For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலித்த பெண்ணை பாங்காங்கில் விற்க முயன்ற காதலன் - My Story #119

காதலித்த பெண்ணை பாங்காங்கில் விற்க முயன்ற காதலன் - My Story #119

|

இது என் வாழ்வில் நடந்த கதை அல்ல... என் நெருங்கிய தோழியின் வாழ்வில் நடந்த சம்பவம். எனது முதுகலைப் படிப்பை நான் டெல்லியில் பயின்று வந்தேன். அதற்கு முக்கிய காரணம் அவள் தான். அவள் என்னுடன் சென்னையில் இளங்கலைப் படித்தாள். அவளது தூண்டுதலின் காரணமாக தான் முதுகலைப் படிப்பை டெல்லியில் பயின்றேன். என் கல்லூரி நாட்களில் மறக்க முடியாத தோழியாக இருந்தாள்.

ஒரு நார்த் இந்தியன், சவுத் இந்தியன் காம்போ மீல்ஸ் போன்றது உங்கள் நட்பென எங்கள் பிற தோழிகள் கிண்டல் செய்வதும் உண்டு. அனைத்துப் பண்டிகைகள் கொண்டாடுவதில் இருந்து, அவரவர் கலாச்சாரங்களை மாற்றி மாற்றி பின்பற்றுவது என அவ்வளவு அன்யோன்யம் நாங்கள்.

ஆனால், இன்று நானும் அவளும் பேசி நான்கு வருடங்கள் ஆகிறது... அவள் தொலைத்தது என் நட்பை மட்டுமல்ல, அவளது வாழ்க்கையையும் தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெங்களூர்

பெங்களூர்

டெல்லியில் படித்து முடித்த பிறகு பெங்களூரில் வேலை கிடைத்து பணியமர்ந்தேன். ஸ்வேதா டெல்லியிலேயே அவளது பெற்றோருடன் தங்கிவிட்டாள். அவ்வப்போது தோணும் போதெல்லாம் பெங்களூரு வந்து என் வீட்டில் சில நாட்கள் தங்கி செல்வாள். ஒவ்வொரு முறை அவள் வரும் போதும், ஏதாவது வேலைக்கு போகலாம் தானே. சொத்து இருந்தாலும், படித்தப் படிப்பு வீணாகாமல் இருக்க வேலைக்கு செல்வது உனக்குக் கண்டிப்பாக ஏதேனும் வகையில் உதவும் என கூறி வந்தேன்.

வேலை!

வேலை!

ஓபனிங் எதாவது இருந்தால் சொல் அடுத்த முறை வரும் போது வேலையில் சேருகிறேன் என்றாள். ஏன் அடுத்த முறை வரைக்கும் காத்திருக்க வேண்டும். எனக்கு தெரிந்த கம்பெனி ஒன்றில் ஓபனிங் இருக்கு. நான் சொன்னால் கண்டிப்பாக எடுத்துக் கொள்வார்கள் என கூறினேன். சரி என தலை அசைத்தாள். அடுத்த வாரமே அவளை வேலையில் சேர சொல்லிக் கூறினார்கள். அவளும் வேலையில் இணைந்தாள்.

போன் கால்...

போன் கால்...

அவள் பெங்களூரில் என்னுடன் தான் தங்கியிருந்தாள். ஒரு சில மாதங்களில்... அவள் எண்ணுக்கு தெரியாத நாரிடம் இருந்து போன் கால் வந்துக் கொண்டே இருந்தது. ஆரம்பத்தில் அவள் அதை எடுத்துப் பேசவில்லை. ஆனால், சில சமயங்களில் தொடர்ந்து இருபது, முப்பது முறையெல்லாம் போன் கால் வந்தது. சரி! யார் தான் அழைக்கிறார் என எடுத்துப் பேசிய போது எதிர் முனையில் ஒரு ஆணின் குரல்.

காதலிக்கிறேன்...

காதலிக்கிறேன்...

பேசிய முதல் காலிலேயே நான் உங்களை காதலிக்கிறேன். பெங்களூரில் தான் நானும் வேலை செய்கிறேன். ஒரு நாள் உங்களை தங்கள் அலுவலகம் கீழே கண்டேன். கண்டதும் பிடித்துவிட்டது. உங்களை எப்படி தொடர்பு கொள்வது என தெரியவில்லை. ஆகையால், உங்கள் அலுவலக ரிசப்ஷனில் தங்கள் அழைப்பேசி என் வாங்கி தொடர்புக் கொள்ள முயற்ச்சித்தேன் என கூறினான்.

கோபம்!

கோபம்!

இந்த தகவலை ஸ்வேதா என்னிடம் கூறியதும் எனக்கு கோபம் தான் வந்தது. அந்த நபரின் மீதல்ல, எப்படி வேலை செய்யும் ஒருவரின் நம்பரை ரிசப்ஷனில் இருந்து பெற முடியும் என்பது குறித்தே எனது கோபம் இருந்தது. அந்த அலுவலகத்தில் வேலை செய்து வந்த எனது தோழருக்கு கால் செய்து இதுக்குறித்து விசாரித்தேன். அவர் அப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. யாரும் அப்படி யாருடைய நம்பரையும் பகிர மாட்டார்கள் என ஊர்ஜிதமாக கூறினார்.

சாட்டிங்!

சாட்டிங்!

இந்த தகவலை பெறுவதற்குள் அந்த நபருடன் ஸ்வேதா பேச துவங்கிவிட்டாள். அதுக் காலப் போக்கில் காதலாக மாறியது. ஸ்வேதா நீ மிக வேகமாக இதில் முடிவெடுத்துக் கொண்டிருக்கிறாய் எதற்கும் கொஞ்சம் நிதானமாக செயற்பாடு என அவளுக்கு அறிவுரை கூறினேன். ஆனால், அவளது வயதும், அவன் மீதான ஆர்வமும் என் பேச்சுக்களை காதுக் கொடுத்து கேட்க அனுமதிக்கவில்லை.

மீட்டிங்!

மீட்டிங்!

சரி! நீ என்னமோ செய்துக் கொள் ஆனால், நானும் அவனுடன் பேச வேண்டும்... அவன் உண்மையிலேயே யார் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும் என ஸ்வேதாவிடம் கூறினேன். ஓகே ஒரு நாள் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டோம்.அன்று..,

அன்று அந்த நவரை சந்திக்க ஸ்வேதா நான், மற்றும் எனது வருங்கால கணவர் என மூவரும் சென்றோம். முதலில் எனது வருங்கால கணவர் தான் அந்த நபரிடம் பேசத் துவங்கினார்...

எங்கப் படிச்சீங்க, எந்த வருஷம், எந்த கோர்ஸ்... என கேள்விகள் துவங்கின... அதற்கு அந்த நபர் கூறிய அதிலும், என் வருங்கால கணவர் பயின்ற இடமும் ஒரே மாதிரியாக ஒத்துப் போனது. நானும் எங்கே தான், அதே வருடத்தில் தான் பயின்றேன். ஆனால், உங்களை கல்லூரியில் பார்த்ததாக ஞாபகம் இல்லையே என கூறினார் என் வருங்கால கணவர்.

குறுக்குக் கேள்விகள்...

குறுக்குக் கேள்விகள்...

ஸ்வேதாவிற்கு எனது வருங்கால கணவர் அவளது காதலனைக் குறுக்குக் கேள்விக் கேட்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை. இடையே ஸ்வேதா பேச்சை மாற்ற துவங்கினாள். அவளுக்கு நாங்கள் பேசுவது பிடிக்கவில்லை என புரிந்துக் கொள்ள முடிந்தது.

சிறிது நேரம் கழித்து, தனக்கு பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் பழக்கம் என கூறினான் அவன். சரி! அப்போ எங்க கம்பெனி ஃபங்க்ஷனுக்கு அவங்கள கூப்பிடலாம்ன்னு இருக்கோம். கொஞ்சம் கேட்டு சொல்லுங்க என்றதும். கண்டிப்பா சொல்றேன் என கூறிவிட்டு. கொஞ்சம் வேலை இருக்கிறது என நழுவினான்.

சந்தேகம்!

சந்தேகம்!

அந்த மீட்டிங்கின் போது அவன் கூறிய பதில்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், அவன் ஏமாற்றுக்காரன் என்ற சந்தேகத்தை வரவழைத்தது. ஆனால், இதுக் குறித்து பேசும் போதெல்லாம் எனக்கும் ஸ்வேதாவுக்கும் வாக்குவாதம் மட்டுமே முற்றியது. ஒரு நாள் நானும் அவளும் மிகையாக சண்டையிட்டுக் கொண்டோம். அவள் எனது வீட்டில் இருந்து வெளியேறினாள்.

அதன் பிறகு நானும் அவளும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.

திருமணம்!

திருமணம்!

அவள் எனது வீட்டை விட்டு வெளியேறி சில மாதங்களில் அவனுடன் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக செய்திகள் கேள்விப்பட்டேன். அவன், தனது பெற்றோர் டெல்லி அருகே வசித்து வருகிறார்கள் என கூறியுள்ளான். அவர்கள் நேராக திருமணத்திற்கு தான் வருவார்கள். நான் அதற்கான ஏற்பாடெல்லாம் செய்கிறேன் என கூறியவன் தேனிலவுக்கு பாங்காங் செல்லலாம் என திட்டமிட்டுள்ளான்.

டிடக்டிவ்!

டிடக்டிவ்!

டெல்லியில் திருமணம் செய்யும் போது டிடக்டிவ் வைத்து பரிசோதனை செய்வது மிக சாதாரண காரியம். அப்படியாக தான் ஸ்வேதாவும் அவன் குறித்து சில தகவல்கள் பெற டிடக்டிவ் ஒருவரை நாடினால். அவனது குடும்பம் எப்படி, பெற்றோர் எப்படி என கண்டறிய தான் ஸ்வேதா இதை செய்தாள். ஆனால், கிடைத்த ரிசல்ட் வேறு வகையில் இருந்தது.

அனைத்தும் பொய்!

அனைத்தும் பொய்!

அவன் ஸ்வேதாவிடம் கூறிய அனைத்தும் பொய், அவன் படித்தாக கூறியதில் இருந்து பெற்றோர், வேலை என எல்லாமே பொய் என டிடக்டிவ் ரிசல்ட்டில் தெரியவந்தது. ஸ்வேதா அதிர்ச்சி அடைந்தாள். டிடக்டிவ் அவனது நடவடிக்கைகள் சரியில்லை எதற்கும் நீங்கள் போலீஸில் புகார் கூறிவிடுங்கள் என எச்சரித்தார். அதன் காரணத்தால் போலீஸில் புகார் கூறினாள் ஸ்வேதா.

போலீஸ் ஆலோசனை!

போலீஸ் ஆலோசனை!

போலீஸ் விசாரணை நடத்தியதில் அவன் பெண்களை கடத்தி விற்கும் கும்பலை சேர்ந்தவன் என்றும். பாங்காங்கில் தேனிலவு என கூறி, அங்கே ஸ்வேதாவை விற்க திட்டமிட்டிருந்த உண்மைகளும் தெரியவந்தன. இது ஸ்வேதாவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

பிறகு போலீஸ் ஸ்வேதாவிடம், அவனை எங்கேனும் பொது இடத்திற்கு பார்க்க வேண்டும் என அழையுங்கள். அங்கே வைத்து கைது செய்துவிடலாம் என ஆலோசனை கூறினார்கள்.

கைது!

கைது!

அதே போல அவன் ஸ்வேதா அழைத்த இடத்திற்கு வந்தான். போலீஸ் அவனை அங்கேயே கைது செய்தது. அவனுக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனையும் வழங்கியது. அவன் சிறைக்கு சென்று நான்காண்டுகள் ஆகின்றது.

ஸ்வேதா இப்போது வேறு ஒரு நபரை திருமணம் செய்துக் கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருவதாக வேறு தோழி மூலமாக அறிந்தேன்.

அவளுக்கு குறுஞ்செய்தியில் வாழ்த்து கூறினேன். பதிலுக்கு அவளும் நன்றி எனக் கூறினாள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

I Fought With My Dear Most Friend For Him, But He is a Human Trafficker!

I Fought With My Dear Most Friend For Him, But He is a Human Trafficker!
Story first published: Saturday, December 23, 2017, 12:29 [IST]
Desktop Bottom Promotion