For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈவிரக்கமின்றி நூற்றுக்கணக்கான கொலைகள் செய்த டாப் 25 சீரியல் கில்லர்கள்!

உலகின் டாப் 25 சீரியல் கில்லர்கள்!

|

உலகிலேயே கொடூரமான மக்களை காண வேண்டுமா? அவர்கள் இவர்கள் தான். பல சமயங்களில் சில சூழ்நிலைகளில் தன்னிலை அறிந்து தான் கொலை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். சிலர் கொலை செய்வதை தங்கள் தொழிலாகவே வைத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்த இரண்டு வகையிலும் மாறுபட்டு, கொலை செய்வதை தங்கள் ஹாபியாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் இந்த சைக்கோத்தனமான சீரியல் கில்லர்கள்.

பெரும்பாலான சீரியல் கில்லர்கள் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளனர். மேலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கார்கள் அதிலும் 1970-80களில் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#25 டேவிட் பெர்கோவிட்ஸ்

#25 டேவிட் பெர்கோவிட்ஸ்

தி சன் ஆப் சாம் மற்றும் 44 காலிபர் கில்லர் எனவும் அறியப்பட்ட சீரியல் கொலையாளி இந்த டேவிட் பெர்கோவிட்ஸ். 1976ல் 44 காலிபர் துப்பாக்கி கொண்டு சரமாரியாக சுட்டுக் கொல்ல துவங்கினான். இந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் மரணமும், ஏழு பேர் பலத்த காயமும் அடைந்தனர்.

இதுமட்டுமின்றி, தான் அடுத்து எங்கே துப்பாக்கி சூடு நடத்தவுள்ளேன் என்பதை போலீசிற்கு திட்டி கடிதமும் எழுதி அனுப்பினான். இதனால் நியூயார்க் மக்கள் பெரும் பீதியடைந்தனர். 1977ல் டேவிட் பெர்கோவிட்ஸ் கைது செய்யப்பட்டான். நீதிமன்றத்தில் தனது அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டு 25 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றான். ஆனால், ஆயுள் முழுக்க இவனை விடுதலை செய்யவே இல்லை.

Image Credit: davidberkowitz.wikispaces.com

#24 எட்மண்ட் கெம்பெர்

#24 எட்மண்ட் கெம்பெர்

கோ-எட் கில்லர் என அழைக்கப்பட்டு வந்தவன் இந்த எட்மண்ட் கெம்பெர். 1970களில் ஈவிரக்கமின்றி பல கொலைகளை கலிபோர்னியாவில் செய்தவன். தனது 15 வயதிலேயே தனது தாத்தா - பாட்டியை கொன்றவன். சாண்டா க்ரூஸ் என்ற இடத்தில் ஆறு பெண்களை கொடூரமாக கொலை செய்தான். இவன் தனது தாய் மற்றும் அவரது தோழமைகளையும் கொலை செய்துள்ளான். 1973 ஆண்டு தனது குற்றங்களை ஒப்புக்கொண்டான். இவன் மரண தண்டனை கேட்டும், நீதிமன்றம், பரோல் இல்லாத வாழ்நாள் சிறை தண்டனை அளித்தது.

Image Credit: themindofaserialkiller.tumblr.com

#23 லாரி பிட்டக்கர் மற்றும் ராய் நோரிஸ்

#23 லாரி பிட்டக்கர் மற்றும் ராய் நோரிஸ்

இவர்களை டூல் பாக்ஸ் கில்லர்ஸ் என அழைத்து வந்தனர். இந்த இருவரும் கலிபோர்னியாவில் 1979ல் ஐந்து இளம் பெண்களை கொலை செய்தனர். ஒரு வேன் எடுத்துக் கொண்டு, பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்துள்ளன. 1981ல் கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு மரண தண்டனை பெற்றனர்.

Image Credit: thenewstalkers.com

#22 இயன் பிராடி மற்றும் மைரா ஹிண்ட்லி

#22 இயன் பிராடி மற்றும் மைரா ஹிண்ட்லி

இவர்கள் இருவரும் 1963- 65 வரை இடைப்பட்ட காலத்தில் ஐந்து குழந்தைகளை கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட குழந்தைகள் 10 - 17 வயது நிரம்பியவர்கள். மேலும், செக்சுவலாக டார்ச்சர் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2002ல் ஹிண்ட்லி சிறையிலேயே மரணம் அடைந்தார்.

Image Credit: wikipedia

#21 கென்னத் பியானி மற்றும் ஏஞ்சலோ புனோ

#21 கென்னத் பியானி மற்றும் ஏஞ்சலோ புனோ

1977 - 1978 வரை இவர்கள் இருவரும் கலிபோர்னியாவில் பல கடத்தல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இருவரும் ஏறத்தாழ 12 - 28 வயதிலான 10 பெண்களை கடத்தி கற்பழித்தி கொலை செய்துள்ளனர்.

இவர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பிடித்தனர். இவர்கள் கொலை செய்யும் விதத்தை தி ஹில் ஸ்ட்ராங்குலர் என கூறினர். இவர்கள் இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை கிடைத்தது. இவர்கள் இருவருமே 2002ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர்.

Image Credit: murderpedia.org

#20 டென்னிஸ் ரேடர்

#20 டென்னிஸ் ரேடர்

தி பி.டி.கே கில்லர் என அழைக்கப்பட்டு வந்த சீரியல் கில்லர். 1974 - 1991 இடைப்பட்ட காலத்தில் இவர் பல கொலைகள் செய்து வந்துள்ளான். போலீசுக்கு பி.டி.கே கில்லர் என்ற பெயரில் கடிதங்கள் எழுதி அனுப்பி வந்துள்ளான். கை கால்களை வெட்டி ஒரு பெட்டியில் உடலை அடைத்து கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டின் முன் வைத்துவிடுவான். இவனுக்கு நீதிமன்றம் தொடர்ந்து பத்து வாழ்நாள் சிறை தண்டனை அளித்துள்ளது. இதன்படி இவர் 2180 வரை சிறையில் இருக்க வேண்டும். இவனது ரிலீஸ் தேதி பிப்ரவரி 26, 2180 ஆகும்.

Image Credit: soletron.com

#19 டொனால்ட் ஹென்றி கஸ்கின்ஸ்

#19 டொனால்ட் ஹென்றி கஸ்கின்ஸ்

1969ல் கஸ்கின்ஸ் இரவு பணிக்கு செல்லும் நபர்களை குறிவைத்து தூக்கி டார்ச்சர் செய்து கொலை செய்து வந்துள்ளான். இவன் 80 - 90 பேரை கொலை செய்துள்ளான். இவனை 1975ல் கைது செய்தனர். இவனுக்கு பரோல் இல்லாத வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. மிகவும் பாதுகாப்பான சிறையில் அடைக்கப்பட்ட போதிலும், இவன் சிறைக்குள்ளேயே மற்றுமொரு கொலையை செய்தான். தனது சீரியல் கில்லிங் கணக்கில் சிறையில் இருக்கும் போதும் கொலை செய்த ஒரே ஆள் இவன்தான்.

Image Credit: murderpedia.org

#18 பீட்டர் மானுவல்

#18 பீட்டர் மானுவல்

அமெரிக்காவில் பிறந்த ஸ்காட்டிஷ் நபர் பீட்டர். இவன் தென் ஸ்காட்லாந்து பகுதியை சேர்ந்த ஒன்பது பேரை 1956-58'க்கு இடைப்பட்ட காலத்தில் கொலை செய்துள்ளான்.இவனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. ஸ்காட்லாந்தில் மரண தண்டனை பெற்ற கடைசி கைதி இவன் தான். இவனுக்கு பிறகு மரண தண்டனை ஸ்காட்லாந்தில் தடை செய்யப்பட்டது.

Image Credit: murderpedia.org

#17 ஜான் ஜார்ஜ் ஹைக்

#17 ஜான் ஜார்ஜ் ஹைக்

ஆசிட் பாத் கொலையாளி என்ற பெயர் ஜான் ஜார்ஜ் ஹைக்-க்கு இருக்கிறது. இவன் ஒரு ஆங்கிலேயே சீரியல் கில்லர். 1940களில் இவன் ஆறு பேரை கொலை செயத்திருந்தான். மிகவும் பணக்கார நபர்களை டார்கெட் செய்து இவன் கொலை செய்து வந்தான். கொலை செய்த பிறகு பிணங்களை சல்பியூரிக் அமிலத்தில் போட்டுவிடுவான். இதனால் கொலை செய்யப்பட்ட நபர்களின் உடல் கிடைக்காமலேயே இருந்தது. இவன் தான் கொலையாளி என நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் தேவைப்பட்டது. இவனுக்கு 1949ல் மரண தண்டனை அளிக்கப்பட்டது.

Image Credit: wikipedia

#16 ஃப்ரெட் & ரோஸ் வெஸ்ட்

#16 ஃப்ரெட் & ரோஸ் வெஸ்ட்

1967-87 வரையில் இந்த தம்பதி 11 இளம்பெண்களை டார்ச்சர் செய்து கொலை செய்துள்ளனர். தங்கள் குற்றத்தை இவர்கள் 1994ல் ஒப்புக் கொண்டனர். தங்கள் வீட்டை சுற்றியே பிணங்களை புதைத்து வைத்திருந்தனர். இவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

Image Credit: criminalminds.wikia.com

#15 ஆர்தர் ஷாக்ராஸ்

#15 ஆர்தர் ஷாக்ராஸ்

தனது முதல் கொலையை இவன் 1972ல் செய்தான். பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இவன் பத்து வயது சிறுவனை கொலை செய்திருந்தான். பிறகு ஒரு எட்டு வயது சிறியை கற்பழித்து கொலை செய்திருந்தான். பிறகு 14 வருடங்கள் சிறையில் தண்டனை பெற்று திரும்பி, 12 பெண் பாலியல் தொழிலாளிகளை மிக கொடூரமாக கொலை செய்தான். இவனுக்கு நீதிமந்திரன் 250 ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்தது. கடந்த 2008ம் ஆண்டு சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தான்.

Image Credit: murderpedia.com

#14 பீட்டர் சுட்க்ளிஃப்

#14 பீட்டர் சுட்க்ளிஃப்

பீட்டர் வில்லியம் சுட்க்ளிஃப் எனும் இவனை தி யார்க்ஷைர் ரிப்பர் என்றும் அழைத்து வந்தனர். 1981ல் 13 பெண்களை கொலை செய்திருந்தான். மேலும், எழு பெண்களை கொலை செய்த முயற்சித்தான். இவன் பாலியல் தொழில் செய்யும் பெண்களை டார்கேட் செய்து கொலை செய்து வந்தான். கைதான போது தான் செய்த கொலைகளுக்கு நான் கவலைப்படவில்லை என கூறினான். இவனுக்கு பரோல் இல்லாத வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Image Credit: delo.si

#13 ரிச்சார்ட் ராமிரெஸ்

#13 ரிச்சார்ட் ராமிரெஸ்

அமெரிக்காவை சேர்ந்த சீரியல் கில்லர். சாத்தானை வழிப்பட்டு வந்தவன். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் 1948-1985வரை இவன் நைட் ஸ்டாக்கர் என்ற பெயரில் வீடுகளை உடைத்து உள்ளே புகுந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து வந்தால். இவன் சிலரை கற்பழித்தும் உள்ளான். ஒன்பது வயது முதல் அறுபது வயது வரையிலான பெண்களை இவன் கொலை செய்திருந்தான். இவனுக்கு 15 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Image Credit: wikipedia

#12 ஜெஃப்ரி டஹ்மர்

#12 ஜெஃப்ரி டஹ்மர்

அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரி டஹ்மர் கொலை செய்வது மட்டுமின்றி, செக்ஸ் குற்றச்சாட்டுகளிலும் சிக்கியவன். 1978-1991 இடைப்பட்ட காலத்தில் 17 சிறுவர்களை கற்பழித்து கொலை செய்தவன் . 1992ல் 15 கொலை குற்றங்களோடு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவனுக்கு 15 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Image Credit: wikipedia

#11 டென்னிஸ் நில்சன்

#11 டென்னிஸ் நில்சன்

லண்டனை சேர்ந்த 15 ஓரினச் சேர்க்கையாளர் ஆண்களை கொலை செய்தவன் டென்னிஸ் நில்சன். இவன் இந்த குற்றங்களை 1978-1983வரை செய்து வந்தான். இவன் கொலை செய்யும் நபர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் போட்டு ஃப்ளஷ் செய்து வந்தான். இவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Image Credit: glasgowgangland.com

#10 டெட் பண்டி

#10 டெட் பண்டி

இருபதாம் நூற்றாண்டில் மிகவும் அதிகமாக தேடப்பட்ட சீரியல் கில்லர் டெட் பண்டி. இந்த அமெரிக்க சீரியல் கில்லர் கடத்தி, கற்பழித்து கொலை செய்து வந்தான். 1970-களில் பல இளம்பெண்களை இப்படி இவன் கொலை செய்திருந்தான். இவன் கொலை செய்த பெண்களின் தலைகளை மெடல் போல வெட்டில் வைத்திருந்தான். இரண்டு முறை கைதாகி தப்பித்த இவன், மூன்றாவது முறை மரண தண்டனை பெற்றான். எலக்ட்ரிக் நாற்காலி மூலம் இவனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

Image Credit: wikipedia

#09 சார்லஸ் என் மற்றும் லியோனார்டு ஏரி

#09 சார்லஸ் என் மற்றும் லியோனார்டு ஏரி

இவர்கள் இருவரும் 11 - 25 வயதுக்குட்பட்ட நபர்களை கடத்தி, கற்பழித்து சித்திரவதை செய்து கொலை செய்து வந்தனர். இவர்கள் கலிபோர்னியாவை சேர்ந்தவர்கள்.1998,1999ல்இவர்களை போலீஸ் கைது செய்தது. இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது.

Image Credit: wikipedia

#08 ஜான் வெய்ன் கேசி

#08 ஜான் வெய்ன் கேசி

33 பதின் வயது சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கு இவன் மீது இருந்தது. 1972-78 வரை இவன் சிக்காகோவில் பலரை கொலை செய்திருந்தான். தனது வீட்டில் மட்டுமே 26 பேரை கொலை செய்து புதைத்து வைத்திருந்தான். இவன் மொத்தம் 33 பேரை கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. 14வருட சிறைவாசத்திற்கு பிறகு விஷ ஊசி போட்டு இவனை 1994ல் கொன்றனர்.

Image Credit: murderpedia.com

#07 ஆண்ட்ரி சிகிட்டிலோ

#07 ஆண்ட்ரி சிகிட்டிலோ

சிகிட்டிலோ சோவியத்தை சேர்ந்த சீரியல் கில்லர். பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி 52 ரஷ்ய சிறுவர்கள் மற்றும் பெண்களை கொலை செய்திருந்தான். இவனை கைது செய்த போது இவன் 56 கொலைகள் செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1992ல் தண்டனை பெற்ற இவனை 1994 பிப்ரவரியில் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

Image Credit: persona.rin.ru

#06 டாமி லின் செல்ஸ்

#06 டாமி லின் செல்ஸ்

ஏறத்தாழ 70 பேரை கொன்றதாக டாமி லின் செல்ஸ் மீது வழக்கு பதிவானது. டெக்சாஸ் பகுதியி சேர்ந்து மிக கொடூரமான கொலையாளியாக இவன் திகழ்ந்தான். 1985-99வரை இவன் பலரை கொலை செய்திருந்தான். ஒருமுறை இவனிடம் இருந்து தப்பித்த சிறுமி ஒருவரின் வாக்குமூலம் வைத்து போலீஸ் இவனை கைது செய்தது. இவனுக்கு டெக்சாஸ் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

Image Credit: inkblotsandicebergs.wordpress.com

#05 கேரி ரிட்ஜ்வே

#05 கேரி ரிட்ஜ்வே

அமெரிக்காவை சேர்ந்த கொடூரமான சீரியல் கில்லர். 2001ம் ஆண்டு நான்கு பேரை கொன்றதாக அறியப்பட்டது. வாஷிங்டன்-ல் மட்டுமே இவன் 70 பெண்களை கொலை செய்திருந்தது அறியப்பட்டது. 1980-90 இவன் இந்த தொடர் கொலைகளில் ஈடுபட்டு வந்துள்ளான். கிரீன் ரிவர் எனும் நதியில் இவன் பலரை கொலை செய்து புதைத்துள்ளான். அதனாலேயே இவனை தி கிரீன் ரிவர் கில்லர் என அழைத்தனர். இவனுக்கு பரோல் இல்லாத வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

Image Credit: mynorthwest.com

#04 பெட்ரோ ரோட்ரிக்ஸ் ஃபிலிஹோ

#04 பெட்ரோ ரோட்ரிக்ஸ் ஃபிலிஹோ

பிரேசிலை சேர்ந்த சீரியல் கில்லர். இவனை 1973ல் கைது செய்தனர். இவனுக்கு தண்டனை 2003ல் வழங்கப்பட்டது. வாழ்நாளில் இவன் மொத்தம் 71 பேரை கொலை செய்திருந்தான். இவனுக்கு 128 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 14 வயதில் கொலை செய்ய துவங்கிய பெட்ரோ , தனது சொந்த தந்தையையும் கொன்றவன். இவன் தன்னுடன் சிறையில் இருந்த 47 பேரை கொலை செய்துள்ளான். பிறகு இவனுக்கு நானூறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2007ல் ரிலீஸ் செய்யப்பட்ட இவனை, மீண்டும் 2011 ஆண்டு அரஸ்ட் செய்தனர்.

Image Credit: wikipedia

#03 டேனியல் காம்கோபோ பார்போசா

#03 டேனியல் காம்கோபோ பார்போசா

பார்போசா 150க்கும் மேற்பட்ட இளம் பெண்களை கற்பழித்ததாக கருதபடுகிறது. இவன் கொலம்பியாவை சேர்ந்தவன். இவன், தான் 72 பெண்களை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டான். 1989ம் ஆண்டு இவனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இது தான் எக்குவடோர்-ல் வழங்கப்படும் அதிகப்பட்ச தண்டனை ஆகும்.

Image Credit: wikipedia

#02 டாக்டர் ஹரோல்ட் ஷிப்டன்

#02 டாக்டர் ஹரோல்ட் ஷிப்டன்

ஆங்கில மருத்துவர் டாக்டர் ஹரோல்ட் ஷிப்டன் மிகவும் செல்வந்தரான சீரியல் கில்லர். ஏறத்தாழ 250 பேரை இவன் கொலை செய்துள்ளான். மிகவும் நம்பகமான மருத்துவராக இருந்த இவன் தனது உடன் பணிபுரிந்தவர் முதல் பலரை கொலை செய்துள்ளான். இதன் மூலம் பணமீட்டி வந்துள்ளான் இன்ஷா ஷிப்மேன். இவனுக்கு 15 ஆயுள்தண்டனைகள் வழங்கப்பட்டன. 2005ம் தான் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டான் இவன்.

Image Credit: wikipedia

#01 பெட்ரோ அலோன்சோ லோபஸ்

#01 பெட்ரோ அலோன்சோ லோபஸ்

கொலம்பியாவை சேர்ந்த சீரியல் கில்லர். தென்னாப்பிரிக்காவை சுற்றிலும் இவன் 300க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து கொலை செய்துள்ளான். இதில் பலரது உடல்களை யாருமில்லாத கட்டிடங்களில் புதைத்து வைத்திருந்தான். இவன் கொலை செய்ததில் 53 பேரின் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இவனுக்கு 2002ம் மரண தண்டனை வழங்கப்பட்டது.

Image Credit: murderpedia.org

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 25: The Ruthless Serial Killers That World Cant Forget!

Top 25: The Ruthless Serial Killers That World Cant Forget!
Desktop Bottom Promotion