அம்மாவைப் பற்றி பிரபலங்கள் கூறிய பொன்மொழிகள்!!

By: Bala latha
Subscribe to Boldsky

அம்மாக்களுக்கான அன்பு சாசுவதமானது. எனவே இந்த நாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்த பல சுவாரஸ்யமான மற்றும் இதயத்தை உருகச் செய்யும் வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே வரவிருக்கும் அன்னையர் தினத்தன்று இந்த வாசகங்களை பயன்படுத்தி நீங்கள் ஒரு காஃபி கோப்பையின் மீது எழுத்துக்களை செதுக்கியோ அல்லது இந்த சிறிய வாசகங்களுடன் வண்ணப்படங்களை ஒட்டி ஒரு கொலாஜ்ஜை தயாரித்தோ உங்கள் அம்மாவுக்கு மறக்க முடியாத அன்பு பரிசாக அளியுங்கள்.

இந்த வாசகங்களைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவற்றில் பல குறிப்பாக ஒரு தனிப்பட்ட மனிதரின் தாயைப் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் அவற்றில் உள்ள உலகப் பொதுமையை உங்களால் புறக்கணிக்க முடியாது.

மேலும் இந்த அழகிய வாசகங்கள் நீங்கள் உங்கள் அம்மாவை எந்த அளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்தும். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின்வருவனவற்றை படிக்க வேண்டியது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொன்மொழி -1 :

பொன்மொழி -1 :

"நான் பார்த்ததிலேயே மிகுந்த அழகான பெண் என் அம்மா. நான் என் வாழ்க்கையில் பெற்ற அனைத்து வெற்றிகளுக்கும் அவரிடமிருந்து நான் பெற்ற தார்மீக, அறிவார்ந்த மற்றும் உடற்கல்வியே காரணமென்று கூறுவேன்" - ஜார்ஜ் வாஷிங்டன்.

பொன்மொழி -2

பொன்மொழி -2

"நான் எனது தாயின் பிரார்த்தனைகளை நினைவு கூருகின்றேன் அவை எப்பொழுதும் என்னைப் பின்தொடர்கின்றன. அவை வாழ்நாள் முழுவதும் என்னை பாதுகாப்பு அரணாக பற்றிக்கொண்டுள்ளன". - ஆப்ரஹாம் லிங்கன்.

பொன்மொழி -3

பொன்மொழி -3

"உங்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு உறுதியான செல்வம், தங்க நகைப் பெட்டகங்கள் மற்றும் தங்க கருவூலங்கள் என எல்லாம் இருக்கலாம், ஆனால் ஒருபோதும் நீங்கள் என்னை விட பணக்காரனாக முடியாது. அனைத்து செல்வங்களை விட உயர்ந்த, என்னை படிக்க வைத்த ஒரு தாய் என்னிடம் இருந்தாள்" - ஸ்டிரிக்லேண்ட் கில்லன்.

 பொன்மொழி -4

பொன்மொழி -4

"உங்களிடம் சொல்ல முடியாத அளவுக்கு உறுதியான செல்வம், தங்க நகைப் பெட்டகங்கள் மற்றும் தங்க கருவூலங்கள் என எல்லாம் இருக்கலாம், ஆனால் ஒருபோதும் நீங்கள் என்னை விட பணக்காரனாக முடியாது. அனைத்து செல்வங்களை விட உயர்ந்த, என்னை படிக்க வைத்த ஒரு தாய் என்னிடம் இருந்தாள்" - ஸ்டிரிக்லேண்ட் கில்லன்.

பொன்மொழி -5

பொன்மொழி -5

"எனது அம்மா ஒரு கடின உழைப்பாளி. அவர் தலைகீழாக நின்றேனும் ஒரு காரியத்தை செய்து முடிப்பார். மேலும் அவர் மகிழ்ச்சியாக இருக்க ஒரு வழியை கண்டறிந்துள்ளார். ‘மகிழ்ச்சி என்பது உங்கள் சொந்த பொறுப்பு' என்று அவர் எப்பொழுதும் சொல்வார்" - கார்னர் ஜெனிஃபர்.

 பொன்மொழி -6

பொன்மொழி -6

"நான் கீழே விழும் போது எனக்கு உதவ ஓடி வருவார், ஒரு அழகான கதையை சொல்லி என் வலியை மறக்கச் செய்வார், காயங்களை குணமாக்க அவ்விடத்தில் முத்தங்களை பொழிவார், அவர் யார்? அவர் தான் என் அம்மா" - ஆன் டெய்லர்.

பொன்மொழி -7

பொன்மொழி -7

"தாய்மார்கள் மட்டுமே வருங்காலத்தை சிந்திக்க முடியும் - ஏனென்றால் அவர்கள் தான் குழந்தைகளின் வடிவில் வருங்காலத்தைப் பெற்றெடுக்கிறார்கள்" - மேக்ஸிம் கோர்கி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beautiful quotes for mother

Beautiful quotes for mother
Story first published: Thursday, May 18, 2017, 23:00 [IST]
Subscribe Newsletter