இதோ! உலகின் மூத்த பழங்குடி தமிழன் என்பதற்கான ஆதாரம் - இப்போ என்ன சொல்றீங்க!

Posted By:
Subscribe to Boldsky

"கல் தோன்றா, மண் தோன்றா காலம்" என்பதே தவறு..., "கல் தோன்றா மன் தோன்றா காலம்" என்பது தான் சரி! ஆம்! கல்வியும், மன்னர் ஆட்சியையும் தோன்றும் முன்னரே தோன்றிய மூத்தக்குடி தமிழ் என்பது சாதி, மத, இன வேறுபாடு இன்றி நம் அனைவரும் பெற்றுள்ள பெருமை.

இந்தியன் என்பதை காட்டிலும், தமிழன் என்பதை காட்டிலும் மொழியின் பிறப்புக்கு முன் தோன்றிய மூத்தகுடி மக்கள் என்பதில் நமக்கும் பங்குண்டு. நமது பண்டையக் காலத்து இலக்கியங்களில் பல இடங்களில் குமரி என குறிப்பிடப்பட்டிருக்கும். அது இளம் பெண்களை மட்டுமல்ல, இலமுரியா (Lemuria) என அறியப்பட்ட குமரி கண்டம் என்றும் கூறப்படுகிறது.

குமரிக்கும், ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியர்கள் நமது சகலபாடிகள் என்பதற்கும் என்ன தொடர்பு என நினைக்கிறீர்களா? இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விவாத பொருள்!

விவாத பொருள்!

குமரி கண்டம் இருந்தது என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்ட உண்மை. ஆனால், அதில் தமிழர்கள் தான் வாழ்ந்தனர் என்பது மட்டும் இன்றுவரையும் பெரும் விவாத பொருளாக திகழ்ந்து வருகிறது. ஒருபுறம் வெளிநாட்டு ஆய்வாளர்களே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும், தமிழ்நாட்டில் பிறந்த வளர்ந்த மேதாவிகள் சிலர் இதற்கு எதிர் கருத்து கூறி வருவதையும், ஆதாரங்கள் கேட்பதையும் நாம் பல நேரங்களில் கண்டிருக்கிறோம்.

ஆதார மணி!

ஆதார மணி!

நியூசிலாந்து கடற்கரையில் 19ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட வெண்கல மணி, ஆஸ்திரேலிய அருங்காட்சியகம் ஒன்றில் இருக்கிறது. அது 15ம் நூற்றாண்டை சேர்ந்த மணியாக இருக்கலாம் என ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. அந்த மணியில் "முகைதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி" என பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரத்தின் மூலம், ஆஸ்திரேலியாவில் தமிழர்கள், ஐரோப்பியர்களுக்கு முன்னரே குடியேறிவிட்டனர் என்பதை ஊர்ஜிதம் செய்ய முடிகிறது.

Image Credit: jps.auckland.ac.nz

பேச்சிலும் தமிழ்!

பேச்சிலும் தமிழ்!

முன்னூறுக்கும் அதிகமான பழங்குடி மக்கள் வாழும் கண்டமாக இருக்கிறது ஆஸ்திரேலியா. இவற்றில் பண்டைய கால பழங்குடி மக்களின் பண்பிலும், மொழியிலும் தமிழ் கலப்பு இருப்பது அறிய முடிகிறது. குறிப்பாக டிராக்மிலா சபோன்ஸ்கோவா எனும் பழங்குடியின் பேச்சில் தமிழ் மொழி கலப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பக்லோவியர் எனும் பழங்குடி இனத்தின் பேச்சு வழக்கிலும் தமிழ் கலப்பு இருப்பதை அறிய முடிகிறது. இவர்களது பேச்சில் முட்டி, மின்னல், பாம்பு போன்ற சொற்கொள் இருப்பது, இதற்கான ஆதாரமாக காணப்படுகிறது.

வளரி!

வளரி!

வளரி என்பது இன்று நாம் அனைவரும் நன்கு அறிந்த பூமராங் எனும் கருவி தான். இதை தமிழில் வளைத்தடி என்றும் அழைக்கிறோம். இது திருடர்களை பிடிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும். இது, இலக்கை தாக்கி மீண்டும் எய்த நபரின் கைகளுக்கே வரும் தன்மை கொண்டதாகும். இது தமிழர் பயன்படுத்திய போர் கருவி.

இந்த வளரியை இந்திய விடுதலை போராட்டத்தில் சின்ன மருது மற்றும் பெரிய மருது பிரிட்டிஷ் படைக்கு எதிராக பயன்படுத்தியதாகவும் தகவல்கள் இருக்கின்றன.

இந்த வளரி கருவியை ஆஸ்திரேலியாவில் இருக்கும் பழங்குடிகள் சிலர் பயன்படுத்துவதை காண முடிகிறது.

ஆய்வாளர் ரிச்சர்ட்!

ஆய்வாளர் ரிச்சர்ட்!

மனித இன ஆராய்ச்சியாளரான சி.ரிச்சர்ட் எனும் நபர் ஆஸ்திரேலிய பகுதியில் தென் பகுதியை சேர்ந்த திராவிடர்கள் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடி ஏறி இருக்கலாம் என தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தென் பகுதியில் இருந்த குமரி கண்டத்தின் அழிவின் போது இவர்கள் தெற்கு நோக்கு பயணித்து ஆஸ்திரேலிய கண்டதை அடைந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்றும் இவர் கூறியுள்ளார்.

ஹோமோசேப்பியன்ஸ்!

ஹோமோசேப்பியன்ஸ்!

இரண்டு கோடி வருடங்களுக்கு முன்னர் குரங்கில் இருந்து ஒரு புது இனம் பிறந்தது. இரண்டு இலட்சம் வருடங்களுக்கு முன்னர் அந்த புதிய குரங்கு இனத்தில் இருந்து ஹோமோசேப்பியன்ஸ் என்ற மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்தது என நம்பப்படுகிறது.

ஏறத்தாழ சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனிதன் என்று இன்று நாம் கூறும் உருவம் கொண்ட கற்கால மனிதன் உருவாகியுள்ளான். அதே போல ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் தான் பிறந்தான் என்பது அனைவரும் நம்பும் உண்மையாக இருந்து வருகிறது.

மரபணு ஆய்வு!

மரபணு ஆய்வு!

ஆப்ரிக்காவில் தோன்றிய ஆதி மனிதன் உலகம் முழுதும் எப்படி பரவினான் என்பதை அறிய லூகாகவாலி எனும் இத்தாலியை சேர்ந்த மரபணு ஆய்வாளர் முன்வந்தார். ஆரம்பத்தில் இந்த ஆய்வு ஆஸ்திரேலியாவில் நடந்தது. பின்னாளில் ஆய்வாளருக்கு எழுந்து சந்தேகத்தின் காரணமாக இந்தியாவிலும் தொடர்ந்தது.

Image Credit: Imgur

எம். 130 ஒய்!

எம். 130 ஒய்!

ஆதி ஆப்பிரிக்க மக்களிடம் இருந்து பரவிய எம். 130 ஒய் எனும் மரபணு பிரிவை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்த இந்த ஆய்வின் முடிவில் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் மத்தியில் கண்டறியப்பட்டது. இதன் மூலம் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்ரிக்கர்கள் ஆஸ்திரேலியாவை அடைந்திருக்க வேண்டும் என அறியப்பட்டது.

இந்தியா!

இந்தியா!

அப்போது தான் இடையே இருக்கும் இந்தியாவிலும் இந்த ஆய்வை தொடர எண்ணினார் லூகாகவாலி. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தை சேர்ந்த பிச்சையப்பன் என்ற ஆய்வாசிரியர் உதவியுடன், இந்த ஆய்வை இந்தியாவில் துவக்கினர் லூகாகவாலி.

மதுரை மாவட்டத்திலும், உசிலம்பட்டி பகுதியிலும் இந்த எம். 130 ஒய் மரபணு பிரிவு இருப்பது அறியப்பட்டது. அதிலும், உசிலம்பட்டியை சேர்ந்த ஜோதிமாணிக்கம் எனும் கிராமத்தில் வசிக்கும் விருமாண்டி என்பவரிடம் இந்த பிரிவு மிக கட்சிதமாக பொருந்தியிருந்தது அறியப்பட்டது.

ஆகையால், ஆஸ்திரேலியா, இந்திய, ஆப்பிரிக்க ஆதி மக்களின் மரபணு ஒன்றோடு ஒன்று ஒத்துப்போவது இந்த ஆய்வின் மூலம் அறியப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamilians, Africans and Australians are Actually Nephew Partners!

Tamilians, Africans and Australians are Actually Nephew Partners!