ஆங்கிலேய ஆட்சியின் போது இந்த தொழு நோயாளி என்ன செய்தார் தெரியுமா!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய விடுதலைக்காக பாடுபட்ட வீரர்கள் பலர் இருக்கிறார்கள். இவற்றில் வெளிச்சத்திற்கு வந்த சிலரை மட்டுமே நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். இந்திய சுதந்திரத்திற்காக தன்னுடைய உயிரைக்கூட துச்சமென துறந்திருக்கும் எண்ணற்ற வீரர்கள் சுப்பிரமணிய சிவாவும் ஒருவர்.

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழந்த இவர் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்க வேண்டிய ஆளுமை ஆவர். தமிழக மக்களுக்கு தேச விடுதலை தாகம் ஏற்படுத்திய மிகச்சிறந்த பேச்சாளரும் கூட.

சுப்பிரமணிய சிவாவின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுப்பிரமணிய சிவா :

சுப்பிரமணிய சிவா :

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கும், மகாகவி பாரதியாருக்கும் நெருங்கிய தோழனாக விளங்கிய சுப்பிரமணிய சிவாவின் சொந்த ஊர், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த வத்தலகுண்டு (இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருபகுதி). ராஜம் ஐயருக்கும், நாகலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 4.10.1884-ல் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உண்டு.

Image Courtesy

வாழ்க்கைப் பயணம் :

வாழ்க்கைப் பயணம் :

வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில் தங்கி மேற்படிப்பு படித்தார். கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். 1899-ல் மீனாட் சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்தார். பின்பு வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.

Image Courtesy

சுதந்திர தாகம் :

சுதந்திர தாகம் :

1904-1905-ல் நடந்த ரஷிய- ஜப்பானியப் போரில் பெரிய நாடான ரஷ்யாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் பிரிட்டனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது.

1906-ல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தார்.

நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் ‘வந்தே மாதரம்' எனும் முழக்கங்கள் எழுந்தன.

Image Courtesy

நட்பு :

நட்பு :

அப்போது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார். இந்நிலையில் பாரதியின் நட்பும் கிடைக்க, மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினர்.

Image Courtesy

துறவியாக மாற்றம் :

துறவியாக மாற்றம் :

‘ஞானபானு' என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு ‘பிரபஞ்சமித்திரன்' என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

துறவிபோல காவி உடை அணிந்து கொண்டு, பெயரை ‘ஸ்வதந்திரானந்தர்' என்றும் மாற்றிக்கொண்டார்.

Image Courtesy

சிறைத் தண்டனை :

சிறைத் தண்டனை :

சென்னை, கொல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளு க்கு சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொடுமையான சிறைத்தண்டனை விதித்து, சித்ரவதை செய்தது ஆங்கில அரசு.

சுதந்திர போராட்ட த்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வாறு சிறையில் ஒருமுறை அடைக்கப்பட்ட போது தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதனால், ரெயிலில் பயணம் செய்ய ஆங்கிலேய அரசு இவருக்கு தடை விதித்தது.

Image Courtesy

முதல் அரசியல் கைதி :

முதல் அரசியல் கைதி :

உடல் முழுவதும் புண்ணாக இருந்த போதிலும் உடலை துணியால் மூடிக்கொண்டு சென்னை மாகாணம் முழுவதும் நடை பயணமாகவும், கட்டை வண்டியிலும் சென்று மேடை தோறும் முழங்கிவந்தார்.

காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய அவர், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 1921, 1922-ம் ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை மாகாணத்தில் அரசியல் ரீதியாக சிறையில் அடைக்கப்பட்ட முதல் கைதியானார்.

Image Courtesy

கனவு :

கனவு :

தனது நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியுடன் சுமார் 6 ஏக்கர் நிலம் வாங்கி, அதற்கு "பாரதபுரம்' என பெயர் சூட்டினார். அதில் பாரத மாதாவுக்கு கோவில் கட்டவும் முடிவு செய்தார்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் ஜாதி,மத பேதமின்றி வழிபடுவதற்குரிய ஆலயமாக அது இருக்க வேண்டும் என்று கனவு கண்டார். இங்கு பூசாரி இருக்கக் கூடாது. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தாமாகவே மாதாவை தரிசித்து செல்ல வேண்டும் என்றும் விரும்பினார்.

Image Courtesy

ஆங்கிலேய அரசு தடை :

ஆங்கிலேய அரசு தடை :

தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆலயத்தை கட்டுவதற்கு தேவையான தொகையை திரட்ட சிவா முயன்றபோது, தொழுநோய் இருப்பதை காரணம்காட்டி பஸ், ரயிலில் செல்லக்கூடாது என ஆங்கிலேய அரசு தடை விதித்தது. இருப்பினும், கால்நடையாகவும், கட்டைவண்டியிலும் ஊர், ஊராக பயணம் செய்து சொற்பொழிவாற்றி பாரத மாதா கோயில் கட்ட நிதி திரட்டினார்.

22.7.1925-ல் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பாரத ஆசிரமத்துக்கு வந்த அவர் மறுநாள் தன்னுடைய 41வது வயதில் காலமானார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync life india
English summary

Life history of Subramaniya Siva

Life history of Subramaniya Siva
Story first published: Wednesday, October 4, 2017, 11:10 [IST]