கணவரின் நண்பர் செக்ஸ் டார்ச்சர். மனைவியை விட நண்பனை நம்பும் கணவர் - My Story #112

Posted By:
Subscribe to Boldsky

நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். ஆரம்பத்தில் இரு குடும்பமும் எதிர்ப்பு தெரிவித்தது. திருமணத்தின் போது எனது கணவரின் குடும்பத்தாரும். குழந்தை பிறந்த பிறகு எனது குடும்பத்தாரும் எங்களை ஏற்றுக் கொண்டனர். என் திருமண வாழ்க்கையில் நான் எதிர்பார்த்த பிரச்சனைகள், சச்சரவுகளை காட்டிலும் குறைவாக தான் நாங்கள் எதிர் கொண்டோம்.

காரணம், எங்கள் காதலுக்கு இருவீட்டார் மத்தியில் இருந்த எதிர்ப்பு அப்படி. சினிமாவிலும், செய்திகளிலும் காணும்படியாக பெரிய சண்டையும், பல ஆண்டுகள் தனியாக வாழும் சூழலும் இருக்கும் என கருதினோம். ஆனால், திருப்பு முனையாக எல்லாம் சுபமாக முடிந்தது. திருமணமான ஒரு வருடத்திற்குள் எல்லா சொந்த பந்தங்களுளும் சுப நிகழ்வுகளில் கூடும்படியாக வாழ்க்கை நன்றாக தான் அமைந்தது.

வாழ்க்கையும் நிம்மதியாக இருந்தது..., அந்த எதிர்பாராத விபத்து ஏற்படும் வரை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பத்தே மாதங்களில்!

பத்தே மாதங்களில்!

எங்களுக்கு திருமணமான பத்தே மாதத்தில் குழந்தை பிறந்துவிட்டது. என் கணவர் மிகவும் கனிவானவர். யார் மீதும் தனது கோபத்தை வெளிக்காட்ட மாட்டார். நீங்கள் ஓரிரு நாட்கள் அவருடன் பழகிவிட்டால் போதும், அதிக அக்கறை எடுத்துக் கொள்வார். மற்றவர் மீதே அப்படி எனில், கட்டியவள் மற்றும் குழந்தை மீது எப்படி என்று கூறவா வேண்டும். மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருந்தது எங்கள் இல்லற வாழ்க்கை.

பிரிவு?!

பிரிவு?!

காதலிக்கும் போது கூட பிரிவுகளை ஏற்றுக் கொண்டுள்ளோம். ஒரு மாதம் ஒருவரை, ஒருவர் பார்க்காத சூழல் கூட ஏற்பட்டுள்ளது. ஆனால், கணவன் - மனைவியாக எங்களுக்குள் பிரிவு என்பதே இருந்ததில்லை. எங்கள் தாம்பத்திய உறவும் அப்படி தான். அவரால் என்னைவிட்டு ஒரு நாள் கூட பிரிந்திருக்க முடியாது. என்னை எப்போதும் அரவணைப்புடன் பார்த்துக் கொள்வார்.

விபத்து!

விபத்து!

ஒரு நாள் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினார் என் கணவர். பயப்படும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. இடுப்பில் கொஞ்சம் பலமான அடிப் பட்டிருந்தது. ஆகையால் ஓரிரு மாதங்கள் என் கணவர் சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டார். ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும் என்று மருத்துவர்களும் கூறியிருந்தனர். ஆனால், அந்த விபத்து என் கணவருக்கு ஏற்பட்டது அல்ல, என் வாழ்க்கைக்கு ஏற்பட்டது என சில மாதங்கள் கழித்து தான் உணர்ந்தோம்.

ஆண்மை!

ஆண்மை!

விபத்தின் போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட அடியால். என் கணவரால் உடலுறவில் ஈடுபட முடியாமல் போனது. ஆரம்பத்தில், வலி காரணமாக அவதி என கருதினோம். பிறகு, மருத்துவரிடம் பரிசோதனை செய்த பிறகு தான் முழுமையாக அந்த பிரச்சனை கண்டறியப்பட்டது. இந்த செய்தி அறிந்த பிறகு எனது கணவரின் போக்கு மாற துவங்கியது.

கவலை இல்லை!

கவலை இல்லை!

இந்த தருணத்தின் போது எனக்கும், என் கணவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தது. பகலில் ஒரு மாதிரியும், இரவில் ஒரு மாதிரியும் நடந்துக் கொள்வார் என் கணவர். இரவில் என் அருகே படுப்பதை தவிர்த்து வந்தார்.

கவலைப்பட வேண்டாம். நமக்கு தான் குழந்தை இருக்கிறதே. இதுக் குறித்து யாருக்கும் தெரியாது. நமக்குள் இது பெரிய பிரச்சனையாக இருக்காது என கூறினேன். ஆனால், அவரோ என் மீது கோபப்பட்டார். "என்ன என்னால முடியாதுன்னு சொல்லிக் காட்றியா?" என நான் கூறுவதை தவறாக புரிந்துக் கொண்டு திட்டினார்.

கணவரின் நண்பர்!

கணவரின் நண்பர்!

என் கணவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவன் இருக்கிறான். அவனும் எங்களுடன் ஒன்றாக கல்லூரியில் படித்தவன் தான். இருவீட்டாருக்கும் மிகவும் பரிச்சயம் ஆனநபர் அவன். என் கணவரும், அந்த நண்பனும் மிகவும் நெருக்கமானவர்கள். என்ன செய்வதாக இருந்தாலும், அவனிடம் கேட்டு தான் செய்வார் என் கணவர். எங்கள் காதல் திருமணத்தின் போது பெரும் உதவியாக இருந்தவனும் அவன் தான்.

அடிக்கடி!

அடிக்கடி!

வாரம் இறுதிகளில் அவன் வீட்டுக்கு வருவான். வந்தால் கொஞ்ச நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு, அவரை வெளியே எங்காவது கூட்டி செல்வான். இருவரும் ஓரிரு மணிநேரம் ஏதாவது பேசி, கதைத்துவிட்டு தான் வீடு திரும்புவார்கள். என் கணவருக்கு இந்நிலை ஏற்பட்ட பிறகு, அவன் வீட்டுக்கு வருவது அதிகமானது. அடிக்கடி வந்து செல்வான்.

யாரும் இல்லாத நேரமாக..

யாரும் இல்லாத நேரமாக..

சில சமயம், சும்மா இந்த பக்கம் வந்தேன், அதான் பார்த்துட்டு போகலாமேன்னு என கணவர் இல்லாத நேரத்திலும் அதிகமாவ வரத் துவங்கினான். எங்கள் குழந்தையை தூக்கி கொஞ்சி பேசிவிட்டு சென்று விடுவான். அவனது பார்வையிலும், நடவடிக்கையிலும் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. சில சமயங்களில், எங்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து வர துவங்கினான்.

சீண்டினான்!

சீண்டினான்!

என்னுடன் நெருக்கம் காண்பிக்க முயற்சி செய்தான். நான் அண்ணா, இதெல்லாம் சரியில்லை என்று கூறினேன். என்ன திடீர்ன்னு அண்ணான்னு கூப்பிடற.. நானும் உன்கூட தானே படிச்சேன். பேர் சொல்லியே கூப்பிடு என்றான். முடியாது... இப்படி நீ மீண்டும் தவறாக நடக்க முயற்சித்தால் என் கண்வாரிடம் கூறிவிடுவேன் என்றான். சிரித்துவிட்டு கிளம்பிவிட்டான்.

சில நாட்கள் கழித்து...

சில நாட்கள் கழித்து...

சில நாட்கள் கழித்து மீண்டும் எங்கள் வீட்டில் யாருமில்லாத சமயம் பார்த்து வந்தான். ஒழுங்கா வெளிய போறியா இல்ல, சத்தம் போட்டு அக்கம்பக்கத்து காரங்கள கூப்பிடட்டுமான்னு கத்தினேன். பொறுமையா இரு.. நான் ஒன்னும் பண்ணல. உன்கிட்ட ஒன்னு காமிக்க வந்தேன் என்றான். எனக்கு ஏதும் பிரியவில்லை. ஒன்னும் காமிக்க வேண்டாம். நீ முதல்ல வெளிய போ என அதட்டினேன்.

ஃபேஸ்புக் மெசேஜ்!

ஃபேஸ்புக் மெசேஜ்!

குழந்தையை தூக்கி கொஞ்சியப்படி. என் கையில் அவனது மொபலை கொடுத்தான். அதில், ஃபேஸ்புக் சாட்டிங் ஒன்று இருந்தது. அதில், நானும், அவனும் ஏதோ கொஞ்சி பேசிக் கொண்டது போல சாட் செய்யப்பட்டிருந்தது. அந்த சாட்டிங்கில் இருப்பது எனது ஃபேஸ்புக் அக்கவுன்ட் தான். அதிர்ச்சி அடைந்தேன்.

எப்படி?

எப்படி?

"நான் இப்படி மெசேஜ் செய்யவே இல்லை. எப்படி? யார்? உனக்கு இப்படி அனுப்பியது" என கேட்டேன்.

சிரித்துக் கொண்டே, "நான் தான் அனுப்பிக் கொண்டேன்" என்றான்.

எனது ஃபேஸ்புக் என் கணவரின் பிரவுசரில் லாகின்னில் தான் இருக்கும். என் கணவரின் மொபலை வாங்கி, அதையறிந்து.. அவனாக சாட் செய்துக் கொண்டதாக கூறினான்.

இனி நீ உன் கணவனிடம் போய் கூறினாலும், அவன் என்னை தான் நம்புவானே தவிர உன்னை அல்ல என கூறி மேலும் சிரித்தான். என்னை பார்த்துக் கொண்டே என் குழந்தைக்கு முத்தமிட்டு சென்றான் அந்த காம மிருகம்.

இது தொடர்ந்தது...

இது தொடர்ந்தது...

அவனது வருகை குறையவில்லை. அவனை என்னால் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. அந்த ஃபேஸ்புக் சாட் விஷயத்தை எப்படி கையாள்வது என புரியாமல் தவித்தேன். மீண்டும் ஒருநாள் வீட்டுக்கு வந்தான் அவன்.

எத்தனை நாளைக்கு நீ இப்படியே இருக்க போற... உனக்கே ஒருமாதிரியா இல்லையா? என புரியாதபடி பேசினான்.

என்ன உளறுற என்றேன்.

அதான் உன் புருஷனால ஒன்னும் பண்ண முடியாது. பண்றேன்னு சொல்ற என்னையும் ஒதுக்குற.. என்று சிரித்தான்.

எனக்கும், என் கணவருக்கும் மட்டும் தெரிந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரிந்தது என அதிர்ந்தேன்.

கணவரிடம்!

கணவரிடம்!

அன்று இரவே, என் கணவரிடம் இது போல அவன் தவறாக நடந்துக் கொள்ள முயற்சிக்கிறான் என கூறினேன். ஆனால், அவன் கூறியது போலவே அவர் என்னைவிட அவனை தான் மிகவும் நம்பினார். எப்படி அவரிடம் எந்நிலையை புரிய வைப்பது என தெரியவில்லை. எங்களுக்குள் இதுகுறித்த பேச்சு வரும் போதெல்லாம் சண்டையில் தான் முடிந்தது.

முடிந்த வரை தவிர்ந்தேன்...

முடிந்த வரை தவிர்ந்தேன்...

எனக்கும், கணவருக்கும் மத்தியில் சண்டை வருவதையும், அவன் வீட்டுக்கு வருவதையும் முடிந்த வரை தவிர்த்தேன். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் பக்கத்து வீட்டு அக்காவை எங்கள் வீட்டுக்கு அழைத்தோ, அல்லது நான் அவர்கள் வீட்டுக்கு சென்றோவிடுவேன். அவன் வந்தாலும் எதுவும் செய்ய முடியாத சூழலை உருவாக்கினேன்.

என்னிடம் மட்டும்...

என்னிடம் மட்டும்...

என் கணவர் அவர் வீட்டு நபர்கள், என் வீட்டு உறவினர்கள் என அனைவரிடமும் அன்பாக, பாசமாக தான் நடந்துக் கொள்கிறார். ஆனால், என்னிடம் மட்டும் எரிந்துவிழுகிறார்.

என்னால் தடுக்க முடியாத அளவிற்கு எங்களுக்குள் சண்டை வலுத்தது. காரணமே இல்லாமல் குடிக்க துவங்கினார். நான் பேசினாலும் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம் என்ற சூழல் உருவானது. சில சமயங்களில் அவரிடம் அடி வாங்குவது வாடிக்கையானது.

அம்மா வீட்டில்!

அம்மா வீட்டில்!

ஒரு அளவிற்கு மேல் என்னால் அவருடன் வாழ முடியாது என்ற சூழல் உருவானது. குழந்தை வளர்ந்து வருகிறான். எங்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவனுள் தவறான தாக்கங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக என் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டேன். வந்து ஒரு வருடம் ஆகிறது. ஓரிரு முறை வந்து என்னிடம் பேசி விட்டும், குழந்தையை கொஞ்சிவிட்டும் சென்றார்.

குழந்தை!

குழந்தை!

குழந்தையை பள்ளியில் சேர்த்து ஆறு மாதங்கள் ஆகிறது. அவனுக்கான எல்லா செலவும் செய்வது அவர் தான். இன்னும், கொஞ்ச நாட்களில் அவராக இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார். எங்கள் இருவரின் இல்லறம் சுபமான பாதையில் மீண்டும் பயணிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

My Husbands Friend Abusing Sexually. But, He Believes His Friend More Than Me - Real Life Story!

My Husbands Friend Abusing Sexually. But, He Believes His Friend More Than Me - Real Life Story!