For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018ல் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறக்க, பெரியாரின் பொன்னான வாக்கியங்கள்!

2018ல் உங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறக்க, பெரியாரின் பொன்னான வாக்கியங்கள்!

|
Periyar's Golden Thoughts To Bring Brightness in 2018!

சாதி, மத வெறி ஒழிய வேண்டும், நம்பிக்கை, தன்மானம், பகுத்தறிவு, ஒழிக்கம் வலவர வேண்டும். மூட நம்பிக்கை தவிர்த்து, தன்னம்பிக்கை வளர்த்துக் கொள் என தமிழ் மக்கள் எண்ணத்தில் புரட்சி விதையை தூவிச் சென்றவர் பெரியார் எனும் ஈரோடு வெங்கடப்பா ராமசாமி.

மது மதத்தை விட கொடியது, அது மதியை அழிக்கும் என அறிவுரைத்தவர். அதை எதிர்த்து போராட்டங்கள் பல நடத்தியவர். தனது வாழ்க்கையை ஏழைகள் மக்களின் தரம் உயர, நிலை உயர பாடுபட்டவர் பெரியார். எவன் ஒருவனிடம் ஒழுக்கமும், நற்பண்புகளும், உண்மையை மறைக்காத குணமும் இருக்கிறதோ அவனே பெரிய மனிதனாக உருவாகிறான் என உரைத்தவர் பெரியார்.

இதோ! ஒருவரிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும், கூடாது என பெரியாரின் பொன்மொழிகள்...

விலை!

இலட்சியத்தை அடைவதற்காக, கஷ்ட, நஷ்டம் என்ற விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்.

பதவி!

நெருப்பும் குளிர்ச்சியாகலாம்,
வேப்பெண்ணெய் தேனாகலாம்,
ஆனால்,
பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது.

பெரிய மனிதன்!

மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும்
சிறு வயதில் இருந்தே ஒருவன் நன்றாக கற்றுக் கொண்டானானால்,
அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

நலன்!

வாழ்க்கை அவரவர் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது,
அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

மதி கெடுக்கும் மது!

மக்களின் ஒழுக்கம் மற்றும் மதியை கெடுப்பது மது.

பகைவன்!

மூட நம்பிக்கையும், குருட்டுப் பழக்கமும் தான் சமூகத்தின் முதல் பகைவன்.
விதியை, நம்பி மதியை இழக்காதே!

சுபிட்சம்!

ஒரு நாடு சுபிட்சத்தோடு வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒழுக்கக் குறைவுக்கும், மூட நம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயப்பட்டு விடக் கூடாது.

ஒழுக்கம்!

பக்தி என்பது தனிச் சொத்து.
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து.
பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை.

ஆனால், ஒழுக்கம் இல்லை எனில் பாழ்ப்பட்டுவிடும்.
பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு!

தாழ்ந்த மக்கள்!

கல்வி அறிவும்
சுய மரியாதை எண்ணமும்
பகுத்தறிவுத் தன்மையுமே

தாழ்ந்து கிடைக்கும் மக்களை உயர்த்தும்!

இருவர்!

உலகில் சந்தோஷமாக வாழ்பவர் இருவர் மட்டுமே.
ஏமாற்றும் அரசியல்வாதிகளும், கடவுள் பெயரை சொல்லும் சாமியார்களும்.

ஓட்டு!

நான் என் ஆயுள் உள்ளவரை யாரிடமும் ஓட்டுக் கேட்க மாட்டேன். எனக்காக இரண்டு புகழ் வார்த்தை சொல்லும்படி யாரிடமும் எதிர்பார்க்க மாட்டேன்.

பலம்!

ஒழுங்காக தன்னை நடத்தி, உண்மையை மறைக்காமல் எல்லாவற்றிலும் நேர்மையை கடைப் பிடிப்பவனுக்கு அது ஒரு தனிப்பட்ட பலத்தைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

மனிதன்!

கடவுளை மாற, மனிதனை நினை!

சாதி, மதம்!

மனிதனை மதம் மிருகமாக்கும்.
சாதி சாக்கடையாக்கும்!

பகுத்தறிவு!

சிந்திக்கும் தன்மையின் கூர்மையே பகுத்தறிவு
பகுத்தறிவுக்கும், தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்.

மாற்றம்!

மாறுதலுக்கு, வளைந்துக் கொடுக்காத மனிதன் மாள வேண்டியதுதான்.

English summary

Periyar's Golden Thoughts To Bring Brightness in 2018!

Periyar's Golden Thoughts To Bring Brightness in 2018!
Story first published: Saturday, December 30, 2017, 10:50 [IST]
Desktop Bottom Promotion