ஒரு பெண் தானா முன் வந்து காதல சொன்னா, மேட்டர்ன்னு சொல்வீங்க - My Story #120

Posted By:
Subscribe to Boldsky

நம்ம ஊருல ஆட்டோகிராப், பிரேமம் மாதிரியான படம் பசங்க நடிச்சா ஹிட் ஆகும். இதுவே, ஒரு பொண்ணு நாலஞ்சு லவ் பண்ணதா ஒரு படம் எடுத்தா மாதர் சங்கங்களே ரோட்டுக்கு வந்து படத்த தடைப் பண்ண சொல்லி போராட்டம் பண்ணவாங்க. காரணம், நம்ம ஊருல ஆண்களுக்கு ஒரு நியாயம், பெண்களுக்கு ஒரு நியாயம். சரி! இது படத்துல மட்டும் தானா? இல்ல, நிஜத்துல ரொம்ப கொடூரமான ரூபத்துல இருக்கும்.

நான் ஒரு நார்மலான பொண்ணு. நான் ரொம்ப அழகும் கிடையாது. பார்த்தா முகத்தைத் திருப்பிட்டு போற அளவுக்கு அழகு இல்லாமலும் இல்ல. ஆனா, நம்ம ஊருல பொண்ணுங்கள சில வகையா பிரிச்சு வெச்சிருக்காங்க. இந்த மாதிரி பொண்ணுங்க சைட் அடிக்க, இந்த மாதிரி பொண்ணுங்க லவ் பண்ணிக்க.. இந்த மாதிரி பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்கன்னு.

எனக்கு ஒன்னு மட்டும் புரியல... பசங்க மட்டும் எத்தன பொண்ணுங்கள வேணும்னா சைட் அடிச்சுட்டு, ஏதாவது ஒரு பொண்ண லவ் பண்ணலாம். எத்தன பொண்ணுகள வேணாலும் லவ் பண்ணிட்டு.. வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கலாம். இதுவே பொண்ணுங்க பண்ணா அசிங்கம். அசிங்கத்த பசங்க பண்ணாலும் அசிங்கம் தான? இத ஏன் யாரும் கண்டிக்கிறதே இல்ல.

பார்த்ததும் பசங்களுக்கு காதல் வந்த தெய்வீகம். இதுவே, ஒரு பொண்ணுக்கு... ஒரு பையன பார்த்ததுமே லவ் வந்து பிரபோஸ் பண்ணா அவ தே***ன்னு சொல்லுவீங்க... என்னங்க சார் உங்க சட்டம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அம்மா உடல்நிலை!

அம்மா உடல்நிலை!

என் அம்மாவுக்கு கொஞ்சம் கண் பார்வை குறைபாடு. அதுமட்டுமில்லாம உடம்பும் கொஞ்சம் சரியில்ல. எனக்கொரு தம்பியும் இருந்தான். நான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குற பொண்ணு கிடையாது. ஆனால், எப்படியும் டாப் டென்ல வந்திருவேன். அம்மாவோட உடல்நிலை காரணமா என் படிப்பு கெட்டுப் போயிடக் கூடாதுன்னு.. அப்பா என்ன காலேஜ்க்கு வெளியூர்ல சேர்த்தார். அதுதான் நான் என் சொந்த ஊரைவிட்டு வெளிய போறது முதல் தடவ.

சுமார் மூஞ்சி குமாரி!

சுமார் மூஞ்சி குமாரி!

எனக்கு ஃபேஷன்னு பெரிசா எதுவும் தெரியாது. ஜீன்ஸ் பேன்ட், ஷர்ட் போடுறது தான் பெரிய ஃபேஷன்னு தெரிஞ்சுட்டு இருந்தேன். ஃபர்ஸ்ட் டைம் சென்னை. அங்கேயும் என்ன மாதிரி ஹாப் பாயில் பொண்ணுக தான் அதிகம். ஆனா, சரியான ஃபேஷன் என்னன்னு தெரிஞ்ச பொண்ணுகளும் அங்க அதிகம்.

அறைகுறை!

அறைகுறை!

இந்த டிரெஸ் போட்டா இப்படி தான் ஹேர் ஸ்டைல் பண்ணும், இந்த செருப்பு தான் போடணும்ன்னு ஃபேஷன் ரூல் இருக்குன்னு சொல்றாங்க. நமக்கு எந்த டிரெஸ் போட்டாலும் ஒன்னு ஃப்ரீ ஹேர், இல்ல ரெட்ட ஜடை. எல்லாத்துக்கும் வார் வெச்ச செருப்பு, இல்ல வார் வெக்காத செருப்பு. அவ்வளவு தான் தெரியும்.

பசங்க!

பசங்க!

பசங்க சைட் அடிக்க பார்க்குற பொண்ணுக லிஸ்ட்லயும் நான் இருக்க மாட்டேன். லவ் பண்ணலாம்ன்னு நெனைக்கிற லிஸ்ட்லயும் நான் இருக்க மாட்டேன். ஆனால், இதுல முக்கால்வாசி பசங்க, டீனேஜ், யங் ஏஜ்ல எல்லாம் என்ஜாய் பண்ணிட்டு... கண்டிப்பா கடைசியில என்ன மாதிரி ஒரு பொண்ணு கழுத்துல தான் தாலிக்கட்ட வருவாங்கன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்.

ஃபீல்!

ஃபீல்!

ஃபீலிங்க்ஸ்கிறது பசங்களுக்கு மட்டுமே இருக்கிறதா? ரொம்ப காலமா ஒரு தப்பான கருத்து நம்ம சமூகத்துல இருந்துட்டு வருது. அதுனால தான் லவ் ஃபெயிலியர் , ப்ரேக் அப் ஆகும்போதெல்லாம் பசங்க மட்டும் சோக பாட்டு பாடுற சீன நம்ம சினிமால வருது. அதென்ன உங்களுக்கு வந்தா இரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினி.

இந்த போக்கை முதலில் மாத்தனும்!

கிரஷ்!

கிரஷ்!

சில பேருக்கு கிரஷ்ன்னா என்ன? லவ்ன்னா என்ன? ஃபிளர்ட்டிங் பண்றதுன்னா என்னன்னு? வித்தியாசம் தெரியாம போயிடுது. கிரஷ்ங்கிறது ஒரு விருப்பம்... அவங்கள காதலிக்கனும்ன்னு சட்டம் இல்ல. ஆனா, நமக்கு பிடிச்ச குவாலிட்டி, குணாதிசயங்கள் அவங்கக்கிட்ட இருக்கும். ஏன், இன்னொருத்தர காதலிக்கும் போதும், கல்யாணம் ஆனப் பிறகும் கூட கிரஷ் வரலாம்.

வித்தியாசம்!

வித்தியாசம்!

லவ் பத்தி நாம சொல்ல தேவையே இல்ல. எல்லாருக்கும் தெரியும். ஃபிளர்டிங்கிறது ஜஸ்ட் டைம் பாஸ் பண்ற கேட்டகரி. ஜொள்ளு வழிஞ்சு பேசுவாங்க.

எனக்கு காலேஜ்ல சில பேரு மேல கிரஷ் இருந்துச்சு. கிரஷ் காதலா மாற வாய்ப்புகள் இருக்கு. ஆனா, இங்க கிரஷ்ன்னு சொன்னாலே அவ என்ன லவ் பண்றான்னு ஒரு முடிவுக்கு வந்திடுறாங்க.

நான் பண்ண தப்பு!

நான் பண்ண தப்பு!

என்னோட ஹாஸ்டல் ஃபிரெண்ட் ஒரு அல்ட்ரா மாடர்ன். ட்ரெஸ் பண்றதுல மட்டும் இல்ல. எல்லார் கிட்டயும் பழகுற விஷயத்துலயும். அவக்கிட்ட இருந்து தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். இன்னிக்கி நான் கரக்டா ஃபேஷன் விஷயங்கள் ஃபாலோ பண்றதுல இருந்து எல்லாம் அவ சொல்லிக் கொடுத்த விஷயம் தான். இந்த கிரஷ் முதல் ஃபிளர்டிங் வரை எல்லாமே.

நான் பண்ண ஒரே தப்பு. எனக்கு பிடிச்ச பசங்கக்கிட்ட உன்ன எனக்கு பிடிச்சிருக்கு.. உன் கேரக்டர் நல்லா இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சதுதான்.

கேரக்டர் சரியில்ல

கேரக்டர் சரியில்ல

எனக்கு பலர்மேல கிரஷ் இருந்துச்சு. ஒவ்வொரு பையன் கிட்டயும் ஒவ்வொரு விஷயம் பிளஸ் இருக்கும். அதனால, அவங்க மேல ஒரு ஈர்ப்பு வரும். அது கிரஷா கூட இருக்கலாம். இப்படி சில பேர் மேல எனக்கு கிரஷ் இருந்துச்சு. நானே, அத வெளிப்படையா அவங்கக்கிட்ட சொல்லிருக்கேன். ஆனா, அவங்க அத லவ்ன்னு நெனச்சுக்கிட்டாங்க.

உடனே! இவ எல்லாரையும் பிடிச்சிருக்குன்னு சொல்றா. இவ கேரக்டர் சரியில்லன்னு அரசல்புரசலா பேச ஆரம்பிச்சாங்க.

லவ்!

லவ்!

அப்பத்தான் வேற டிபார்ட்மெண்ட் பையன் ஒருத்தன் மேல எனக்கு லவ் வந்திச்சு. அவன் மேல வந்தது டைரடக் லவ். கண்டுதுமே காதல் மாதிரி. அவன் என் காலேஜ்ல செகண்ட் இயர்ல லேட்டர் என்ட்ரி. அவன் கூட பேச நெறையா டைம் ட்ரை பண்ணேன். ஆனா, சரியான நேரம் அமையல.

ஷாக்

ஷாக்

ஒரு தடவை காலேஜ் கிரவுண்டுல அவன தனியா பார்த்தேன். பார்த்ததும் அவன லவ் பண்றதா சொல்லிட்டேன். நான் இப்படி சொன்னதுமே அவன் ஃபர்ஸ்ட் ஷாக் ஆனான். அப்பறம் மெதுவா யோசித்து சொல்றேன்னு சொன்னான். நான் என் மொபைல் நம்பர் கொடுத்துட்டு ரிப்ளை பண்ண சொன்னேன்.

இதுக்கு முன்னாடி...

இதுக்கு முன்னாடி...

ஆனால், அவன் என்கிட்டே பதில் சொல்லல.. கேள்வி கேட்டான். இதுக்கு முன்னாடி யாரையாச்சும் நம்ம காலேஜ்ல லவ் பண்ணியான்னு. நான் இல்லன்னு சொன்னேன். இல்ல, நீ இதுக்கு முன்ன லவ் பண்ணதா இங்க ஹாஸ்டல்ல பலர் பேரை சொல்றாங்க. அதான் கேட்டேன்னு ரிப்ளை பண்ணான்.

அதுக்கப்பறம் நான் எதுவும் போன்ல பேச விரும்பல. நேர்ல பேசலாமான்னு கேட்டேன். சரின்னு சொன்னான்.

மாலை!

மாலை!

மறுநாள் சாயங்காலம் நானும், அவனும் மீட் பண்ணோம். நான் கிரஷ்ன்னு சொன்னத எல்லாம் லவ்ன்னு நெனைச்சு பேசி சுத்திட்டு இருந்திருக்காங்க. அப்பத்தான் என் காலேஜ்ல எனக்கு மேட்டர்ன்னு ஒரு பெயர் வெச்சிருக்காங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டேன்.

பூக்காமலே வாடிப் போச்சு!

பூக்காமலே வாடிப் போச்சு!

ஹாஸ்டல்ல அத்தன பேர் சொன்னதுக்கு அப்பறம் அவன் என்ன லவ் பண்ணுவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. என்னோட முதல் காதல் பூக்காமலே வாடிப் போச்சு.

இப்படியும் நடக்குமான்னு அப்பவரைக்கும் எனக்கு தெரியில.. ஆச்சரியமா இருந்துச்சு! அதுக்கப்பறம் நான் யார் கிட்டயும், எனக்கு பிடிச்சிருந்தாலும்.. அத வெளிப்படையா சொல்றதில்ல.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

It Does Not Mean a Girl is Slut, If She Proposes First - My Story!

It Does Not Mean a Girl is Slut, If She Proposes First - My Story!