மகளின் காதலை பிரிக்க, காதலனை படுக்கைக்கு அழைத்த தாய் - My Story #109

Posted By: John
Subscribe to Boldsky

அம்மா, அப்பா, நான் மற்றும் இரட்டையர் சகோதரிகள் என எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பேர். அப்பாவிற்கு அரசாங்க உத்தியோகம் பக்கத்து ஊரில் வேலை. தினமும் சென்று வர முடியாது என்பதால் வார நாட்களில் அங்கேயே அரசு ஒதுக்கியிருந்த குடியிருப்பிலும், வார இறுதியில் வீட்டுக்கும் வந்து செல்வார். எனக்கும் என் இரட்டையர் தங்கைகளுக்கும் வயது வித்தியாசம் அதிகம். நான் கல்லூரி படிக்கும் போது அவர்களுக்கு பத்து வயது.

அப்பா அதிகம் வீட்டில் இல்லை என்றாலும், தினமும் எங்களுடன் காலை பள்ளிக்கு செல்லும் முன்னும், இரவு உறங்கும் முன்னும் பேசிவிடுவார். எங்களுக்கு அப்பாவை பார்த்தல் தான் பயம் என்றில்லை. அவரது குரலை கேட்டாலே பயம் தான். அதற்காக அவர் ஸ்ட்ரிக்ட்டான அப்பா என்று கூறிவிட முடியாது. இதுநாள் வரை அவர் எங்களை திட்டியதே இல்லை. முறைத்துப் பார்த்தாலே நாங்கள் அழுதுவிடுவோம்.

கல்லூரியில் சேரும் வரை எனக்கே பெரிதாக வெளியுலகம் தெரியாது. வெளியுலகம் எப்படி இருக்கும்? மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள்? எந்தெந்த சூழல்களை எப்படி கையாள வேண்டும் என அத்தனையும் எனக்கு கற்ப்பித்தது கல்லூரியும், காதலும் தான்.

ஆனால், அந்த காதலே என் வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும் என நான் நினைக்கவில்லை. என் அம்மா காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என தெரியும். ஆனால், இப்படி வில்லியாக மாறுவார் என கனவிலும் நினைத்திடவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்ணாம்பூச்சி!

கண்ணாம்பூச்சி!

கல்லூரி செல்லும் முன்னரே அவனை எனக்கு தெரியும். நானும் அவனும் சிறு வயது முதலே ஒரே தெருவில் குடியிருக்கிறோம். கண்ணாம்பூச்சி விளையாட்டில் துவங்கிய நட்பு எங்களுடையது.

அவன் எங்கள் வீட்டுக்கு வருவான், நான் அவன் வீட்டுக்கு சென்றுள்ளேன். பண்டிகை காலங்களில் பலகாரம் பரிமாறிக் கொள்வதில் இருந்து, விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரவர் அம்மாக்கள் பாகுபாடு பார்க்காமல் உணவு ஊட்டிவிட்டது வரை பல சம்பவங்கள் எங்கள் வாழ்வில் நடந்துள்ளன.

காதல்!

காதல்!

எங்களுக்குள் எப்படி, எப்போதிருந்த காதல் இருக்கிறது என எங்களுக்கே தெரியாது. கல்லூரிப் பயின்றுக் கொண்டிருந்த போது எனக்கென சில லவ் லெட்டர், பிரபோசல்கள் வந்தன. அதை அனைவரிடம் பகிர்ந்துக் கொண்டது போல தான் அவனிடமும் பகிர்ந்துக் கொண்டேன். ஆனால், அவனால் அதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. கோபப்பட்டான். யாரவன், என்னிடம் காட்டு ஒருவழி செய்துவிடுகிறேன் என வீராப்புடன் கிளம்பினான்.

நள்ளிரவில்

நள்ளிரவில்

அதன் பின் சில வாரங்களில் அவனாக கூறினான்... நான் உன்னிடம் பிரபோஸ் செய்யவில்லை., லவ் லெட்டர் தரவில்லை. ஆனால், நான் உன்னை காதலிக்கிறேன் என்பதை நீ அறிவாய் என நினைத்தேன். நம்முள் இருக்கும் உறவு காதல் என்றே கருதினேன் என சோகமாக கூறி சென்றான். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது போலவே, எங்கள் காதலும் ஒரு நள்ளிரவில் தான் பிறந்தது.

சாதாரண காதல்..?

சாதாரண காதல்..?

ஊர் சுற்றுவது, சினிமா போவது, பயந்து, பயந்து பார்த்து பேசிக் கொள்வது என எதுவும் எங்கள் காதலில் இல்லை. சிறு வயதில் இருந்தே நண்பர்கள் என்பதால், நாங்கள் நினைக்கும் நேரத்தில் அவரவர் வீட்டுக்கு சென்றே பார்த்துக் கொள்ளலாம்.

எங்களுடன் சில வாண்டுகளை அழைத்துக் கொண்டு சினிமாவிற்கு போகலாம் என ஒரு ஜாலியான காதல் அது. இப்படி ஒரு வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்குமா என தெரியவில்லை. நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கருதினோம்.

படிப்பு!

படிப்பு!

அவன் என்னைவிட இரண்டு வயது மூத்தவன். நான் முதலாம் ஆண்டு கல்லூரி படிக்கும் போது அவன் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தான். படித்த பிறகு அவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவன் குடும்பத்தின் சொந்த தொழிலை செய்யவே திட்டமிட்டிருந்தான்.

எங்கள் இருவருக்கும் எதிர்காலம் மற்றும் படிப்பின் மீது அதிக அக்கறை இருந்தது. நான் இரண்டாம், மூன்றாம் ஆண்டு கல்லூரி பயிலும் போது அவன் தனது தொழிலில் அதிக கவனம் செலுத்தி வந்தான். நான் நன்கு படித்து ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டிருந்தேன்.

சென்னையில் வேலை!

சென்னையில் வேலை!

அவனது தொழில் டிரான்ஸ்போர்ட். எனக்கு கிடைத்த வேலை ஐ.டி-யில். இரண்டுக்கும் சம்மந்தம் இல்லை. என்னை சென்னை போக வேண்டாம் அவன் வற்புறுத்தவும் இல்லை.

ஓரிரு ஆண்டுகள் நல்ல அனுபவம் பெற்று கோவைக்கே திரும்பி வந்துவிடு. இங்கே நல்ல ஐ.டி வேலை பார்த்துக் கொண்டு நாம் இங்கேயே செட்டிலாகிவிடலாம் என அவனே அறிவுரை எல்லாம் கூறினான். அது தான் சரியாகவும் பட்டது

சீரான பயணம்!

சீரான பயணம்!

சென்னை சென்ற புதிதில் வார நாட்களில் சென்னையிலும், வார இறுதிகளில் கோவைக்கும் சென்றுவிடுவேன். ஆனால், ஆறேழு மாதங்கள் கழித்து மாதம் ஒருமுறை அல்லது இருமுறை செல்லும் படியான வாய்ப்புகள் தான் அமைந்தன.

அவ்வப்போது பிராஜக்ட் வர்க், டார்கெட் டெட்லைன் என வார இறுதியிலும் வேலை இழுத்தது. ஆகையால் ஊருக்கு வருவதென்றால் முன்னரே நான் அடுத்து இந்த நாட்களில் தான் வருவேன் என்று கூறிவிடுவேன்.

இரண்டு ஆண்டுகள் கழிந்தது...

இரண்டு ஆண்டுகள் கழிந்தது...

நான் சென்னை சென்று இரண்டு ஆண்டுகள் இருக்கும். அப்பா இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரிட்டையர்ட் ஆகிவிடுவார்.இன்னும் இரண்டு ஆண்டுகள் சென்னையில் வேலை பார்த்தல் எப்படியும் டி.எல் பிரமோஷன் கிடைக்கும் என்ற வாய்ப்பு இருந்தது. ஆகையால், கோவைக்கு பணியிட மாற்றம் ஆகும் போது ஒரு நல்ல நிலையில் இருக்கலாம் என கருதினேன்.

ஒப்புதல்!

ஒப்புதல்!

அவனிடம் இந்த யோசனை குறித்துக் கூறினேன். ஒரு சில நிமிடங்கள் யோசித்தான். சரி பரவாயில்லை. இன்னும், என் தங்கையின் திருமணம் முடிவாகவில்லை. அவளுக்கு திருமணமாகி ஓராண்டு காலம் கழித்து தான் என் திருமண பேச்சு எடுப்பார்கள். பார்த்துக் கொள்ளலாம். நீ பத்திரமாக இரு என அவனும் ஒப்புதல் கூறினான்.

அவனை எண்ணி நான் மிகவும் பெருமிதம் கொண்டேன். வேறு யாராக இருந்தாலும், இதற்கெல்லாம் ஒப்புக் கொள்வார்களா? என தோழிகளிடம் பெருமையாக கூறியிருந்தேன்.

தங்கைகள் அழைப்பு!

தங்கைகள் அழைப்பு!

ஒரு நாள் திடீரென என் தங்கைகள் இரவு 11 மணிக்கு அழைத்தனர். இந்த நேரத்தில் இவர்கள் ஏன் அழைக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. அப்போது அவர்கள் கூறிய தகவல் அச்சத்தை அளித்தது. யாரோ ஒரு நபர் அடிக்கடி இரவு வீட்டுக்குள் வந்து செல்கிறார்கள். எங்களுக்கு என்ன? எது? என்று தெரியவில்லை அக்கா என அழுதபடி கூறினார்கள்.

அடுத்த முறை வரும் போது அம்மாவிடம் கூறாமல், நீ முன்னரே வா... உன்னிடம் எப்படி கூறுவது என தெரியவில்லை என புதிராக பேசினார்கள். சரி என கூறி வைத்துவிட்டேன்.

அந்த வாரமே!

அந்த வாரமே!

என் அம்மாவிடம் அடுத்த மாதம் தான் வருவதாக கூறி இருந்தேன். ஆனால், தங்கைகள் அழைத்த அந்த வார இறுதியிலேயே கிளம்பினேன். நான் வருவது சர்ப்ரைஸாக இருக்கட்டும் என காதலனிடமும் கூறவில்லை.

மதியமே கிளம்பி, இரவு 10 மணியளவில் என் வீட்டை சென்றடைந்தேன். அனைவரும் உறங்கியிருந்தார்கள். தங்கைகள் தான் கதவு திறந்துவிட்டார்கள். நான் வந்தது அம்மாவுக்கு தெரியாது.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

நான் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அம்மா உறங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் எங்கள் அறைக்கு சென்று படுத்தோம். அப்போது தான் என் தங்கைகள் விவரமாக கூறினார்கள். அடிக்கடி இரவு யாரோ ஒரு நபர் அம்மாவின் அறைக்கு வந்து செல்கிறார். அவர் யாரென தெரியவில்லை. எதற்கு வருகிறார் என்றும் தெரியவில்லை என கூறினார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இன்றும் கூட அந்த நபர் வர வாய்ப்புகள் இருக்கிறது என கூறினார்கள். எப்படி கூறுகிறார்கள் என கேட்டேன். இல்லை, எப்போதெல்லாம் அந்நபர் இரவு வருகிறாரோ, அப்போதெல்லாம் நாங்கள் விரைவாகவே படுத்து உறங்க வேண்டும் என அம்மா கூறுவாள் என தங்கைகள் கூறினர்.

பேரதிர்ச்சி!

பேரதிர்ச்சி!

தங்கைகள் கூறிய விஷயம் அதிர்ச்சி அளித்தது என்றால். அன்று நள்ளிரவு நான் கண்ட காட்சி பேரதிர்ச்சியாக இருந்தது. நள்ளிரவு என் அம்மாவின் அறைக்கு வந்து சென்றவன் எனது காதலன். என் வாழ்வில் இடி விழுந்தது போல இருந்தது. நள்ளிரவில் பிறந்த காதல், அதே நள்ளிரவில் இறந்து போனது.

மறு நாள் காலை அவனுக்கு கால் செய்து உன்னை பார்க்க வேண்டும் என்றேன். என்னால் சென்னை உடனே கிளம்பி வர முடியாது என்றான். நான் கோவையில் தான் இருக்கிறேன் உடனே வா என்றேன். காலையிலயா வந்த? என கேள்விக் கேட்டான். இல்லை, நேற்று இரவே நான் வீட்டுக்கு வந்துவிட்டேன் என்றேன். சில நொடிகள் அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

பிறகு, சரி வா பார்க்கலாம் என்றான்.

அம்மா தான்...

அம்மா தான்...

அவன் வந்ததுமே, நான் கண்ட மொத்த நிகழ்வுகளையும் கூறினேன். என் கண்களில் மட்டுமே கண்ணீர் வழிந்தது. அவன் கல் போல நின்றுக் கொண்டிருந்தான். எந்தவொரு குற்றவுணர்ச்சியும் அவனிடம் இல்லை. மேலும், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, எல்லாவற்றுக்கும் உன் அம்மா தான் காரணம். அவர் தான் என்னை அழைத்தார் என திடுக்கிடும்படி கூறினான்.

திருமணம்...

திருமணம்...

சில மாதங்களுக்கு ஒரு நாள், அம்மா என் காதலனை அழைத்து இது தான் என் மகளுக்கு (எனக்கு) பார்த்திருக்கும் வரன்கள். உனக்கு யாரை பிடித்துள்ளது என கேட்டுள்ளார். என் காதலன் அதிர்ச்சி அடைந்து... அப்போதே என் அம்மாவிடம்.. நானும் அவனும் காதலிக்கிறோம் என்பதை கூறியுள்ளான்.

அம்மா முடியாது என கூறியிருக்கிறார். எனக்கு உங்கள் காதல் கதை தெரியும். அதனால் தான் உன்னிடமே வந்த வரன்களின் படங்களை காண்பிக்கிறேன் என கூறியிருக்கிறார்.

சண்டை!

சண்டை!

என்னை மீறி யாராலும் உங்கள் மகளை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என அம்மாவிடம் கோபமாக கூறியுள்ளார். அம்மா அதற்கு, அதே போல தான் என்னை மீறி யாராலும் உன்னை அடைய முடியாது. அது என் மகளாக இருந்தாலும் சரி என குதர்க்கமாக பதில் அளித்துள்ளார்.

அப்போது தான் என் காதலனிடம்... தான் விரும்பும் ஆணை, என் மகளும் விரும்புவதை என்னால் ஏற்க முடியாது. மேலும், உன்னை மாப்பிளையாக என்னால் காண முடியாது என கூறியிருக்கிறார்.

உனக்கு எங்க போச்சு புத்தி...

உனக்கு எங்க போச்சு புத்தி...

அவங்க சொன்ன உனக்கு எங்கள் போச்சு புத்தின்னு கேட்டேன். அதற்கு அவனிடம் சாக்குப் போக்கு காரணங்கள் தான் இருந்தனவே தவிர, பதில் இல்லை. ஆண் புத்தி தடுமாறும் என அறிவேன். ஆனால், இந்த அளவிற்கு சல்லாபம் கொண்டிருக்கும் என அறிந்திருக்கவில்லை.

இவர்களது இந்த கள்ள உறவு, எங்கள் காதலை மட்டும் அழிக்கவில்லை. என் குடும்பத்தையும் தான்.

சொன்னா, சொல்லிக்கோ...

சொன்னா, சொல்லிக்கோ...

என் காதலனிடம் பேசி எந்த பயனும் இல்லை. இனி அவன் என் காதலனும் இல்லை. அடுத்ததாக நான் பேச வேண்டியது என் அம்மாவிடம்.

காலையில் நான் வீட்டில் இருப்பதை கண்டு அதிர்ந்தவர். மதியம் அவரிடம் பேச சென்ற போது மிகவும் கூலாக இருந்தார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்பதை கேட்டேன். ஆம்! அவனை எனக்கும் பிடித்திருந்தது என்றாள்.

இது அப்பாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும்? என கேட்டேன். உன் காதல் பிரிந்தது போல, நம் குடும்பமும் பிரியும். அதற்கு நீயே வித்திட போகிறாயா? என் மறுகேள்வி கேட்டார்.

அப்பா பாவம்!

அப்பா பாவம்!

தனது வாழ்நாள் முழுக்க குடும்பத்திற்காக உழைத்துக் கொட்டியவர் அப்பா. இதை அவரிடம் கூறி அப்பாவின் மரணத்திற்கு நானே காரணமாக இருக்க விரும்பவில்லை. இதற்கான தீர்வென எனக்கு எதுவும் எனக்கு புலப்படவில்லை.

இங்கே இருப்பதால் தான் இந்த நிலை? என்ற கேள்வி எழுந்தது. எப்படியும் எனது திருமண வேலைகள் துவக்கினால் இந்த வீடு சௌகரியமாக இருக்காது. வேறு வீடு வாங்க வேண்டும் என அப்பா கூறிக் கொண்டிருந்தார்.

உடனடியாக, எனக்கு லோன் கிடைக்கும், வேறு வீடு பார்க்கலாம்... இந்த வீட்டை விற்றுவிட்டு வேறு நல்ல இடமாக பார்த்து குடிப்பெயர்ந்து சென்று விடலாம் என்றேன். அப்பாவும் ஒகே என்றார்!

மாற்றம்!

மாற்றம்!

பிறந்ததில் இருந்து 24 ஆண்டுகள் இருந்த இடம். இடம் மாறியது, வாழ்க்கை மாறியது. நாங்கள் புதிய வீட்டிற்கு வந்து இரண்டாண்டுகள் ஆகிறது. அப்பாவும் ரிட்டையர்ட் ஆகி இங்கேயே ஊருக்கு வந்துவிட்டார்.

வீடு கட்டி முடித்ததில் இருந்தே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அப்பா வரன் பார்க்கலாம் என்றார். ஆனால், என்னால் அவனை மறக்க முடியவில்லை. ஓரிரு மாதங்களுக்கு முன் தான் திருமணத்திற்கு சரி என்றேன். துரிதமாக மாப்பிளை பார்க்கும் வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது.

ஆனாலும், என் அம்மாவும், முன்னாள் காதலனும் எனக்கு செய்த துரோகத்தை என்னால் மறக்கவே முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Tragedy Struck is Mom Loves Her Own Daughters Lover - My Story!

The Tragedy Struck is Mom Loves Her Own Daughters Lover - My Story!
Story first published: Friday, December 15, 2017, 11:30 [IST]