சச்சினின் சூப்பர் ஃபேன் சுதிர் பற்றி நீங்கள் அறியாத சோகக்கதை!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் எந்த நாட்டிற்கு சென்று இந்தியா கிரிக்கெட் விளையாடினாலும் அங்கே இந்திய ரசிகர்களின் ஆரவாரத்திற்கு பஞ்சம் இருக்காது. இந்திய அணியின் பெரிய பலமே இதுதான். பிற அணிகளுக்கு சொந்த நாட்டை தவிர்த்து அயல் நாட்டில் இந்தியாவிற்கு கிடைக்கும் அளவிற்கு ரசிகர்களின் சப்போர்ட் இருக்காது.

இந்தியா எந்த நாட்டில் சென்று விளையாடினால் ஒரு ரசிகன் மட்டும் அங்கே இந்தியாவின் மூவர்ண கொடியை ஏந்தி, உடலில் சச்சினின் பெயர் மற்றும் எண்ணை பெயின்ட் செய்து உற்சாகத்துடன் மைதானத்தில் சுற்றிக் கொண்டிருப்பார். பலருக்கும் சச்சினின் அந்த சூப்பர் ஃபேன் சுதிர் குமார் சவுத்திரி என தெரியும்.

ஆனால், அந்த சுதிரின் வாழ்க்கையில் இருக்கும் சோகக்கதை பற்றிப் பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முஸாபர்பூர்!

முஸாபர்பூர்!

சுதிர் முஸாபர்பூரில் ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர். இந்திய கிரிக்கெட் அணியின் மீது, சச்சின் மீதும் ஆறு வயது முதலே அளவற்ற பாசமும், வெறியும் கொண்டிருந்த ஓர் சுப்பர் ஃபேன் சுதிர். கிரிக்கெட் மீதிருந்த ஆர்வத்தில் 14 வயதிலேயே படிப்பை கைவிட்டவர் சுதிர்.

வேலை!

வேலை!

இவருக்கு வேலை ஏதுமில்லை. இவர் ஒரு பால் கம்பெனி, சிக்ஷா மித்ரா, மற்றும் இன்னுமொரு இடத்தில் வேலை செய்திருக்கிறார். ஆனால், வேலைக்கு சேர்ந்த பிறகு எங்கேனும் இந்தியா போட்டி நடைபற்றால் வேலையை விட்டு அங்கே ஓடிவிடுவார், அது எந்த ஊராக இருந்தாலும், நாடாக இருந்தாலும் சரி.

சிக்ஷா மித்ராவில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த போது பிப்ரவரி 2004ல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டுகளிக்க இவர் வேலையை விட்டு ஓடிவிட்டார். இவருக்கு வயது 34. இன்னும் திருமணமாகவில்லை என வீட்டில் வருந்துகிறார்கள். இவரது பெற்றோர் இவருடன் பேசுவதே இல்லை.

சகோதரி!

சகோதரி!

சுதிரின் சகோதரி மட்டும் தான் இவருடன் பேசுகிறார். அவ்வப்போது கால் செய்து எங்க இருக்க, என்ன பண்ற, எப்படி இருக்க என பேசுவாராம் இவரது சகோதரி. எப்போதும் தனது போனுடன் பவர்பாங்கும் வைத்திருப்பார் சுதிர். சுவிட்ச் ஆப் ஆகக்கூடாது என்பதில் இவர் கவனமாக இருக்கிறார். ஆயினும் கூட தனது சகோதரியின் அழைப்புகளை இவர் அவ்வப்போது ஏற்பது இல்லையாம்.

திருமணம்!

திருமணம்!

திருமணம் செய்துக் கொண்டால் இந்திய அணி விளையாடுவதை காண முடியாது என்பதற்காக சுதிர் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. எந்த நாடாக இருந்தாலும் சுதிர் இந்தியாவின் போட்டியை காண சச்சின் ஸ்பான்சர் செய்து வருகிறார்.

மேலும், சொந்த வாழ்க்கையை பற்றி கவலையின்றி இப்படி சுதிர் திரிவதை கண்டு இவரது தந்தை மிகுந்த மனவருத்தம் கொண்டிருக்கிறார்.

எரித்துக் கொள்வேன்!

எரித்துக் கொள்வேன்!

இந்தியா விளையாடும் போட்டிகளை தான் காண இயலவில்லை எனில், தன்னை தானே எரித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என இவர் மிரட்டல் விடுத்திருந்தார் ஒருமுறை. இந்திய அணிகளின் போட்டிகளை காண என்னை அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன் என கூறுகிறார் சுதிர்.

போலீஸ் மன்னிப்பு!

போலீஸ் மன்னிப்பு!

கான்பூரில் பயிற்சியில் ஈடுபட சச்சின் வந்திருந்த போது, அவருடன் கைகுலுக்க சுதிர் முயற்சித்தார். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் சுதிரை தாக்கி தள்ளிவிட்டார். பிறகு, இது சச்சின் அறிந்து, விஷயம் பெரிதாக சுதிரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார் அந்த காவல் அதிகாரி.

பியான்ட் தி பவுண்டரி!

பியான்ட் தி பவுண்டரி!

இந்திய கிரிக்கெட் அணி பற்றிய பியான்ட் தி பவுண்டரி என்ற டாக்குமென்ட்ரியில் சுதிர் குமாரும் முக்கிய நபராக தோன்றியிருந்தார். சூப்பர் ஃபேன் என்ற பெயரில் இவரை பற்றி விரிவாக கூறியிருந்தனர்.

கிரிக்கெட் கடவுள் சச்சினின் மிகப்பெரிய பக்தனாக வாழ்ந்து வருகிறார் சுதிர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Dark Side of Sudhir Kumar Chaudhary, The Super Fan of Sachin Tendulkar!

Dark Side of Sudhir Kumar Chaudhary, The Super Fan of Sachin Tendulkar!
Story first published: Monday, October 9, 2017, 14:00 [IST]