ஜாதி வெறியால் ரூ.5, ரூ.10-க்கும் விபச்சாரத்தில் தள்ளப்படும் கிராம பெண்கள்!

Posted By:
Subscribe to Boldsky

மத்தியப் பிரதேஷ் மாநிலத்தில் வாழ்ந்து வரும் பஞ்ச்ராஸ் எனும் ஒரு இன மக்கள் விபச்சாரத்தை தங்கள் குடும்ப தொழிலாக பரம்பரை, பரம்பரையாக பின்பற்றி வருகின்றனர்.

இந்த முறையில் இருந்து தப்பிக்க முடியாமல், அந்த கிராமத்தில் வசித்து வரும் பெண்கள் பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.

இதில், என்ன சோதனை என்றால், இவர்கள் பற்றிய செய்திகளோ, இதற்கு எதிர்ப்பான குரல்களோ அரசியல் வாதிகள் மத்தியிலோ, அரசு இடங்களிலோ எழுவதும் இல்லை, எழுந்தால் அதை என்ன? ஏது? என்று யாரும் கேட்பதும் இல்லை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்கள் தரகர்கள்!

ஆண்கள் தரகர்கள்!

இந்த இனத்தில் பிறந்த பெண்கள் ஒரு வயதை எட்டிய பிறகு பாலியல் தொழிலில் ஈடுப்பட வேண்டும், இவர்களுக்கு தரகர்களாக, இவர்களது சகோதரர்கள் அல்லது பெற்றோரே ஈடுபடுகின்றனர்.

சாலை ஓரங்களில்...

சாலை ஓரங்களில்...

தினமும் மாலையில் பெண்கள் அலங்காரம் செய்து கொண்டு சாலை ஓரங்களில் நிற்க வேண்டும். அங்கு வாழும் பிற சாதி ஆண்கள், அவர்களுக்கு பிடித்த பெண்களை தேர்வு செய்துக் கொள்வார்கள்.

ரூ.5, ரூ.10-க்கும்!

ரூ.5, ரூ.10-க்கும்!

ஒரு சில நேரத்தில் பொருளாதார கஷ்டங்களால், ரூ.5, ரூ.10-க்கும் கூட பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த படுகிறார்கள் என கூறப்படுகிறது,. இதுக்குறித்து தகவல்கள் ஒரு ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது.

இந்த தலைமுறை இளைஞர்கள்!

இந்த தலைமுறை இளைஞர்கள்!

தற்போதைய தலைமுறை இளைஞர்கள், தங்கள் சகோதரிகள், தாய்மார்கள் அனுபவிக்கும் இந்த கொடுமையான முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் குரலை உயர்த்தி வருகிறார்கள்.

ஆனால், அப்படி குரலை உசத்தும் ஆண்களை ஊரைவிட்டு ஒத்துக்கி வைத்து விடுகிறார்கள் ஊர் பெரியவர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றனர்.

ஊரை விட்டு வெளியேறும் மக்கள்!

ஊரை விட்டு வெளியேறும் மக்கள்!

இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், இதே ஊரில் இந்த கொடுமைகளை அனுபவிப்பதற்கு பதிலாக, வெளியூர் சென்று வேறு வேலை, தொழில் செய்தி வாழலாம் என ஊரை விட்டு கிளம்பி வருகின்றனர்.

செய்திகள் மறைப்பு!

செய்திகள் மறைப்பு!

இவ்வளவு பெரிய கொடுமை ஒரு ஊரில் காலம், காலமாக நடந்துக் கொண்டு வருகிறது. ஆனால், இது குறித்த செய்திகள் பெரிதாக எங்கும் ஒலித்தபாடில்லை.

காரணம் உயர் அதிகாரிகள், ஊர் பெரியவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த இன பெண்களை தங்களுக்கு அடிமை போல நடத்திக் கொள்ள தான் விரும்புகின்றனர் என்பது துயரத்தின் உச்சக்கட்டம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Banchras, A Community of People Who is Doing Prostitution as Their Family Profession!

Banchras, A Community of People Who is Doing Prostitution as Their Family Profession!
Story first published: Wednesday, May 17, 2017, 12:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter