ஐய்யா... உத்தமர்களே! இதெல்லாம் உங்க தவறுகள் பட்டியலில் சேராதா?

Posted By:
Subscribe to Boldsky

நம்ம அப்பாவ தேடி போகலாமா?

சுரீரென்று கோபம் வந்தது. வாய முடிட்டு சாப்டமாட்ட, பெரிய மனுஷியாட்டம் என்ன பேச்சு இது.காலைல இருந்து எவ்ளோ வேல சொல்றேன் ஒண்ணாவது உருப்படியா செய்றியா கோபத்தை காட்ட கையில் கிடைத்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து தூக்கி வீசினேன்.

'ஏன் அம்மா இல்ல? அம்மா நீ கேட்டது எல்லாம் வாங்கி கொடுக்கல? அப்பறம் என்ன அப்பா.... '

மகள் வாயைத்திறக்கவில்லை. விம்மிக்கொண்டே காய்ந்த போன தோசையை பிய்த்து சர்க்கரையுடன் வாயில் திணித்துக் கொண்டிருந்தால்.

இரவானால் இவளுக்கு என்ன தோன்றுமென்றே தெரியாது. அப்பாவை தேடுவாள் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன் ஆனால் இன்று ஏன் இவ்வளவு கோபம், என்று தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காதல் :

காதல் :

கல்லூரியில் வந்த காதல்... இருவீட்டாரின் எதிர்ப்பையும் மீறி ரிஜிஸ்டர் ஆபிஸில் நண்பர்கள் முன்னிலையில் நடந்த காதல் திருமணம். எங்களின் திருமணத்தின் போது வந்திருந்த ஒருவர் தான் நாங்கள் திருமணம் பந்தத்தில் இணைவதற்கும் பின்னாட்களில் பிரிவதற்கும் மூலக்காரணமாய் இருந்தார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?. அவர் எதுவும் செய்யவில்லை, எங்கும் போய் சமாதானம் பேசவில்லை ஆனால் கச்சிதமாக வேலையை முடித்தார்.

யார் தெரியுமா? இதோ இன்று சோஃபாவில் அழுதுகொண்டே படுத்திருக்கிறாளே நான் பெற்ற மகள் அவளே தான். திருமணத்தின் போது மூன்று மாதக்கருவாய் என் வயிற்றில் இருந்தாள்.

உங்கள பாத்தா ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொல்லவே மாட்டாங்க.... அவ்ளோ யங்கா இருக்கீங்களே? இதில் ஆச்சரியப் பார்வைகள் மட்டுமல்ல காமப்பார்வையும் கலந்தே தான் இருக்கும்.

கேட்டு கேட்டு அலுத்துப் போன வார்த்தைகள்.... ஏன் ஒரு குழந்தையைப் பெற்றால் அரைக்கிழவி ஆகிவிட வேண்டுமா? மனதில் கோபம் கொப்பளித்தாலும் எதுவும் சொல்லமுடியாது.

ஏன் சார் உங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க தான? என்று கேட்ட கேள்விக்கு அசடு வழிந்து கொண்டே நகர்ந்துவிட்டார்.

எதைச் சொல்ல? எதைத் தவிர்க்க? :

எதைச் சொல்ல? எதைத் தவிர்க்க? :

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, காலை மதியம் என இருவேலைக்கும் சமைக்க வேண்டும்.மகளை எழுப்பி பள்ளிக்கு தயார் செய்து, ஆட்டோ வரும் வரை காத்திருந்து அவளை அனுப்பிவிட்டு அடுத்ததாக நான் கிளம்ப வேண்டும். அலுவலகம் , நம்மை... நம் பொறுமையை சோதிக்கும் கூடமாகத்தான் இருக்கும். பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் முதல் ஆதார் கார்டு வரை அனைத்தையும் சரிபார்த்து சேர்த்துக் கொள்கிறவர்களிடம் நான் எதை மறைக்க முடியும்?

நான் இங்கே மகளுடன் தனியாக இருக்கிறேன் என்பதையா? அல்லது என் கணவர் பிரிந்து விட்டார் என்பதையா?

தவிர்க்கப்படும் பொறுப்புகள் :

தவிர்க்கப்படும் பொறுப்புகள் :

இருவருக்கும் அவரவர் கனவுகளை தொடர விருப்பம் . விருப்பம் மட்டுமல்ல பேராசையும் கூட எனக்கென்ற ஓர் அடையாளம் வேண்டும் என்று இருவருமே நினைத்தோம்.

குழந்தைய பாத்துக்கோ என்ற பொறுப்பை திணித்து ஒரு வருடம் வீட்டில் முடங்கச் செய்தான் என் காதலன். அடுத்த வருடத்திலிருந்து நானும் ஆபிஸ் போறேன் பாப்பாவ க்ரீச் ல விடலாம்.

சாய்ந்தரம் தான் நீ சீக்கிரம் வந்தர்றல்ல நான் நைட் வர்ற வரைக்கும் பாப்பாவ நீ பாத்துக்கோ என்று பொறுப்பை பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.

நான் எம்.பி.ஏ., படிக்கணும் அப்ராட் போணும் நைட் வந்து குழந்தைய பாத்துகிட்டா நான் எப்டி படிக்கிறது.

முதல் ஏமாற்றம் :

முதல் ஏமாற்றம் :

இவ்வளவு காலங்களாக நாம் நாம்.... என்று கேட்டுவிட்டு இனி வாழ்க்கை முழுக்க சேர்ந்தே இருக்கப் போகிறோம் என்று உறுதியேற்று திருமண பந்தத்தில் இணைந்து மடியில் தவழும் ஒரு குழந்தையுடன் இருக்கும் போது,

நான் படிக்கணும் நான் போணும் என்று தன்னைப் பற்றியே வந்து விழும் வார்த்தைகள் தன் கனவை நோக்கிய திட்டமிடலை கேட்டவுடனேயே வாழ்க்கையின் சுயரூபம் விளங்கியது.

நீ அப்ராட் போணுமா? அப்போ நாங்க? நானும் தான் பேஷன் டிசைனிங் படிக்கணும்னு ஆசப்பட்டேன். சாங் ஆல்பம் ஒன்னு ரிலீஸ் பண்ணனும்ன்றது என்னோட ட்ரீம். என்னோட ட்ரீம நான் விட்டுக் கொடுக்க முடியாது.

..........

பதிலேயில்லை.

ஹைதிராபாத் அழைப்பு :

ஹைதிராபாத் அழைப்பு :

அந்த அலுவலகத்தில் என் புலம்பலை எல்லாம் கேட்கும் ஒரு ஜோடிக் காது எனக்கு கிடைத்தது தான் ஆகச்சிறந்த வரமாய் நினைத்திருந்தேன். ஆனால், அவன் ஓர் வேவு பார்க்கும் கருவி என்று புரிந்த போது தான் என் பெண்மையை நினைத்து அவமானமடைந்தேன்.

சென்னைல இருந்துட்டு ஏன் கஷ்ட்டப்படணும். இங்க ஹைதிராபாத் வந்துருங்க... க்வாட்டர்ஸ் அரேஞ் பண்றேன் குழந்தைக்கு நல்ல ஸ்கூல்ல சேர்த்திடலாம். 50 பெர்சண்ட் இன்க்ரீமெண்ட் நிம்மதியா இருக்கலாம். அலுவலக முதன்மை செயலர் மூலமாக இப்படியொரு அழைப்பு.

ஐ ம் டிவோர்ஸி :

ஐ ம் டிவோர்ஸி :

மகளுடன் வெளியில் செல்லும் போதோ அல்லது அவளின் பள்ளிக்குச் செல்லும் போதோ என்னுடன் பேசுபவர்களின் இரண்டாவது மூன்றாவது கேள்விகள் கணவர் பற்றிய கேள்வியாகத்தான் இருக்கும்.

ஐ ம் டிவோர்ஸி என்று தைரியமாக சொல்லும் என்னிடம் அவர்கள் சிரித்து பேசுவது அதுவே கடைசியாக அமைந்துவிடும். விவாகரத்துப் பெற்ற பெண் எல்லாம் திமிர் பிடித்தவள், ஊர் சுற்றுபவளாகத்தான் இருப்பாள் என்று நினைப்பார்கள் போலும்.

பல நேரங்களில் தைரியமாக என்னை காட்டிக் கொண்டாலும், சில நேரங்களில் நான் ஏமாற்றப்பட்டேன் வாழ்க்கைத்துணையாய் என்னுடன் வருவான் என்று நம்பிய என் காதல் கணவன் என்னை வேண்டாம் என்று சொல்லி பிரிந்து விட்டான் என்று நினைக்கும் போது நான் நிலைகுலைந்துவிடுவேன்.

மாதச்சம்பளம் வாங்கத்துவங்கிய காலத்திலேயே ஒர் குழந்தையை கொடுத்து தனியாய் சமாளித்துக் கொள் என்றால் அதுவும் வாழ்க்கை முழுவதும்.

சின்ன சின்ன சம்பவங்களால் மனது தைத்துக் கொண்டேயிருக்கும். அனுதினமும் நாம் தவறு செய்துவிட்டோமா? என்று எண்ண வைக்கும்.

என்ன நடந்தாலும் சரி என் குழந்தையுடன் நான் போராடுவேன் என்று நினைத்த மாத்திரத்தில் மனம் தைரியம் கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

பிரிவின் துவக்கம் :

பிரிவின் துவக்கம் :

சரி இப்போ முடிவா என்ன சொல்ல வர்ற? முழுதாய் பிரிவதற்கு காரணமான சண்டையின் துவக்கமிது. நானே தான் துவக்கினேன்

எனக்கு என் ஆம்பிஷன் தான் முக்கியம்.

எனக்கும் தான்.

-------

அமைதியா இருந்தா என்ன அர்த்தம். ரெண்டு பேரும் லவ் பண்ணோம், ரெண்டு பேரும் விருப்பப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

குழந்தைக்கும் நம்ம ரெண்டு பேரும் தான் காரணம் எல்லாமே நம்ம சேர்ந்து தான பண்ணோம். அப்போ வாழ்க்கைலயும் சேர்ந்து தான் போராடணும்

ஏன் கொஞ்சம் சேஃபிடியா இருந்திருக்க கூடாதா. இந்த வயசுல நமக்கு குழந்தை எல்லாம் தேவையா? இன்னும் ஒழுங்கா சம்பாதிக்க கூட ஆரம்பிக்கல அதுக்குள்ள குழந்த...அது இதுன்னு

ஏன் நீயும் இருந்திருக்கலாம்ல... குழந்த பொறந்தாச்சு அவளுக்கு இன்னும் மூணு மாசத்துல ஒரு வயசு ஆகிடும். இப்போ வந்து இதப் பேசுற?

குழந்தை வேண்டாம் :

குழந்தை வேண்டாம் :

இப்படியே தொடர்ந்த சண்டையின் முடிவாக விவாகரத்து பெற்றுவிட்டோம். நான் என் கணவரை பிரியும் போது மகளுக்கு இரண்டு வயது. அவன் தெளிவாக இருந்தான், குழந்தைப் பற்றி தவறியும் பேசவில்லை.

அடுத்து இருப்பது நான் தானே குழந்தை அம்மாவின் பராமரிப்பில் வளரும் என்று எழுதப்பட்டது. எனக்கும் இந்த குழந்தை வேண்டாம்.

என் மூலமாக பிறந்ததால் குழந்தைக்கு முழுப்பொறுப்பு நானாக முடியுமா? நான் கருவியாக இருந்தேன்.அதற்காக, காரணமான கணவன் எளிதாக திருமண வாழ்க்கையிலிருந்து நாங்கள் பிரிகிறோம் என்று அவனுக்கான பொறுப்புகளிலிருந்து விலகிடும் போது நான் ஏன் விலக்கூடாது?

எனக்கும் இந்த குழந்தையை ஏற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என்று சொல்ல ஆசை தான்.

என்ன செய்ய? அவளின் சிரிப்புக்கும் அவளின் மழலைக்குரலுக்கும் அடிமையாகிவிட்ட என்னால் மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல முடியவில்லை.

ஹைதிராபாத் :

ஹைதிராபாத் :

ஹைதராபாத் அலுவலகத்தில் நேர்காணலுக்காக சென்ற போது தான். முதன்மை செயலர் சொன்னது எல்லாமே பொய், என்னை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வதற்காகத் தான் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் என்பது புரிந்தது.

உன் பேர்ல ஒரு வீடு, குழந்த பேர்ல 10 லட்சம் டெபாசிட் பண்றேன் இதத்தவிர வேற என்ன வேணும். சேஃப்டியா இருக்கலாம். அமைதியான வாழ்க்கை இத ஏன் வேணாம்னு சொல்ற என் கையைப் பற்றி காலில் விழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருந்தார்.

தன் மேல் இறக்கப்பட வேண்டும் என்று நினைத்து தன் திருமண வாழ்க்கையில் நிம்மதியாக இல்லை என்றும் அன்புக்காக ஏங்குவதாகவும் விவரித்தார். நடுநடுவே அவருக்கு மூச்சும் வாங்கியது.

உனக்காக நான் என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்கேன் என்று மறுமறுபடியும் சொல்லி தன் சொத்துக்களின் பட்டியல் வாசித்துக் காட்டினார்.

ஐ ம் நாட் செக்ஸ் டாய் :

ஐ ம் நாட் செக்ஸ் டாய் :

சார் ஐ ம் நாட் இண்ட்ரஸ்ட்டட் இன் செக்ஸுவல் லைஃப். என்கிட்ட எதிர்ப்பாக்குறது வேஸ்ட் என்றேன்.

சில நொடி அமைதிக்குப்பிறகு, திக்கியபடி பரவாயில்ல ச்ச்ச..... நான் உன்கிட்ட பழகுறது உன்னோட அன்புக்காகதான் மத்தப்படி ஒண்ணும் இல்ல என்ன இவ்ளோ சீப்பா நினைக்காத என்ற போலி கோபம் அவருக்கு செட் ஆகவேயில்லை.

ஹோ...சாரி சார் நான் தான் உங்கள தப்பா நினச்சுட்டேன். நீங்க எதிர்பாக்குற அன்பு அங்க கிடைக்கும்னு நினைக்கிறேன் என் ஒருத்தியால கிடைக்கிற அன்ப விட அவங்க கொடுக்குற அன்பு ரொம்ப பெருசுன்னு நினைக்கிறேன் என்று சொல்லி கை காட்டினேன்.

பேரன் பேத்தி சகிதமாய் இவரின் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் நின்றிருந்தார்கள்.

உத்தமர்களே! :

உத்தமர்களே! :

இரண்டு நாள் கழித்து அலுவலகம் சென்ற போது, அலுவலகத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தேன். அலுவலகப் பணம் கையாடல் செய்தேன் என்று புகார். ஐய்யா.... உத்தமர்களே உங்களின் முதன்மை செயலர் என்னை கையாடல் செய்ய நினைத்தானே? அதெல்லாம் உங்கள் தவறுகள் பட்டியலில் சேராதா?????

பல உதவிகள் கிடைக்க காத்திருந்தாது. அந்த உதவிக்கு பின்னால் என்னை சொந்தம் கொண்டாட போட்டி போட்டுக்கொண்டிருந்த கழுகுப் பார்வைகளை நினைத்தே ஒன்றையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒரு சுழலில் சிக்கி விழி பிதுங்கி நிற்கையில் அடுத்தடுத்த சுழலில் சிக்கிக் கொள்ள மனம் விரும்பவில்லை. இதுவரை என் விருப்பங்களைக் கொன்று, கனவை சிதைத்துக் கொண்டிருக்கும் எனக்கு மனதளவிலும் உடலளவிலும் துணை தேவை தான்.

ஆனால் இந்த சமூகம் பழிக்கும் சொல்லுக்கு பயந்தே தானே காலம் தள்ள வேண்டியதாய் இருக்கிறது. நான் எனக்காக வாழ்வதா அல்லது இந்த சமூகத்திற்காக வாழ்வதா???

எல்லாவற்றுக்கும் காரணம் என் காதலா? என் லட்சியமா இந்தக் குழந்தையா?? அல்லது நான் வாழும் இந்த சமூகமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Story about A lady who played a single parenting role

Story about A lady who played a single parenting role
Story first published: Thursday, August 17, 2017, 14:09 [IST]
Subscribe Newsletter