பாலுணர்வு அடிக்ஷன்! தன்னை சித்திரவதை செய்து கொல்ல வற்புறுத்திய பெண்- CrimeStory #001

Posted By:
Subscribe to Boldsky

உலகில் பல விசித்திர சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் அடிக்ஷன், சைக்கோ எண்ணம் கொண்டவர்களால் நாம் கனவிலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பல பயனகரமான நிகழ்வுகள் நமது உலகில் நடந்தேறியுள்ளன.

பலரும் அடிக்ஷன் என்றால் புகையும், மதுவும் தான் என கருதுகிறார்கள். ஆனால், அதிகப்படியாக காபி குடிப்பதில் இருந்து, பெண்களின் உள்ளாடைகளை திருடுவது வரை பல விசித்திரமான அடிக்ஷன் கொண்டிருந்த நபர்களை நாம் உலகில் கண்டுள்ளோம்.

அப்படி ஒரு நபர் தான், ஷரோன் லோபட்கா எனும் இந்த பெண்மணி. இவர் இறந்து ஏறத்தாழ 21 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இவரது மரணம் குறித்து தனி விக்கிப்பீடியா பக்கம் இருக்கிறது. அந்த அளவிற்கு இவர் உலகின் சிறந்த நபரா? என்றால் இல்லை.

ஆனால், இவரது மரணம் உலகில் யாரும் அன்று வரை அறிந்திடாத விசித்திரமான சம்பவமாக அமைந்திருந்தது. பார்னில் அதிக அடிக்ஷன் கொண்டிருந்தாக கூறப்படும் ஷரோன் லோபட்கா, பல ஆண்களிடம் தன்னை சித்திரவதை செய்து கொல்லும்படி வேண்டியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷரோன் லோபட்கா!

ஷரோன் லோபட்கா!

அக்டோபர் 1996., வடக்கு கரோலினாவில் ஆழமற்ற ஒரு கல்லறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஷரோன் லோபட்கா எனும் 35 வயது பெண்மணி. ஷரோன் லோபட்காவின் மரணம் விசித்திரமான வழக்காக மட்டும் இருக்கவில்லை. அதில் பல மர்மங்கள், வினோதங்கள் புதைந்திருந்தன. ஷரோன் லோபட்காவின் மின்னஞ்சல்கள் இந்த வழக்கில் பெரிய திருப்பு முனையாக அமைந்தன.

Image Source: Youtube

இண்டர்நெட்!

இண்டர்நெட்!

1990-களில்... அந்த சமயத்தில் தான் இன்டர்நெட்டின் பயன்பாடு மக்கள் மத்தியில் கொஞ்சம், கொஞ்சமாக பயன்பாட்டில் இருந்த காலம். ஷரோன் லோபட்காவிற்கு பாலுணர்வு ஆசைகள் மற்றும் மூட நம்பிக்கைகள் அதிகம்.

சரியாக சொல்ல வேண்டும் எனில், கொஞ்சம் மூர்க்கத்தனமான ஆசைகள் கொண்டிருந்தார் ஷரோன் லோபட்கா.தன்னை யாரேனும் செக்சுவல் ரீதியாக டார்ச்சர் செய்து கொலை வேண்டும் என மிகவும் விரும்பினார் ஷரோன் லோபட்கா.

ஆன்லைனில்!

ஆன்லைனில்!

இவர் சாட்டிங் இணையதளங்களில் இதற்காக பல ஆண்களுடன் பழகியுள்ளார். அதில் ஒருமுறை ஓர் ஆணிடம் பழகி தனது ஆசையை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த அந்த ஆண் உடனே இவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். ஷரோன் லோபட்கா இணையதளங்களில் சாட்டிங் செய்யும் போது தனது பெயரை Slowland என வைத்துக் கொண்டிருந்தது விசாரணையும் போது அறியவந்தது.

Image Credit: Glenn Carstens-Peters

ராபர்ட் கிளாஸ்!

ராபர்ட் கிளாஸ்!

கணினி இயக்க துறையில் அப்போது அரசு வேலை செய்து வந்தவர் என அறியப்படுகிறார் ராபர்ட் கிளாஸ் எனும் நபர். இவர் 45 வயது விவாகரத்து பெற்ற நபர். ஷரோன் லோபட்கா தனது சொந்த ஊரான மேரிலாந்தில் இருந்து செல்லும் போது, விர்ஜினியாவில் இருக்கும் தன் தோழிகளை காண செல்கிறேன் என குடும்பத்தாரிடம் கூறிவிட்டு வடக்கு கரோலினா சென்றுள்ளார்.

Image Credit: Youtube

மின்னஞ்சல்கள்!

மின்னஞ்சல்கள்!

ஷரோன் லோபட்கா தனது மரணத்தை தீர்மானித்துக் கொண்டு தான் சொந்த ஊரில் இருந்து கிளம்பியுள்ளார் என்பதிலிருந்து அத்தனை தகவல்களும் ஷரோன் லோபட்காவின் மின்னஞ்சல்களை ஆய்வு செய்த போது அறியப்பட்ட தகவல்கள் ஆகும். ஏறத்தாழ கிளாஸ் மற்றும் ஷரோன் லோபட்கா இருவரும் 900க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களின் மூலம் பேசியுள்ளனர்.

மறுப்பு!

மறுப்பு!

ஆரம்பத்தில் கிளாஸ்ம் ஷரோன் லோபட்காவின் இந்த வேண்டுதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இப்படி ஒரு கொலை சம்பவத்தை அவர்கள் இருவரும் நிறைய முறை மின்னஞ்சல் மூலம் பேசி திட்டமிட்டே முடிவு செய்துள்ளனர். எப்படி எல்லாம் சித்திரவதை செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என்பதை ஷரோன் லோபட்காவிடம் கிளாஸ் விலாவாரியாக கூறியுள்ளார்.

பயணம்!

பயணம்!

தனது மரணத்திற்காக ஷரோன் லோபட்கா நானூறு மைல் தூரம் பயணம் செய்து சென்றுள்ளார். ஏன், எதனால் ஷரோன் லோபட்கா இப்படி ஒரு முடிவுக்கு வந்தார், இவருக்கு எப்படி இப்படியான ஆசைகள் அல்லது அடிக்ஷன் உருவானது என்பது குறித்த தகவல்கள் ஏதும் சரியாக இல்லை. ஷரோன் லோபட்காவுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கணவருக்கு கடிதம்!

கணவருக்கு கடிதம்!

மேலும், வீட்டில் இருந்து கிளம்பும் முன்னர் ஷரோன் லோபட்கா தனது கணவருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில்,"எனது மரணத்திற்கு பிறகு, அதற்கு யார், எவர் என்ன காரணம் என நீங்கள் எதையும் தேடாமல் இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்" என தெரிவித்திருந்தார். இதன் பிறகு தான் போலீசில் தனது மனைவி காணாமல் போயிருக்கிறார் என ஷரோன் லோபட்காவின் கணவர் புகார் அளித்துள்ளார்.

விசாரணை!

விசாரணை!

இதன் பிறகு போலீஸ் ஷரோன் லோபட்காவின் வீட்டிற்கு சென்று, அவரது ஃபேமிலி கம்ப்யூட்டரை ஆராய ஒப்புதல் வேண்டியுள்ளனர். கணினியை ஆராய்ந்த போது தான் ஷரோன் லோபட்காவிற்கு இப்படி ஒரு பாலுணர்வு அடிக்ஷன் இருக்கிறது. அவர் தன்னை யாரேனும் செக்சுவல் ரீதியாக சித்திரவதை செய்வதை மிகவும் விரும்பியுள்ளார். அதன் உச்சகட்டமாக தன்னை யாரேனும் இந்த வகையில் சித்திரவதை செய்து கொல்ல வேண்டும் என பலரை அணுகியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

Image Credit: Jay Wennington

பிரேதம்!

பிரேதம்!

ஷரோன் லோபட்காவின் உடலை கண்டெடுத்த போது நிர்வாண நிலையில் அவரது உடல் புதைக்கப்பட்டிருந்தார். அவர்கள் உடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் நிறையவே இருந்தது.

அவரது கழுத்திலும், மார்பிலும் நிறைய காயங்கள் ஏற்பட்டிருந்தன. பல சித்திரவதைகளை கடந்து மூச்சுத்திணறி ஷரோன் லோபட்கா உயிரிழந்துள்ளார் என அறியப்பட்டது.

விசித்திரமான மரணம்!

விசித்திரமான மரணம்!

பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷரோன் லோபட்காவின் மரணம் மிகவும் விசித்திரமாக இருக்கிறது என குறிபிடப்பட்டுள்ளது. ராபர்ட் கிளாஸ், ஷரோன் லோபட்காவே தானாக முன்வந்து கேட்டதால் இப்படி செய்ததாகவும். அதை நினைத்து மிகவும் வருந்துகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கிளாஸ், 2002ல் விடுதலை ஆகும் முன்னரே 2000ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக சிறையிலேயே மரணமடைந்துவிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sharon Lopatka Arranged Her Own Sex Murder Online - Crime Story #001

Sharon Lopatka Arranged Her Own Sex Murder Online!
Subscribe Newsletter