For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவேளை அன்னிக்கி அம்மாவ இன்னொரு ஆள்கூட பார்க்காம இருந்திருந்தா... - My Story #081

ஒருவேளை அன்னிக்கி அம்மாவ இன்னொரு ஆள்கூட பார்க்காம இருந்திருந்தா... - My Story #081

|

எனக்கு மியூசிக் தான் எல்லாமே, அதைத்தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது. இப்ப எனக்கு துணையா இருக்கிறது, என்னோட வாழ்வோட ஆதாரமா இருக்கிறது, என் காதல், வாழ்க்கை, உயிர் எல்லாமே மியூசிக் தான்.

எல்லாரும் எழுந்ததும் காபி குடிப்பாங்க, பேப்பர் படிப்பாங்க, டிவி பாப்பாங்க, ஃப்ரெண்ட்ஸ் கூட வாக்கிங் போவாங்க. ஆனா, என்ன பொறுத்த வரைக்கும்... என்னோட கிட்டார் எடுத்து ரெண்டு நிமிஷம் சும்மாவாவது வாசிச்சா தான் என்னோட பொழுதே விடியும்.

என் கிட்டாருக்கு என்னோட அழுகை, சிரிப்பு, என் வாழ்க்கையில நடந்த எல்லாமும் தெரியும். நானும், என் கிட்டாரும் மியூசிக்ல தான் பேசிப்போம். நான் என் கிட்டார எவ்வாலோ லவ் பண்றானோ, அதுக்கும் மேல ஒரு பொண்ணு என்ன லவ் பண்றா... அவ பேரு ஆர்த்தி!

ஃபர்ஸ்ட் அவளுக்கு என்னோட மியூசிக் புடிச்சது. அப்பறம் கொஞ்சம், கொஞ்சமா என்னையும் பிடிச்சது. ஒரு பொண்ணு, ஒரு பையன்ன 6 வருஷமா விடாம லவ் பண்றாங்கிறத, சினிமாவா இல்லாம, ரியல் லைப்ல நான் பார்த்தது ஆரத்திய தான்.

தமிழ்நாட்டு நிறம், ஆனா அதில்ல அவளோட அழகு... அவளோட தைரியம் தான் அவளோட முழு அழகு. எனக்கும் அவள புடிச்சிருக்கு. ஆனா, என்னால லவ் எல்லாம் பண்ண முடியாது. நான் கடந்து வந்த ஒரு சம்பவம்... என் மொத்த வாழ்க்கையையும் திருப்பிப் போட்டுடுச்சு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்பா - அம்மா!

அப்பா - அம்மா!

என் ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் என் மேல ஒரு பொறாமை இருந்துச்சு. எப்படிடா உன் அப்பா - அம்மா மட்டும் இவ்வளோ ஃபிரெண்ட்லியா இருக்காங்கன்னு கேட்பாங்க. ஆமா! என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ன்னு சொல்ற அளவுக்கு என் அப்பா - அம்மா எனக்கு ரொம்ப க்ளோஸ். (ஆனா, இது ரொம்ப நாளைக்கு நீடிக்கல.) எனக்கு எக்ஸாம்ல எவ்வளோ மார்க் வரும்னு நான் எழுதுனத வெச்சு, எக்ஸாம் எழுதன அன்னிக்கே சொல்லிருவேன்.

எல்லாமே அவங்க தான்!

எல்லாமே அவங்க தான்!

நான் ஃபர்ஸ்ட் ரேன்க் தான் எடுக்கணும்ங்கிற கட்டாயமும் இருந்தது இல்ல. படிப்பு மட்டுமில்ல, ரோட்ல ஒரு பொண்ண பார்த்தேன். அவள எனக்கு பிடிச்சிருந்ததுனு சொல்றதுல இருந்து, முதல் தடவ சரக்கடிச்ச வரைக்கும் நான் வீட்டுல எதையும் மறைச்சது இல்லை. இதெல்லாம் பெரிய பெருமையான்னு நீங்கள் கேட்கலாம். ஆனால், என்ன அவங்க வளர்த்த விதம் யூனிக்கா இருந்துச்சு.

கிரிக்கெட்!

கிரிக்கெட்!

மியூசிக் என் லைப்ல வந்த செகண்ட் லவ் தான். கிரிக்கெட்!!! அதுதான் சின்ன வயசுல இருந்து என்கூட வளர்ந்த பெஸ்ட் ஃப்ரெண்ட். தென்னமர மட்டையில ஆரம்பிச்சு, பழைய காலண்டர், பேப்பர் பால்ன்னு கிரிக்கெட் என்கூட அறிமுகமானது வேற விதத்துல தான். எனக்கு கிரிக்கெட் பிடிச்சத பார்த்து அப்பா பேட்டும், பாலும் வாங்கிக் கொடுத்தாரு. அப்பறம் என்ன, ஸ்கூல் முடிஞ்சாலும் கூட, இருட்டுற வரைக்கும் கிரிக்கெட் ஆடிட்டு தான் கிளம்புவேன்.

காலேஜ்!

காலேஜ்!

நான் காலேஜ் படிக்கும் போதுதான் என் வாழ்க்கையே மாறிச்சு. அப்போ தான் மியூசிக் மேல ஒரு இன்ட்ரஸ்ட். அதுக்கு ஒரு காரணம் வாரணம் ஆயிரமும் கூட. இப்போ தெரியுதா நான் ஏன் கிட்டார் சூஸ் பண்ணேன்னு. அப்போதா நான் மியூசிக் கிளாஸ் ஜாயின் பண்ண புதுசு. அரையும் கொறையுமா கத்துக்கிட்ட மியூசிக் வெச்சு காலேஜ்ல செம்ம சீன் போட்ருக்கேன். அப்போ இருந்தே ஆர்த்திக்கு என்ன தெரியும். ஆனா, அவ எனக்கூட பேசினது இல்ல.

ஒரு நாள்...

ஒரு நாள்...

ஒரு நாள் வீக்கென்ட்ல மியூசிக் கிளாஸ்க்கு கிளம்பினேன். அம்மாக்கிட்ட எப்படியும் ஈவினிங் வர லேட்டாகும்னு சொல்லிட்டேன். ஃப்ரெண்ட்ஸ் கூட படத்துக்கு போற பிளானும் இருந்துச்சு. ஆனா, அன்னிக்குன்னு பார்த்து மியுசிக் கிளாஸ்க்கு லீவ்னு சொல்லிட்டாரு மாஸ்டர். மதியம் போலாம்னு இருந்து சினிமா பிளான மார்னிங்க்கு மாத்திட்டோம். ஏப்ரல் மாச வெயில்ல சினிமா முடிஞ்சு வெளியவும் சுத்த முடியல. கிரிக்கெட்டும் ஆடமுடியல. அதனால, ஃப்ரெண்ட்ஸ ஈவ்னிங் கிரவுண்டுல பாக்கலாம்னு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்.

அந்த சம்பவம்...

அந்த சம்பவம்...

அம்மாவ பயமுறுத்துறது எனக்கு பிடிச்ச விஷயம். வீட்டுல யாரும் இல்ல, அம்மா மட்டும் தான் தனியா சமைச்சிட்டு இருப்பான்னு காம்பவுண்டு கதவ திறக்காம, சுவரு ஏறிக் குதிச்சு மெல்லமா, அம்மாவ பயமுறுத்த போனேன். உள்ள நுழையும் போதே, அம்மா யார் கூடயோ சிரிச்சு பேசுற மாதிரி சப்தம் கேட்டுச்சு. சரி, போன்ல தான் பேசிட்டு இருப்பான்னு நெஞனச்சு ஷாக் கொடுக்கலாம்ன்னு மெல்ல, மெல்ல உள்ள நடந்து போனேன்.

பேச்சு....

பேச்சு....

பேச்சு வேற மாதிரி போச்சு... என்னால அந்த வார்த்தை எல்லாம் கேட்க முடியல. என் அம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க இப்படி யார் கூடயோ பேசிட்டு இருந்தத நான் ஏன் கேட்டேன்னு தோணுச்சு. தப்பு அவங்க மேல தான். இதுக்கு பேசாம நான் கதவ திறந்தே வந்திருக்கலாம், சத்தம் கேட்டு அவங்க போன கட் பண்ணிருப்பாங்க. எனக்கும் எதுவும் தெரியாம போயிருக்கும்.

தவறு!

தவறு!

நான் அப்ப பண்ணது சரியா, தப்பான்னு தெரியல. அது எங்க குடும்பத்தையே சிதறடிச்சிருச்சு. எதையும் அப்பா - அம்மாக்கிட்ட மறைக்க தெரியாத நான். இதையும் அப்பா கிட்ட நேருல சொல்லிட்டேன். வீட்டுல சண்டை முத்திடுச்சு. ஒருநாள் அப்பா ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாரு. கொஞ்ச நாள்ல குற்றவுணர்ச்சியில அம்மாவும் சூசைட் பண்ணிக்கிட்டாங்க. எல்லாரும் அப்பா இறந்த சோகத்துல தான், அம்மா இப்படி பண்ணிக்காட்டங்கன்னு நெனச்சாங்க. ஆனா, உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும்.

சந்தேகம்!

சந்தேகம்!

என் அம்மா நிஜமாவே ரொம்ப நல்லவங்க. அவங்க பண்ண ஒரே தப்பு அது மட்டும் தான். இதுக்கப்பறம் எனக்குள்ள கொஞ்சம் கொஞ்சமாக சந்தேகம் வளர ஆரம்பிச்சது. யாரு நல்லா பேசினாலும் கூட, நாம யாரும் இல்லாட்டி அவங்க தப்பு பண்ணுவாங்களோன்னு எனக்குள்ள ஒரு எண்ணம் வளர ஆரம்பிச்சது. இது சந்தேகமா, எனக்குள்ள வளர்ந்திட்டு இருக்குற மன நோயான்னு தெரியல.

அதுக்கு பிறகு...

அதுக்கு பிறகு...

விளையாட்டா கத்துக்க ஆரம்பிச்ச மியுசிக் என் லைப்ல சீரியஸா மாறினது அதுக்கு அப்பறம் தான். என்னோட மைண்ட்செட் மாறனும், அதுக்கு என்னோட எண்ணத்த வேற பக்கம் திசை திருப்பனும். நல்லாவே மியூசிக் கத்துக்கிட்டேன். பெங்களூர் போனேன், நிறையே ஷோ பண்ணேன். அங்கேயே ஒரு சின்ன மியூசிக் கிளாஸ் எடுத்துட்டு, யாருக்கும் தெரியாம வாழலாம்ன்னு முடிவு பண்ணேன். ஆனா, ஆர்த்தி மட்டும் என்ன கண்டுபிடிச்சுட்டா. எனக்காக சென்னையில இருந்த வேலையவிட்டு , பெங்களுர்க்கு ட்ரான்ஸ்வர் ஆகிவந்தா ஆர்த்தி.

என்னோட சிக்கல்...

என்னோட சிக்கல்...

ஆர்த்தி ரொம்ப ஜோவியல். சகஜமா பழகுவா, டேக் இட் ஈஸி டைப். இது எனக்கு காலேஜ் டைம்ல இருந்தே தெரியும். இப்போ அவ என்ன லவ் பண்றதால நிறையவே தெரியும். ஆனா, என்னோட சிக்கல் என்னனா.. எங்க நான் அவளையும் சந்தேகப்பட்ருவனோங்கிறது தான். என் லைப்ல ஆர்த்தி மாதிரி வேற பொண்ணு கிடைக்கக் சான்சே இல்ல. ஆனா, அவள நான் கஷ்டப்படுத்திட கூடாது. அது மட்டும் தான் என்னோட ஒரு கருத்து.

போதும்!

போதும்!

என் வாழ்க்கையில இதுவர நடந்ததே போதும். இது சந்தேகமா? மன நோயான்னு தெரியாம நான் வாழ்ந்துட்டு இருக்கேன். இதுக்கு ஒரு தீர்வு இருக்கா, இல்லையானும் எனக்கு தெரியாது. அவள என்னால ஏத்துக்கவும் முடியல, மறக்கவும் முடியல. அவளும் என்ன மறக்குறதா இல்ல. என் வாழ்க்கையில நடந்த சம்பவத்தை பத்தி அவக்கிட்ட சொல்லி, இதுதான் என் பிரச்சனைனு சொல்லிடலாம்னா குடும்ப கௌரவம், இறந்தவங்க பேரு கெட்டுரும்ன்னு சொல்லவும் முடியல.

என் சோகத்த எங்க கொட்டுறதுன்னு தெரியில. இங்க கொட்டிட்டேன்!

போதும்! என் பிரச்சனை என்னோட போகட்டம். அவளாவது சந்தோஷமாக இருக்கட்டும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Story: Why I Afraid To Love Any Girl?

My Story: Why I Afraid To Love Any Girl?
Story first published: Saturday, November 25, 2017, 13:19 [IST]
Desktop Bottom Promotion