ஷூ ரூ.1.5 கோடி, சிறுத்தை செல்ல பிராணி, ஜாக்கி, ஷாருக் நண்பர்கள் - யாரிந்த சிறுவன்?

Posted By:
Subscribe to Boldsky

சிறுவர் பருவத்தில் நமது காலத்தில் சூப்பர் மேரியோ விளையாட்டும், ஒரு சைக்கிளும், விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாட பத்து நண்பர்களும் இருந்தாலே போதும் வாழ்க்கையை சொர்க்கமாக வாழ்ந்து வந்தோம்.

இன்றைய சிறுவர்களுக்கு ஸ்மார்ட் போன் ஒன்று போதும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், சினிமா, மீம்ஸ் என சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

Meet Rashed The Richest Kid of Dubai Who Can Do Anything in This World!

ஆனால், சொர்க்கத்தை பூமியில் உருவாக்கி ஒரு சிறுவன் ஜாக்கிசான் முதல் ஷாருக்கான் வரை அனைவருக்கும் நண்பனாக வாழ்ந்து வருகிறான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? இந்த சிறுவன் பயன்படுத்தும் ஷூ மட்டுமே கோடிகள் மதிப்புடையவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஹ்மத் பெல்ஹாசா!

அஹ்மத் பெல்ஹாசா!

துபாயை சேர்ந்த பெரிய தொழில்துறை ஜாம்பவானான அஹ்மத் பெல்ஹாசாவின் மகன் தான் இந்த ரஷித் பெல்ஹாசா. அப்பா சம்பாதித்த பணத்தை கொண்டு சுகபோக வாழ்கையை வாழ்ந்து வரும் சிறுவன். உண்மையில் சொர்கத்தை பூமியில் உருவாக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் சிறுவன் என கூறலாம்.

பாலிவுட்!

பாலிவுட்!

துபாய் செல்லும் பிரபலங்கள் ரஷித் பெல்ஹாசாவை சந்திக்காமல் போக மாட்டார்கள் என்ற அளவிற்கு இந்த சிறுவனின் செல்வாக்கு அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கான எடுத்துக் காட்டை படங்களாக நீங்கள் இந்த சிறுவனை இன்ஸ்டா பக்கத்தில் பார்க்கலாம்.

ஷாருக்கான், சல்மான்கான், ஷில்பா ஷெட்டி, ஜாக்கிசான், மெஸ்ஸி என அனைவருக்கும் ரஷித் பெல்ஹாசா நண்பராவார்.

6.5 கோடி!

6.5 கோடி!

ரஷித் பெல்ஹாசாவிடம் இருக்கும் ஸ்நீக்கர் ஷூ கலக்ஷனின் மதிப்பு மட்டுமே 6.5 கோடி. அப்பொது, இந்த சிறுவன் உடுத்தும் உடைகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என யோசித்து பாருங்கள்.

ஃபெராரி!

ஃபெராரி!

ஒரு ஃபெராரி கார் வைத்திருந்தாலே அவர் பெரிய செல்வந்தர். ரஷித் பெல்ஹாசாவிடம் ஃபெராரிகள் உள்ளன. நன்கு கவனிக்கவும் ஃபெராரி அல்ல ஃபெராரிகள். அவற்றுள் லிமிட்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன் என சிறப்புமிக்க ஃபெராரி கார்களும் அடங்கும்.

செல்ல பிராணிகள்!

செல்ல பிராணிகள்!

ரஷித் பெல்ஹாசா வளர்க்கும் செல்ல பிராணிகள் எவை தெரியுமா? சிறுத்தை, சிம்பான்சி போன்றவை. அவற்றை வளர்ப்பதற்கு என்றே தனி இடம் இருக்கிறது.

பண்ணை வீடு!

பண்ணை வீடு!

ரஷித் பெல்ஹாசாவிற்கு சொந்தமாக ஒரு பண்ணை வீடு இருக்கிறது. உண்மையில் அது ஒரு சுற்றலா தளம் என்றே கூறலாம். அந்த பண்ணை வீட்டை ஒரு வீடியோ எடுத்து வீடியோ டூராக யூடியூப்பில் பதிவு செய்துள்ளார் ரஷித் பெல்ஹாசா.

மணி கிக்ஸ்!

மணி கிக்ஸ்!

"Money Kicks" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமிலும், யூடியூப் சேனலிலும் இயங்கி வருகிறான் ரஷித் பெல்ஹாசா. இவர் பதிவு செய்த பல வீடியோக்கள் ஒரு மில்லியன் பார்வைகளை தொடவுள்ளது. இன்ஸ்டாகிராமில் 2013 இணைந்த ரஷித் பெல்ஹாசாவை 2.5 லட்சத்திற்கும் மேலானோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

சொந்த பெயரில்...

சொந்த பெயரில்...

மில்க் ஷேக் குழந்தைகளுக்கு பிடித்தமான பானம். ஆனால், ரஷித் பெல்ஹாசா பெயரிலேயே தனி மில்க்ஷேக் பானம் இருக்கிறது. இது போக தனது சொந்த பெயரில் ஒரு ஸ்கூல் பேக் ஷோரூம் வைத்துள்ளார் ரஷித் பெல்ஹாசா. இது துபாயில் பிரபலமான ஷோரூம்.

மேலும், தானே வடிவமத்தை ஸ்நீக்கர் ஷூ கலக்ஷனும் வைத்துள்ளார் ரஷித் பெல்ஹாசா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet Rashed The Richest Kid of Dubai Who Can Do Anything in This World!

Meet Rashed The Richest Kid of Dubai Who Can Do Anything in This World!
Story first published: Monday, October 9, 2017, 12:00 [IST]