"இப்படியெல்லாமா ட்ரெஸ் போடுவீங்க" என இந்தியாவில் மக்கள் கொதித்தெழுந்த சம்பவங்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவைப் பொருத்தவரையில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லக்கூடாது. எதிர்த்து பேசக்கூடாது. குறிப்பாக உடை விஷயத்தில் நிறையவே உண்டு. 

சிலரை பொறுத்தவரையில் பெண்கள் என்றால் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் நீளமான உடையை அணிய வேண்டும். திரையில் எப்படி நடித்தாலும் பரவாயில்லை, திரையில் ரசிக்கலாம். அதே நடிகை அரைகுறை ஆடையுடன் வெளியே வந்தால் ரசித்தவர்கள் எல்லாம் இப்போது வில்லனாக மாறியிருப்பார்கள்.

பெண்கள், உடையை கூட இன்னும் தங்களின் விருப்பத்திற்கேற்றபடி அணிய முடியாமல் இருக்கிறார்கள் என்பதே பெரும் கவலைக்குறியீடு. பெண்கள்ஆடை விஷயத்தில் விமர்சனங்கள் கிளப்பிய சில சம்பவங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பண்டிகை மாதம் :

பண்டிகை மாதம் :

ரமலான் மாதத்தில் இன்பச்சுற்றுலா சென்ற டங்கல் திரைப்பட புகழ் நடிகை ஃபாத்திமா நீச்சல் உடையில் போஸ்ட்கொடுத்து படத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தார்.

அதைப்பார்த்த கொதித்தெழுந்தவர்கள் ரமலான் நோன்பு இருக்க வேண்டிய புனித மாதத்தில் இப்படி அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுப்பதா என்று வறுத்தெடுத்துவிட்டார்கள்.

பிரதமர் :

பிரதமர் :

பிரியங்கா சோப்ரா பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது, பிரியங்கா குட்டைப்பாவடை உடையை அணிந்திருந்தார். நாட்டின் பிரதமர் முன்னால் உட்கார்ந்து பேசும்போது எப்படி முட்டி தெரியும்படியான உடையை அணியலாம்? அடிப்படை நாகரிகம் கூட தெரியாதா என்று திட்டினார்கள்.

ஃபேஷன் :

ஃபேஷன் :

தீபிகா படுகோனே அரைகுறை ஆடையுடன் பேஷன் மாடலாக போஸ் கொடுத்திருந்தார். இதற்கு நெட்டிசன்கள் வறுத்தெடுத்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கிரிக்கெட் போட்டி :

கிரிக்கெட் போட்டி :

கிரிக்கெட் போட்டியின் நடுவே வர்ணனையாளராக வரும் மயாந்தியும் இந்த பிரச்சனையில் சிக்கியிருக்கிறார். வர்ணனை செய்யும் போது புகைப்படம் அரைகுறை ஆடையுடன் இருக்க , உடனே கிரிக்கெட் மேட்சுக்கு வரும் போது எப்படிப்பட்ட ஆடை அணிவது என்ற அடிப்படை நாகரிகம் தெரிந்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்று வரும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களால் இந்தியக் கலாச்சாரமே குறைந்துவிட்டது.

திருமண உடை :

திருமண உடை :

திருமணம் தொடர்பான மாத இதழ் ஒன்றில் அட்டைப்படத்தில் திருமண அலங்காரத்தில் கால் தெரியும்படியான ஒரு பெண்ணின் படம் இடம்பெற்றது.

பாரம்பரியான எங்களது கலாச்சாரத்தை இந்தப் புகைப்படம் சிதைத்துவிட்டது என்று புலம்பித்தள்ளினார்கள்.

விளையாட்டு :

விளையாட்டு :

இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா கூட இந்த புயலில் சிக்கியிருக்கிறார். மைதானத்தில் விளையாடும் போது ஷார்ட்ஸ் அணிந்து விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர்,

நீ விரும்பிய விளையாட்டை விளையாட அனுமதிக்கிறோம். ஆனால் விளையாடும் போது உடல் தெரியும்படியான உடை அணிவதை தவிர்க்க வேண்டும். மீறிச் செய்தால் உனக்கு எதிராக எடுக்கப்படும் இஸ்லாமிய மத நடவடிக்கையை எதிர்கொல்ல வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பார்ட்டி :

பார்ட்டி :

பார்ட்டி கொண்டாடும் போது குட்டைப்பாவடை,ஷார்ட்ஸ் போன்றவற்றை அணியக்கூடாது. இப்படியான ஆடை அணிவதால் தான் உங்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது என்ற அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தார்கள்.

ஸ்லீவ் லெஸ் :

ஸ்லீவ் லெஸ் :

கிரிக்கெட் வீரர் முகமது சமி தன் மனைவியுடனான புகைப்படத்தை வெளியிட்டார் அதில் அவரது மனைவி ஸ்லீவ் லெஸ் ஆடையை அணிந்திருந்தார். ஒரு முஸ்லீம் பெண்ணாக இருந்து கொண்டு எப்படி இப்படியான ஆடைகளை அணியலாம் என்று கிளப்பினார்கள். இதே போல இர்ஃபான் பதானின் மனைவியும் இதில் சிக்கினார்.

டான்ஸ் மூவ் :

டான்ஸ் மூவ் :

செக்ஸியான உடை, செக்ஸியான நடன அசைவுகளை எல்லாம் வெளிப்படுத்தக் கூடாது. இப்படியான கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் பெண்களால் எங்களின் உயர்ந்த கலாச்சாரம் கெடுகிறது.

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Society taught lesson about women dressing

Society taught lesson about women dressing
Story first published: Monday, September 18, 2017, 13:21 [IST]