எங்களிடம் வரும் பெண்கள் எல்லாரிடத்திலும் ஒரே கதை!-ஆண் பாலியல் தொழிலாளி.

Subscribe to Boldsky

அது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற மும்பை நகர வீதி, குறிப்பாக அந்த வீதியில் ஜன நெருக்கடியும் அதிகம். அங்கே சில ஆண்கள், கைக்கு அடக்கமான கண்ணாடி குடுவையை கையில் பிடித்துக் கொண்டு அதைத் தட்டி சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கிருக்கும் பிற சத்தங்களுக்கு இடையில் தனித்து கேட்கிறது அந்த சத்தம். சாலையை வெறித்துப் பார்த்தபடி கடந்து செல்லும் ஆட்களின் முகங்களை பார்த்துக் கொண்டே தங்களை நோக்கி யாரும் வரமாட்டார்களா என்று காத்துக் கிடக்கிறார்கள்.

 Male Prostitute Shares His Miserable Life Story

அங்கேயிருக்கும் மும்பை வாசிகளோ சர்வசாதரணமாக அவர்களைக் கடந்து சென்று கொண்டிருக்க, ஒரு சிலர் அந்த ஆண்களிடத்தில் சென்றார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் அவர்கள்? :

யார் அவர்கள்? :

கையில் கண்ணாடிக் குடுவையைக் கொண்டு சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கும் அந்த ஆண்கள் யார் தெரியுமா? ஆண் பாலியல் தொழிலாளிகள்.'

ஆண்களில் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்களா? அவர்களின் உலகம் எப்படியிருக்கும் என்பதை என்றைக்காவது யோசித்திருக்கிறாமா? வாருங்கள் அவர்களிடமே கேட்கலாம். மெயில் மூலமாக நடத்தப்பட்ட நேர்காணலிலிருந்து....

உங்களுடைய பெயர் ?

உங்களுடைய பெயர் ?

பெயர் வேண்டாமே. என் அடையாளத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை மற்ற விவரங்களை கேளுங்கள் தாரளமாக சொல்கிறேன்.

சரி. அடையாளம் வேண்டாம், இத்தொழிலுக்கு வந்த கதையை சொல்லுங்கள்.

சொந்து ஊர் மேற்கு வங்கம் எனக்கு மூன்று வயதாகும் போது அப்பா இறந்து விட்டார். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு பேர். கடைக்குட்டியாக இருந்தாலும் வீட்டின் ஒரே ஆண்மகன் என்பதால் குடும்பத்தின் பொறுப்பு பன்னிரெண்டு வயதிலேயே என் மீது விழுந்தது.

ஒரு வேளை உணவுக்கு கூட மிகவும் சிரமப்பட்டிருக்கிறோம். அதனால் படிப்பதை விட்டுவிட்டேன்.

இங்கே யார் உங்களை அழைத்து வந்தது?

இங்கே யார் உங்களை அழைத்து வந்தது?

யாரும் அழைத்து வரவில்லை. நானாகத்தான் வந்தேன். இன்னும் சொல்லப்போனால் இங்கே வந்ததே ஓர் விபத்து என்று கூட சொல்லலாம். இப்படியான வேலை செய்யப்போகிறேன் என்று எனக்கு முன்னமே தெரியாது.

எத்தனை வயதில் இங்கே வந்தீர்கள்.?

எத்தனை வயதில் இங்கே வந்தீர்கள்.?

என்னுடைய பதினாறாவது வயதில் இங்கே வந்தேன். இப்போது என் வயது நாற்பத்தி ஐந்து.

மேற்கு வங்கத்திலிருந்து மும்பைக்கு எப்படி....?

அங்கே எவ்வளவு தான் உழைத்தாலும் கூலி சரியாக கிடைக்காது. அதிக வருமானம் என்றால் வெளியூருக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன், அதனால் வேறு ஊரில் எனக்கு என்ன வேலை கிடைக்கும். நான் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டேன். படிப்பும் இல்லை பதினாறு வயது வேறு எங்கே வேலை கிடைக்கும்.

வெளியூரில் வேலை :

வெளியூரில் வேலை :

ஊரில் வெளியூரில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வருபவர்களிடத்தில் எல்லாம் தினமும் போய் கெஞ்சுவேன். நாள் முழுவதும் அவர்களின் வீட்டில் தவம் கிடப்பேன். ஒருகட்டத்தில் அவர்களே வெறுத்துப் போய் எனக்கு மும்பையில் ஹோட்டலில் வேலை இருக்கிறது என்று சொல்லி இங்கே அழைத்து வந்து விட்டார்.

ஹோட்டல் வேலை தான் முதலில் செய்தீர்களா?

ஹோட்டல் வேலை தான் முதலில் செய்தீர்களா?

இல்லை. என்னை அழைத்து வந்து வடக்கு மும்பையில் இருக்கிற மலாட் என்கிற ரயில் நிலையத்தில் என்னை விட்டுவிட்டு அவர் தொலைந்து விட்டார்.

இங்கேயே இரு முதலாளியிடம் உன்னை எங்கே தங்க வைப்பது என்று கேட்டுவிட்டு வருகிறேன் என்று சொன்னவர் அப்படியே என்னை அனாதையாக விட்டு விட்டுச் சென்று விட்டார்.

பிறகு இரண்டு நாட்கள் வரை அந்த ரயில் நிலையத்திலேயே இருந்தேன். இரண்டு நாட்களும் முழுப்பட்டினி.

நீங்கள் அவரைத் தேடி செல்லவில்லையா?

நீங்கள் அவரைத் தேடி செல்லவில்லையா?

இல்லை. முதன் முறையாக சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு வந்திருக்கிறேன், அந்த மிரட்சியில் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அவரை மட்டுமே நம்பி வந்தேன்.

என் அம்மா கூட என்னிடம் பணத்தை கொடுத்தால் எங்கே தொலைத்து விடுவேனோ என்று அவர் வேலைப் பார்த்த முதலாளியிடம் முந்நூறு ரூபாய் கடன் வாங்கி அவரிடமே கொடுத்திருந்தார். அந்தப் பணத்துடன் அவர் எஸ்கேப்.

என்னிடம் ஒரு பைசா கூட இல்லை.

பிறகு என்ன செய்தீர்கள் ?

பிறகு என்ன செய்தீர்கள் ?

பிறகு என்ன.... பயங்கரமான பசி அந்த ரயில் நிலையத்தில் போவோர் வருவோரிடத்தில் பிச்சை கேட்க ஆரம்பித்தேன். எவ்வளவு தான் ஊரில் வயிற்றுப் பசியிருந்தாலும் இப்படியான நிலைமை எனக்கு ஏற்பட்டதில்லை. இப்படி மட்டும் என் அம்மா என்னை பார்த்து விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

பிச்சை எடுப்பேன் கிடைக்கும் காசில் சாப்பிடுவேன் அங்கேயே தூங்கிடுவேன். இப்படியே ஒரு மாதம் கழிந்தது.

ஏன் பிச்சை எடுக்கிறாய் ? :

ஏன் பிச்சை எடுக்கிறாய் ? :

அங்கே என்னை தினமும் பார்க்கும் நபர் ஒருவர், நீ நன்றாகத்தானே இருக்கிறாய் ஏன் பிச்சை எடுக்கிறாய் எதாவது வேலைக்குச் செல்லலாம் இல்லையா என்று கேட்டார்.

நான் ஏமாற்றப்பட்ட கதையையும் இங்கே யாரையும் எனக்குத் தெரியாது. ஊருக்கு திரும்பிச் செல்லக்கூட காசில்லை என்பதைச் சொன்னேன். சரி நான் வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்.

இனியும் என்னிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. வேண்டுமானால் நைந்து போன ஒரு பையும் இரண்டு சட்டைகளும் தான் என்னிடம் இருக்கிறது என்பதை அவரிடம் காண்பித்தேன். சிரித்தார்.

அவர் தான் உங்களை....

அவர் தான் உங்களை....

இல்லை இல்லை. இன்னும் இருக்கிறது. அவர் முதலில் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று நன்றாக சாப்பிட வாங்கிக் கொடுத்தார். பின்னர் புதுதுணியும் வாங்கிக் கொடுத்தார்.

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை இனி என் வாழ்க்கை முழுவதுமாக மாறப்போகிறது என்று நினைத்துக் கொண்டு அவரே என் கடவுளாக அவர் பேச்சைக் கேட்கும் கிளிப்பிள்ளை போல நடந்து கொண்டேன்.

அங்கிருக்கும் ஒரு சிறிய உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை. ஒரு நாளைக்கு பத்து ரூபாய் கூலி. தங்கவும் சாப்பிடவும் கொடுத்து விடுவாரக்ள் என்று சொல்லி சேர்த்து விட்டார்.

ஓட்டலிலா?

ஓட்டலிலா?

ஆம். பெரிய ஓட்டல் எல்லாம் கிடையாது. சின்ன ரோட்டோர உணவுகம். வாரம் ஒரு முறை வந்து என்னை பார்த்து விட்டுச் செல்வார். வேலை எப்படியிருக்கிறது என்று விசாரிப்பார்.

ஊருக்கு ஒரு முறை சென்றுவிட்டு வருகிறாயா நான் பணம் தருகிறேன் என்றெல்லாம் சொன்னார். நான் மறுத்துவிட்டேன்.

கிழக்கு மும்பை :

கிழக்கு மும்பை :

காலை ஏழு மணி முதல் இரவு பதினோறு மணி வரையில் வேலை பிழிந்து எடுக்கவே என்னால் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியவில்லை. கூலியும் தினம் பத்து ரூபாய் என்றிருந்ததை வாரம் ஒரு முறை என்று சொன்னார்கள். சில வாரங்கள் அது கூட கொடுக்கவேயில்லை.

அன்றைக்கு பார்க்க வந்தவரிடம் சொன்னேன். சரி, வேறு இடம் பார்க்கலாம் என்று சொல்லி, என்னை கிழக்கு மும்பையில் இருக்கிற ககட்கோபர் என்ற இடத்திற்கு ரயிலில் அழைத்து வந்தார்.

மசாஜ் சென்ட்டரில் வேலை :

மசாஜ் சென்ட்டரில் வேலை :

இங்கே மசாஜ் சென்ட்டரில் வேலை. ஒருவருக்கு மசாஜ் செய்தால் 200 ரூபாய் கிடைக்கும். அப்படி என்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்ல அவரே கஸ்டமரை அழைத்து வந்து மசாஜ் செய்வதை பார்க்க வைத்தார்.

முதலில் ஆண்களுக்கு மசாஜ் செய்தார். பின்னர் பெண்களுக்கும்.

பெண்களுக்கு ஒரு ஆண் மசாஜ் செய்வதா? என்று என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

தனியறை வேண்டும் :

தனியறை வேண்டும் :

வருகிறவர்களில் ஒரு சிலப் பெண்கள் தனியறை வேண்டும் என்று கேட்க அவரை அழைத்துக் கொண்டு இவரும் சென்றுவிடுவார். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து கத்தை கத்தையாக அந்தப் பெண் பணம் கொடுத்துவிட்டு செல்வாள்.

இது என்ன வேலை எல்லாம் தெரியாது. நான் செய்ய வேண்டும். இப்படி கத்தை கத்தையாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சொல்லிக் கொடுங்கள் :

சொல்லிக் கொடுங்கள் :

நானாக அவரிடம் சென்று என்ன வேலை சொல்லிக் கொடுங்கள் நான் செய்கிறேன். எவ்வளவு கூலி கொடுப்பார்கள் என்று ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் அவர் என்னை கண்டு கொள்ளக்கூட இல்லை. பிறகு, மெல்ல சொல்ல ஆரம்பித்தார்.

விவரித்தார்.

நீங்கள் என்ன சொன்னீர்கள்?

நீங்கள் என்ன சொன்னீர்கள்?

அந்த வயதில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. கூலி எவ்ளோ குடுப்பாங்க என்று கேட்டேன். அது வரும் ஆட்களைப் பொறுத்து ஒரு மணி நேரம் என்றால் ஐந்தாயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கும்.

ஒரு மணி நேரத்திற்கு ஐந்தாயிரமா? என்னால் நம்பவே முடியவில்லை. அதுவரை என் வாழ்க்கையில் ஆயிரம் ரூபாயை ஒரு சேரப் பார்த்தது கூட இல்லை.

கஸ்டமர் :

கஸ்டமர் :

பிறகு சில நாட்கள் கழித்து கஸ்டமர் வந்திருப்பதாக சொல்லி என்னை அழைத்துச் சென்றார். முப்பது வயதிருக்கும் பெண்ணொருவர் வந்திருந்தார். என்னுடைய முதல் கஸ்டமர்.

ஒரு மணி நேரம் ஐந்தாயிரம் என்று பேசித்தான் சென்றோம். ஆனால் அவர் எனக்கு ஏழாயிரம் ரூபாயை நீட்டினார்.

நிறைய சம்பாதித்தேன் :

நிறைய சம்பாதித்தேன் :

ஒரு நாளைக்கு ஐந்து அல்லது நான்கு கஸ்டமர்கள் பார்ப்பேன். நிறைய சம்பாதித்தேன்.பல விதமான பெண்கள் வருவார்கள். சிலர் போதையில் இருப்பார்கள்.

சிலப் பெண்கள் வெறுமனே புலம்பிவிட்டுச் செல்கிறவர்களும் இருந்தார்கள். சிலர் என்னை கட்டியணைத்து அழுதுவிட்டுச் செல்வார்கள். எல்லாருக்கும் ஒரு வடிகாலக இருந்தேன்.

அவர்களின் மனத்தேவையையும் உடற் தேவையையும் பூர்த்தி செய்திடும் வேலையைச் செய்தேன்.

எந்த மாதிரியான பெண்கள் வருவார்கள் உங்களிடம்?

எந்த மாதிரியான பெண்கள் வருவார்கள் உங்களிடம்?

ஒவ்வொரிடமும் ஒவ்வொரு கதை இருந்தது. மிகவும் பணக்கார வீட்டுப் பெண்கள் இந்த இலைட் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் வருவார்கள் என்று சொல்வதெல்லாம் பொய்.

எல்லாவகையான பெண்களும் வருவார்கள். ஹவுஸ் வொய்ப்,பன்னாட்டு நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள்.....

இவர்கள் மட்டுமே வருவார்கள் என்று சொல்ல முடியாது. வருகிற ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருந்தது. எல்லாமே அங்கே இங்கே என்று சுற்றி காதல்,கள்ளக்காதல், ஏமாற்றிவிட்டான், துரோகம் என்று வந்து முடிப்பார்கள்.

கிகுலு :

கிகுலு :

எங்களை கிகுலு என்று அழைப்பார்கள். சில நேரத்தில் எங்களிடம் தன்பாலின ஈர்ப்பு கொண்ட ஆண்களும் வருவதுண்டு. அப்படி வருகிறவர்கள் எங்களிடம் முன்னரே குலாபி மாலிஷ் என்று சொல்லி சம்மதமா என்று கேட்பார்கள். குலாபி மாலிஷ் என்பது ஹோமோ செக்ஸின் கோட் வேர்டு.

உடல் ஆரோக்கியத்தில் :

உடல் ஆரோக்கியத்தில் :

உங்களது உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை தானே....?

எப்படி இல்லாமல் இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு பேரைப் பார்க்க வேண்டும். நிறைய மாத்திரைகள் சாப்பிடுவேன். முதல் இரண்டு வருடங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.

மூன்று வருடத்தில் இருந்து நான் மிகவும் தளர்ந்தவன் போல் ஆகிவிட்டேன். உடலில் வலுவேஇருக்காது.மனதளவிலும் நிறைய மாற்றங்கள் நிலையாக ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாது.

சில நேரங்களில் பிறப்புறுப்பில் தொற்றுக்கூட ஏற்பட்டு சிகிச்சை எடுத்திருக்கிறேன்.

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியுமா?

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியுமா?

இல்லை தெரியாது. இங்கே ஒரு ஹோட்டலில் வேலை பார்ப்பதாகத் தான் இன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் எங்கள் இடத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டியிருக்கிறேன்.

மூன்று அக்காக்களுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். எனக்கும் திருமணமாகிவிட்டது. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஊரில் என் அம்மாவுடன் இருக்கிறார்கள்.

இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இப்போது கஸ்டமர்களை எல்லாம் நான் டீல் செய்வதில்லை. சிலர் வற்புறுத்தி கேட்பார்கள் அவர்களுக்கு மட்டும் அரை மணி நேரம் செல்வேன். அதற்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் கட்டணம்.

வயதாக வயதாக.... கஸ்டமர்களை குறைத்துக் கொண்டேன். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது ஒன்று. அவர்களிடமே மொத்தமாக இருபதாயிரம் வரை வாங்கிவிடுவேன்.

இப்போது வாரம் ஒரு முறை என்பதே அதிகம். மற்றபடி எனக்கு கீழே பன்னிரெண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வருகிற கஸ்டமர்களை பிரித்து அனுப்பும் வேலை.

கண்ணாடி குடுவை :

கண்ணாடி குடுவை :

தங்களுக்கான கஸ்டமர்கள் பிடிப்பது, ரூம் பிடிப்பதில் அவர்களுக்குள் போட்டியே இருக்கும். கஸ்டமர்களை பிடிப்பதற்காகத்தான் கண்ணாடி குடுவையை கையில் வைத்து இப்படி சத்தம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே பதினைந்து வயதிலிருந்து முப்பது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

பதினைந்து வயதினருமா?

பதினைந்து வயதினருமா?

ஆம்....

உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் தானே.....

நீங்கள் கேட்க வருவது புரிகிறது. எனக்கு இரண்டுமே மகன்கள் தான். ஒருவனுக்கு பதிமூன்று வயது இன்னொருவனுக்கு எட்டு வயது. பணம் எல்லாமே பணம். பணத்தின் பின்னால் ஓடும் பிசாசாகிவிட்டோமே என்ன செய்வது. புரிகிறது தவறு தான் என்று ஆனால் எனக்கு வேறு வழித் தெரியவில்லை இங்கே நிற்கும் சிறுவர்களை எல்லாம் பார்க்கும் போது என் மகனை பார்க்கிற மாதிரியே தோன்றும்.

நான் மட்டும் சிறுவர்களை பணியில் அமர்த்துவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், என்னிடம் கேட்டால் கிடைக்காது என்று அவர்கள் வேறு ஏஜண்ட் மூலமாக இதற்குள் நுழைத்துவிடுவார்கள்.

இதிலிருந்து உங்களால் வெளிவர முடியாது என்கிறீர்களா?

இதிலிருந்து உங்களால் வெளிவர முடியாது என்கிறீர்களா?

ஆம்.... நிச்சயமாக. இங்கிருக்கும் பெரும்பாலானோருக்கு என்னைப் பற்றித் தெரியும். நான் யாரிடம் சென்று வேலைக் கேட்பது அதை விட நான் என்ன படித்திருக்கிறேன்? எனக்கு என்ன வேலை தெரியும் என்று நினைக்கிறீர்கள்.

அப்படியே நான் வேலை செய்ய தயாராக இருந்தாலும் தினக்கூலியாக நாள் முழுவதும் என் உழைப்பை சுரண்டுவார்கள் ஆனால் அதற்கான கூலி மிக மிக குறைவானதாக இருக்கும். அதை வைத்து நான் என்ன செய்ய முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் :

நீங்கள் ஒவ்வொருவரும் :

வறுமையும், அவனின் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் உறியலாம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் நினைப்பது தான் எங்களை இந்த படுகுழியில் தள்ளியிருக்கிறது.

இருபது வருடங்களாக இதிலிருக்கிறேன். திடிரென்று இதெல்லாம் தவறு இதை விட்டு விடு என்று சொன்னால் எப்படி என்னால் முடியும். இப்போது என்னை நம்பி பத்து பேர் அவர்களை நம்பி பத்துக்குடும்பங்கள் இருக்கிறது.

இங்கிருக்கிற எல்லாருக்கும் ஒரு குடும்பம் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

உங்கள் மகன் :

உங்கள் மகன் :

சரி, உங்கள் மகன் குறிப்பிட்ட வயதிற்கு பிறகு இங்கே சேர நினைத்தால் அனுமதிப்பீர்களா?

எவ்வளவு காலம் ஆனாலும் எங்களுக்கான தேவை இருந்து கொண்டே இருக்கும், நான் இருக்கும் வரை என் மகன்களை இங்கே அனுமதிக்க மாட்டேன். எனக்குப் பிறகு.... அதற்கான சூழல் இல்லை நல்ல கல்வியை கொடுத்திருக்கிறேன். நிம்மதியான குடும்பத்தை கொடுத்திருக்கிறேன். இந்த சூழலில் அவன் இப்படியான வேலைக்கு வர வேண்டும் என்று நினைக்க மாட்டான்.

ஒரு வேலை எனக்குப் பிறகு வந்தால் எனக்கு குற்றவுணர்வு எல்லாம் ஏற்படாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync life my story
  English summary

  Male Prostitute Shares His Miserable Life Story

  Male Prostitute Shares His Miserable Life Story
  Story first published: Friday, December 15, 2017, 11:53 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more