For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பம்பரும் இல்ல, ஹெட் லைட்டும் இல்ல... நடிகையின் தோற்றத்தை கேலி செய்த மாடல் அழகி!

பம்பரும் இல்ல, ஹெட் லைட்டும் இல்ல... நடிகையின் தோற்றத்தை கேலி செய்த மாடல் அழகி!

|

முன்பு பிரபலங்கள் எட்டாக்கனியாக இருந்தனர். அவர்களாக முன் வந்து ஏதேனும் ஊடகத்தில் பேட்டி அளித்தால் தான் அது செய்தியாக வெளிவரும். அப்படியே அவர்கள் ஏதனும் கருத்து கூறி, அதன் மீது மக்களுக்கு எதிர் கருத்து இருந்தால், அதை டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து தான் புலம்புவார்கள்.

ஆனால், அந்நிலை இப்போது இல்லை. ட்விட்டரை ஓபன் செய்து, அவர் முன்னர் செய்த தவறில் இருந்து முந்தாநேத்து செய்தது வரை அனைத்தையும் விவாதித்து, திட்டித்தீர்த்து ஆதங்கத்தை கொட்டிவிடுவார்கள். முக்கியமாக பிரபலத்தை கேவலப்படுத்துவதற்கு ட்விட்டர் நன்றாக உதவுகிறது.

Body Shaming, Trolling or Slamming Might be a Trend on Social Media These Days!

தவறை விமர்சிப்பது ஒருபுறம் இருந்தாலும், இப்போது ஒருவரின் உடல் அமைப்பை மிகவும் கேவலமாக விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. போட்டியாளரின் ரசிகர்கள் தான் இப்படி என்றால், சக நடிகைகளே, இன்னொரு நடிகைகள் பற்றி இப்படி பொது ஊடகத்தில் அப்பட்டமாக, அசிங்கமாக விமர்சனம் செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பைரவி கோஸ்வாமி!

ஹேட் ஸ்டோரி என்ற "அற்புதமான" படத்தில் நடித்தவர் தான் இந்த பைரவி கோஸ்வாமி. கிருதி சானோன் எனும் வளர்ந்து வரும் நடிகை, அர்ஜுன் கபூரின் படத்தில் வரும் ஹவா, ஹவா பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

அதை கண்டு கோஸ்வாமி, "பம்பரும் இல்ல, ஹெட் லைட்டும் இல்ல... இவருடன் ஒப்பிடுகையில் கல்லூரி மாணவிகளே நன்றாக இருப்பார்கள்" என உடல் அமைப்பை குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

இதுவும் ஒரு சமூக சீரழிவு தான்...

இதுவும் ஒரு சமூக சீரழிவு தான்...

சமூக தளம் என்பது நமது அந்தரங்க விஷயம் அல்ல. இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் போது, நம் மீதான மற்றவரது பார்வை எப்படியாக இருக்கும் என்பதை நாம் சிந்திப்பது இல்லை. 18+ கன்டன்ட் பேசுவதை கௌரவமாக எடுத்துக் கொள்கிறோம். இதுவும் ஒருவகையில் சமூக சீரழிவு தானே.

முன்னர் இதில் 1%....

முன்னர் இதில் 1%....

இப்போது நாம் மிக சாதாரணமாக கடந்து சொல்லும் பதிவுகளில் 1% கூட அப்பா, தாத்தா காலத்தில் கண்டிருக்க வாய்ப்புகள் இல்லை. முன்னர் கௌரவம் என காணப்பட்டவை எல்லாம் இன்று கேலிக்கூத்தாக இருக்கிறது. இந்த "வாட் தி ஃப**" கலாச்சாரம் நல்லவர்களை பழமாக்கிவிட்டது, நல்லவற்றை சிரிப்பாக்கிவிட்டது.

கொஞ்சம் சிந்திக்க வேண்டும்...

கொஞ்சம் சிந்திக்க வேண்டும்...

உடல் அமைப்பு என்பது அவரவர் மரபணு சார்ந்தது. சிலர் என்ன செய்தாலும் அதை மாற்றுவது கடினம். ஒருவரது மனம் கோணல்மாணலாக இருந்தால், அது தவறு அதை விமர்சிக்கலாம். உடல் அமைப்பை பற்றி அசிங்கமாக நான்கு சுவர்களுக்குள் பேசுவதே தவறு. ஆனால், அதை நாம் காற்றில் பரவும் சமூக தளங்களில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருவது சரி தானா?

நாளைய சமூகம் எப்படி இருக்கும்?

நாளைய சமூகம் எப்படி இருக்கும்?

இது இப்படியே தொடர்ந்தால் எப்படி இருக்கும்.... அக்கா, தங்கையின் உடல் அமைப்பை கூட கேலி செய்வது; அப்பா, மகன் தங்களை தானே மாற்றி மாற்றி வசைபாடிக் கொள்வது... தங்கள் குடும்ப மானத்தை தாங்களே தெருவில் கூறுபோட்டு விற்பது போன்றவை சகஜமாக நடந்துக் கொண்டிருக்கும். முதலில் குடும்பம் என்ற அமைப்பு தாக்குப்பிடிக்குமா என்பதை யோசிக்க வேண்டும்.

இலக்கணம்!

இலக்கணம்!

எப்படி ஒரு மொழியில் இலக்கணம் இல்லையேல் அதை காப்பாற்ற முடியாதோ. அப்படி தான், நாம் வாழும் சமூகத்தில், உறவுகளில் இலக்கணம் இல்லையேல், நாம் சரியான வாழ்க்கை வாழ முடியாது. கொஞ்சம், கொஞ்சமாக நமது வாழ்வியல் இலக்கணத்தை நாம் இழந்து வருகிறோம்.

சோஷியல் லைப், கலாச்சார மாற்றம் என்ற பெயரில், சோலைவனமான நமது வீட்டை நாமே பாலைவனம் ஆக்கி வருகிறோம்.

இதெல்லாம் பெரிய தப்பா... என கேட்போருக்கான பதில்.... அந்நியன் பாணியில் கூற வேண்டும் என்றால்... "இதெக்கெல்லாம் என்ன தண்டனை கிடைச்சுர போகுது..." என்கிற மிதப்பில் தான் நாம் இவற்றை எளிதாக செய்து வருகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Body Shaming, Trolling or Slamming Might be a Trend on Social Media These Days!

Body Shaming, Trolling or Slamming Might be a Trend on Social Media These Days!
Desktop Bottom Promotion