உண்மையை சொன்னதற்காக படுகொலை செய்யப்பட்ட இந்திய எழுத்தாளர்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

அடிப்படை உரிமைகளில் ஒன்றான எழுத்துரிமையை பயன்படுத்தி தன்னுடைய கருத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதும் அவர்களை விழிப்புணர்வு அடையச் செய்வதும் ஒர் பத்திரிகையாளரின் வேலை. அதனை எந்த அனுசரிப்பும் இல்லாமல் உண்மைகளை உரக்கச் சொல்லும் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது இன்று சகஜமாகிவிட்டது.

List of Murdered Indian Journalist.

Image Courtesy

அரசை எதிர்த்ததற்காக, தன்னுடைய குற்றத்தை அம்பலப்படுத்தியதற்காக என பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கௌரி லங்கேஷ் :

கௌரி லங்கேஷ் :

பெங்களூரில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் நேற்று மாலை அவரது வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மதவாதத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த இவர் தொடர்ந்து இந்துத்துவாவை எதிர்த்து வந்தார். இதனால் பல பிரச்சனைகளை சந்தித்தாலும் தொடர்ந்து தன் கருத்துக்களை எழுதி வந்தார்.

சந்தீப் கோத்தாரி :

சந்தீப் கோத்தாரி :

மத்திய பிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர் சந்தீப் கோத்தாரி நிலக்கரி சுரங்க முறைகேடுகள் குறித்து தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாபியா கும்பல், அவரை கடத்தி சென்றது.

அந்த கும்பல் சந்தீப்பை எங்கு கடத்தி சென்றனர் என்ற விவரம் தெரியாத நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் வார்தா என்னும் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் சந்தீப் கோத்தாரியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது

கல்புர்கி :

கல்புர்கி :

பகுத்தறிவாளரான எழுத்தாளர் கல்புர்கி மூட நம்பிக்கைகளுக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும்வந்தவர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு அமைப்பு அவரைக் கொல்லப்போவதாக வெளிப்படையாகவே அறிவித்தனர். இதனையடுத்து கல்புர்கிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தனக்கு எந்த பாதுகாப்பும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்ததால் பாதுகாப்பு விலக்கப்பட்டது. இந்நிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நரேந்திர தபோல்கர் :

நரேந்திர தபோல்கர் :

புனேயை சேர்ந்த சமூகச் சேவகரும், பகுத்தறி வாளருமான நரேந்திர தபோல்கர் சாதி,மதம்,மூடநம்பிக்கை இவற்றுக்கெல்லாம் எதிராக இயக்கம் நடத்தி வந்தார்.

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராஜ்தேவ் ரன்ஜன் :

ராஜ்தேவ் ரன்ஜன் :

பீகார் மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளரான இவர் ராஸ்டிரிய ஜனதா தளம் எம்.பி.,யான முகமது சகாஃபுதீனுக்கு எதிராக பல கருத்துக்களை எழுதி வந்தார்.

தன்னுடைய இரண்டு சகோதர்களை கொலை செய்தவழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளவர் தான் இந்த முகமது சகாஃபுதின். இவர் செய்த பல குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக ராஜ்தேவ் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ஜகேந்திர சிங் :

ஜகேந்திர சிங் :

உத்திரபிரதேசத்தை சேர்ந்த பத்திரிகையாளர் இவர். இவர் ஷஹாஜஹான்புர் சமாச்சார் என்ற முகநூல் பக்கத்தை ஆரம்பித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம் மூர்த்தி வர்மா செய்த ஊழல் குறித்து எழுதி வந்துள்ளார்.

வர்மாவும் அவரது கூட்டாளிகளும் அங்கன்வாடி மையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் வர்மாவுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்துவிட்டார் அந்தப் பெண். இந்த செய்தியை கவனித்த ஜகேந்திர சிங் , உண்மையை செய்தியாக்கினார்.

இதனையெடுத்து போலீஸ்காரர்கள் மற்றும் வர்மாவின் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டார். அதனையும் வெளியில் சொன்னதால் ஜகேந்திர சிங் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜகேந்திர சிங் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life, india
English summary

List of Murdered Indian Journalist.

List of Murdered Indian Journalist.
Story first published: Wednesday, September 6, 2017, 12:28 [IST]
Subscribe Newsletter