நடிக்க வாய்ப்பளிக்க படுக்கைக்கு அழைத்தனர், தயாரிப்பாளர்கள் மீது பகிரங்க புகார் கூறிய 6 நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

திரைத்துறை என்று மட்டுமல்ல, பிற துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமையான நிலை இது. ஒருப்படி மேல செல்ல வேண்டும் என்றால் அதற்கு திறமை மட்டும் போதாது என்பது எழுதப்படாத சட்டமாக நமது சமூகத்தில் ஒரு நிலை நிலவி வருகிறது.

Bollywood Actresses Who Reported That Producers Asked To Sleep With Them for Movie Chance

இதற்கான தீர்வு ஒன்றே ஒன்று தான் இச்சை எண்ணம் கொண்ட ஆண்கள் திருந்த வேண்டும். அல்லது தைரியம் மிக்க ஆண்கள் இவர்களை திருத்த வேண்டும். சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிரபல நடிகை அவரது முன்னாள் கார் டிரைவரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.

ஆனால், சில இந்திய நடிகைகள் தாங்கள் நடிக்க வாய்ப்பு பெறுவதற்கு தயாரிப்பாளர்களால் படுக்கைக்கு அழைக்கப்பட்டோம் என கூறி முன்பே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மம்தா குல்கர்னி!

மம்தா குல்கர்னி!

ஒருமுறை மம்தா குல்கர்னி இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தனது படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என கூறியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத்!

தனு வெட்ஸ் மனு படத்தில் நடிக்க ஆடிஷன் சென்ற போது, தயாரிப்பாளர்கள் சில விஷயங்களில் விட்டுகொடுத்து சமரசம் செய்துக் கொள்ள தன்னை அணுகியதாக கூறியிருந்தார்.

கல்கி கோய்ச்லின்!

கல்கி கோய்ச்லின்!

பாலிவுட்டின் தலைசிறந்த நடிகைகளில் ஒருவரான கல்கி கோய்ச்லினும் தனது திரை வாழ்க்கையில் பலமுறை இதுபோன்ற சம்பவங்களை நேரிட்டதாக கூறியிருக்கிறார்.

ப்ரீத்தி ஜெயின்!

ப்ரீத்தி ஜெயின்!

மதுர் பண்டார்கர் பலமுறை வாய்ப்பிற்காக தன்னை கற்பழித்ததாக ப்ரீத்தி ஜெயின் கூறி தன் துறை சார்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.

பாயல் ரோஹாக்டி!

பாயல் ரோஹாக்டி!

பாயல், டிபாகர் பானர்ஜி தன்னை பாலியல் வன்முறைக்கு உள்ளாகினார், துன்புறுத்தினார் என கூறி தொலைக்காட்சி துறையை அதிர செய்தார்.

டிஸ்கா சோப்ரா!

டிஸ்கா சோப்ரா!

நடிப்பு தேர்வின் போது தனிப்பட்ட முறையில் யாரிடமும் கூறக்கூடாது என ஒப்பந்தமிட்டுதாகவும். தனது திரை பயணத்தில் பல கடினமான சூழல்களை கடந்து வந்ததாகவும் டிஸ்கா சோப்ரா கூறியிருக்கிறார்.

கருப்புப் பக்கங்கள்!

கருப்புப் பக்கங்கள்!

பரவலாக திரைத்துறை மீது கூறப்படும் குற்றசாட்டாக இது திகழ்ந்து வருகிறது. வெளிக்கூறியவர்கள் சிலர் எனில், வெளிக்கூற முடியாமல் போனவர்கள் பலர். இதுப்போன்ற விஷயங்கள் திரைத்துறையில் மட்டுமின்றி பிற எல்லா துறையிலும் இருக்கத்தான் செய்கிறது. பிரபலங்கள் என்பதால் திரைத்துறை மட்டும் வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bollywood Actresses Who Reported That Producers Asked To Sleep With Them for Movie Chance

Bollywood Actresses Who Reported That Producers Asked To Sleep With Them for Movie Chance!
Subscribe Newsletter