For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலட்சுமி விரதம் எப்படி வந்தது என்பது பற்றிய புராணக் கதைகள்

By Suganthi Rajalingam
|

மழைக்காலம் வந்துவிட்டாலே நாக்கு வறண்டு தவிக்கும் தாகத்திலிருந்தும், சுட்டெரிக்கும் வெயிலிருந்தும் போன்ற கோடை கால பிரச்சினையிலிருந்து ஒரு விடுதலை கிடைக்கிறது. இந்த பருவ மழைக்காலத்தில் பசுமை நிறைந்த இயற்கையும், நம்பிக்கை பரவவும் கடவுளின் ஆசிர்வாதம் கிடைக்கவும் உகந்த காலமாகும்.

இந்த மங்களகரமான ஆடி மாதத்தில் வருகின்ற வரலட்சுமி பூஜை எல்லா விதமான வரங்களையும் மகிழ்ச்சியையும் கொடுத்து அடுத்த வருஷம் வரை நீடித்து இருக்கச் செய்கிறது.

Significance Of Yamuna Pooja In Varamahalakshmi Festival

இந்த வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமி விரதம் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் கோடை முடிந்து பருவ மழை ஆரம்பிக்கும் மாதமாகும். ஆங்கில மாதம் படி பார்த்தால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வருகிறது.

இந்த விரதத்தின் போது அழகிய வண்ண மலர்களும், வண்ண ஓவியங்களாக காட்சியளிக்கும் ரங்கோலி கோலங்களும் எங்கு பார்த்தாலும் கவர்ந்திழுக்கும். இந்த விரதத்தை சிறப்பாக செய்ய மார்க்கெட்டில் நிறைய அலங்கார பொருட்கள், அம்மாளுக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் எல்லாம் கிடைக்கின்றன.

தொழில் செய்பவர்கள், வீடுகளில், கடைகளில் இப்படி எல்லா இடங்களிலும் செல்வ வளங்கள் செழிப்போடு இருக்க வேண்டி இந்த வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த விரதத்தை குறிப்பாக சுமங்கலி பெண்கள் மேற்கொண்டு தங்கள் வீடுகளில் லட்சுமி தேவி சகல ஐஸ்வர்யங்களுடன் தங்க வேண்டுமென்றும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டுமென்றும் வழிபடுகின்றனர்.

இந்த வரலட்சுமி விரதமானது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இதுவே மகாலட்சுமி பூஜை என்ற பெயரில் வட மாநிலங்களான பீகார், மத்திய பிரதேசம், மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற இடங்களில் கொண்டாடப்படுகின்றன.

Significance Of Yamuna Pooja In Varamahalakshmi Festival

லட்சுமி தேவி பிறந்த கதை :

செல்வ அதிபதியான ஸ்ரீ மகாலட்சுமி தேவி கடவுள் கிருஷ்ணனுடன் அதர்மங்களை அழிப்பதற்காக பூலோகத்தில் பிறந்தார். ஸ்ரீ லட்சுமி தேவி தாமரையில் பத்மாசனம் முறையில் வீற்றிருந்து பக்தர்கள் எல்லாருக்கும் காட்சி கொடுப்பவர். அவரது தாமரை வடிவத்தை பத்ம பூரணம் என்பர்.

ஒரு நாள் அசுரர்கள் தேவர்களையும் மக்களையும் துன்புறத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம் தங்களை காக்குமாறு முறையிட்டனர். கடவுள் கிருஷ்ணன் அசுரர்களை அழிப்பதற்கு தக்க யோசனையாக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்து அமிர்ந்தத்தை எடுப்போம் என்று முறையிட்டார்.

அசுரர்கள் அமிர்தத்தின் மீது கொண்ட ஆசையால் அதற்கு ஒத்துக் கொண்டனர். பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் எவராலும் பிளக்க முடியாத வஜ்ஜிரம் போன்ற ஓடுகளையுடைய கூர்மம் எனும் ஆமை வடிவத்தை எடுத்து மந்திர மலையின் கீழ் அமர்ந்தார்.

மந்திர மலையை தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு கட்டி ஆளுக்கு ஒரு பக்கமாக பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.

பாற்கடலை கடைய கடைய அற்புதமான விஷயங்களான வெண்குதிரை, ஐராவதம், காம தேனு சந்திரா போன்ற எண்ணற்ற பொருள்களுடன் அழகின் வடிவமான செல்வ அதிபதியான தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியும் பாற்கடலிருந்து வெளிப்பட்டாள்.

அவள் அப்படியே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் நெஞ்சில் குடி கொண்டு விட்டாள். திருமகள் தன்னை விட்டு எப்போதும் பிரியாத வண்ணம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவும் தன் திருமார்பில் சேர்த்து கொண்டார். தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்து அசுரர்கள் இதில் தோல்வியடைந்து தங்கள் அகந்தையை விட்டனர்.

வரலட்சுமி விரதம்

வர என்பதற்கு வரங்கள் என்றும் லட்சுமி என்பதற்கு அஷ்ட லட்சுமி என்றும் பொருள்.

அஷ்ட லட்சுமி வடிவம்

ஆதி லட்சுமி - முதன்மை கடவுள். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் இந்த லட்சுமியை வழிபட்டு ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும்.

தானிய லட்சுமி - வாழ்க்கைக்கு தேவையான உணவு அளிப்பவள்

தைரிய லட்சுமி - தைரியத்தை கொடுப்பவள்

கஜலட்சுமி - ஒரு நாட்டின் ஆளும் பொருப்பை கொடுப்பவள்

சந்தான லட்சுமி - நன்மக்கள் பேற்றினை அடைய முடியும்

விஜய லட்சுமி - வெற்றியை கொடுப்பவள்

வித்யா லட்சுமி - அறிவை தருபவள்

தன லட்சுமி- சகல ஐஸ்வர்யங்களையும் தருபவள்

விரதத்தின் முக்கியத்துவம் பற்றிய கதைகள்

சிவனும் பார்வதி தேவியும் பகடை விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது யார் வெற்றி பெற்றது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் நேர்மையான பிராமணர் சித்ராநேமியை தீர்ப்பு சொல்லும் படி வினவினர். அவர் கடவுள் சிவ பெருமான் வெற்றி பெற்றதாக சொல்லி விட்டார்.

இதனால் கோபமடைந்த பார்வதி அவருக்கு தொழு நோய் கொடுத்து சாபம் அளித்து விட்டார். சிவபெருமான் கருணை காட்டும் படி பார்வதியை கேட்டுக் கொண்டதால் வரலட்சுமி பூஜை மேற்கொண்டால் நோய் குணமாகும் என்று கூறினார். இதன் படி சித்ராநேமியும் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து நோயிலிருந்து விடுபட்டார்.

Significance Of Yamuna Pooja In Varamahalakshmi Festival

மகத நாட்டில் குஞ்சினாபுரத்தில் சாருமதி என் பெண் வாழ்ந்து வந்தாள். இவள் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் மீது மிகுந்த அன்பு கொண்டு அவர்கள் மீது அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டாள்.

அவளது மனப்பான்மையால் மகிழ்ச்சி அடைந்த மகாலட்சுமி அவரது கனவில் தோன்றி வரலட்சுமி ஆக காட்சியளித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் படி கூறினார். அதன் முறைகளையும் கூறி அந்த வரலட்சுமி விரதத்தை அவள் மேற்கொண்டால் எல்லா விதமான நன்மைகளும் கிடைத்தது. இதைக் கண்ட அந்த நாட்டு மக்களும் அந்த விரதத்தை மேற்கொள்ள தொடங்கி னர். இதனால் நாடே சுபிட்சம் அடைந்தது.

நாம்மளும் இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடித்து லட்சுமி தேவியை வீட்டில் குடி கொண்டு சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.

English summary

Significance Of Yamuna Pooja In Varamahalakshmi Festival

Significance Of Yamuna Pooja In Varamahalakshmi Festival
Story first published: Thursday, August 3, 2017, 16:15 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more