ஓர் இரவு, குடி போதையில் வாழ்க்கையை தொலைத்த இளம்பெண் - உண்மை கதை!

Posted By:
Subscribe to Boldsky

அவள் பெயர் நஃபீஸா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), குழந்தை வயது முதலே வீட்டிற்கு அடக்கமான பெண்ணாக வளர்க்கப்பட்டவள். வெளியுலகம் தெரியாது. வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதும், பள்ளி முடிந்த மறு நிமிடம் வீடு திரும்புவதும் தான் இவளது வாழ்நாள் வழக்கம்.

பெரிதாக எதிர் பாலினம் பற்றிய அறியாத பேதை. இதன் காரணத்தாலே குழந்தை வயதிலேயே சொந்த உறவினர் மூலம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாள். அப்போது தனக்கு நேர்ந்தது ஒரு கொடுமை என்ற புரிதல் கூட இல்லாத குழந்தையாக இருந்தால் நஃபீஸா.

எட்டு வயதில் பாலியல் வன்முறை, 17 வயதில் காதல், 19வயதில் செக்ஸ்... இரண்டு பூகம்பங்களுக்கு மத்தியில் அவள் க(கொ)ண்ட ஒரே நிம்மதி அந்த காதல்...

ஆனால், எதிர்பாராத ஒரு இரவில் ஏற்பட்ட இரண்டாம் பூகம்பம் அவளை உடல் அளவிலும், அவளது காதலை மனதளவிலும் சிதைத்துவிட்டது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லூரிக்கு இடைக்காலத் தடை...

கல்லூரிக்கு இடைக்காலத் தடை...

பதின் வயதின் இறுதியில் நடைப்போட்டுக் கொண்டிருந்தால் நஃபீஸா. பள்ளி முடித்து கல்லூரி செல்ல தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. முட்டி, மோதி, போராடி, மறு வருடம் கல்லூரி சேர அனுமதி கிடைத்திருந்தது.

அந்த இடைப்பட்ட காலத்தில் வீட்டு விழாக்களில் பங்கெடுத்துக் கொள்வது, வீட்டின் அருகே இருக்கும் சிறுமிகளுக்கு அலங்காரம் செய்து விடுவது தான் நஃபீஸாவின் வேலையாக இருந்தது.

அது ஒரு திருமண விழா...

அது ஒரு திருமண விழா...

அந்த இடைப்பட்ட காலத்தில் தான், நஃபீஸாவின் வீட்டில் இன்னுமொரு திருமண விழா வந்தது. எப்போதும் போல சிண்டு, போடுசுகளுக்கு எல்லாம் அலங்காரம் செய்துவிட்டு தன்னையும் அலங்கரித்துக் கொண்டு விழாவிற்கு கிளம்பினால் நஃபீஸா. அந்த மாலையில் அவளுக்கு தெரியாது, இன்னும் சற்று நேரத்தில் தனக்கான துணையை காண போகிறாள் என்பது.

ஹீரோ என்ட்ரி!

ஹீரோ என்ட்ரி!

விழா வீட்டில் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் நஃபீஸாவின் கண்களுக்கு முதன்முறை தென்பட்டான் அவன். அதன் பிறகு பலமுறை நஃபீஸா கண்களில் கைதானவன் அவன் மட்டுமே. வேறு யாரையும் காண அவளது கண்கள் முற்படவில்லை.

மணமகன் வீட்டு சொந்தத்தில் ஒரு ஆணின் நண்பனாக அவன் திருமண விழாவில் பங்கெடுத்திருந்தான். முதல் முறை ஒரு ஆண் மீது சொல்ல முடியாத காதல் அலை ஒன்று அடித்தது. எப்படி கூறுவது, நிச்சயம் அதை அவனிடம் கூற நஃபீஸாவிற்கு தைரியம் கிடையாது.

கண்டுபிடி!

கண்டுபிடி!

அவன் செல்லும் இடமெல்லாம் அவனுக்கு தெரியாது என நினைத்து பின்தொடர்ந்து சென்றால் நஃபீஸா. ஆனால், நஃபீஸா பின்தொடர்வதை, அவளது கண்களில் இரண்டாம் முறை கைதான போதே அறிந்துவிட்டான் அவன். தெரியாதது போல, வேண்டுமென்றே பல இடங்களுக்கு அங்கும் இங்குமாய் நடந்துக் கொண்டிருந்தான்.

பழரசமான இதழ் ரசம்!

பழரசமான இதழ் ரசம்!

மதிய உணவு விருந்து முடிந்தது. ஆயினும் இவர்களது ஓடி, பிடிக்கும் விளையாட்டு முடியவில்லை. அவன் ஒரு பழரச கிண்ணம் ஏந்தி கொண்டு நடக்க துவங்கினான். அவனை பின்தொடர்ந்து தானும் ஒரு பழரச கிண்ணம் ஏந்தி பின் தொடர்ந்தாள் நஃபீஸா.

ஒரு இடத்தில் அவன் திரும்பிய திசையில் வேறு யாரும் இல்லை. நஃபீஸா சென்று பார்த்த போது அவன் மாயமாகி போயிருந்தான். ஏமாற்றத்துடன் அவள் முகம் வாடும் முன்னரே, பின்ன இருந்து வந்து வழிமறித்தான் அவன். மனதிற்குள் மகிழ்ச்சி, முகத்தில் பதட்டம், கைகள் நடுங்க துவங்கின.

"எதுக்காக என் பின்னாடியே வர..." என அவன் கேட்ட கேள்விக்கு... "உனக்காக தான்... " என்ற பதிலை அவள் மனம் மட்டுமே கூறியது.

ஓரிரு நொடிகள் அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவன். பழரசத்தை ருசிக்காது, நஃபீஸாவின் இதழ் ரசத்தை பருகினான். அதற்கு முன் நஃபீஸாவின் கண்களும், மனதும் அவ்வளவு பெரிதாய் விரிந்தது இல்லை.

காதல் மலர்ந்தது!

காதல் மலர்ந்தது!

நஃபீஸாவை காட்டிலும் ஒன்பது வயது மூத்தவன் அவன். எப்போதாவது குடிப்பானே தவிர, வேறு எந்த ஒரு தீயப் பழக்கமும் இல்லை. நஃபீஸாவிடம் ஓரிரு வார காதல் உறவிலேயே தனது ஆதி முதல், அந்தம் வரை அனைத்தும் பகிர்ந்தான். இருவருக்குள் எந்த ஒரு ஒளிவுமறைவும் இருக்கக் கூடாது என்பதை எழுதப்படாத சட்டமாக வைத்துக் கொண்டனர்.

உன்னத பயணம்...

உன்னத பயணம்...

இருவரும் பேசிக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது முதல் ஆறு மாத காதல் உறவில். கல்லூரி சேர்ந்த போது, கொஞ்சம் தொலைவு சென்று வருவதால் நஃபீஸாவிற்கு மொபைல் போன் ஒன்று பாதுகாப்பிற்கு கிடைத்து. அதுவே அவர்களை இணைக்கும் காதல் புறாவாக மாறியது.

இருக்கும் எல்லா குறுஞ்செய்தி செயலிகளையும் இன்ஸ்டால் செய்துக் கொண்டு அதில், அவனை மட்டுமே நண்பனாய் வைத்துக் கொண்டிருந்தால் நஃபீஸா.

கல்லூரி வாழ்க்கை!

கல்லூரி வாழ்க்கை!

அவனை தவிர பெரிதாய் ஆண்களை பற்றி அறியாத நஃபீஸாவிற்கு, கல்லூரியில் தான் பல தோழர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எந்த தருணத்திலும் தனது நிலையில் தடுமாறியது இல்லை நஃபீஸா. எங்கே வெளியே அழைத்தாலும், முடியாது என மறுத்து விடுவாள். இதனாலேயே கல்லூரியில் நெருக்கமான தோழமை இன்றி இருந்தால் நஃபீஸா.

பார்டி!

பார்டி!

வெளியே தான் எங்கேயும் வருவதில்லை, பிறந்தநாள் விழாவிற்காவது வா, என நஃபீஸாவை வகுப்பு தோழிகள், தோழர்கள் அழைத்தனர். அவளது வீட்டிலும் பேசி சில தோழிகள் அனுமதி வாங்கினர்.

பிறந்தநாள் விழாவிற்கு சென்ற போது தான் நஃபீஸாவிற்கு அதிர்ச்சி உண்டாது. அங்கே மொத்தமே இருபது பேர் தான். பெற்றோர், பெரியவர் யாரும் இல்லை. அது ஒரு அடல்ட் பார்ட்டியாக இருந்தது. ஆண், பெண் பேதம் இன்றி மது அருந்தும் சோசியல் பார்ட்டியாக இருந்தது.

ஆனால், நஃபீஸாவிற்கு இது புதிது என்பதை தாண்டி, அவளது சட்டப்புத்தகத்தில் இது மிகப்பெரிய தவறாக இருந்தது.

போதை!

போதை!

வெறும் ஜூஸ் என கூறி, அவளுக்கு கேலியாக மதுவை கலந்து கொடுத்தனர் தோழிகள். நிலை தடுமாற துவங்கினால் நஃபீஸா.

அவள் தன்னிலை அறியும் நிலைக்கு திரும்பும் போது நகர முடியாத வலியில் துடித்துக் கொண்டிருந்தால். சற்று நேரம் கழித்து தான், நண்பர்களில் ஒருவன் தன்னை குதவழி உறவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதை உணர்ந்தாள்.

கோபப்படவோ, சண்டையிடவே அவளுக்கு நேரம் இருக்கவில்லை. கண்களில் நீர் தேங்குவதற்கு முன்னர், தனது காதலனுக்கு துரோகம் செய்துவிட்டோமே என்ற எண்ணம் தான் அவளை அதிகம் மனவருத்தம் அடைய செய்தது.

தற்கொலை?

தற்கொலை?

வீடு திரும்பிய நஃபீஸா தற்கொலை செய்துக் கொள்ளலாமா? என யோசித்தாள், அவனை மறக்கவும், அவனை விட்டு வாழவும் முடியாது என்ற நிலை அவளை தற்கொலை எண்ணத்தில் இருந்து சில நிமிடங்களில் வெளிக் கொண்டு வந்துவிட்டது.

ஆனால், இந்த உண்மையை அவனிடம் கூறாமல் இருப்பது, காதலுக்கு செய்யும் துரோகம் என எண்ணி வருந்தினால். அவன் இதுவரை ஒருநாளும் நஃபீஸாவிடம் அனுமதி பெறமால் எதையும் செய்ததில்லை.

நஃபீஸாவின் வாழ்வில் நேர்ந்த இந்த இரண்டாவது பூகம்பம் அவளை வலுவாக தாக்கியது.

இரண்டு முறையும் தன்னை அறியாமலே சிக்கிக் கொண்டவள் நஃபீஸா. இதில் இவளது தவறு ஏதுமில்லை.

அனுதினமும் அவனிடம் பேசும் போது, பெரிய தவறை மறைத்து ஏமாற்றி வருகிறோமே என்ற எண்ணம் அவளை கொன்றுக் கொண்டே இருக்கிறது.

அவளால் அந்த நிகழ்வை மறக்கவும் முடியவில்லை, தன்னைத்தானே மன்னித்துக் கொள்ளவும் முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How a Single Night Changed My Life? A Real Life Story of Honest Girl!

    How a Single Night Changed My Life? A Real Life Story of Honest Girl!
    Story first published: Tuesday, September 12, 2017, 13:18 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more