For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலை ஓட்டத்தில் ஜாக்கெட் மறைவில் இருந்து பிரா ஸ்ட்ராப் எட்டிப் பார்த்தாலும் தவறா?

ஒரு 25 வயது பெண், இந்தியாவில் அனுதினம் கடந்து செல்லும் அவலங்கள்!

|

போராட்டங்கள், வசதிகள், வாய்ப்புகள், சவால்கள், மாற்றங்கள் மற்றும் கடினமான பாடங்கள் என ஒரு 25 வயது பெண் இந்தியாவில் எப்படி ஒரு நாளை கடக்கிறாள் என்பது தான் இந்த கட்டுரை.

இந்திய சமூகத்தில் ஒரே செயலை, ஆணும், பெண்ணும் ஒரே மாதிரி செய்துவிட முடியாது. அப்படியே செய்தாலும், விமர்சனங்கள் பெண்கள் மீது மட்டுமே எழுமே தவிர, பெண்கள் மட்டுமே கருத்துக்களால் தாக்கப்படுவார்களே தவிர, ஆண்கள் அல்ல.

Day Today Life of 25 YO Woman in India!

வேலை ஓட்டத்தில் ஜாக்கெட் மறைவில் இருந்து பிரா ஸ்ட்ராப் எட்டிப் பார்த்தாலும், அந்த பெண்ணின் மீதான பார்வை முற்றிலுமாக மாறிவிடும். தவறான பார்வை அந்த ஆணுடையது, ஆனால், தவறாக உருவகம் செய்யப்படும் நபர் அந்த பெண்...

இப்படி ஒரு வாழ்க்கையை உங்கள் வீட்டிலும் ஒரு பெண் வாழ்ந்து வரலாம்... அதை நம் கண்டும் காணாமல் அல்லது சரியாக காண தவறியும் இருக்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெஷின்!

மெஷின்!

அவள் திருமணம் ஆனவளோ, ஆகாதவளோ, அவள் பிள்ளை பெற்றிருந்தாலும், இல்லை எனிலும், ஒரு நாளை துவக்க வேண்டியவள் அவள் தான். காலை காபி, டீ, டிபன், மதிய உணவு என அனைத்தும் தயார் செய்து குடும்பத்தின் அன்றைய நாளுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்திவிட்டு.

அந்நாளின் கால்வாசி கடந்த பிறகே தனது அன்றைய நாளை துவக்குகிறாள் அவள்.

வேலை!

வேலை!

அவளது அலுவல் வேலை வீட்டிலேயே மின்னஞ்சலில் இருந்து துவங்கி விடுகிறது. ஆயினும் அவள் அலுவலகத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டும், பல தடைகளை தாண்டி. அவள் தனது திறமையால் அடுத்த நிலைக்கு சென்றாலும், அவர் படுக்கை பகிர்ந்தே வளர்கிறாள் என ஒரு புரளியை கிளப்பும் அந்த அலுவல் சமூகம்.

திருமணமாகாத பெண் என்றால் அலுவல் சுமை மட்டும் இருக்கும், அதுவே திருமணம் ஆனவள் என்றால் வீட்டு சுமையை சுமந்துக் கொண்டே அவள் அலுவலகத்தில் பலரை கடந்து சாதிக்க வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது.

நீதிமான்கள்!

நீதிமான்கள்!

அவள் தெருவில் இறங்கி முதல் அடி எடுத்து வைத்த நொடியில் இருந்து, தெரு முனையில், பேருந்து நிலையத்தில், ஷாப்பிங் மால்களில், டீ கடை பெஞ்சுகளில் அமர்ந்திருக்கும் நீதிமான்கள் அவளை விமர்சனம் செய்ய ஆரம்பிப்பார்கள்.

வடிவாக இருந்தால் வர்ணிப்பார்கள், வளைவுகள் குறை இருந்தால் கேலி செய்து நகைத்துக் கொள்வார்கள். எது, எப்படியோ, அவர்களது இதழ்களில் புன்னைகை தவழ, அந்த பெண் மனம் புண்பட்டு போகலாம்.

அவளுக்கான நேரம்...

அவளுக்கான நேரம்...

வீடு, பிள்ளைகள், வேலை என பல விஷயங்களுக்கு நடுவே, அவள் அவளுக்கான நேரத்தை கொஞ்சம் அவளுக்கான நபர்களுடன் கழித்தலும் அங்கேயும் சில குற்றம் குறை கூற சிலர் சூழ்ந்திருப்பர். அவளது நெருங்கிய வட்டாரத்தில் ஒரு ஆண் இருந்துவிட்டால், "லவ்வரா இருப்பானோ, அவங்களுக்குள்ள என்னவா இருக்கும்... கசமுசா என கிசுகிசுக்கள் நாலாபுறமும் பறக்கவிடுவார்கள்.

முகமூடி!

முகமூடி!

இவ்வாறு பல சூழல்கள் கழித்து ஓய்ந்து அவள் வீடு திரும்புவதும் ரணமாக தான் முடியும். வேலை முடிந்து ஓய்ந்து திரும்புகையில் அவளது சட்டை அல்லது ஜாக்கெட் மறைவில் இருந்து பிரா ஸ்ட்ராப் தெரிந்தால்... அவளது மீத உயிரையும் உறிஞ்சு குடித்து ருசி பார்க்க ஒரு கூட்டம் அவளை நிழலாக பின்தொடரும்.

அனைத்திற்கும் பிறகு வீட்டு வாசற்படி ஏறும் முன்னரே, ஒரு புன்னகை முகமூடி அணிந்துக் கொண்டே உட்செல்கிறாள்.

இரவு உணவு, குழந்தைகளுக்கு அம்புலி மாமா கதைகள், கணவனுக்கென சிறிது நேரம் என தனது தோள்களில் சுமந்துக் கொண்டிருக்கும் சுமையை சற்றும் இறக்கி வைக்காமல் அப்படியே படுக்கையில் பாரத்துடன் விழுந்து உறங்குகிறாள்.

செய்வீர்களா???

செய்வீர்களா???

இது நாளையும் தொடரும்... ஆனால், அந்த பாரத்தை கொஞ்சம் தளர்த்தி... அவளை பாராட்டி, முகத்தில் இருக்கும் முகமூடியை அவிழ்த்து, இதழ்களில் புன்னகை பூவை சூட்டி அனுப்புங்கள்... அவளது பயணம் சற்றே புத்துணர்ச்சியுடன் துவங்கும்.

நாளை நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை இது.... செய்வீர்களா???

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Day Today Life of 25 YO Woman in India!

Day Today Life of 25 YO Woman in India!
Desktop Bottom Promotion