For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை திரும்பி பார்க்க வைத்து இந்திய பெண்களின் 7 துணிச்சலான செயல்கள்!

|

நீரின்றி அமையாது உலகு என்பது போல Hashtag இன்றி அமையாது சோஷியல் மீடியா என்று கூறலாம். ஒரு குறிப்பிட விஷயத்தை முன்னிறுத்தி அதை டிரெண்ட் ஆக்க, வைரலாக்க இந்த #Hashtag முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இன்ஸ்டாகிராமில் செல்ஃபீக்களுக்கு தான் அதிக Hashtag உபயோகப்படுத்துகிறார்கள்.

ஆனால், நமது இந்திய பெண்கள் சில முக்கியமான, விழிப்பணர்வு தேவைப்படும் விஷயங்களுக்கும் மிக தைரியமாக, துணிச்சலுடன் சில Hashtag பயன்படுத்தி, அதன் மூலம் உலகையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவும் செய்துள்ளனர்.

நீங்கள் இந்த #NoBlouse #LipstickRebellion #MeToo #StudentsAgainstABVP #FreeTheNipple #ProudToBleed Hashtag பற்றி இதற்கு முன் அறிந்ததுண்டா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#NoBlouse

சில தகவலின்படி இந்த சவாலில் ஆயிரம் பெண்கள் கலந்துக் கொண்டதாக அறியப்படுகிறது. saree.man என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து இந்த சவால் துவங்கியிருக்கிறது. இதன் படி, பெண்கள் பிளவுஸ் அணியாமல், வெறும் புடவை மட்டும் அணிந்து படம் எடுத்து பகிர வேண்டும். இதை பல பெண்கள் உத்வேகத்துடனும், அதிக ஆர்வத்துடனும் கலந்துக் கொண்டனர்.

இந்த #NoBlouse சவால், நமது பாரம்பரிய புடவையின் மீதான் ஆர்வத்தை அதிகரிக்க நடத்தப்பட்ட ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் என கூறப்படுகிறது. மேலும், புடவை அணிவது இந்திய பெண்களை அதிக சுதந்திரத்தை உணர செய்யும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர்.

#LipstickRebellion

#LipstickRebellion

இது ஒரு கலர்புல் சவால் என்றே கூறவேண்டும். ட்விட்டரில் லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா படம் வெளியான பிறகு இது பரவியதாக அறியப்படுகிறது. பெண் சுதந்திரம் பற்றி பேசிய இந்த படத்தை பலர் தடை செய்ய பல அமைப்புகள் கூறின. இதை எதிர்த்து இந்த #LipstickRebellion சவால் உதயமாகி, இது சார்ந்து பல கட்டுரைகள் பலர் எழுதி வைரல் ஆக்கினர்.

இனித #LipstickRebellion டிரெண்ட் ஆனதை அடுத்து, லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா படத்தில் நடித்த நட்சத்திரங்களே இந்த #LipstickRebellion சவாலில் கலந்து கொண்டு தங்கள் படத்தை பகிர்ந்தனர்.

#MeToo

#MeToo

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் தாங்கள் எதிர்கொண்ட கொடுமையான சம்பவங்களை வெளிப்படுத்தி இந்த #MeToo சவால் வைரல் ஆனது. ட்விட்டரில் டிரெண்ட் ஆன இந்த சவாலில், பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகளை பற்றி தெரிவித்திருந்தனர்.

அலிசா மிலானோ எனும் நடிகை மற்றும் பெண்ணுரிமை ஆர்வலர் சமூக தளத்தில் இதுக் குறித்து ஒரு பதிவு செய்திருந்தார். இது பலதரப்பட்ட ஆண், பெண்களை ஈர்த்து அனைவரும் அதிகம் பகிர்ந்து டிரெண்ட் ஆகினார்கள். பெண்கள் வன்கொடுமை குறித்த ஒரு சிறந்த பிரச்சாரமாக இது மாறியது.

MOST READ: 2019 - இல் குருப்பெயர்ச்சி எப்ப வருது? எந்தெந்த ராசிக்கு ராஜயோகம் அடிக்கப் போகுது?

#StudentsAgainstABVP

#StudentsAgainstABVP

டெல்லியின் ராம்ஜாஸ் பல்கலைகழக கல்லூரியில் நடந்த வன்முறையை அடுத்து இந்த சவால் உருவானது. இந்த சவாலை கார்கில் போரில் உயிரிழந்த அதிகாரியின் மகள் துவக்கி வைத்தார். 2017 பிப்ரவரியில் சமூக தளத்தில் டிரெண்ட் ஆனது இந்த #StudentsAgainstABVPசவால்.

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மந்தீப் சிங் என்பவற்றின் மகள் குர்மிகர் கவுர் தனது முகநூல் முகவர் படத்தில் இந்த படத்தை வைத்த பிறகே இது வைரலானது. I am a student from Delhi University. I am not afraid of ABVP. I am not alone. Every student of India is with me. என்ற வாசகத்துடன் பலர் இதை பகிர்ந்தனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

ABVP அமைப்பினர் அப்பாவி மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து இந்த சவால் பரவியது. போராட்டம் நடத்திய மாணவர்களை மிக கடுமையாக தாக்கினர். ABVP அமைப்பினர் இந்த மாணவர் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தகுந்த பதிலடியாக இந்த சவால் அமைந்திருந்தது.

குர்மிகர் கவுர்-க்கு அந்த அமைப்பினர் பெரும் கண்டனம் தெரிவித்தனர். மிக கீழ்த்தனமாக கற்பழித்துவிடுவோம் என்றெல்லாம் கூறி எச்சரிக்கை விடுத்தனர்.

கங்கனாவின் பேட்டி!

கங்கனாவின் பேட்டி!

கங்கனா ரனாவத் ராஜத் ஷர்மாவின் ஆப் கி அடல்ட் என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பங்குபெற்ற கங்கனா மிக துணிச்சலுடன், தைரியமாக பல பதில்களை கூறினார். தனது வாழ்வில் நடந்த பல சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பதில் அளித்தார் கங்கனா. ஓர் தேசிய ஊடகத்தில் இப்படி பேச ஒரு தைரியம் வேண்டும்.

ஒரு வெற்றிகரமான நடிகையான எனக்கே இவ்வளவு அழுத்தம், கஷ்டங்கள் இருக்கிறது எனில், ஒரு சாதாரண பெண்ணின் நிலையை நினைத்து பாருங்கள் என கூறியிருந்தார். அவரது உறவு சார்ந்த அந்தரங்க விஷயங்கள் குறித்தும் உணர்ச்சி பூர்வமாக பதில் அளித்திருந்தார்.

#FreeTheNipple

#FreeTheNipple

இந்த #FreeTheNipple சவால் 2014ல் நடந்த ஒன்று. இது ஆண், பெண் சமநிலை வேண்டும் என கூறி உருவாக்கினார்கள். அதாவது தணிக்கை குழுவில் ஆண், பெண் வேற்றுமை காண்பது பெண். பெண் சார்ந்த தனிப்பட்ட தணிக்கை ஏன்? என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

மேற்கு மாநிலங்களில் சில பிரபலங்கள் கூட இந்த #FreeTheNipple சவாலில் கலந்துக் கொண்டனர். எங்கள் உடலை கண்டு நாங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

MOST READ: எச்சரிக்கை! வறுத்த சிக்கன், பொரித்த மீன் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்..! காரணம் தெரியுமா..?

கவர்ச்சி ?!

கவர்ச்சி ?!

சலோனி சோப்ரா தான் இந்த #FreeTheNipple சவாலில் முதல் ஆளாக பங்கெடுத்துக் கொண்ட பிரபலம் ஆவார். பிரா அணியாமல், வெறும் மேல்சட்டை மட்டும் அணிந்து தனது படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் சலோனி சோப்ரா.

ஆண்களின் உள்ளாடை சாதாரணமாக காணப்படும் போது, பெண்களின் உள்ளாடை மட்டும் ஏன் கவர்ச்சி பொருளாக காணப்படுகிறது என்பதை வலிமையாக முன்வைக்கப்பட்ட பிரச்சாரமாக இது அமைந்திருந்தது.

#ProudToBleed

#ProudToBleed

ஓர் ஆய்வின் தகவலின் படி இந்தியாவில் 355 மில்லியன் பெண்கள் நாப்கின் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது அறியவந்துள்ளது. தங்கள் மாதவிடாய் இரத்தப் போக்கிற்கு 88% பேர் கந்தல் துணி, சாம்பல் மற்றும் வேறுவகை துணிகள் பயன்படுத்துகிறார்கள் என கூறப்படுகிறது.

சலோனி சோப்ரா

சலோனி சோப்ரா

எனவே, பெண்கள் மத்தியில் நாப்கின் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும் என இந்த #ProudToBleed சவால் உருவாக்கப்பட்டது. இதற்கும் முதல் ஆளாக வந்து தனது பங்களிப்பை கொடுத்தவர் சலோனி சோப்ரா தான். ஒவ்வொரு பெண்ணும் தனது மாதவிடாய் நாட்களில் சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம் என கூறி தனது படத்தை பதிவு செய்திருந்தார் சலோனி சோப்ரா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bold Steps By Indian Women That Prove Them Braver Than Your Imagination!

Bold Steps By Indian Women That Prove Them Braver Than Your Imagination!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more