For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாய்ஸ்.... இந்த அனுபவங்களை எல்லாம் நீங்களும் சந்தித்திருக்கிறீர்களா? My Story #99

படித்தும் வேலை கிடைக்காமல் தவிக்கும் போது வந்த முதல் காதல் வேலையில்லை எனும் போது நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகள்

|

பத்தாம் கிளாஸ மட்டும் பாஸ் பண்ணிடு அப்பறம் ஒரு வருஷம் ஜாலியா இருக்கலாம்.... சரியென்று திக்கித்திணறி முடித்து வந்தால் பதினோராம் வகுப்பு என்று சொல்லி விட்டு பன்னிரெண்டாம் வகுப்பை துவங்கி விடுகிறார்கள்.

ஐயோ இந்த கூத்தை நீங்கள் எல்லாருமே அனுபவித்திருப்பீர்கள் என் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள் அப்படியே நீங்களே அந்த கதாப்பாத்திரமாகவே மாறிடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்டியே ஓடிரலாம்...

அப்டியே ஓடிரலாம்...

ம்மா.... சயின்ஸ் எல்லாம் எனக்கு வராதும்மா, மேக்ஸ் சுட்டுப்போட்டாக்கூட வராது. நான் காமர்ஸ் க்ரூப் எடுக்குறேன்

மேல் வீட்ல இருக்குறவ சயின்ஸ் க்ரூப்பு,எதிர்வீட்டுல இருக்குறவன் சயின்ஸ் க்ரூப்,பக்கத்து வீட்டுல இருக்குறவன் சயின்ஸ் க்ரூப் இவ்ளோ ஏன்.... உங்க பெரிய தாத்தாவோட கடைசி தம்பிவோட

பெரியசித்தியோட அண்ணன் பையன் கூட சயின்ஸ் க்ரூப் எடுத்து படிக்கிறப்போ நீ சயின்ஸ் க்ரூப் தான் படிக்கணும்.

அப்டியே நான் ஓடிறவா.....

ஹையோ.... நம்ம படிப்பு டேபிள்மேட் டெசிசன் மதிரி ஆகிடுச்சேன்னு அழ மட்டும் தான் முடியும். நோ பீலிங்கிஸ் இதுக்கே எமோஷனல் ஆனா எப்டி... இன்னும் நெறைய ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு வாங்க வாங்க...

சீரியல் கில்லர் :

சீரியல் கில்லர் :

அம்மா சொல்லுச்சு, மேல் வீட்டு அங்கிள் சொன்னாருன்னு சயின்ஸ் க்ரூப் எடுத்தா அப்பறம் டார்ச்சர் ஆரம்பிக்கும் பாருங்க...

பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி,மேக்ஸ்ல செண்டம் எடுக்கணும் என்று ஆரம்பித்து மூன்றுக்கும் தனித்தனியாக டியூசன் வைக்கப்படும். சண்டே ஹாலிடே என்றெல்லாம் தூங்க முடியாது. ஒண்ணு டியூசனில் டெஸ்ட் சீரிஸ் ஆரம்பித்திருப்பார்கள் இல்லையென்றால் பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் என்று வரச் சொல்லியிருப்பார்கள்.

அழுவாச்சி காவியம் :

அழுவாச்சி காவியம் :

பள்ளி முடித்து வந்து டிவியை ஆன் செய்தாலே... கொலைக்குற்றம் செய்தது போல வீடே அதிரும்.

உனக்கு செஞ்சு கொடுத்திருக்கிற மாதிரி வசதில பாதி கொடுத்தாகூட இந்நேரம் இந்த ஜில்லாவுக்கே கலெக்டர் ஆகிருப்பேன். இப்ப பாரு படிக்காதனால் நாய்படாத பாடு படுறேன் நான் பட்ட கஷ்டம் என் புள்ள படக்கூடாதுன்னு நாயா பேயா உழச்சு வந்து கொட்டுனா நீ ஹாயா உக்காந்து டிவி பார்த்துட்டு இருக்க... உனக்கு மனசாட்சி வேண்டாமா...

டிவி ஸ்விட்ச் ஆன் பண்ணது ஒரு குத்தமாயா?

நூத்துக்கு நூறு :

நூத்துக்கு நூறு :

உணவு விஷயத்தில் எந்த குறைபாடும் இருக்காது, செம்மையான கவனிப்பு இருக்கும் என்பது மட்டும் தான் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பதில் நாங்கள் அனுபவித்த ஒரே ப்ளஸ்.

பாரு அந்தப்புள்ள மேக்ஸ்ல நூத்துக்கு நூறு.... அவ டியூசன் கூட போகல நீயும் தான் இருக்கியே தண்டத்துக்க ஸ்கூல் ஃபீஸ் ஒரு பக்கம் டியூசன் ஃபீஸ் ஒரு பக்கம்னு கொட்றோம். ஆனா மார்க் தான் வந்த பாடில்ல நாப்பது மார்க் எல்லாம் ஒரு மார்க்கா.....

யம்மா சும்மாயிரும்மா அந்த புள்ள யூ.கே.ஜி படிக்கிது

ஹையோ யூ.கே.ஜி புள்ளையோட எல்லாம் மேக்ஸ் மார்க் கம்ப்பேர் பண்ணா நம்ம எங்க போறது.

ரிசல்ட் பரிதாபம் :

ரிசல்ட் பரிதாபம் :

650யைத் தாண்டும் என்று நாம் கணக்குப் போட்டு வைத்திருக்க... ம்ம் ஆமாமா... அவ சூப்பரா எழுதியிருக்கா ஆயிரத்து நூறு மேல வந்துரும் கண்டிப்பா.. மெடிக்கல் சேக்கலாம்னு இருக்கோம் என்று அம்மா டமாரம் அடித்துக் கொண்டிருப்பார்.

ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகாது என்று சொன்னாலும் ஒரு ஆயிரம் கூட வாங்க மாட்டியா... என்று வம்புக்கு இழுப்பார்கள்.

டாக்டரா? இஞ்சினியரா? :

டாக்டரா? இஞ்சினியரா? :

ரிசல்ட் நாள். இன்றிலிருந்து நம் கஷ்ட காலம் ஆரம்பம் என்றே சொல்லலாம். எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்டு ரிசல்ட் பார்த்தால் வேண்டுதலுக்கு வக்கணையாக பாஸ் செய்ய வைத்திருப்பார்.

650 வரும் மேக்ஸ்ல புட்டுக்கும் நினச்சோம். பரவாயில்லையே 850 வந்திருக்கு என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்க... குடும்பமே நம்மை மொத்த ரெடியாக நின்று கொண்டிருக்கும்.

மீண்டும் ஆரம்பம் :

மீண்டும் ஆரம்பம் :

இந்த சயின்ஸ் க்ரூப் எடுத்தது போலவே இஞ்சினியரிங் அலப்பறைகள் ஆரம்பிக்கும்...

ம்ம்மா சும்மாயிரு இந்த மார்க்குக்கு எல்லாம் இஞ்சினியரிங் சீட் கிடைக்காது நான் ஆர்ட்ஸ் டிகிரி எதாவது படிக்கிறேன். என்று சொன்னால் போதும் உடனே பழைய டேப் ரிக்கார்டர் ஆனாகிடும்.

அவன் எல்லாம் இஞ்சினியரிங் படிக்கிறான் என் பேரன் உனக்கு என்னடா கேடு என்று வீட்டிலிருக்கும் கிழவியும் ஏத்தி விட நான்கு வருட சிறைக்குள் தள்ள ஆயுத்தமாவார்கள்.

உன் போட்டோ அங்க இருக்கணும் :

உன் போட்டோ அங்க இருக்கணும் :

நான் வாங்கிய மார்க்கிற்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஓர் ஓலைக்குடிசையைத் தான் கல்லூரி என்று காட்டுவார்கள் .

பட்டாகூட வாங்காத நிலத்தில் இரண்டு மாடி கட்டிடத்தை கட்டி வைத்து விட்டு வாசலில் மிகப்பெரிய ப்ளக்ஸ் இருக்கும் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் தேர்வானவர்கள் என்று...

நாலு வருஷம் முடிச்சு வர்றப்ப உன் போட்டோ அங்க இருக்கணும்... புரிஞ்சதா என்று அட்வைஸ் வேறு

ஒ... இது தான் காலேஜா ? :

ஒ... இது தான் காலேஜா ? :

ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய மட்டும் இங்கே என்று நினைத்து காலேஜ் எப்ப போய் பாக்கலாம் என்று கேள்வியைப் போட... இப்பவே போகலாம் என்று எதோ பெரிய மைசூர் பேலஸை சுற்றிக் காண்பிக்கப் போகிறவர் போல பில்டப் கொடுத்து வெளியில் அழைத்துச் செல்வார்.

எண்ணி செதுக்கியது போல பத்து அறைகள் இருக்கும்.

கேஃபடேரியா? :

கேஃபடேரியா? :

கேஃபடேரியா இருக்கா?

காலேஜ் பேக் சைட்.. இருக்கு

இந்த பொட்டக் காட்டுல எல்லாமே ஒரே சைடு மாதிரி தான் இருக்கு இதுல எங்கயிருந்து பேக்சைடத் தேட என்று அவர் காட்டிய திசைப்பக்கம் திரும்பி கொஞ்சம் நடந்தால் ஒரு ஆயா சைக்கிளில் டீ வைத்துவிட்டு அது படுத்திருக்கிறது.

அடேய்... இது கேஃப்டேறியாவாடா....

லைப்ரேரி.... என்று இழுக்க ஓ யெஸ் வாங்க வாங்க காட்றேன் என்று பெருமையுடன் அழைத்துச் சென்றார்.

இதாவது ஒழுங்கா இருக்குமா? :

இதாவது ஒழுங்கா இருக்குமா? :

கடவுளே லைப்ரேரி மட்டுமாவது ஒழுங்கா இருக்கணும் என்று வேண்டிக் கொண்டு அவர் பின்னால் சென்றேன்.

கொத்துச் சாவியிலிருந்து நான் கைந்து சாவிகளை துளாவி மாற்றி மாற்றி போட்டு கதவைத் திறந்தால் வைக்கப்பட்டிருந்த மூன்று செல்ஃபுகளும் காலியாக கிடக்கிறது. ஒரே ஒரு செல்ஃபில் மூன்று ரேக்குகளில் கட்டுகூட பிரிக்காத புதிய புத்தகங்கள். டேபிளில் நான்கைந்து தினசரிகள்.

அங்கிருந்த ஒரு டேபிள் மற்றும் இரண்டு சேர்களிலுமே அவ்வளவு தூசி....

ஸ்டூண்ட்ஸ் ஈவ்னிங் ஆனா ரெஃபர் பண்ண இங்க வந்திடுவாங்க

இதுல ரெஃபர் பண்ண என்னடா இருக்கு?

லேப் கொடுமை :

லேப் கொடுமை :

அதோ அங்க தான் புதுசா ஒரு பில்டிங் வரப்போகுது அங்க உங்களுக்கு லேப் ஃபெசிலிட்டி கிடைக்கும்.

எப்போ இந்த நாலு வருஷத்துல கட்டி முடிச்சிருவீங்களா?

ஐயோ... என்ன இப்டி கேட்டீங்க நீங்க காலேஜ் ஜாயின் பண்றப்ப பாதி வேலை முடிஞ்ச்சுருக்கும்.

ஹையோ.... நான் காலாய்க்கிறது கூடத்தெரியாம சீரியசா பதில் சொல்றானே என்று நொந்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

பக்குவமா முடிக்கலாம் :

பக்குவமா முடிக்கலாம் :

நான்கு வருடங்கள் நண்பர்களைத் தவிர சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லை.... அட ஒன்சைட் லவ் கூட இல்லன்னா பாத்துக்கோங்களேன்.

+2வே திக்கித் திணறித்தான் பாஸ் ஆனோம் இன் ஜியரிங் பாஸ் ஆனா நம்ம குலப்பெருமை என்னாகுறது. அரியர் அரியரா வச்சு மெல்லமா பக்குவமா படிச்சு முடிக்கலாம்...

பக்குவமா நான் முடிப்பதற்குள் நான்காம் ஆண்டு முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

வி.ஐ.பி :

வி.ஐ.பி :

தண்டச்சோறு... உனக்கு அடுத்து படிச்ச புள்ளைக எல்லாம் வேலை கிடச்சு சென்னை... பெங்களூரு, பூனேன்னு போய்ட்டு இருக்கு நீ இன்னும் அரியர்க்கு படிச்சுட்டு இருக்க நீயெல்லாம் எங்க உருப்படப்போற..என்ற வசவுச் சொற்களை அடிக்கடி கேட்க வேண்டிய நிலைமை வரும்.

நாம் வி.ஐ.பி என்பதால் நமக்கு நேரும் சங்கடங்களைப் சொல்கிறேன்... கொஞ்சம் கேளுங்கள்.

அப்பா :

அப்பா :

அப்பா... வண்டிக்கு பெட்ரோல் போடணும்

என்னமோ தினமும் ஆபிஸ் போறவன் மாதிரி பைக்க எடுத்துட்டு ஊர் சுத்துற... பணம் என்ன மரத்துலையா காயுது. ரிடையர் ஆனப்பிறகு மகன் சம்பாதிச்சு போடுவான்னு பேரு இங்க பாரு.... இன்னு ரெண்டு வருஷத்துல நான் ரிட்டையர் ஆகிடுவேன் அதுக்கப்பறம் சோதுக்கு சிங்கி தான் அடிக்கணும் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா... வெட்டிப்பசங்களோட சேர்த்து ஊர் சுத்துறது.

அம்மானா சும்மா இல்லடா :

அம்மானா சும்மா இல்லடா :

வேலை கிடைக்கிது எல்லாரும் ஃபாரின் போவியான்னு கேக்குறாங்க இவன் எங்கள விட்டு போமாட்டேன்னு ஒரே அடம்.. எத்தனக்கம்பெனில கிடச்சும் விட்டுட்டேயிருக்கான் தெரியுமா?

இனிஷியல் அமவுண்ட் நிறைய கேக்குறாங்க... அதான் ஜாயின் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டோம்..

ஆட்களுக்கு தகுந்தாற் போல விதவிதமாக பேசி நம்மை காப்பாற்றும் தெய்வம் அம்மா மட்டுமே. வெளியே காப்பாற்றினாலும் உள்ளே கழுவி ஊற்றுவது நமக்கு மட்டுமே தெரியும்.

காதலி :

காதலி :

ஏண்டா எல்லாரும் பசங்க தான் பொண்ணுங்களுக்கு ரீசார்ஜ் பண்ணி விடுவாங்க... பொண்ணுங்க எப்பயும் மிஸ்டு கால் தான் கொடுப்பாங்கன்னு சொல்வாங்க நீ என்னடா ரீசார்ஜ் பண்ண காசுகொடு... பெட்ரோல் போட காசுகொடுன்னு கேட்டுட்டு இருக்க...

அதவிட அடுத்த மாசம் உனக்கு பொறந்த நாள் வருது கிஃப்ட் வாங்கணும்னு காசு கேக்குற... எப்டி எப்டி என் கிட்ட காசு வாங்கி அதுல கிஃப்ட் வாங்கி அத எனக்கே தரப்போறியா?

சும்மா திட்டாத எல்லாதுக்கும் கணக்கு வச்சுக்கோ மொத மாச சம்பளம் வந்ததும் பக்காவா செட்டில் பண்ணிடறேன்.

ம்ம்ம்ம்.... நீ வாங்கப் போற பத்தாயிரம் ரூபாய்ல எனக்கு கொடுக்கப்போறியா அப்பயும் மன் த் எண்டுன்னு சொல்லி எண்ட்ட தான் வந்து நிப்ப பாரு.

 உறவுகள் :

உறவுகள் :

அப்பறம் தம்பி என்று ஆரம்பிக்கும் போதே நமக்கு போன் கால் வந்து விட வேண்டும் இல்லையென்றால் அவசர வேலையாக யாராவது கூப்பிட்டு விட வேண்டும். ஆனால் ஒரு போதும் அப்படி நடக்காது, நாமாக எஸ்கேப் ஆனால் தான் உண்டு.

என் மருமகன் பேங்க் ஸ்டாஃப் தான் அவர்கிட்ட சொல்றேன் ரெஸூம் கொடுங்க.

இல்ல அங்கிள் பராவயில்ல நான் இன் ஜினியரிங் படிச்சிருக்கேன் சோ... கோர் ஃபீல்டுல போகலாம்னு ஐடியா ஏன் பேங்கிங் கூட நல்ல ஃபீல்டு தான் க்ரோர் க்ரோரா சம்பாதிக்கலாம்.

அடேய் சொட்டத்தலையா.. கோருக்கும் க்ரோருக்கும் வித்யாசம் தெரியாத நீயெல்லாம் அட்வைஸ் பண்றியா

உடன் பிறப்பே :

உடன் பிறப்பே :

நம்மை விட பெரியவர்கள் அண்ணன்.... அக்கா என்றால் மானத்தை விட்டு காசு கேட்டு விடலாம். ஆனால் தங்கை என்றால் அவ்வளவு தான்.

தம்பி என்றால் கூட எதாவது சொல்லி மிரட்டி காசைப்பிடுங்கலாம். அவனுக்கு சில நேரங்களில் அண்ணன் என்ற பயமிருக்கும் எங்கே தான் செய்த தவறை வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவானோ என்று பயத்துடன் இருப்பான். ஆனா இந்த தங்கச்சிக இருக்காளுகளே.... ஐயையோ...

கெஞ்சி... கொஞ்சி பணத்தை கரெக்ட் செய்து தெருவில் நடந்து கொண்டிருப்பேன்

பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்து.... டேய் அண்ணா ஒழுங்கா மிச்சக்காச கொண்டு வந்து குடு என்று குரல் வரும். பின்னால் திரும்பிப்பார்த்தால் தெருவே என்னை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கும்.

வொய் ப்ளட்... சேம் ப்ளட் ... உங்களுக்கும் இஸ்க்கு.... இஸ்க்கு என்று தானே கேட்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse life my story
English summary

Story About A Guy Explains His Life Without a Job

Story About A Guy Explains His Life Without a Job
Story first published: Thursday, December 7, 2017, 10:07 [IST]
Desktop Bottom Promotion