தங்கள் இறப்பு செய்தியை தாங்களே படித்த பிரபலங்கள் - டாப் 20!

Subscribe to Boldsky

பிரபலமாக வாழ்வது என்பது மிக சுலபமான காரியம் அல்ல. அவர்கள் பிரபலம் ஆவதற்கு முன்னர் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்கள். பிரபலங்கள் ஆன பிறகு பிற வேறு வகையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் எண்ணிலடங்காதவை.

இதில் நடிகை, நடிகர் என வெவ்வேறு வகையில் பல சிரமங்களை எதிர்கொள்வார்கள். நடிகை என்றால் மார்ஃபிங், நிர்வாண படங்கள் எடிட் செய்வது போன்றவை, நடிகர்கள் என்றால் கள்ள உறவு போன்றவை பற்றி கொளுத்து போடுவது என பல செயல்களில் டார்கெட் செய்வார்கள்.

ஆனால், பாலின வேறுபாடு இல்லாமல் கொளுத்தி போடும் சம்பவம் தான் பிரேக்கிங் நியூஸ் - அவர் கார் விபத்தில் இறந்துவிட்டார், திடீர் மாரடைப்பு போன்ற செய்திகளை பரப்புவது. இது அவர்களை மட்டுமின்றி, குடும்பத்தாரையும் பாதிப்படைய செய்யும்.

அந்த வகையில், தங்கள் இறப்பு செய்திகளை தாங்களே நேரடியாக கண்ட உலக பிரபலங்களை பற்றிய தொகுப்பு தான் இது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#20 டாம் க்ரூஸ்

#20 டாம் க்ரூஸ்

கடந்த மே, 2010ல் இன்டர்நெட்டில் டாம் க்ரூஸ் நியூசிலாந்தில் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியது. இந்த புரளி சில செய்திகளில் தலைப்பு செய்தியாக மாறியது. பிறகு டாம் க்ரூஸ் செய்திகளுக்கு நேரில் தோன்றி தான் இன்னும் உயிருடன் இருப்பதை கூறி தெளிவுப்படுத்தினார்.

#19 ஐஸ்வர்யா ராய் பச்சன்!

#19 ஐஸ்வர்யா ராய் பச்சன்!

ஒருமுறை ஐஸ்வர்யா ராய் பச்சன் அளவிற்கு அதிகமாக மயக்க மருந்து உட்கொண்ட காரணத்தால் இறந்துவிட்டார் என புரளிகள் கிளம்பின. ஆனால், இந்த புரளி வெகு விரைவில் பொய் என தெரிந்தது. பிறகு, மனிஷ் மல்ஹோத்ராவின் பிறந்தநாள் விழாவில் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் தோன்றி புரளியை பொய் என தெளிவுப்படுத்தினார்.

#18 யோ-யோ ஹனி சிங்!

#18 யோ-யோ ஹனி சிங்!

இந்தியாவின் ராப் பாடகர் மருத்துவமனையில் இறந்து கிடப்பது போல ஒரு படம் இன்டர்நெட்டில் வைரலானது. அந்த படம் அவரது பாடல் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. பிறகு புரளிகள் பெரிதாவதை கண்டு, ஹனி சிங் தனது ட்விட்டர் பதிவில் தான் உயிருடன் தான் இருக்கிறேன் என புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

#17 கத்ரீனா கைப்!

#17 கத்ரீனா கைப்!

கடந்த நவம்பர் 2013ல் முகநூலில் கத்ரீனா கைப் இறந்துவிட்டார் என ஒரு புரளி பரவியது. இந்த புரளி காட்டுத்தீ போல பரவுவதை கண்டு, அவரது படப்பிடிப்பு தளத்தில் இருந்து கத்ரீனா உயிரோடு தான் இருக்கிறார் என பதிவு செய்து உண்மையை என நிரூபித்தனர்.

#16 அமிதாப் பச்சன்!

#16 அமிதாப் பச்சன்!

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் ஒரு கார் விபத்தில் அமிதாப் பச்சன் இறந்துவிட்டார் என படங்கள் வெளியாகின. மிக விரைவில் இந்த புரளி இறந்து போய், அமிதாப்பச்சன் உயிருடன் இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டது.

#15 ஆயுஷ்மன் குர்னா!

#15 ஆயுஷ்மன் குர்னா!

விக்கி டோனர் படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் ஆயுஷ்மன் குர்னா கடந்த 2013 ஆண்டு ஸ்னோ-போர்டிங் விபத்தில் இறந்துவிட்டார் என செய்திகள் பரவின. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அது வெறும் புரளி என புரியவைத்தார்.

#14 திலிப் குமார்!

#14 திலிப் குமார்!

இந்திய சினிமாவின் ஜாம்பவான் நடிகர் திலிப் இறந்துவிட்டதாக 2014 மார்ச் மாதம் சில செய்திகள் வெளியாகின. அவர் மும்பையில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் இறந்தார் என கூறப்பட்டது. இது போன்ற புரளிகள் இவருக்கு புதியதல்ல, ஏற்கனவே, பல முறை இவர் இறந்ததாக புரளிகள் வெளியாகின.

#13 லதா மங்கேஷ்கர்!

#13 லதா மங்கேஷ்கர்!

பாடகி லதா மங்கேஷ்கரும் இந்த புரளியில் சிக்காமல் இல்லை. இதை பிறகு அவரே தனது ட்விட்டரில் புரளிகளை நம்ப வேண்டாம் என்றும், தான் ஆரோக்கியமாக இருப்பதை கூறினார்.

#12 நடாலி போர்ட்மேன்!

#12 நடாலி போர்ட்மேன்!

தார் (Thor) படத்தில் நடித்த நடாலி போர்ட்மேன் நியூசிலாந்தில் இறந்ததாக வந்த புரளி, கூகுல் ரியல் டைமில் முற்றிலும் பரவியது. பிறகு அவர் அங்கிருந்து தான் உயிருடன் இருப்பதை தனது பதிவு மூலம் தெளிவுப்படுத்தினார்.

#11 செர் (Cher)

#11 செர் (Cher)

RIP Cher என்ற முகநூல் பக்கத்தில் துவக்கி, அவர் இறந்துவிட்டதாகவே நம்ப வைத்தார்கள், அதை பத்து இலட்சம் பேர் லைக் செய்திருந்தனர். மிக வைரலான இந்த புரளியை செர் இன்டர்நெட் மூலம் தான் உயிருடன் இருப்பதை தெளிவுப்படுத்தினார்.

#10 பிரிட்னி ஸ்பியர்ஸ்!

#10 பிரிட்னி ஸ்பியர்ஸ்!

கடந்த 2016ல் சோனி மியூசிக் ட்விட்டர் அக்கவுண்டை ஹேக் செய்து அதில் பிரிட்னி ஸ்பியர்ஸ் கார் விபத்தில் இறந்துவிட்டார் #RIPBritney என்ற பதிவிட்டு புரளியை கிளப்பினர். பிறகு தான் அவர்களுக்கு தங்கள் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டதே தெரியவந்தது. பிறகு இது வெறும் புரளி என்பதை புரிய வைத்தனர்.

#09 ஜாடன் ஸ்மித்!

#09 ஜாடன் ஸ்மித்!

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் மகன் ஜாடன் ஸ்மித் இறந்துவிட்டார் என ஒரு வீடியோ பதிவு முகநூலில் மிக வேகமாக பரவியது. அதில் தனது மரணத்திற்கு எனது தந்தை தான் காரணம் என்ற தகவலும் அடங்கியிருந்தது. இந்த புரளி பரவும் அதே நேரத்தில் ஒரு ரெட் கார்பட் நிகழ்வில் அப்பா - மகன் கலந்துக் கொண்டிருந்தனர். பிறகு தான் அது வெறும் புரளி என்பது அறியவந்தது.

#08 எமினம்!

#08 எமினம்!

உலகின் புரபலமான ராப் பாடகர் எமினம். இவர் கடந்த 2007ல் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டார் என என்றும், அவரை போலே இருக்கும் ஒரு க்ளோன் நபர் தான் இப்போது இசை உலகில் உலாவி வருகிறார் என்றும் ஒரு காணொளிப்பதிவு வெளியானது.

#07 ஜஸ்டின் பைபர்!

#07 ஜஸ்டின் பைபர்!

பல முறை ட்விட்டரில் இறந்துவிட்டதாக புரளிகள் கிளம்பியது ஜஸ்டின் பைபருக்கு தான்.இதை ஒரு ரெகார்ட் என்று கூட கூறலாம். ஏனெனில், அந்த அளவிற்கு இவர் இறந்ததாக போலி தகவல்கள் பல முறை வெளியாகியுள்ளன.

#06 மோர்கன் ஃப்ரீமேன்!

#06 மோர்கன் ஃப்ரீமேன்!

கடந்த 2010ம் ஆண்டு பிரபல நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் இறந்துவிட்டார் என ட்விட்டரில் செய்திகள் வெளியாகின. பிறகு தனது கலிபோர்னியா வீட்டில் இருந்த தான் உயிருடன் தான் இருக்கிறேன் என இவர் செய்தி வெளியிட்டார்.

நம்ம ஊரில் ஒருமுறை நெல்சன் மண்டேலா இறப்பை அனுசரிக்க இவரது புகைப்படம் கொண்டு பேனர் ஒட்டியதை எக்காலமும் மறக்க முடியாது.

#05 ஜாக்கி சான்!

#05 ஜாக்கி சான்!

ஜஸ்டின் பைபரை போலவே அதிக முறை தனது இறப்பு செய்தியை தானே கண்டு அசந்தவர் ஜாக்கிசான். இவர் ஒருமுறை ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் இறந்து போனாதாக செய்திகள் வெளியாகின, ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்று வரையும் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரே நடிகர் ஜாக்கி தான்.

#04 ஜெஃப் கோல்ட் ப்ளூம்!

#04 ஜெஃப் கோல்ட் ப்ளூம்!

ஜுராசிக் பார்க் மூலம் நம்மில் பலருக்கு பரிச்சியமான நடிகர் ஜெஃப் கோல்ட் ப்ளூம் நியூசிலாந்தில் படபிடிப்பின் போது இறந்துவிட்டார் என செய்திகள் வெளியாகின. வெளியான சில நிமிடங்களில் அது பொய் என்பதை தெளிவுப்படுத்தினார் ஜெஃப் கோல்ட் ப்ளூம்.

#03 ரஸ்ஸல் குரோவ்!

#03 ரஸ்ஸல் குரோவ்!

கிளாடியேட்டர் நடிகர் ரஸ்ஸல் குரோவ்ஆஸ்திரிய மலை ஏறும் போது விபத்தில் இறந்துவிட்டார் என புரளிகள் கிளம்பின. பிறகு இவரது விக்கிபீடியா பக்கத்திலும் இவர் இறந்துவிட்டார் என செய்திகள் மாற்றப்பட்டன. பின்னால் தான் இவர் மொத்தமும் புரளி என்பது அறியவந்தது.

#02 எம்மா வாட்சன்!

#02 எம்மா வாட்சன்!

ஹாரி பாட்டர் நடிகை எம்மா வாட்சன் இந்தாண்டு துவக்கத்தில் இறந்துவிட்டார் என்ற பதிவு முகநூல் போன்ற சமூக தளங்களில் பரவலாக பரவின. RIP Emma Watson என பக்கங்கள் எல்லாம் துவக்கினர்.

#01 பியோனஸ்

#01 பியோனஸ்

அமெரிக்க பாடலாசிரியர் மற்றும் பாடகி பியோனஸ் இறந்ததாக புரளிகள் பரவின. இவருக்கும் முகநூல் பக்கங்கள் எல்லாம் துவக்கினர். இவர் ஒரு விபத்தில் சிக்கி, உடல் பிளந்து இறந்தார் என மிக கொடூரமாக செய்திகள் பரப்பினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Top 20: Celebrities Who Read Their Death News in Live and as Alive!

    Top 20: Celebrities Who Read Their Death News in Live and as Alive!
    Story first published: Tuesday, October 24, 2017, 15:30 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more