது, எப்படி, எப்போ டிரென்ட் ஆகும், வைரல் ஆகும் என்றே தெரியவில்லை.

Image Credit:Era Gowalkar

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Trending Hilariously Grocery List Written By Era Londhe to Her Husband!

Trending Hilariously Grocery List Written By Era Londhe to Her Husband!