ஃபர்ஸ்ட் கட் டூ கட் அவுட்: யாரால் முடியும்? நயன்தாரா முடித்து காண்பித்துவிட்டாரே!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு நடிகைக்கு எந்த விதத்தில் எல்லாம் எதிர்ப்புகள் வருமோ, அந்த விதத்தில் எல்லாம் எதிர்ப்புகள் கண்டவர் நயன்தாரா. ஒரு சராசரி பெண்ணின் வாழ்வில் எவை எல்லாம் தடையாக வருமோ, அவற்றை எல்லாம் கடந்து வந்தவர் நயன்தாரா. ஒரு பெண்ணை காதல் எந்த வகையில் எல்லாம் பாதிக்குமோ, அந்த விதத்தில் எல்லாம் பாதிக்கப்பட்டவர் நயன்தாரா.

First Cut to Cut out: Nayanthara, An inspiration for every women in Life!

ஆனால், இவற்றை எல்லாம் தாண்டி இன்று பெரிய நடிகர்களுக்கு இணையாக கட் அவுட் வைக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்ப பாங்கு!

குடும்ப பாங்கு!

ஐயா, சந்திரமுகி என ஆரம்பத்தில் நடிகை நயன்தாராவின் திரை பாதை குடும்ப பாங்காக தான் ஆரம்பித்தது. பார்த்தவுடன் பிடித்துவிடும் வட்டமான முகம், நம்ம வீட்டு பொண்ணு என்பது போன்ற ஒரு முக பாவனை என எளிதாக தென்னிந்திய சினிமாவில் தனக்கான இடைத்தை பிடித்தவர் நடிகை நயன்தாரா.

கிளாமர்!

கிளாமர்!

இந்திய சினிமாவும், நடிகைகளுக்கான கிளாமர் இடமும் எத்தனை காலம் கடந்தாலும் கமர்ஷியல் படங்கள் இருக்கும் வரை பிரிக்க முடியாதது. இந்த வட்டத்தில் நயன்தாராவும் சிக்க தவறவில்லை. கஜினி, கள்வனின் காதலி, வல்லவன் என நயன்தாராவின் திரை பயணத்தில் கிளாமர் ரோல்களும் பல இடம்பெற்றன.

தடம்புரண்ட வாழ்க்கை!

தடம்புரண்ட வாழ்க்கை!

காதல் பிரிவுக்கு பின்னர் ஆண், பெண் இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள் பல வகையில் வேறுபடும். அதை நாம் முற்றிலும் அறிந்தவர்கள் தான். தனது வாழ்வில் இரண்டு முறை காதலில் அடிப்பட்டு தடம்புரண்டு பிறகு மீண்டும் வெற்றி பயணத்தில் கால் பதித்தவர் நயன்தாரா.

தூற்றினர்!

தூற்றினர்!

காதல் தோல்வியின் போது இவருக்கு ஆறுதல் கூறியவர்களை விட, தூற்றி பேசியவர்கள் அதிகம். அனைத்தையும் துடைத்துப்போட்டு விட்டு. பேச்சுக்கே இடமில்லை, நான் யார் என நிரூபிக்க ஆரம்பித்து தொடர்ந்து தனக்கான இடத்தை முன்னணி நடிகர்களுக்கு இணையாக தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நயன்தாரா.

எதிர்ப்பு!

எதிர்ப்பு!

சீதா தேவி வேடத்தில் நயன்தாரா நடிக்க பல எதிர்ப்புகள் கிளம்பின. காதல் தோல்வி கண்ட இவர் எப்படி சீதாவாக நடிக்கலாம். ஒப்புக்கொள்ள மாட்டோம் என பல அமைப்புகள் எதிர்ப்பு கொடி காட்டின.

ஆனால், அனைவருக்கும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் மிக சிறப்பாக அந்த வேடத்தில் நடித்து தனது திறமையை மட்டுமின்றி, இயக்குனர் மற்றும் ரசிகர்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் காப்பாற்றினார் நயன்தாரா.

லேடி சூப்பர்ஸ்டார்!

லேடி சூப்பர்ஸ்டார்!

சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போடாத நடிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டாம். எப்படி ரஜினிக்கு தானாக அந்த பட்டம் அமைந்ததோ. அப்படி தான் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும். தனது தொடர்ச்சியான வெற்றி மற்றும் சிறந்த நடிப்பு திறமையால் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டதை முதல் ஆளாக பெற்றார் நடிகை நயன்தாரா.

கதாபாத்திரம்!

கதாபாத்திரம்!

நடிகை என்றாலே கதையில் ஒரு இன்ட்ரோ, நாலு பாட்டு, சில கிளாமர் காட்சிகளுக்கு வந்து செல்ல வேண்டும் என்பதை. நயன்தாராவும், அனுஷ்காவும் தான் இந்த தலைமுறையில் தகர்த்து காட்டியுள்ளனர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

கட் அவுட்!

கட் அவுட்!

பல சறுக்கல்கள், எதிர்ப்புகள், காதல் தோல்வி என வாழ்க்கையில் பல தடைகளை கடந்து இப்போது தனியாக ஹீரோ எல்லாம் தேவையில்ல, நானே போதும் படத்திற்கு என்ற அளவிற்கு முன்னேற காண்பித்துள்ளார் நயன்தாரா.

எடுத்துக்காட்டு!

எடுத்துக்காட்டு!

ஒரு நடிகை என்று மட்டுமின்றி... ஒரு பெண் வாழ்வில் எத்தனை சோகங்கள், எதிர்ப்புகள், தோல்விகள் வந்தாலும்.. தனது விடா முயற்சி மற்றும் திறமையுடன் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு நயன்தாரா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

First Cut to Cut out: Nayanthara, An inspiration for every women in Life!

Nayanthara, An inspiration for every women in Life!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter